சனி, 25 ஆகஸ்ட், 2012

வாசனை -ஒரு நினைவுச்சுரங்கம்


ஒரு அதிகாலைப்பனிமூட்டம் வெகு இயல்பாய் நினைவு படுத்திவிடும் 'கல்லூரி தினங்களை '
ஒவ்வொரு வாசமும் 'நினைவடுக்கில் ஒரு முகத்தை,ஒரு நிகழ்வை ,ஒரு
 துயரை ஏன் ஒருசிலிர்ப்பை  கூட பதிந்து வைத்திருக்கிறது.
என் மகள் எனும் தேவதையின் பிஞ்சு கை நீட்டி மெஹந்தியை  காட்டுகயில்
அந்த மணத்தில் அம்மாவும்,அவள் அம்மியில் அரைத்த மருதாணி கணங்களும் ,விரலுக்கு அம்மா  மருதாணி தொப்பிகளும் நினைவுக்கு வருகிறது.
           உள்ளங்கையில் வட்டவட்டமாய் அப்பளம் இடும் வேலைஎல்லாம் செய்தது கிடையாது .ஈர்க்குக்குச்சியை வைத்து அப்போதே நிறைய டிசைன் போடுவாள் .அப்பா கூட என்னிடம் மருதாணி போட்டு க்கொண்டதுண்டு .

2 கருத்துகள்: