வியாழன், 6 மார்ச், 2014

காலம் விரைகிறது, காதலே வழிவிடு!

முடி கலைக்க நுழைந்த விரல்கள்
மூளை கலைத்து விட்டனவா ?
கொதிக்காத உலையும்
கொடும்பசியுமாய் வாடும் ஏழ்மை கண்டு
கொதித்துப்போய் எடுத்த பேனாவால்
கொட்டிய மழையை பாடுகிறேன் சிலிர்ப்பாய்!

மரணவலிகளை தீட்ட தூரிகை எடுத்துத்
மயிலிறகு வரைந்தோய்கிறேன்
போர்க்களத்தில்  கூட நான்
பூச்செடிகள் நடுகிறேன்


சில்வண்டுபோல நீ
செவிப்பறையில் இரையாதே
தலையாய பணி நூறு
தடைபட்டுக்கிடக்கிறது
கள்ளுண்ட மந்தியாய்
கவிதை மனம் தவிக்கிறது


கடமைஅழைக்கிறது
காதலே ஓய்வெடு  !
காலம் விரைகிறது
காதலே வழிவிடு!



38 கருத்துகள்:

  1. "//கள்ளுண்ட மந்தியாய்
    கவிதை மனம் தவிக்கிறது //"

    என்ன அருமையான வரிகள் .

    வாழ்த்துக்கள் சகோதரி.

    பதிலளிநீக்கு
  2. அழகு ...!

    மூன்று மற்றும் நான்காவது வரிகள் தான் புரியவில்லை .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எவ்ளோ நாள் ஆச்சு சகோ !!
      most welcome!!
      இப்போ புரியும்னு நினைக்கிறேன் !

      நீக்கு
  3. கடமைக்காக காதலையும் விலகியிருக்கச் சொல்லும் கவிதை வெகு அழகு!

    பதிலளிநீக்கு
  4. அன்பு சகோதரிக்கு வணக்கம்
    கொண்ட கொள்கையைக் கோண விட்டு கடமை முடிக்கும் முன் காதல் என்றால் வழிவிட தான் வேண்டும் காதலுக்கு. காதலின் மென்மையையும் காதலால் தடைபடும் விடயத்தையும் ஒரு சேர சொல்லியிருக்கும் அழகான வரிகள் சகோதரி. பகிர்வுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோ தங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது!

      நீக்கு
  5. அட அட..சிலிர்த்துவிட்டேன் தோழி..மிக அருமை!
    படங்கள் எங்க இருந்துதான் எடுக்குறீங்களோ, கலக்கல்!
    கவிதை மனம் பல கவிதைகள் படைக்கட்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க வேற , உங்களை போல சங்கத்தமிழில் ஊடு கட்ட தெரியாதுங்க!!!
      நன்றி கிரேஸ்!

      நீக்கு
    2. அட,,பாட்டன்மார் எழுதிவச்சுட்டுப் போய்ட்டாங்க..அத எடுத்துக் குடுத்துட்டு இருக்கேன் :)

      நீக்கு
  6. கடமைஅழைக்கிறது
    காதலே ஓய்வெடு ! //

    கவிதை அருமை! சகோதரி! கடமை அழைக்கட்டும்! அதற்காக காதல் ஓய்வெடுக்க வேண்டுமா என்ன? இரண்டும் கஷ்டமோ? இரட்டைக் குதிரை சவாரி செய்ய?

    கவிதையை வெகுவாக ரசித்தோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட வாலண்டைன்ஸ் டே முடிஞ்சு எத்தனை நாள் ஆச்சு !
      இன்னும் இப்டி கவிதையா வந்த என்னபண்ணுறது சகோ?
      வருகைக்கு நன்றி சகோ!!

      நீக்கு
  7. காதலே கடமையென்று எண்ணாமல், கடமைக்கு காதல் புரியாமல், கடமையில் காதலும் ஒரு அங்கமென்றுணர்ந்து அதற்கும் இடம் கொடுத்தால்தானே கவிமனம் நிறைவுபெறும்? சூரியன் எரித்துக்கொண்டே இருந்தால் பயிர் வாடிவிடும். மழை பொழிந்துகொண்டே இருந்தாலோ அழுகிவிடும். இரண்டும் கலந்திருந்தால்தானே விளைச்சல் வீடுவந்து சேரும்? வாதத்துக்கு ஆயிரம் சொன்னாலும் அசத்தலான கவிதை என்பதை மறுக்கவியலாது. மிகவும் ரசித்தேன். மனம் நிறைந்த பாராட்டுகள் மைதிலி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக மிக நன்றி கீதா அக்கா!
      அப்டி சொல்லலாம் தானே!!

      நீக்கு
    2. தாராளமாய்ச் சொல்லலாம். அனுமதி வேண்டுமா என்ன? நிச்சயம் நான் உங்களை விடவும் பெரியவளாகத்தான் இருப்பேன்.

      நீக்கு
  8. மிக மிக அற்புதம்
    கவிதையை மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. கனவுகளில் காதலித்த கதாநாயகியிடம் கடைசியில் சொல்வார்-“கடமை காத்திருக்கிறது கண்ணே! இப்போது காதலிக்க என்னால் இயலாது, காத்திரு“ இது நம்ம புரட்சித்தலைவர். உலகப்புகழ்பெற்ற நாவல் “தாய்“கதாநாயகன் பாவெல் பற்றி விமர்சனம் சொன்னபோது, “போர்க்களத்தில் காதல் இல்லாமல் இருக்ககலாம். வாழ்க்கையில் இருக்கிறதே!” என்றாராம் விலாடிமீர் இல்யீச் உல்யனொவ் (எ) வி.ஐ.லெனின்!
    “போர்க்களத்தில் கூட நான்
    பூச்செடிகள் நடுகிறேன்“ - ஈழப் போராளிக் கவிஞைகள் (அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள்) போர்க்கள அனுபவத்தில் எழுதிய “பெயரிடாத நட்சத்திரங்கள்“ கவிதைத் தொகுப்பை எனக்கு ரஞ்சி அனுப்பியிருக்கிறார். (விரைவில் விமர்சனம் எழுதுவேன்) இதுதான் வாழ்க்கை, இதுவே கவிதை. எழுது எழுது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா இந்த கவிதையை வைத்து இவ்வளவு பெரிய திறனாய்வு !
      இது தங்கள் ஆழ்ந்த வாசிப்பையும், நினைவாற்றலையும் காட்டுகிறது அண்ணா ! இன்னும் படிக்கணும் மைதிலி!!! நான் எனக்கு சொல்லிகிறேன் அண்ணா !

      நீக்கு
  10. “அலைகடலும் தூங்குகையில்
    அகக்க கடல்தான் பொங்குவதேன்?
    நிலமகளும் துயிலுகையில்
    நெஞ்சகம்தான் விம்முவதேன்?” -- புகழ்பெற்ற கவிதை நினைவிருக்கா?
    உன் கவிதை எனக்கு இந்தக் கவிதையை நினைவூட்ட, நெட்டுயிர்த்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப நன்றி அண்ணா ! உங்கள் ஊக்கச்சொற்களும், வழிகாட்டலும் என்னை கூர்த்தீட்ட உதவுகிறது!!

      நீக்கு
    2. கல்கியின் “பொன்னியின் செல்வன்“ வரலாற்று நாவலின் மறக்க முடியாத பெண் பூங்குழலி கடலிடம் பாடும் பாடல்!

      நீக்கு
    3. ஒருகாலத்தில் விடியவிடிய படித்த நாவல் !
      எப்படி இந்த வரியை மறந்தேன்.
      ரொம்ப நன்றி அண்ணா. மறுவாசிப்பு செய்யவேண்டும். சரியா பதிமூன்று வருடங்களுக்கு முன் படித்தது! ஆனாலும் நான் ரொம்ப absent minded :(((

      நீக்கு
  11. முடி கலைக்க நுழைந்த விரல்கள்
    மூளையை கலைத்து விட்டனவா?
    அப்பப்பா பொல்லாத விரல்கள்.

    என் மேனியும் சிலிர்த்தது.என்னே வரிகள் அருமையான சிந்தனை !
    காதலுக்காக அனைத்தையும் கைவிடும் உலகில் கடமைக்காக காதலை வழிவிடும்படி கேட்டது அருமையிலும் அருமை...! தோழி ! பாராட்ட வார்த்தையே இல்லை தோழி ! வாழ்க வாழ்க.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி இனியா ,எவ்வளவு ரசித்திருகிறீர்கள் ; விவரிதிருகிறீர்கள் !!
      தங்கள் வாழ்த்துக்கு என் வந்தனங்கள் !!

      நீக்கு
  12. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : கிரேஸ் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தேன் மதுரத் தமிழ்!

    வலைச்சர தள இணைப்பு : பாரதியார் வியந்த பெண்மணியும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்த்தேன் அண்ணா தங்கள் தன்நலம் அற்ற பணி போற்றத்தக்கது!
      நன்றி அண்ணா !

      நீக்கு
  13. கடமைஅழைக்கிறது
    காதலே ஓய்வெடு !
    காலம் விரைகிறது
    காதலே வழிவிடு!///
    அருமை
    கடமை வெல்லும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அண்ணா ! தங்கள் வருகை மகிழ்ச்சியளிகிறது!

      நீக்கு
  14. டீச்சர் அருமை சொக்கிப்போயிட்டே! போங்க! கவிதையை படிக்கும்போது கவிஞர் வைரமுத்து அவர்களின் துப்பாக்கிஎப்போது பூப்பூப்பது? என்றகவிதை நினைவிற்குவருகிறது.

    பதிலளிநீக்கு
  15. மிகவும் நன்றாக இருக்கிறது இந்த கவிதை....

    அடிமேல் அடி எடுத்து வைக்கும் இந்தப் பெண்ணின் [படத்தில் இருக்கும்] கால்கள் வலிக்காதோ!

    பதிலளிநீக்கு