திங்கள், 20 ஜனவரி, 2014

ஓய்வில் செல்லும் குலசாமி !!

சச்சின் ஓய்வு அறிவிப்பின் போது எழுதியது

பதின்பருவத்தில்
எங்களுக்கும் மதமாய் இருந்தது
கிரிகெட் !!

சச்சின் ,டிராவிட் யுவராஜ்
என கலவையாய்
ஜாதிகள் !!

குறிப்பேட்டின் அட்டையில்
ஜாமென்ட்ரி டப்பாவில்
ஜன்னலில் ,கதவில் என
எங்கும் குடியிருக்கும்
எங்கள் கிரிகெட் குலசாமி !!

அதிரடிக்கு பெயர்போன
சச்சின் இனத்தவரோ
கட்டை மன்னன் என்றே
வம்பிழுப்போம் டிராவிட் இனத்தவரை


இந்தியச்சுவர்
எங்கள் எல்லைசாமி என
தோள்தட்டும்
டிராவிட் இனம் !

காதோரம் நரையுமில்லை
கண் புரையும் விழவுமில்லை
அலுவலும் ,அடுப்படியுமாய்
அனுதினமும் சுழல்கையிலே

சச்சின் ஓய்வு என்றது செய்தித்தாள்
எங்கள் தலைமுறைக்கே வயதாகிவிட்டதாய்
ஏக்கப்பெருமூச்சொன்றை வெளியிட்டு
நின்று பின் சுழன்றது வாழ்வு !
                                                    

32 கருத்துகள்:

  1. //எங்கள் தலைமுறைக்கே வயதாகிவிட்டதாய்
    ஏக்கப்பெருமூச்சொன்றை வெளியிட்டு// அதேதான் தோழி, மூத்த தலைமுறையாகிவிட்டோமே என்று தோன்றியது..
    கவிதை அருமை!

    பதிலளிநீக்கு
  2. என்ன விரைவான பின்னூட்டம் !?
    நன்றி தோழி !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் பதிவிட்டு சில நிமிடங்களில் பார்க்கும் பேறு பெற்றேன்..DD அவர்களை முந்திவிட்டேன் :)

      நீக்கு
  3. அன்பு சகோதரிக்கு வணக்கம்
    சச்சின் ஓய்வுக்கு ஒரு கவிதை. அழகாக காட்சியாய் கடந்த காலங்களைக் கண்முன்னே நிறுத்தி விட்டீர்கள். உண்மையில் கிராமங்களில் சச்சின் அவுட் என்றால் பஞ்சாயத்து தொலைக்காட்சியை நிறுத்தி விட்டு வேறு வேலைக்கு சென்று விடுவதைக் கண்டதுண்டு. சச்சின் ஒரு மதமாக இருந்ததையும் கிரிக்கெட் கடவுளாக இருந்ததையும் மறுப்பதற்கில்லை. அழகான கவிதைக்கு நன்றீங்க சகோதரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோ .அது ஒரு அழகிய நிலா காலம் .கடந்துவிட்டது.

      நீக்கு
  4. ஏதோகிரிக்கெட் பற்றி எழுதி இருக்கீங்கன்னு நினைக்கிறேன் அது எனக்கு புரியாத சப்ஜெக்ட் புரிய விரும்பாத சப்ஜெட்டும் கூட.... ஆனா இங்க வந்துவிட்டு சும்மா கருத்து சொல்லாம போயிட்டா சாமி கண்ணக் குத்துமுனு பயம் வந்ததால கருத்து சொல்லுறேன்.

    இந்த பதிவை பார்த்து நான் புரிஞ்சு கொண்டது நீங்கள் கிரிக்கெட் பற்றி கவிதை எழுதி இருக்கிங்க. அது எப்படி இந்த மதுரைத்தமிழனுக்கு புரிஞ்சது என்றால் வார்த்தையை உடைச்சு உடைச்சு போட்டு எழுதினால் அது கவிதை என்று பெரியவங்க சொல்லி தந்துருக்காங்க..

    ஹீ.ஹீ அப்ப நான் வரேனுங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹன்சி குரேனியே ,ஜடேஜா வின் கிரிகெட் சூதாட்டத்திற்கு பின் நானுமே மேட்ச் பார்ப்பது வெட்டிவேலை என்று தான் கருதத்தொடங்கினேன்.ஆனாலும் சச்சின் ஓய்வு என் எட்டாம் வகுப்பிற்கு முந்தய நினைவை கிளறிவிட்டது!நானும் கவிதை எழுதிறதில் எல் போர்டு தான்.உடைச்சு எழுதிருகிரதால் இது தான் கவிதை போல னு அவசரப்பட்டு நம்பிடதிங்க பாஸ் .உண்மையாவே கவிதை எழுதுற தலைங்க கோசுக்கபோரங்க .வந்ததுக்கும் ,கருத்துபதிந்ததுக்கும் தேங்க்ஸ் ப்ரோ !

      நீக்கு
  5. தங்களின் இந்த கவிதை, கிரிக்கெட்டின் மீது எந்த அளவிற்கு தங்களுக்கு பற்று இருக்கிறது என்று தெரியவருகிறது சகோதரி.
    வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்களது கவிதைப்பணி.

    பதிலளிநீக்கு
  6. நன்றி சகோ .ஒரு திருத்தம் பற்று இருந்தது .வருகைக்கு நன்றி .குட்டீஸ் நலமா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களை மாதிரி தான் நானும், இப்போது கிரிக்கெட்டை வெறுக்க ஆரம்பித்துவிட்டேன்.
      குட்டீஸ் மிக நலமே.

      நீக்கு
    2. ஒரு வேளை உங்க வீட்டுல கிரிக்கெட் மட்டையை எடுத்து கிரிக்கெட் பாலை அடிப்பது போல உங்களை அடிச்சிட்டாங்களா?

      நீக்கு
  7. உணர்வை படம் பிடித்து காட்டிய கவிதை நன்றும்மா

    பதிலளிநீக்கு
  8. அருமை...... குலசாமி! :) ரசித்தேன். பலருக்கு இவர் இன்னமும் குலசாமி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சார் !தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் நலம் தானே ?

      நீக்கு
  9. பரவாயில்ல உன் அப்பா உன் கிரிக்கெட் ஆர்வத்திற்கு (ஆண் பெண் வித்தியாசம் பார்த்து) தடை சொல்லாமல் இருந்ததே ஒரு நல்ல செய்திதான். நாங்கள்லாம்..(60களில் பள்ளி வாழ்க்கை) முட்டி சிவாஜி-கிழட்டு எம்ஜிஆர் சண்டை போட்டவர்கள். நான் சிவாஜி ரசிகனாக்கும். சரீ.. அதென்ன அழகாப் புதுக்கவிதையில முன்கதைய சொல்லிட்டு, இப்பத்து நடப்பச் சொல்லும்போது சர்ரேலுன்னு -
    காதோரம் நரையுமில்லை
    கண் புரையும் விழவுமில்லை
    அலுவலும் ,அடுப்படியுமாய்
    அனுதினமும் சுழல்கையிலே“ னு மரபு ஓசை அடிச்சு வீசுது? இன்னும் நினைவுக் கவிதைகள் நிறைய எடுத்து வுடு. நல்லாருக்குப்பா.

    பதிலளிநீக்கு
  10. ஏக்கம் உதிர்க்கும் இன்கவியில்
    ஏனோ உள்ளம் தவிக்கிறது
    தாக்கம் எமக்கே தந்தாலும்
    தாய்மண் இளையோர் முன்னேற
    ஆக்க மான இடம்தந்து
    அருமை சச்சின் விலகுகின்றார்
    பாக்கள் பாடி வாழ்த்திடுவோம்
    பணிவாய் வழியும் அனுப்பிடுவோம்..!

    அழகிய கவிதை
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. கவிஞர் எல்லாம் மனதால் என்றும் 16 தான்...
    சிறப்பான கவி .வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சார் தங்கள் வருகைக்கு ,வாழ்த்துக்கும் !

      நீக்கு
  12. கிரிக்கெட்டை காலத்துடன் இணைத்துச் சொன்னவிதம்
    மிகவும் ரசித்தேன்,நானும் கொஞ்சம் முன்பின்னாக
    அதே காலத்தைச் சேர்ந்தவன் என்பதாலும்
    கிரிக்கெட் பிளேயர் என்பதாலும் கூடுதலாக
    கவிதையை ரசிக்க முடிந்தது
    மனம் கவர்ந்த படைப்பு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சார்.தாங்கள் இந்தவாரமும் வலைசரத்தில் அறிமுகபட்டுத்த பட்டிருகிறீர்கள் அல்லவா !வாழ்த்துக்கள் சார் !

      நீக்கு
  13. உள்ளத்தின் ஏக்கத்தை மாறாது பிரதிபலிக்கும் வரிகள் நன்று. பாராட்டுகள் மைதிலி. எங்கள் காலத்திய (?) குலசாமியாக கபில்தேவ் இருந்தார். காலத்துக்கு காலம் குலசாமிகள் மாறிக்கொண்டிருக்கும் அதிசயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மேடம் !மீண்டும் வலைச்சரம் ஆசிரியர்!!வாழ்த்துக்கள் !

      நீக்கு
  14. கிரிக்கெட் கூட கவிதையாக மாறுமோ! என்று வியக்க வைத்த வரிகள்! ஏனென்றால் இது வரை கிரிக்கெட் சூதாட்டம் ஆகி விட்டதுஎன்ற வருத்தத்தில் இருந்ததற்கு இது ஒரு ஆறுதல்தான்.

    குலசாமி எழுதுகலசாமியானதை ரசித்தோம்!

    பதிலளிநீக்கு
  15. கவிதை நன்று...!!

    குலசாமி எனும் அளவுக்கு அவர் தகுதியானவர் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  16. ""அதிரடிக்கு பெயர்போன
    சச்சின் இனத்தவரோ
    கட்டை மன்னன் என்றே
    வம்பிழுப்போம் டிராவிட் இனத்தவரை ""

    நீங்களுமா? இதயே சொல்லி சொல்லி தான் என் நண்பர்கள் என்னை இன்னும் வெறுப்பேற்றுவார்கள். நான் சொல்லும் ஒரே பதில் சுவர் என்பது தான், அற்புதமான கவிதை சகோ... கங்குலி பற்றி காணோம்???

    பதிலளிநீக்கு