சனி, 29 மார்ச், 2014

மின்னொளி அணைத்து மண்ணொளி காப்போம்!!(earth hour)

வணக்கம் நண்பர்களே!
இன்று உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 7000நாடுகளில் Earth Hour கொண்டாடப்படுகிறது. sunday ,monday என்பதே மறந்து போக்கும் அளவுக்கு விதவிதமான டே கள் கொண்டாடப்படும் இன்றைய சூழலில் அர்த்தமுள்ள சில கொண்டாட்டங்களில் இதுவும் ஒன்று .



                          முதன்முதலில் சிட்னி நகரில் 2007 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது! உலக வெப்பமயமாதலை குறைப்பது தான் எத்தன நோக்கம் . World Wide Fund for Nature (WWF) அமைப்பானது  march மாதத்தின் கடைசி சனிக்கிழமைக்களில் கொண்டாட தீர்மானித்தது. ரைட் இப்போ என்ன சொல்லவர என்ற கேட்குறீங்க ? தண்ணீர் பிரச்சனை, தமிழர் பிரச்சனை, அரசியல் அரங்கில் இன்று ஹாட் டாபிக் மின்சாரம் தான் . நமக்கு மின்சாரம் தரத்தான் கூடன்குள விஞ்ஞானிகளும் , மீதேன் வியாபாரிகளும் போராடிக்கொண்டிருகிரார்கள்?! எதோ அவங்களால ஆனா சமூகசேவையை அவங்க செய்யட்டும், அரசியல் போராளிகளின் பெர்பாமென்சை இப்போ நாம வெட்டியா தானே வேடிக்கை பார்த்துட்டு இருக்கோம் இந்தநேரத்தில் WWF க்கு உறுதுணையா என்று இரவு 8.30மணி முதல்  9.30வரை எத்தனை விளக்குகளை, மின்போருட்களை அணைத்து வைக்க முடியுமோ அவ்வளவையும் off பண்ணுவோம். மால் , மல்டி ப்ளெக்ஸ் காரன் செய்வானான்னு கேட்கிறதைவிட நான் என் பூமிக்காக , என் வருங்கால சந்ததிக்காக செய்வேன்னு நினைக்கலாமே. நண்பர்களே நாம் பயன்படுத்தும் இருபது யூனிட் மின்சாரத்திற்கு கடத்தும் கம்பி எண்பது யூனிட்டை விழுங்குகிறது என்பது நீங்கள் அறியாததல்ல . எனவே நாம் இருபது யூனிட் பயன் படுத்தாமல் இருந்து நூறு யூனிட்டை மிச்சம் பிடிக்கமுடியும் அல்லவே?( இப்படி நாட்டுக்கு நல்லதா ஒன்ன சொல்லலாம்னு நினைத்தேன், பாருங்க கரந்தை அண்ணா ஸ்டைல் ல நண்பர்களே வந்து ஒட்டிகிச்சு) இது சிட்னி நகரின் போன வருட எர்த் ஹவர் கொண்டாட்டத்தின் போது எடுத்தபடம் என நான் சுட்ட wiki படம்

யாரும் கலந்து கொள்வது பற்றியோ அல்லது இந்த கருத்துக்கள் பற்றியோ
உங்க கருத்தயும் சொல்லுங்க, ஏன்னா  ரெண்டு காது ,ரெண்டு கண்ணு இருப்பதே நிறைய விசயங்களை கேட்கவும் ,கவனிக்கவும் தான் என்பதில் நண்பிக்கையுள்ளவள் நான்.

பி.கு: கட்டுரை எழுத தூண்டுதலாய் இருந்த the hindu கட்டுரைக்கும், குறிப்புகள் தந்து உதவிய அண்ணன் wiki (விக்கிபீடியா ) அவர்களுக்கும் நன்றி ,நன்றி!(தேர்தல் நேரமல்லவா?)

27 கருத்துகள்:

  1. 8.30மணி முதல் 9.30வரை மின்சாரம் இருந்தால் அனைத்தையும் அணைத்து வைப்போம்... (பல இடங்களின் மின்வெட்டு ஆரம்பமாகி விட்டது...!!)

    பதிலளிநீக்கு
  2. அண்ணன் விக்கிப் பீடியா! :))))

    இன்றைய ஒரு நாளாவது செயல்படுத்துவோம்.

    பதிலளிநீக்கு
  3. அன்பு சகோதரிக்கு வணக்கம்
    தங்களின் இந்த பதிவு மூலம் இதற்கு முன் கேள்விப்பட்டு மறந்து போன ஒரு புதிய தகவலைத் தெரிந்த கொண்ட மகிழ்ச்சி. ஆனால் இந்த வேளையைத் தான், இந்த தினத்தைத் தான் நமது தமிழ்நாடு அரசு அனுதினமும் அனுசரிக்கிறதே! (சும்மா விளையாட்டுக்கு) இருப்பினும் இப்போ எவ்வளவோ பரவாயில்லை. அவசியம் இன்று நமது வீட்டில் கடைபிடிப்போம். தேர்தல் நேரம் என்பதால் நன்றி நன்றி ரசிக்க வைக்கிறது. பகிர்வுக்கு நன்றி சகோதரி (இது எப்பவும் சொல்ற நன்றி)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இந்த வேளையைத் தான், இந்த தினத்தைத் தான் நமது தமிழ்நாடு அரசு அனுதினமும் அனுசரிக்கிறதே! (// ஹா..ஹா...
      நன்றி சகோ! பசங்க எப்டி தமிழ் எழுதினாங்கலாம் ?

      நீக்கு
  4. ஆஹா ஆங்கில ஆசிரியர் கணக்கிலும் புலி என்று காட்டிவிட்டீர்களே! தோழி!
    அருமையான விழிப்புணர்வுப் பதிவு சிறு துளி பெரு வெள்ளம் எனவே நீரையும் மின்சாரத்தையும் சேமிக்க விளைவோம்.வெப்பத்தை விரைந்து விரட்ட முடியாவிட்டாலும். குறைக்கவாவது செய்வோம் ! நன்றி தோழி வாழ்த்துக்கள் .....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // கணக்கிலும் புலி// நீங்கவேற கணக்குன எனக்கு கிலி !
      நன்றி இனியா!

      நீக்கு
  5. எங்க ஊரில் 8.00 மணி முதல் 9.00 மணிவரை மின்வெட்டு! அதனால் ஊரே இருட்டாகத்தான் இருக்கும்! நல்லதொரு முயற்சி! செயல்படுத்துவோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னபன்றது ? நம்ம கடமைக்கு செய்யவேண்டியது இருக்கே!
      நன்றி சார்!

      நீக்கு
  6. இப்போ தான் எப்ப மின்சாரம் இருக்கும் என்பதே கேள்வியாகி விட்டதே....

    இரவு அந்த நேரத்தில் இருந்தால் நிச்சயம் கடைப்பிடிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...ஹா..
      இருந்த நாம பண்ணுவோம் ,இல்லைனா அரசாங்கம் பண்ணுசுன்னு நினைப்போம்:))) நன்றி தோழி!

      நீக்கு
  7. ஆஹா, எங்கள் நாட்டில் கடைப்பிடிக்கும் ஒரு பழக்கத்தை, நீங்கள் உலகிற்கு சொல்லியதை கண்டு பெரு மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரி.

    இதற்கு தான் ஒரு ஆசிரியர் வேண்டும் என்பது, வாழ்த்துக்களும் நன்றிகளும் சகோ.

    பதிலளிநீக்கு
  8. அரசாங்கமே தினமும் கொண்டாடிக் கொண்டு இருக்கிறதே,
    தாங்கள் குறிப்பிட்டுள்ள நேரத்தில் மின்சாரம் இருக்குமானால் அனைத்து வைக்கிறோம் சகோதரியாரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் சகோ! நம்மால் முடிந்தது! உங்க பேரை பயன்படுத்தியதற்கு கோபம் இல்லையே? நன்றி !

      நீக்கு
  9. நல்ல நல்ல விடயங்கள் சொல்கிறீர்கள் நன்றிம்மா ! ஏற்கனவே கருத்து போட்டிருந்தேன். நீங்கள் வெளியிடவில்லை இன்னமும் என்று என்னின்னேன், நானே வெளியிடவில்லை போலும் ஆகையால் மீண்டும் .... என்னை பொறுத்தளவில் நான் சித்திரை என்று சிறுப்பதுமில்லை பங்குனி என்று பருப்பதும்மில்லை எப்பவும் ஒரே மாதிரி தான் தோழி. ஹா ஹா என்ன யோசனை நீரை மின்சாரத் தை மட்டுமல்ல எதையும் நான் தேவை இல்லாமல் வீணாக்குவது இல்லை தோழி இருக்கிறது என்று. நல்ல விழிப்புணர்வு பதிவு மிக்க மகிழ்ச்சி. ஆசிரியர் களுக்கே உரிய நற் குணங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள் தோழி...! நீங்கள் பாண்டியன் உதாரணமாக வாழ்ந்து கட்டுபவர்கள். மிக்க மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நச் கருத்து இனியா!
      சாரி நான் தான் கொஞ்சம் தாமதமா கருத்துவெளியிட்டேன்!
      நன்றி தோழி!

      நீக்கு
  10. நல்லதொரு பகிர்வு..உங்கள் பதிவைப் பார்த்துக் கண்டிப்பாகச் சிலர் செயல்படுத்தியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்..நான் தாமதமா பார்த்துட்டேன்..அதனால் என்ன, இன்னைக்குச் செஞ்சுடுறேன் :)
    எப்பொழுதும் தேவை இல்லாமல் எதையும் '1' ல் வைப்பதில்லை, '0'தான் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கிரேஸ் !:))
      இந்த விழிப்புணர்வு எல்லோருக்கும் வரணும்!:))

      நீக்கு
  11. மிகவும் நல்லதொரு பதிவு தோழி. இங்கு வருடாவருடம் நடைமுறைப்படுத்துறாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தோழி! நேர்ல பார்க்க சூப்பரா இருக்கும்ல?

      நீக்கு
  12. நல்லதொரு இடுகை! சகோதரி! ஒரு நாள் ம்ட்டும் அல்லாமல் என்றுமே நாம் நமது பயன்பாட்டை அளவுடனும், தேவை இல்லாமல் மின் விசிறிகளையும், விளக்குகளையும் போட்டு வைப்பதையும் தவிர்க்கலாமே! நாம் பல சமயங்களில் மின் சாரத்தை தண்ணீர் போல (அதுவுமே தட்டுப்பாடுதான்!) அணைக்காமல் அப்படியே விட்டுச் செல்வதை தவிர்த்தாலே, சிக்கனமாக இருந்தாலே வீணாவதைத் தடுக்கலாம்!

    பகிர்வுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான சிந்தனை நண்பர்களே!
      இது எல்லோருக்கும் வரவேண்டிய சிந்தனை !
      நன்றி!

      நீக்கு
  13. காலம் நேரம் பார்த்து வெளியிட்ட பதிவு அருமையும் அவசியமும் ஆகிவிட்டது

    இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு