சனி, 8 பிப்ரவரி, 2014

விடுமுறை தின சிறப்பு பதிவு

ஒரு நிகழ்ச்சி ;            வெகு நாட்களுக்கு பின் சனிக்கிழமை விடுமுறை.மதியம் நிறைமதிகிட்ட கெஞ்சி, கொஞ்சி, தாஜா பண்ணி கார்டூன் சேனலை
மாற்றிக்கொண்டே வருகையில் பழைய படத்தில் காட்டுவது போல்கடிதத்தில் முகம் தோன்ற ஒரு அப்பா தன் மகன் வீட்டை விட்டு வெளியேற காரணமான munch சாக்டலட்டை வைத்திக்கொண்டு perk விளம்பரத்தில் கண்ணீர் விட்டுகொண்டிருக்க, நிறை கேட்டாள் இந்த விளம்பரத்தை தயாரிச்சவர் யாரும்மா? டூ மச் ஆ இல்ல? என்றாள். உன் வயசுக்கு இது டூ மச் டயலாக் பாப்பா என்றபடி அடுத்த சேனல் போனேன். சூப்பர் சிங்கர் போட்டியில் ஸுபான் பாடத்தொடங்கினார். வைரமுத்துவின் வைர வரிகளில் ,எம்.எஸ்.விஸ்வநாதன் உருகி உருகி பாடிய 'பனை மரக்காடே' எனக்கு மிகவும் பிடித்த பாடல் என்பதால் ரிமோட்டுக்கு ஓய்வு தந்தேன். அவர் பாடிமுடிக்கையில் என் விழிகள் வியர்க்க தொடங்கின( வார்த்தை  உபயம் வைரமுத்து
ஒரு படம் ;       
  வேர்ஜினியா வுல்பின் நனவோடை கோட்பாட்டை போல மனம் பலவாறு யோசிக்கத்தொடங்கியது. (கோட்பாட்டை பற்றி மேலும் தெரிந்துகொள்ள http://en.wikipedia.org/wiki/Stream_of_consciousness  இசையின் சிறப்பை பற்றிய படமென்றால் எனக்கு Danny the dog தான் நினைவு வரும். (நிறைய படமெல்லாம் தெரியாது. ஜெட்லி நடித்ததிலே உன்னுடன் பார்க்ககூடிய படம் என்ற கஸ்தூரியின் பலமான பரிந்துரையால் பார்த்தேன்). ஒரு டான் குழுவில் வேட்டை நாய் போல் வளர்க்கப்படும் Danny ஒரு கட்டத்தில் அந்த குழுவில் இருந்து ஒரு விபத்தால் பிரிந்து பார்வையற்ற ஒரு இசைக்கலைஞரிடம் அடைக்கலம் ஆகிறார். அந்தபார்வையற்றவரின் அன்பும், அவர் பேத்தியின் நட்பும் டானியை எப்படி மனிதனாக்குகிறது என சொல்லும். போஸ்டரை கவனியுங்கள், ஜெட்லி கழுத்தில் நாயின் கழுத்துப்பட்டையோடுஇருப்பார்) அந்த படத்தின் இறுதி காட்சியில் தோழி மொசார்ட் ஒன்றை வாசிக்க தேர்ந்த ரசனையால் டானி  மனிதம் அடைந்ததை காட்டி படத்தை ஒரு கவிதை போல் முடித்திருப்பார் இயக்குனர்.
ஒரு மேற்கோள் ;
    கீட்ஸின் Ode on a Grecian urn எனும் கவிதையின் இந்த வரிகளை சிவகுமார் சார் என் +1 வகுப்பில் நடத்திய போது ரொம்ப ரசித்து சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கு சுத்தமா வெளங்கவே இல்லை. அது எப்படி கேட்காத பாடல் இப்ப கேட்கும் பாடலை விட இனிமையா இருக்கும்? பின்வரும்நாட்களில்  'தென்றல் வந்து தீண்டும் போது'  மனதெல்லாம் தேனுரியது. 'எவனோ ஒருவன் வாசிக்கிறான்'  கேட்ட போது தான்  சிவா சார் சொன்னது புரிந்தது. அதற்கப்புறம் இன்னும் இன்னும் இனிய melodies. சாக வரம் பெற்ற கலைப்படைப்பை பற்றி (urn) பாடிய கீட்ஸின் அந்த கவிதையும் சாகவரம் பெற்றுவிட்டதாகவே தோன்றுகிறது .
ஒரு பாடல் ;
ஒருவழியா தொடங்கிய இடத்திற்கு வந்துவிட்டேன்.(அப்பா.... இப்பயே கண்ணை கட்டுதே)வைரமுத்து வரிகளால் உருக்க, எம்.எஸ்.வி குரலால் நெகிழ, ஏ .ஆர்.ரஹ்மான்  தன் பங்கிற்கு இசையில் இதயம் அறுக்க பெரும் ரணமாக இருக்கும் அந்த பாடலை தேர்ந்தெடுத்த, உணர்ந்து பாடிய சுபானுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!!! தனிமரம் போல் தாய் நாடு பிரிந்து வாடும் என் தமிழ் உடன் பிறப்புகளுக்கு என்ன என்ன செய்ய போகிறோம் என்று மற்றொருமுறை உறக்கம் கொன்ற உன் குரல் வாழ்க ஸுபான்.             கொலையா கொன்னாச்சுன்னு நினைக்கிறேன். good bye for now.

26 கருத்துகள்:

 1. அன்பு சகோதரிக்கு
  தங்களின் ரசனை குணத்தைப் பதிவு வெளிக்காட்டுகிறது. உண்மையில் அந்த விளம்பரம் பார்த்து ஒரு சாக்லெட் குடும்பத்தைப் பிரிக்குமென்றால் அது புளிக்கும் எனும் மனநிலைக்கு வந்து விட்டேன். நிறைமதி நிச்சயம் வருங்காலங்களில் கலக்குவார். அவருக்கு வாழ்த்துகள். அடுத்த முறை நமது வீட்டிற்கு வரும்போது குட்டீஸ்ங்களை அவசியம் கூட்டி வரவும். இது எனது அன்பு வேண்டுகோள் சகோதரி. சூப்பர் சிங்கர் விடாமல் பார்ப்பதுண்டு பாடல்களில் மெய்சிலிர்த்த அனுபவம் நிறைய உண்டு. அழகான பதிவிற்கு நன்றி சகோதரி. சந்திப்போம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி சகோ !
   நிச்சயமாய் அடுத்த முறை நம் வீட்டுக்கு வரும் போது குட்டிஸ்
   வருவார்கள். அவளை வாழ்த்தியமைக்கும் நன்றி !

   நீக்கு
 2. Dany the Dog அருமையான படம்! பாடல் மிக மிக இனிமை! சுபானுக்கும் வாழ்த்துக்கள்!

  தங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சார் தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும்!

   நீக்கு
 3. மிக அநாயாசமாக பல அற்புதத் தகவல்களை எழுதிப் போகிறீர்கள். உங்களிடமிருந்து அறிந்துகொள்ள நிறைய உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள் மைதிலி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மேடம் திஸ் is டூ டூ மச். உங்கள விடவா?!
   என்றாலும் என்னை ஊக்கபடுத்துவதற்கு நன்றி மேடம்

   நீக்கு
 4. Dany the Dog அருமையான படம்! பாடல் மிக மிக இனிமை! சுபானுக்கும் வாழ்த்துக்கள் சகோதரியாரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கரந்தை அண்ணா தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும்!

   நீக்கு
 5. சகோதரி கீதமஞ்சரி சொன்னதை நான் வழிமொழிகிறேன்.ஒரு சில மாற்றங்களுடன் - மிக அநாயாசமாக பல அற்புதத் தகவல்களை எழுதிப் போகிறாய். உன்னிடமிருந்து அறிந்துகொள்ள நிறைய உள்ளது. தொடர்ந்து எழுது மைதிலி. அன்பு அண்ணன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சென்ற முறை ஆங்கிலம் எழுதியதால் அண்ணனை காணவில்லை என தேடும் படியாயிற்று.அண்ணாவின் வருகை பெருமகிழ்ச்சி, மற்றபடி உங்கவீட்டு பிள்ளைந்கிறதாலே அப்படி என்னை உற்சாகபடுத்த நீங்கள் சொன்னதாகவே கருதுவேன். உண்மையாகவே உங்களுக்கெல்லாம் ஒரு நாள் ஏதாவது கைமாறு செய்யவேண்டும் அண்ணா.

   நீக்கு
  2. நல்ல படைப்புகளைத் தொடர்ந்து தருவதன்றி வேறென்ன என் எதிர்பார்ப்பு? வடிவங்கள் மாறினாலும் நம் பாவப்பட்ட மக்களுக்கு ஏதாவது -உறைக்கும்படி- சொல்லிக்கொண்டே இருக்கணும்பா. நம் விதைகள் வீணாகாமல் எங்காவது எப்படியாவது வளரும்.

   நீக்கு
 6. சமயா சமயங்களில் எல்லோரிலுமாய் ஏற்ப்பட்டுவிடுகிற நிகழ்வை பிரமாதமாய் வரிசைப்படுத்தியுள்ளீர்கள்/வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விமலன் சார் ஒரு விஷயம் சொல்லட்டுமா? வேர்ஜினியா வுல்ப் கு பின் நனவோடை கோட்பாடை மிக துல்லியமாய் உணரும்படி நான் வாசித்தது உங்கள் எழுத்தை தான். இதை பதிவு எழுதும்போதே உணர்தேன். தங்கள் வருகைக்கு நன்றி!

   நீக்கு
 7. HEARD MELODIES ARE SWEET ...
  கீட்ஸின் இந்த கவிதையை ப்ளஸ் +1 லா படித்தீர்கள் ? !!!!
  ODE ON A GRECIAN URN

  எனக்கு கல்லூரியில் தான் இதை படிக்க வாய்ப்பு கிடைத்தது. IN 1957

  அந்த உடைந்த மட்பாண்டம் .
  அதிலே ஒரு சிதைந்த ஓவியம்.
  அதில் ஒரு மகுடி ஊதுபவன்.
  அவன் முன்னே ஒரு பாம்பு
  படமெடுத்து.

  மகுடி ஊதுபவனே !! நீ எத்தனை காலம்தான் ஊதிக்கொண்டே இருப்பாய் !!

  என அந்த வாக்கியம்
  நினைவுக்கு வருகிறது.

  கீட்ஸ் போல் இன்னொரு கவி இருக்கலாம்.
  நான் படித்ததில்லை.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 8. HEARD MELODIES ARE SWEET ...
  கீட்ஸின் இந்த கவிதையை ப்ளஸ் +1 லா படித்தீர்கள் ? !!!!
  ODE ON A GRECIAN URN

  எனக்கு கல்லூரியில் தான் இதை படிக்க வாய்ப்பு கிடைத்தது.IN 1957

  அந்த உடைந்த மட்பாண்டம் .
  அதிலே ஒரு சிதைந்த ஓவியம்.
  அதில் ஒரு மகுடி ஊதுபவன்.
  அவன் முன்னே ஒரு பாம்பு
  படமெடுத்து.

  மகுடி ஊதுபவனே !! நீ எத்தனை காலம்தான் ஊதிக்கொண்டே இருப்பாய் !!

  என அந்த வாக்கியம்
  நினைவுக்கு வருகிறது.

  கீட்ஸ் போல் இன்னொரு கவி இருக்கலாம்.
  நான் படித்ததில்லை.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சூரி சார் கலக்குறேள் போங்கோ. நான் மெட்ரிக் சிலபஸ். இன்னும் கொஞ்சம் முன்னேகூட படித்திருக்கலாம் நினைவில்லை. before some 97. நீங்கள் சொல்லும் வரிகளை தொடர்ந்து வருபவை இவை. தங்களை போன்றோர் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது! நன்றி சார்.

   நீக்கு
 9. விளம்பரம் பார்த்ததில்லை, ஆனால் நிறைமதியின் கேள்வி பிடித்தது. நிறைவான அழகான பெயர்! அவளுக்கு அன்பான வாழ்த்துகள்!
  'பனைமரக் காடே' மனதை உருக்கும் பாடல், எனக்கும் பிடிக்கும்.
  Danny the Dog படம் பார்த்ததில்லை, இனி பார்க்கிறேன். பகிர்விற்கு நன்றி!
  கீட்ஸ் வரிகளும் மிக அருமை. எனக்கு அவரின் "I had a dove and the sweet dove died" எப்பொழுதும் நினைவில் இருக்கும்.
  உங்கள் விடுமுறை தினப்பதிவு அருமை, வாழ்த்துகள் தோழி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி க்ரேஸ். தங்களை போன்றோரின் வாழ்த்துக்கள் அவளுக்கு மிகவும் அவசியம். தாங்கள் பொறுமையாய் படித்து கருத்திட்டமைக்கு நன்றி கிரேஸ் !

   நீக்கு
 10. "//நிறைமதிகிட்ட கெஞ்சி, கொஞ்சி, தாஜா பண்ணி கார்டூன் சேனலை
  மாற்றிக்கொண்டே வருகையில்//" - பரவாயில்லை உங்களால் மாத்தமுடியுது. எங்க வீட்டில ரொம்ப கஷ்டம். அதுவும் மாலை 5மணிமுதல் 6மணிவரை, அவர்களுக்கு மிகவும் பிடித்தவை வரும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா...ஹா..
   நிஜம்தான். ரொம்ப கஷ்டம்
   வருகைக்கு நன்றி சகோ!

   நீக்கு
 11. அற்புதமான தகவல்கள்..
  தகவல் களஞ்சியம் என்றே சொல்லலாம் உங்களை...
  ரசிப்புத்தன்மையுடன் தகவல்களை பதிவாக்கித் தந்தமை
  சிறப்பு... சகோதரி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ!

   நீக்கு
 12. Dany the Dog படம் இதுவரை பார்த்ததில்லை. பார்க்க வேண்டும்.....

  பதிலளிநீக்கு
 13. உங்கள் ரசனைக்கு கண்டிப்பா பிடிக்கும் சகோ!
  பாருங்க ,வருகைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு