ஞாயிறு, 12 ஜனவரி, 2014

கொஞ்சம் English-iii

Grammar Class

    எனக்கு ஒரு என்ஜினியர் தம்பி இருக்கிறான். அக்கா எத்தன கிராமர் ரூல்ஸ் படிச்சாலும் அப்ளை பண்றப்ப குழப்பமாவே இருக்கு. கொஞ்சம் லோக்கலா டெய்லி பயன் படுத்துற மாதிரி டிப்ஸ் கொடுங்க என்றான். ட்ரை பண்ணினேன். உங்களுக்கு பயன்படுதான்னு பாருங்க. இது பீட்டர் அண்ணனுங்களுக்கு இல்லை  I am the sorry  தம்பிகளுக்கு(நன்றி வீரம் மயில்சாமி ) 


Simple Present 

பொதுவா இந்த டென்ஸ் நிகழ்காலம் அப்படி நினைக்கிறோம். இல்லை இது தினமும், அடிக்கடி, நடக்குற செயல் அல்லது மாற்றமுடியாத உண்மை போன்றவைகள் சொல்ல பயன்படுது அதாவது "நான் தினமும் நியூஸ் வாசிப்பேன்". 
I read newspaper daily(தினசரி நிகழ்வு )
Facebook eats our time.(ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை )
[VERB] + s/es in third person
இந்த டென்ஸ் பற்றி தனியே ஒரு பதிவு எழுதும் அளவு சொல்லலாம் இருந்தாலும் இது இப்போ போதும்.

Present Continuous 

இதுதான் நிகழ் காலத்தை குறிக்கும் டென்ஸ்.
        They are playing in the ground.
        She is reading now.
Sentence இப்படி அமையும்  
[am/is/are + present participle]

Simple Past 

கடந்த காலம்
Nirai watched the film yesterday.
Sentence இப்படி அமையும்   [ VERB+ed] or irregular verbs]
என்ன வரிசையாய் சொல்லலையேனு நினைக்கிறிங்களா? காரணம் இருக்கு.

Present Perfect 

இந்த டென்ஸ் முடிந்த விஷயம் தான். ஆனால் அதன் பலன் இன்னும் இருக்கும். இதைப்பற்றி தெளிவாய்த் தெரிந்து கொள்ள பாஸ்ட் டென்சிர்க்கும் ப்ரெசென்ட் பர்பெக்ட்டுக்கும் வித்யாசம் தெரிந்துகொள்ள வேண்டும்.

I finished the book yesterday. 

என்று சொன்னால் past tense. நான் இந்த புத்தகத்தை நேற்று படித்தேன்.

நான் இந்த புத்தகத்தை படித்து விட்டேன், எனக்கு அந்த புத்தகம் கொடு.  
I have finished the book already, give me that one. [present perfect]
Sentence இப்படி அமையும்
He has watched the movie already.

Past Perfect 

 சரி இது எங்க பயன்படும். முடிந்து போன ரெண்டு விசயத்தில் முதலில் முடிஞ்ச விசயத்துக்கு பயன்படுத்துவோம்
        
 He had misplaced the keys, he searched it everywhere.
 Sentence இப்படி அமையும் subject+had+verb  (past participle). முக்கியமான விஷயம் இது தனி வாக்கியமாய்  பயன்படுத்தப்படுவதில்லை. 

Past Continuous 

 கடந்த காலத்தில் நடந்துகொண்டிருந்த ஒரு விசயத்தை சொல்வது.நான் உன் வீட்டுக்கு வந்தப்ப குழந்தை அழுதுகொண்டிருந்தது அப்டின்னு  சொல்லுறோம் when I came to your house the child was crying.


 Present Perfect Continuous 

ரொம்ப நாளாக இது நடந்துட்டு இருக்கு அப்டின்னு சொல்ல இதை பயன்படுத்தலாம். இப்பவும் நடக்குதுன்னு அர்த்தம் 
Maki has been working there since 2010.

Past Perfect Continuous 

 ரொம்ப நாள் நடந்த விஷயம் இப்போ இல்லை அப்டின்னு சொல்ல பயன்படும் டென்ஸ்
Vino had been working there for ten years.

Simple Future 

இனி நடக்க போறது இந்த டென்ஸ்ல வரும்
 Sentence இப்படி அமையும் 
I/We shall meet you tomorrow.
She will meet you tomorrow.

Future Continuous 

 எதிர்காலத்தில் நடக்க இருக்கும் இரண்டு விசயங்களை விளக்க பயன்படும்
Sentence இப்படி அமையும் I will be watching TV when she arrives tonight. அதாவது இன்று இரவு அவள் வரும்போது நான் டி.வி. பார்த்துக்கொண்டிருப்பேன்.

Future Perfect

ரெண்டு விஷயம் எதிர் காலத்தில் நடக்கும். அதுல ஒன்னு முன்னாடியே முடிஞ்சுடும்னு சொல்ல பயன் படுத்துவோம்
 Sentence இப்படி அமையும் [am/is/are + going to have + past participle]

  By the time he gets home, she is going to have cleaned the entire house.

Future Perfect Continuous

Sentence இப்படி அமையும்
[am/is/are + going to have been + present participle]அந்த கம்பனியை ஊத்திமூடும் வரை அவ அங்கதான் வேலை பார்ப்பாள். so ரெண்டும் நடக்க போற விஷயம் அதுல ஒன்னு கொஞ்சம் முன்னாடி முடிய போகுது. 

 She is going to have been working at that company for three years when it finally closes.

ஏதோ என்னால முடிஞ்சா அளவு தெளிவா குழப்பிருக்கேன்னு நினைக்கிறேன். டென்ஸ் உண்மையாவே யார்க்காவது பயன்பட்ட சொல்லுங்க. வேற டாபிக் வேணும்னாலும் கேளுங்க. என்கிட்டயும் reference book இருக்கு. பொறுமையா படிச்சுட்டு சொல்ல ஆர்வமும்  இருக்கு. கிராமர் பழகலாம் .                                     

-கஸ்தூரி
   REFERENCE (மேலும் பயன் பெற )
 http://www.englishpage.com/index.html

பகுதி ஒன்று பார்க்க 

பகுதி இரண்டு பார்க்க 
பகுதி நான்கு பார்க்க

27 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அண்ணா, அவ்வளவு கொடுமையாகவா இருக்குது ...?

      நீக்கு
    2. இல்லப்பா, நம்ம ரூட் வேற இல்லயா? அதான்... உனக்கும் உன் அன்பான குடும்பத்தினர், நண்பர்களுக்கும் என் இனிய உழவர் திருநாள் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் - நா.முத்துநிலவன்

      நீக்கு
  2. அடடா பரவாய் இல்லை தெளிவா குழப்பினா சரி தானே.

    நடக்கட்டும் நடக்கட்டும் நல்லவிடயம் தானே.
    தொடர வாழ்த்துக்கள்.....!

    பதிலளிநீக்கு
  3. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் தோழி

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரி
    தங்கள் வகுப்பில் கலந்து கொண்டது மகிழ்வைத் தருகிறது. பாடம் தான்..... எனக்கு சிறிது நன்றாக புரிந்தது சகோ. கடினமான விடயத்தை மிக இலகுவாக சொல்லி சென்று விட்டீர்கள்.பகிர்வுக்கு மிக்க நன்றி..
    ---------
    தங்களுக்கும் எனது சகோதரர் மற்றும் குட்டீஸ்கள் உள்ளிட்ட இல்லத்தார் அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள் சகோதரி. நன்றி..

    பதிலளிநீக்கு
  5. நன்றி சகோ!நெஜமாவே புரிஞ்சதா?உண்மையை சொலுங்க .இந்த விசப்பரிட்சையை இத்தோட நிறுத்திக்குவேன்ல ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிஜமாகவே புரிகிறது சகோ. tense விடுத்து மற்ற சுவாரசியமான ஆங்கில இலக்கணங்களை உங்கள் பாணியில் பதிவிடுங்கள் சகோதரி. நாங்கள் மீள்பார்வை செய்ய உதவியாக இருக்கிறது. புதிய முயற்சிகள் என்றும் தோற்பதில்லை. தொடர்ந்து தாருங்கள் சகோதரி.
      ------
      எனது சகோதரர் வலைத்தளம் நாளுக்கு நாள் பொலிவாகி வருவதைக் காணும் போது மகிழ்ச்சியாய் இருக்கிறது. பதிவுக்கு பதிவு வித்தியாசம் காட்டுகிறார். அவருக்கும் வாழ்த்துகள்.

      நீக்கு
  6. .இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.மேடம்/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி விமலன் சார் ,தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எனது வாழ்த்துக்கள் !

      நீக்கு
  7. உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வெங்கட் சார் தங்களுக்கும், என் தோழி ஆதி அவர்களுக்கும் குட்டி ரோஷ்னிக்கும் என் வாழ்த்துக்கள் !

      நீக்கு
  8. பொங்கலிட்டுப் போற்றியே பூமிவளம் காத்திடுவோம்
    எங்களுக்கும் ஈய்ந்தருள் என்று!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உளமார்ந்த
    இனித்திடும் தமிழ்ப்புத்தாண்டுப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்
    சகோதரி.

    தைப்பொங்கல் அன்று திரு அ.பாண்டியன் (சகோதரன்) அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பு பற்றி பதிவாக வலம் வந்துள்ளது சென்று பாருங்கள்... ,இதோ முகவரி-http://pandianpandi.blogspot.com/2014/01/blog-post_15.html?showComment=1389805462710#c4429992781935370602
    வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ரூபன் அண்ணா.நானும் அந்த பதிவை பார்த்தேன் .சகோவின் அன்பில் நானும் கஸ்தூரியும் நெகிழ்ந்திருக்கிறோம் .தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் !

      நீக்கு
  10. திரு.பாண்டியன் தன் வலைத்தளத்தில் உங்களை அறிமுகப்படுத்தி இருந்தார். அதன் மூலம் உங்கள் தளம் அறிந்தேன். ஃப்ளோவராக சேர்ந்து இருக்கிறேன்.மீண்டும் நிதானமாக வந்து பதிவுகளை படித்து என் புத்திக்கு எட்டிய மாத்திரத்தில் கருத்துகளை பதிகிறேன். அது வரை வாழ்க வளமுடன் என்று வாழ்த்தி விடை பெறுகிறேன். தமிழ் புத்தாண்டில் இரு நல்ல தளங்களை பாண்டியன் மூலம் பரிசாக பெற்றேன். மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சார் தங்களது முதல் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது .இதனை ஆழமான காட்டமான எழுத்துக்கு சொந்தக்காரர் #என் புத்திக்கு எட்டிய மாத்திரத்தில் கருத்துகளை பதிகிறேன்.#இது தான் தன்னடக்கம் என்பதா?தங்கள் வரவு நல்வரவாகுக !

      நீக்கு
  11. நான் நண்பர் பாண்டியனின் வலைப்பூவிலிருந்து தங்களை தெரிந்துகொண்டேன். (ஏற்கனவே தங்கள் கணவரின் வலைப்பூவை தொடர்ந்துக்கொண்டிருக்கிறேன்) உங்களுடைய வலைப்பூவில், இந்த பதிவு தான் கண்ணில் பட்டது. இவுங்க நமக்கு பிடிக்காததை சொல்லிக்கொடுப்பாங்க போல(ஆங்கில இலக்கணம் என்று யாராவது சொன்னால், நான் அவர்களை விட்டு பத்து அடி தள்ளி நிற்பேன். அம்புட்டு பயமாக்கும்.... ) அப்படின்னு நினைச்சேன் ஆனா தாங்கள் மற்ற விஷயங்களையும் எழுதுகிறீர்கள் என்று தெரிந்த பிறகு தான் தைரியமா, தங்களின் வலைப்பூவை தொடரலாம் என்று தொடர ஆரம்பித்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா !கிராமர் கிளாசன டரியலாகுதோ ?
      அது நேயர் விருப்பம் சார் பயப்படாதிங்க தொடர்ந்து கிராமர் எழுதி உங்க பொறுமையை சோதிக்க மாட்டேன் .ஆனால் தொழில் புத்தி அப்போ அப்போ தலை காட்டும் .தங்கள் வரவு நல்வரவாகட்டும் !தங்கள் முதல் வருகை மிகுந்த மகிழ்ச்சி .நன்றி சார் !

      நீக்கு
  12. வலை வழியே ஓர் சிறப்பான முயற்சி! ஆனால் ஒரே சமயத்தில் நிறைய டென்ஸ்களை சொல்லியதால் கொஞ்சம் குழப்பம்! நினைவாற்றல் குறைவானவர்களுக்கு புரிய வைக்க ப்ரெஸெண்ட் டென்ஸ் வகைகளை மட்டும் ஒரு பதிவில் பாஸ்டென்ஸ் வகைகளை அடுத்த பதிவில் என்று இன்னும் கொஞ்சம் உதாரணங்களுடன் பகிரலாம் என்பது என்னுடைய ஆலோசனை! நண்பர் பாண்டியன் வலைதளம் மூலம் முதல் வருகை! இனி தொடர்வேன்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் ஆலோசனை உண்மையாகவே பயனுள்ளதாக இருந்தது .ஆனால் இந்த மொத்தபதிவை படி எடுத்தாலே தினசரி(basic) பயன்பாட்டுக்கு உதவியாக இருக்குமென்று வாயில் நுரைதள்ள தட்டி தீர்த்தேன் .தங்கள் முதல் வருகையும் ,வாழ்த்தும் மிக்க மகிழ்ச்சி சார் !நன்றி

      நீக்கு
  13. பயனுள்ள பகிர்வு
    எளிமையாகச் சொல்லிப் போகும் விதம்
    மனம் கவர்ந்தது
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
    நல்ல பதிவினை அறிமுகம் செய்த
    நண்பர் பாண்டியனுக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா தங்கள் வருகையும் கருத்தும் மிகுந்த மகிழ்ச்சியளித்தது.நன்றி

      நீக்கு
  14. பெரும்பாலான பதிவுகள் ஆக்கபூர்வமாக உள்ளது. என் வாழ்த்துகள். தொடர்கின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா,தொடர்கிறேன் னு நீங்க சொல்றது school கு இன்ஸ்பெக்ஷன் வரமாதிரியே இருக்கு. இங்க blogகை பார்த்து டரியல் ஆய்ட்டேன் .but still your presences is my privilege. most welcome sir.

      நீக்கு