ஞாயிறு, 16 மார்ச், 2014

மாயச்சுழல் !!


தண்ணீரில் விழுந்த எறும்பாய் 
தத்தளிக்கிறேன் நான் 
                                                பரிவோடு கிள்ளி எறிகிறாய்
புன்னகை எனும் இலையை 
பற்றி கரைசேரவே முயல்கிறேன்
என்னிலும் படபடப்பாய் 
இமை தட்டுகிறாய் நீ
மீளமுடியா சுழலில் 
மீண்டும் வீழ்கிறேன் !!

32 கருத்துகள்:

  1. கவிதையை எழுதி வைத்து விட்டு அதை நான்கு நாள் கழித்துப் பாருங்க. அதன் பிறகு ஒரு தாக்கத்தை உருவாக்கினால் மட்டுமே பதிவில் வலையேற்றுங்க. இன்னமும் சிறப்பாக தரும் தகுதி உங்களிடம் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது போன்ற ஆக்கபூர்வமான விமர்சனங்கள் தான் நம்மை வளர்க்கும். இது தாங்கள் என் எழுத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையையும், அக்கறையையும் காட்டுகிறது சகோ! அதற்கு மிக்க நன்றி. ஆகட்டும் அப்படியே செய்கிறேன்!

      நீக்கு
  2. புன்னகை எனும் இலையை
    பற்றி கரைசேரவே முயல்கிறேன்

    என்னம்மா குட்டி குட்டி டியா அசத்திறீங்க எவ்வளவு விடயம் அதில் வாழ்கை தத்துவமமே அடங்குகிறது. எவ்வளவு இலகுவாக சொல்லி விட்டீர்கள்.
    அசத்து தோழி அசத்து காண வருவேன் நான் ஓடி!

    பதிலளிநீக்கு
  3. கவிதைக்கு ஏற்ற அருமையான படம்
    வாழ்த்துக்கள் சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  4. அழகான காதல் கவிதை தோழி . பகிர்வுக்கு நன்றிகள்.

    // என் தோழி முகில் அறிமுகம் ஆகிருக்காங்க !

    வலைச்சரத்தில் தங்களது பின்னூட்டம் கண்டேன். மிகவும் மகிழ்ச்சியுற்றேன். தங்களது மேலான அன்பிற்கும் நட்பிற்கும் கோடானு கோடி நன்றிகள் தோழி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா ! ரொம்ப சந்தோசம் தோழி !
      நான் உண்மையாதான் சொன்னேன்!

      நீக்கு
  5. நல்ல அழகான expression! என்ன கொஞ்சம் சோகம்! ஜாலியா எழுதுங்கபா!!!

    பதிலளிநீக்கு
  6. எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க ...இந்த சுழல் பெர்முடா டிரையாங்கில் சுழலை விட மோசமானது !

    பதிலளிநீக்கு
  7. மீண்டும் வீழ்கிறேன் என்றுதான் நீங்கள் முடித்திருக்கிறீர்களே தவிர மீண்டும் எழமுடியாமல் வீழ்கிறேன் என்று எழுதாததால் மீண்டும் புன்னகையின் உதவியுடன் வெளிவந்துவிடுவீர்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பா போர் மேகங்கள் களைந்துவிட்டு !
      நன்றி சகோ!

      நீக்கு
  8. அருமை..... காதல் மட்டுமல்ல வாழ்க்கையே மாயச் சுழல் தானே.....

    பதிலளிநீக்கு
  9. முதலில் வந்தது வாழ்வியல் சுழல், பின்னால் வந்தது -வருவது- இன்பச் சுழல் சரியாடா? இரண்டு சுழலுமே மாறிமாறித்தான் வரும். வருவதுதானே வாழ்வு? இன்பச்சுழல், இன்பச் சுமை இரண்டையும் “அறிந்தவர் அறிவாராக” என்னும் கண்ணதாசனைப் புரிந்தவர்க்குத்தான் புரியும். நீ கலக்குப்பா... தோற்றவர் வெல்லும் ஒரே இடம் குடும்பம் தானே? (குறள்-1327)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா மேற்கோள் புலியே அசத்தறீங்களே !
      சரியாய் சொன்னீங்க அண்ணா ரொம்ப நன்றி!

      நீக்கு
  10. இருவரும் படபடத்தால் சுழல்தான் என்றும் பொருள்கொள்ளலாமோ? எனக்குப் புரிந்தது அவ்வளவே :) அருமையான கவிதை தோழி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு அண்ணன் கீழ விளக்கம் சொல்லிருக்கிறார் பாருங்க.
      நன்றி தோழி!

      நீக்கு
  11. அவளுக்கு ஏதோ புறச்சுழல் சிக்கல். அதிலிருந்து கரையேற அவனது சிறு புன்னகையே படகாகிறது... சிரமபட்டுக் கரையேறுவதைப் படபடப்புடன் பார்த்துக்கொண்டிருக்கிறான் அவன். அவனது படபடப்பு -இவள் மீதான காதலின் அடையாளம் என்பதறிந்து, அவளுக்குள் பட்டாம் பூச்சிகளைப் பறக்க விடுகிறது. இப்போது அந்தக் காதல் சுழலில் இவள் சம்மதித்தே விழுகிறாள்.. எழ மனமின்றி... (சரியாப்பா கோனார் நோட்ஸ? உஸ்...அப்பாடா...)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சரியாப்பா கோனார் நோட்ஸ?//
      நீங்கள் தமிழ் அய்யா என்பத நொடிக்கொருதரம் நிரூபிக்கிறீர்கள் அண்ணா.இவ்ளோ அழகா எனக்கு விளக்கம் கொடுக்க த்தெரியாது அண்ணா.நன்றி நன்றி !

      நீக்கு
    2. அடாடா, இந்த கவிதையை இப்படியெல்லாம் தான் பிரிச்சு பொருள் உணர்ந்துக்கொள்ள வேண்டுமா???

      மிக அழகாக விளக்கம் சொன்னதற்கு நன்றி ஐயா.

      நீக்கு
  12. வாசித்து முடித்தப் பின்னரும் மனச்சுழலில் சுழன்றுகொண்டிருக்கிறது கவிதை. பாராட்டுகள் மைதிலி.

    பதிலளிநீக்கு
  13. கவுஜன்ன இத்தாம்ம்மே கவுஜ... சோக்கா கீதும்மே... பிச்சரு ஒன்னு போட்ருக்கியேம்மே... ஒன்னாங்கிளாஸ்...

    பதிலளிநீக்கு
  14. அப்புறம் எப்போது தான் அந்த மீழ முடியாத சூழலிலிருந்து மீண்டு வரப்போறீங்க???
    அருமையான கவிதை வாழ்த்துக்கள் சகோ.

    பதிலளிநீக்கு