புதன், 23 ஏப்ரல், 2014

விளம்பரத்துக்கு விளம்பரம்-கொஞ்சம் ENGLISH VI

இது CLICKBAITங்கோ .புரியலைன முந்தின பதிவை பாருங்க.
     ஒரு சிறுநகரத்தில், கிராமத்தில் அரசுப்பள்ளியில் பணி செய்யும் ஒரு ஆங்கில ஆசிரியராக எனக்கு சில பொறுப்புகள் இருப்பதாகவே உணர்கிறேன். முதல் விஷயம் என் மாணவர்கள் ஆங்கிலத்தை பார்த்து பதட்டம் அடையக்கூடாது. ஆங்கிலத்தில் பத்து வாக்கியம் சேர்ந்தார்போல் பேசுபவர்களை எதிர்க்கொள்ளும் துணிவு அவர்களுக்கு வேண்டும். மொழி ஒரு கருவிதான் திறமைஅல்ல, ஆனாலும் ஆங்கிலக்கத்தியை கண்டு அஞ்சாமல் அதை பயன்படுத்தும் லாவகம் அவர்களுக்கு கைவர வேண்டும்.
 என்றால் நான் அவர்களுக்கு அதை எளிமையாய் அறிமுகம் செய்யவேண்டும்  இல்லையா? எங்குமே ஆங்கிலம் கேட்காமல் வளரும் மாணவன் முதல் முறையாய் கல்லூரியில் அதை எதிர்க்கொள்ளும் போது எத்தனை தடுமாற்றமாய் இருக்கும் என்பதை உணரமுடிந்தவர்கள் தொடர்ந்து படியுங்கள். (உணரமுடியாதவர்கள் மன்னியுங்கள் நாம் அடுத்த பதிவில் சந்திக்கலாம்)

so அங்கிலத்திற்கான தேடலை அவர்களிடம் விதைக்க நான் அவர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான ஆக்டிவிடி ஒன்றை கொடுத்திருந்தேன். அது விளம்பரங்களில் வரும் ஆங்கில ஸ்லோகன்களை  பட்டியல் இட்டு வருவது. பின் அவற்றை வைத்து ஒரு புதிர் விளையாட்டாய் உருவாக்கினோம். நீங்களும் ட்ரை பண்ணிப்பாருங்கள். ஸ்லோகன் கொடுத்துவிடுவேன். புது tab திறந்து google ளில் தேடாமல் அது என்ன பொருளுக்கானது என கண்டிபிடியுங்கள் .

enjoy the royal treatment.

joins anything except broken heart.

because you worth it.

utterly butterly delious.

I feel up.

neibour's envy, owner's pride.

behave yourself India, the youth are watching.

connecting people.

you just can't stop eating it.

why should boys have all the fun.

என்ன படிச்சுடீன்களா? விடை கிழே

Magnum icecream

Quickfix

L'oreal

Amul

7up

Onida

The Hindu

Nokia

Lactoking

Herohonda pleasure

இப்படி அவங்க படிக்கிறது இங்கிலீஷ்னே தெரியாமல் கற்று கொடுக்கவேண்டியது இருக்கு.
ஓகே ஸ்டார்ட் the மியூசிக் !!

konjam english partv

14 கருத்துகள்:

  1. நல்லதொரு முயற்சி! உங்களின் இந்த பணி சிறக்க வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. சிறந்த ஆசிரியை எனக்குத் தோழியாகக் கிடைத்ததில் மகிழ்கிறேன்...வாழ்த்துகள் மைதிலி

    பதிலளிநீக்கு


  3. வணக்கம்!

    ஆங்கிலம் கற்கும் அாிய விளையாட்டில்
    நீங்கிடும் அச்சம் நிலைத்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    மூளைக்கு ஒரு வேலை...... சிந்திக்க வைக்கிறது.....பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    சில நாட்கள் இணையம்வர முடியாமல் போனது.இனி தொடரும் வருகை..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. அடடே! இது ரொம்ப நல்ல உத்தியாத் தோணுதே! அன்றாடம் அவர்களின் கண்களில் பட்டுக் கருத்தைக் கவரும் செய்தித்தாள் தொலைக்காட்சி விளம்பரங்களிலிருந்து ஆங்கிலததை - ஆங்கிலமென்ற அச்சமில்லாமல்- மண்டையில் ஏற்றிக்கொள்வது எவ்வளவு எளிது, மற்றும் சுவையானதும் கூட. எனக்கென்று ஒரு இங்கிலீஷ் டீச்சர் ஏழாப்பில் வந்தாங்க பாரு.. “குட் குட்டர் குட்டஸ்ட்“ னு எனக்கு டிகிரிஸ் ஆப் கம்பெரிசன் சொல்லித்தந்தாங்க பாவம் அவுங்க என்னா செய்வாங்க வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்ணாங்க.. அவ்வளவுதான் நாம இங்கிலீசுலேர்ந்து எஸ்ஸாயிட்டம்ல? உண்மையிலயே நல்லா இருக்குப்பா. ( தேசப்பற்றோடு சுதேசி அமுல் விளம்பரம்! என்னா எச்சரிக்கை பா! அதுதான் சரி) அடுத்த பதிவுக்காக காத்திருக்கேன் டீச்சர்!

    பதிலளிநீக்கு
  6. 30% கூட சரியாய் தெரியல. ஏன்னா, எனக்கும் டீவிக்கும் தூரம்.

    பதிலளிநீக்கு
  7. புதிரை போட்டு புரிய வைக்கும் என் தோழி படு கில்லாடி தான். மாணவர்கள் ஆங்கிலத்தை கண்டு அஞ்சாதிருக்க எடுக்கும் முயற்சியும் சரளமாக பேசவேண்டுமே என்ற ஆதங்கமும், என்னை வெகுவாக கவர்ந்தது தோழி தங்கள் நட்பு என் பாக்கியம். அருமையான டீச்சரே முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
  8. ஆஹா புதிய முயற்சியாக இருக்கிறதே. உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. நிச்சயமாக இதுபோன்ற முயற்சிகள் மாணவர்களுக்கு பெரும் அளவில் உதவும் பாராட்டுக்கள்
    விடையை உடனே கொடுத்துட்டீங்களே

    பதிலளிநீக்கு
  10. உங்களை ஆசிரியராக கிடைத்த மாணவர்கள் அதிர்ஷ்டசாலிகள்தான். பாராட்டுக்கள் தோழி.

    பதிலளிநீக்கு
  11. எதிர்காலத்திலும் உங்களை நினைத்து கொண்டே இருப்பார்கள் மாணவ மாணவியர்கள். வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு