வியாழன், 5 செப்டம்பர், 2013

கொஞ்சம் ENGLISH !!!!!!!!!!!!


ஆங்கிலத்தில் எனக்கு பிடித்த விஷயம் இதில் நாம் தான் நமக்கு முதல் நபர்      .-I -FIRST PERSON


ANGRY ,HUNGRY        'GRY'  முடியும் இரண்டே சொற்கள் .





 BOOKKEEPING,BOOKKEEPER  ,    SWEET TOOTHED           ஒரே எழுத்து இரண்டிரண்டு முறையாக கொண்ட மூன்றே சொற்கள்.


அதிகமான சொற்கள்'S' ல்   தான் தொடங்குகின்றன.என்ன ஒரு பாசிடிவ் மொழி.



கடவுளின் பெயர் தாங்காத ஒரே கோள் EARTH
  ,

பழமையான ஆங்கில வார்த்தை TOWN


நாலு எழுத்து தான் இருக்கு பாருங்க FOUR .வேறு எந்த ஆங்கில எண்ணுக்கும் இல்லாத சிறப்பு இது .


ஆங்கிலத்தில்  ஆண் சொற்கள் பெண் பால் சொற்களைவிட சிறிதாகவே இருக்கும் .எடுத்துகாட்டு LION ,LIONESS   மாறுபட்டவை HUSBAND ,WIFE

இன்று ஆசிரியர் தினம் .நான் ஆங்கில ஆசிரியர்.அதனால தான் ஆங்கிலம்.என்ன பண்றது தொழில் பக்தி(PROFESSIONAL  ETHICS ) -கஸ்தூரி

பகுதி இரண்டு 
பகுதி மூன்று
பகுதி நான்கு

7 கருத்துகள்:

  1. பயனுள்ள தகவலுக்கு நன்றி சகோதரி.. EDUCATION எனும் வார்த்தையில் VOWELS 5 எழுத்தும் இருக்கிறது பார்த்தீர்களா? இது போல நிரம்ப உள்ளன. காலம் கருதி சுருக்கமாக முடித்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது போல் இது சுருங்கச் சொல்லி சிந்திக்க வைக்கும் உத்தியோ!

    பதிலளிநீக்கு
  2. //கடவுளின் பெயர் தாங்காத ஒரே கோள்//EARTH (நம்ம ஆளுங்க கடவுளுக்கே வைத்து விட்டார்கள்- அகிலாண்டேஸ்வரி)
    //மாறுபட்டவை HUSBAND ,WIFE// ( என்ன ஒரு ஆணாதிக்கம்? என்று பெண்ணுலகம் பேச வாய்ப்பு கொடுத்து விட்டீர்களே)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆங்கிலத்தில் இன்னும் வியப்பூட்டும் பல தகவல்கள் உள்ளது .கொஞ்சம் கொஞ்சமாய் சொல்லாம் என்றிருக்கிறேன்.தங்கள் வருகை மகிழ்வும் ,கருத்து உற்சாகமும் தருகிறது .நன்றி சகோதரரே!






      நீக்கு
  3. நல்லாவும் சின்னச் சின்னவிஷயங்களில் பெரியபெரிய கருத்துகளைச் சொல்வதாகவும் எழுதுவது கடினம். உள்ளே நிறைய ஊறிக்கிடந்தால்தான் இது சாத்தியம். ஆர்வம் மட்டுமல்ல அடிக்கடியான புழக்கமும் இருந்தால்தான் இது நடக்கும். ஆர்வம் செயலூக்கம் பெற வாழ்த்துகள்.
    தமிழில் நிறுத்தக் குறிகள் ஆங்கிலத்தைப் பார்த்துத்தான் வந்ததாகச் சொல்கிறார்கள். நிறுத்தக் குறிகள் பற்றிச் சொல்லும்போது, தூக்குத் தண்டனைக் கைதிக்குக் கடைசி நேரத்தில் வந்த தந்தியில் HANG HIM NOT LEAVE HIM என்று வந்ததாம் நிறுத்தக் குறிகள் இல்லாததால், HANG HIM, NOT LEAVE HIM. என்று புரிந்து கொண்டு தண்டனை நிறைவேற்றப் பட்டதாம். பின்னர் HANG HIMNOT, LEAVE HIM. என்று சொல்லப்பட்டதைப் புரிந்து கொள்ளாததால் ஓர் உயிரே போய்விட்டதே என்று வருத்தப்பட்டு நிறுத்தக்குறிகளின் முக்கியத்துவத்தை அறிந்தார்களாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அண்ணா.ஒரு பரிட்சார்த்த முயற்சியாக செய்து பார்த்தேன்.மேலும் எழுதலாம் என்று இப்போது நம்பிக்கை பிறக்கிறது.

      நீக்கு
  4. http://valarumkavithai.blogspot.in/2013/09/blog-post_6540.html - தளம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை... தொடர்கிறேன்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... கவிதை போட்டி நன்றாக நடந்தாதா...

      நீக்கு