புதன், 26 மார்ச், 2014

முதல் முயற்சி (blog status)!!

அகிலஉலகமும்  fb , ட்விட் ஜுரத்தில் அகப்படும் முன்னே ஆட்டோவில் ஸ்டேடஸ் போட்ட தமிழ்நாட்டில் பிறந்துவிட்டு, நம் சகோக்களின் நிலைதகவல்களை (ஸ்டேடஸ்) பார்க்கும் போது எனக்கும் எழுதணும் னு தோணுச்சு. டிஸ்கி னு நம் சொந்தபந்தம் எழுதுறமாதிரி நானும் முயற்சி செய்தேன்.


தேர்தல் வாக்குறுதிகளில் பாலாரும்,தேனாறும் ஓடும்னு சொல்லறாங்க நம்ம வாழ்க்கை என்னவோ கோளாறா தான் ஓடுது!


எதிரிகள் இல்லையென்றால்
நீ இயங்கவே இல்லையென்று பொருள்!


வயதோ , காரணமோ மாறலாம் . ரெண்டே வகை ஓட்டுனர்கள் தான்.
ஸ்கூட்டிக்கு வழிவிடுவோர் சங்கம், ஸ்கூட்டியை வழிமறிப்போர் சங்கம்#சாலைவிதிகள்


பாஸ் நம்மை வைத்து காமெடி பண்ணும்போது, அது தன்னை இல்லை என்பது போல் சேர்ந்து சிரிப்பவன் தான் சர்வைவல் -ஆப்-த -பிட்டஸ்ட் #வேலைவிதிகள்


பக்கத்துவீட்டு பெற்றோரின் ஊதியத்தோடு நம்மை ஒப்பிடுவதில்லை நம் பிள்ளைகள் # மதிப்பெண் மாயைகள்


அடித்தவரை விலக்கிவிட்டு அணைக்கையில் தான்
அதிகம் அழும் குழந்தைகள் .



நம் நினைவாற்றலின் வலிமையை நாம் செய்த உதவிகளிலும்
குறைபாடை நாம் செய்த தவறுகளிலும் தான் பயன்படுத்துகிறோம் //மாத்தி யோசிங்க பாஸ்!


ஒவ்வொரு பழிவாங்கலின் நிழலிலும் ஒளிர்கிறது
ரத்த ருசிகண்ட பூனையின் சாயல்  


என்னை நெப்டியூன்நில் இருந்து சூரியன் வரை பிடிக்கும் என்கிறாள் மகள்//கட்டின பீஸ் செரித்தது


பூக்கள், பழங்கள், விதைகள் என வீட்டின் முகப்பில் பருவத்தே பயிர் செய்கிறது -வேப்பமரம்

 டிஸ்கி :
(இரா .எட்வின் சார், கதிர் சகோ, ஜீவன் சகோ மன்னிக்க)




    

38 கருத்துகள்:

  1. ///எதிரிகள் இல்லையென்றால்
    நீ இயங்கவே இல்லையென்று பொருள்////
    யோசித்துப் பார்த்தால் உண்மைதான்
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  2. என் மனதில் உள்ள கருத்துக்களை, என் வாழ்க்கை விருப்பங்களை, என் கொள்கை சார்ந்த விசயங்கள் அனைத்தும் உங்கள் எழுத்தில் பார்க்கின்றேன். மிக்க மகிழ்ச்சி. அதெல்லாம் சரி. நீங்களும் இதன்படி வாழ முடிகின்றதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //என் மனதில் உள்ள கருத்துக்களை, என் வாழ்க்கை விருப்பங்களை, என் கொள்கை சார்ந்த விசயங்கள் அனைத்தும் உங்கள் எழுத்தில் பார்க்கின்றேன்.// நன்றி சகோ, வாசிப்பவர்கள் தன்னை படைப்பில் காணமுடிந்தால் அது வெற்றிபெறுகிறது என்று நிலவன் அண்ணா சொல்வார் .
      // நீங்களும் இதன்படி வாழ முடிகின்றதா?//
      இந்த கேள்வியிலேயே பல விசயங்களை புதைத்திருகிரீர்கள்!! இப்படிதான் வாழவேண்டும் என நினைப்பவர்களுக்கு சிரமம் வரத்தான் செய்யும். நான் ரெண்டு விசயத்தில் தெளிவா இருக்கேன்
      இடர்வரும்போது
      சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
      பட்டுப்பா டூன்றுங் களிறு.(மு.வ உரை:
      உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும் யானைத் தன் பெருமையை நிலைநிறுத்தும், அதுபோல் ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளர மாட்டார்.) எனும் குறளை நினைத்துக்கொள்வேன்!
      என் பிரியத்திற்குரியர்கள் என்னால் வருந்த நேர்ந்தால் I HOPE,I WORTH IT (இதை தமிழில் மொழிபெயர்க்க தனியே ஒரு பதிவே தேவைப்படும் என்பதால் எப்படி சொல்லியிருக்கிறேன் சகோ). மற்றவர்களை இன்னல் படுத்திவிடக்கூடாது என்பது தான் என் கவலை! ரொம்ப சந்தோசம் சகோ. இவ்வளவு தீவிர சிந்தனையாளருடன் அலைவரிசை ஒத்துப்போவது மிகுந்த மகிழ்ச்சி !!

      நீக்கு
  3. /// எதிரிகள் இல்லையென்றால்... நாம் செய்த தவறுகளிலும்... ///

    அட..! உண்மை...

    பதிலளிநீக்கு
  4. அத்தனை வாசகங்களும் ரசனைக்கு விருந்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோ, ஏதோ புலியை பார்த்து பூனை சூடுபோட்டுக்கிட்ட மாதிரி உங்களையெல்லாம் பார்த்து நானும் முயற்சி செய்தேன் . நைனா ஒட்டிருக்கார் பாருங்க:((

      நீக்கு
  5. நல்ல இற்றைகள்....... சில ரொம்பவே பிடித்தது!

    பதிலளிநீக்கு
  6. எதிரிகள் இல்லையென்றால்
    நீ இயங்கவே இல்லையென்று பொருள்! - என, தத்துவமாகவும்,
    நம்மை வைத்து காமெடி பண்ணும்போது, அது தன்னை இல்லை என்பது போல் சேர்ந்து சிரிப்பவன் தான் சர்வைவல் -ஆப்-த -பிட்டஸ்ட் - #வேலைவிதிகள் - என நடைமுறையாகவும்... அட அட... எப்பூடி? கலக்குடா! (ஆமா இதெல்லாம் எந்த பள்ளிக்கூடத்துல எந்தச சுவத்துல எழுதறது?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அட அட... எப்பூடி? கலக்குடா!//
      விடுங்க அண்ணா நம்ம பசங்க மனசுல எழுதிடுவோம்.
      //அட அட... எப்பூடி? கலக்குடா!// அண்ணன் இருக்க கவலை எதற்கு!
      ஜோதிஜி சகோவிற்கான பின்னூட்டத்தில் நான் சொல்வது சரிதானே அண்ணா?

      நீக்கு
  7. அருமை ..எனக்கென்னவோ //என்னை நெப்டியூன்நில் இருந்து சூரியன் வரை பிடிக்கும் என்கிறாள் மகள்//கட்டின பீஸ் செரித்தது// இது தான் முதலில் நடந்து மகிழ்ச்சியில் மற்றதை எழுதத் தூண்டிவிட்டதோ என்று தோன்றுகிறது..
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிரேஸ் தலைக்கு மேல ஒளிவட்டம் இருக்கா?
      எப்டி கண்டுபிடுச்சீங்க? நன்றி தோழி!

      நீக்கு
  8. வணக்கம் தோழி !
    எத்தனை தத்ரூபமான உண்மைகள்! அருமையான சிந்தனைகள். எப்படி இப்படி உண்மைகளை எல்லாம் போட்டு உடைக்கிறீர்கள்
    என்னை நெப்டியூன்நில் இருந்து சூரியன் வரை பிடிக்கும் என்கிறாள் மகள்//கட்டின பீஸ் செரித்தது wow இதை விட வேறு என்ன வேண்டும். மிக்க மகிழ்ச்சி !அருமை வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதென்ன வணக்கமெல்லாம், ரொம்ப formal ல இருக்கு,
      இது உங்கவீட்டு ஒகே ய?
      ரொம்ப நன்றி இனியா, நானும் இளமதி அவர்களை தேடிட்டு தான் இருந்தேன். நீங்க அட்டகாசமா கவிதை போட்டுடீங்க ! ரெண்டுக்கும் சேர்த்து நன்றி, நன்றி!

      நீக்கு
  9. ஆழமான சிந்தனையில் விளைந்த
    அற்புதமான மொழிகள் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ரமணி சார் நீங்கல்லாம் சொன்ன சரியா தான் இருக்கும்!

      நீக்கு
  10. இன்னா டீச்சர்...? இன்னா ஆச்சு...? சோக்காத்தானே போய்க்கினுர்ந்துச்சு...?

    பதிலளிநீக்கு
  11. என்னை நெப்டியூன்நில் இருந்து சூரியன் வரை பிடிக்கும் என்கிறாள் மகள்//கட்டின பீஸ் செரித்தது
    >>
    நிஜம்தான்

    பதிலளிநீக்கு
  12. நலம்தானா தோழி .மன்னிக்க நான் லேட்டா உங்க பக்கம் வந்திருக்கேன்.என் பக்கம் வந்து தரும் ஊக்கத்திற்கு நன்றிகள்.
    இவற்றில் எல்லாமே எனக்கு பிடித்திருக்கு. குறிப்பா
    //என்னை நெப்டியூன்நில் இருந்து சூரியன் வரை பிடிக்கும் என்கிறாள் மகள்//கட்டின பீஸ் செரித்தது
    பூக்கள், பழங்கள், விதைகள் என வீட்டின் முகப்பில் பருவத்தே பயிர் செய்கிறது -வேப்பமரம்//
    ரெம்ப பிடித்திருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலமே தோழி ! நீங்க எப்போ வந்தாலும் சந்தோசம் தான்
      ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி!

      நீக்கு
  13. #என்னவோ கோளாறா தான் ஓடுது!#
    நீங்க சொல்லியிருக்கிறதைப் பார்த்தா அப்படி தோணலையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட எனக்குமட்டும் இல்ல பாஸ், எல்லா தமிழர்களுக்கும் சேர்த்து சொன்னேன்! நன்றி !

      நீக்கு
  14. நல்லதொரு படைப்பு.

    "//என்னை நெப்டியூன்நில் இருந்து சூரியன் வரை பிடிக்கும் என்கிறாள் மகள்//கட்டின பீஸ் செரித்தது//"

    ஆஹா, மகளுக்கு காட்டின பீஸ் செரித்து விட்டதா, இப்போதே அவள் படிக்கும் பள்ளியில் போய், இன்னும் கொஞ்சம் பீஸை, கட்டச் சொல்லுங்கள் என்று சொல்லுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. y சகோ ? ஏன் இந்த கொலைவெறி?
      ரொம்ப சந்தோசம் சகோ எவ்ளோ நாள் ஆச்சு ?

      நீக்கு
  15. இற்றைகளின் தொகுப்பு மிக அருமை! பல மனதைக் கவர்ந்தது!

    அதெல்லாம் சரி சகோதரி டிஸ்கி ? அதுதான் புரியவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது என்னவோ தெர்ல நண்பர்களே ! பின்குறிப்பைதான் பல பெரிய தலைகள் அப்டி போடறாங்கன்னு நினைக்கிறேன்.

      நீக்கு
  16. எல்லா இற்றைகளையும் விட முதலில் போஸ்டரில் இருக்கிறதே, அது அசத்தல்!

    பதிலளிநீக்கு
  17. எதிரிகள் இயங்க வைப்பது உண்மை தான்

    பதிலளிநீக்கு
  18. எதிரிகள் முன்னேற்றுகிறார்கள் உண்மை

    பதிலளிநீக்கு
  19. அழகான சிந்தனை ... அழமான கருத்துக்கள்.
    https://www.scientificjudgment.com/

    பதிலளிநீக்கு