ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

வசனங்களால் வாழும் வடிவேலு

          
                ஒரு தீக்குச்சி உரசி, தன்னையும் தமிழகத்தையும் ஒருசேர பற்ற வைத்த முத்துகுமாரின் கடிதத்தை படித்தீர்களா? அரசியல் நயவஞ்சத்தில் அது நம்மத்து போனது தனிக்கதை. தன் அழ்ந்த, பரந்த வாசிப்பையும், தமிழ் பற்றையும், வலியையும் ஒரு சேர கொட்டி அவர் எழுதிய அந்த கடிதத்தில் ஒரு விஷயம் அதை  படித்து பல வருடங்கள் ஆனா பின்னும் என்னை இதை எழுதிவிடுமாறு தூண்டியபடியே இருந்தது. ஆமாம் அந்த கடிதத்தில் அவர் வடிவேலுவின் "அது போன மாசம்" எனும் வசனத்தை பயன்படுத்தி இருந்தார்.

               முன்பெல்லாம் மெத்தப் படித்தவர்கள் சினிமாவில் மேற்கோள் காட்ட கண்ணதாசன், வைரமுத்து போன்ற பெரும் கவிகளின் வரிகளையும், இளைஞர்கள் மற்றும் சராசரி மக்கள் ரஜினியின் வசனங்களையும் பயன்படுத்துவார்கள். ஆனால் ஒரு காமெடியனின் வசனம் ஒரு இனத்தின் தவிர்க்க முடியாத அங்கமாகி போன வரலாற்றின் முதல் பக்கமாய் வடிவேலு இருக்கக் காண்கிறேன். சமூக ஊடகங்கள் பல்கிப் போன இந்நாளில் எல்லா காமெடி வசனங்களும் எல்லோராலும் பயன்படுத்தப்படுகிறது தான். ஆனால் வயது வித்தியாசம் இல்லாமல் இப்படி நம் மக்கள் முன்முதலில் பரவலாக வடிவேலுவின் வசனங்களை பயன்படுத்தத் தொடங்கியத்தை கண்ணெதிரே பார்த்தபடி நகர்கிற சாட்சியாய் நானே  இருக்கிறேன்.
            வடிவேலுவின் தனிப்பட்ட கருத்தும் வாழ்வும் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கலாம். எனினும்  அவரது எளிய நகைச்சுவை வசனங்களை நான் பயன்படுத்தியதே இல்லை என சொல்பவர்கள்  மிக குறைவே. புனிதம் என்று நாம் கூறிக்கொண்டு கேள்விகள் கேட்ட முடியாதா ஜீரோ ஹவர் அபத்தங்களை மிக எளிதாய், போகிற போக்கில் போட்டு உடைத்துவிடும் வடிவேலுவின் பாங்கே தனிதான். அதற்கென்று ஒரு உடல்மொழி வேறு வைத்திருப்பார். நான் உன்னை பத்து மாசம் சுமந்து பெத்தவடா என்று செண்டிமெண்டா யாரேனும்  வசனம் பேசினா வடிவேலு தான் ஞாபகம் வருகிறார்.
         அவனா நீ, அலெர்ட இருக்கணும், be careful நான் என்னைய சொன்னேன், அவ்ளோ நல்லவனாடா நீ, அவன் ரொம்ப நல்லவன்டா, கிளம்பிட்டாங்கய்யா, அவ்வ்வ்வவ், கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல, நல்லா தானே போய்கிட்டு இருந்துச்சு, இப்படி இன்னும் சொல்லிகிட்டே போகலாம். என்னை பொறுத்தவரை நகைச்சுவையா பேசுறது எல்லாருக்கும் கைவராத கலை. அப்படி பேசுறவங்களை உடனே பாஸ் என்று அழைக்கத் தொடங்கி விடுவேன். so வடிவேலு பாஸ், ஹீரோக்கள் வசனங்களை மட்டுமே பேசிக்கொண்டிருந்த மக்களை தன் வசனத்தை தவிர்க்க முடியாமல் பேசவைத்த மாஸ். வடிவேலு வசனங்களால் வாழும் கலைஞன் என்று சொல்லி இப்போ கிளம்புறேன், நெக்ஸ்ட் மீட் பண்ணலாம்.

பி.கு
என்னை போலவே வடிவேல் வசனங்களை பயன்படுத்துவோர் உங்க பின்னூட்டத்தில் உங்களுக்கு பிடிச்ச வசனத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே:))

30 கருத்துகள்:

  1. மிகச் சிறந்த கலைஞன்...
    மதுரை பேச்சு வழக்கை அப்படியே திரையில் கொண்டு வந்தவர்...
    இன்று அரசியல் சதிராட்டத்தில் சிக்கி தவிக்கிறார்.
    மீண்டும் அவருக்கு காலம் வெல்லும்...

    நானும் வடிவேலு குறித்த பகிர்வு ஒன்று எழுத் நினைத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. உண்மைமா...வசனத்தை நாம் கூறுகையில் மனதில் மகிழ்வையும் சேர்த்து நிரப்புகின்றது எப்போதும்...தன்னைத் தானே நக்கலடிக்கும் அவரின் பாணியே தனி...

    பதிலளிநீக்கு
  3. என்னையப் போலவே பேசிரான்களே, ஐயோ ஐயோ என்று ஒரு பார்வை வேறு அசத்தலாக இருக்கும்.\\ ஆமா நெக்ஸ்ட் மீட் பண்ணலாம் ///யாரை வடிவேலுவையா. ஓ... எங்களைத்தானா. அது சரி. நல்ல அலசல் வடிவேலு பற்றி நன்றி ! அம்மு வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  4. வடிவேலு திரை உலகின் சொத்து
    அவரைப் புறந்தள்ளியதால்
    இழப்பு திரைக்குத்தானே தவிர
    வடிவேலுவுக்கு அல்ல

    பதிலளிநீக்கு
  5. மனைவி பூரிக்கட்டையால் அடிக்கும்போது: எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது... / வேணாம்... வேணாம்...வலிக்குது... அழுதுடுவன்

    பதிலளிநீக்கு

  6. வலைத்தளத்தில் கவிதைகளை படிக்கும் போது நினைப்பது : ரிஸ்க் எடுக்குறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுறது மாதிரி என்றுதானுங்க

    பதிலளிநீக்கு
  7. கவிதைகளை பாதியளவில் படிக்கும் போது : உஷ்ஷ்ஷ்...இப்பவே கண்ண கட்டுதே..

    பதிலளிநீக்கு
  8. கவிதைப் போட்டிகளை பார்க்கும் போது "கிளம்பீட்டாங்கையா கிளம்பீட்டான் "

    பதிலளிநீக்கு
  9. வடிவேலுமட்டுமில்லை,அடிப்படியிலிருந்து வந்த கலைஞர்கள் எல்லொருமே ஜெயிக்கிறார்கள்,ஜெயித்திருக்கிறார்கள் இதுவரை சினிமாத்துறையில் என்பது வரலாறு,நாடகக்கலையில் இருந்து வந்தவர்கள் எல்லோருமே இதற்கு விதிவிலக்கல்ல,எம்ஜியார்,சிவாஜியில் ஆரம்பித்து வடிவேலு வரை மையம் கொண்ட பெரும் நிகழ்வுபதிவு அது,வடிவேலு நல்ல நடிகர்.அவரது வசனம் மட்டுமல்ல,உடல் மொழியும் அபாரம்.நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.இப்படி/வாழ்க வடிவேலு/

    பதிலளிநீக்கு
  10. ஹலோ நான் வட்ட செயலாளர் வண்டு முருகன் பேசிறன் " இந்த பதிவை போட்டவருக்கு பாரத ரத்னா கொடுத்துடுங்க

    பதிலளிநீக்கு
  11. நாட்டுல நிறைய களவாணிப்பயலுவ இருக்கிறாங்கள அதனால அவங்கய வரதுக்குள்ள நான் தமிழ்மணத்துல 2வது ஓட்டை போட்டுடோமல, நாங்கலாம் யாரு

    பதிலளிநீக்கு
  12. வணக்கம்
    சகோதரி.

    எனக்கு படித்த நகைச் சுவை நடிகர் என்றால் கவுண்டமணி.செந்தில்.வடிவேல். உண்மையில் நீங்கள் அறிந்ததில் நானும் கூட அறிந்த மட்டில் அதிகமாக பேசும் நகைச்சுவை யாருடையது என்றால். வடிவேலுடையதுதான்...
    மாப்பு வைச்சித்தாண்டா ஆப்பு.....-சந்திரமுகி படம்
    கண்ணதாசனா.ஜெசுதாசா.-காவலன் படம்


    இன்னும் சொல்லிக் கொண்டு போகலாம்......த.ம 3வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  13. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோதரி! நீங்கள் சொல்வது சரிதான். நடிகர் வடிவேலு நடிப்பதற்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு இருந்தாலும் சின்னத் திரையில் மக்கள் அவர் நடித்த காட்சிகளை பேசிய வசனங்களை இன்னும் ரசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் இன்னும் விரிவாக எழுதி இருக்கலாம்.
      த.ம.4

      நீக்கு
  14. உண்மைதான் தோழி!
    நகைச்சுவை மன்னன் நாகேஷிற்கப்புறம்
    நான் நடிகர் வடிவேலைத்தான் கூறுவேன்.
    அவரின் நகைச்சுவை இயல்பாக இருக்கும்.
    நடிப்பும் அப்படியே!
    இங்கு கூறியுள்ளவர்கள் ரசித்த வசனங்களே என் ரசனைக்கும் உரியது!
    வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
  15. வடிவேலுவின் திறமைக்கு ,ஔவ்வ்வ்வ் என்ற ஒற்றைச் சொல் போதுமே !
    த ம 6

    பதிலளிநீக்கு
  16. வடிவேலு பேசினால் எப்படி இருக்குமோ ? அவருக்குத் தகுந்தாற்போல் ஒரு பதிவு எழுதி வைத்துள்ளேள் கண்டிப்பாக இது வலைப்பதிவில் ஏற்கப்படுமென நம்புகிறேன் விரைவில் வெளியிகிறேன்
    தலைப்பு - முக்கி அடிச்சா...

    பதிலளிநீக்கு
  17. "என்னைய ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க"

    பில்டிங்க் ஸ்ட்ராங்கு...பேஸ்மென்டு வீக்கு"

    கிளம்பிட்டாங்கயா... கிளம்பிடாய்ங்க..

    நான் ரௌடி...நான் ரௌடி.....

    இப்பவே கண்ணக் கட்டுதே'

    அவந்தான் இவனாயிருக்குமோ

    ரிஸ்க் எடுக்கறது எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி இன்னும் நிறைய்ய்ய்ய்யா...

    மிகச் சிறந்த வாய்ஸ் மாடுலேஷனில் பின்னுகின்ற....நல்ல அழகான குரல்வளத்தில் ஸ்ருதி சுத்தமாக மிக நன்றாகப் பாடும் நகைச்சுவைக் கலைஞர்!

    பதிலளிநீக்கு
  18. அருமையான தேர்வு தான் எந்த சூழ்நிலையிலும் தன்னையும் அறியாமல்
    சிரிக்க வைக்க முடியும் என்றால் அத் திறன் ஏனைய நகைச்சுவையாளர்களை
    விட வடிவேலிடம் எக்கச்சக்கமாகவே உள்ளது .நானும் வடிவேலின் நகைச்சுவை மழையில் நனைவதில் கூடுதல் மகிழ்வு பெறுபவள் தான் தோழி :)) சிறந்த பகிர்வு வாழ்த்துக்கள் எல்லா நாளும் இன்பமான நாளாகத் திகழட்டும் .

    பதிலளிநீக்கு
  19. வடிவேலு மதுரை மண்ணின் பேச்சு வழக்கை அப்படியே திரையில் கொண்டு வந்தவர். நல்லதொரு கலைஞன். ஆழம் அறிய மாட்டாமல் - அவதிக்குள் சிக்கிக் கொண்டவர். வெல்லத்தில் எந்தப் பக்கம் இனிப்பு!?..

    பதிலளிநீக்கு
  20. பாலையா,தங்கவேலு,நாகேஷ் அப்புறமா ரசிக்கும் நகைச்சுவை, வடிவேலுவின் நகைச்சுவை.. வந்தாலே சிரிப்பு தான். திரும்ப பார்த்தாலும் அலுக்காது அவரின் நகைச்சுவை. பழையபடி நிறைய படங்கள் நடிக்கனும்.

    பதிலளிநீக்கு
  21. 'அவ்வ்வ்வ்'', 'வேணாம் அழுதிடுவேன்' உங்க பதிவுக்குச் சொல்லலை டியர் :)
    அருமை..தொடருங்க டியர்

    பதிலளிநீக்கு
  22. வடிவேலு பேச்சை நன்பர்களிடம் மட்டும் பேசாமால். பேராசிரியர் பாப்பையா அவர்களின் பட்டிமன்றத்திலே பேசி அவையோரின் கைதட்டலையும் பாராட்டையும் பெற்றதை என்றும் மறக்க இயலாது. அருமையான பதிவு. என் பேச்சை கேட்க்க இங்கே சொடுக்கவும்.
    http://vishcornelius.blogspot.com/2014/07/810.html

    பதிலளிநீக்கு
  23. "//என்னை பொறுத்தவரை நகைசுவையா பேசுறது எல்லாருக்கும் கைவராத கலை.//" - உண்மை தான் சகோ.
    எதிராளியை ஒரு நிமிடமாவது சிரிக்க வைப்பது என்பது எல்லோருக்கும் வந்து விடாது. அந்த வகையில் வடிவேலுவின் நகைச்சுவைகள் எல்லாம் , குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, நினைத்துப் பார்த்தாலும் சிரிப்பை ஏற்படுத்தும்.

    பதிலளிநீக்கு
  24. ரொம்ப திறமை மிக்க நடிகர்தான் வடிவேலு. ஆனால், நம்ம ஊரில் ஒருவருடைய அரசியல் நிலைப்பாட்டையும், நடிப்புத் தொழிலையும் தனித் தனியாகப் பார்க்க்த் தெரியாததால், இப்படி ஒரு தமிழ்க் கலைஞனை சரியாக பயன்படுத்திக்காமல் வீணாக்கி விட்டோம்.

    நம்ம ஊரில் இருக்கும்போது கவனிக்கமாட்டார்கள்! அவன் திறமையை பயன்படுத்தாமல் உதாசினப்படுத்திவிட்டு, அவன் செத்ததும், தெய்வம் அவரு, பிறவிக் கலைஞன் அவரு னு சொல்லி கோயில் கட்டி ஒப்பாரி வைத்து வணங்குவார்கள்! :)

    பதிலளிநீக்கு
  25. தமிழ் சினிமாவில் காமெடியன்களுக்கான (உண்மையான) வெற்றிடம் ஏற்படச் செய்தது வைகைப்புயல் மட்டும் தான். அவர் காமெடி எனும் பொருளில் போகிற போக்கில் சமூக கருத்தை எடுத்துவிடுவார் பாருங்கள், செம, அப்புறம் அதிக வேடங்களில் நடித்த காமெடியன் கவுண்டருக்கு பிறகு வைகைப்புயல் தான். எனக்கு வைகைப்புயலையும் கவுண்டமணியையும் மிகவும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  26. மிகவும் உண்மை சகா! வடிவேலு அவர்களின் பேச்சுக்களை (dialogues) வாழ்வில் ஒருமுறையாவது பயன்படுத்தாதவர்கள் யாரும் இருக்க முடியாது. போகிற போக்கில் உங்களைப் போல் சட்டென எடுத்து விடுகிற அளவுக்கு இல்லாவிட்டாலும் "ஒரு படத்தில் வடிவேலு சொல்வாரே?" என குறித்துக் காட்டிப் பேசவாவது அவர் பேச்சுக்களைக் கட்டாயம் பயன்படுத்தியே இருப்பார்கள் ஒவ்வொருவரும். நாட்டுப்புறப் பகுதியில் பிறந்த, படிக்காத மனிதரான அவர் தனக்கு முன் இருந்த அத்தனை நகைச்சுவை மேதைகளில் யாருடைய தாக்கமும் இல்லாத தனித்தன்மை வாய்ந்த நடிப்பை, உடல்மொழியை, பேச்சுப் பாணியைத் தனக்கென உருவாக்கிக் கொண்டு வரலாறு படைத்து விட்டார். 2014-இல் நீங்கள் இதை எழுதியிருக்கிறீர்கள். ஆனால் ஏறத்தாழக் கடந்த பத்தாண்டுகளாகவே வடிவேலு திரையுலகில் இல்லை. ஆனால் அவர் இல்லாமல் தமிழர் பொழுது முடிவதில்லை. அவர் பாணியிலேயே சொன்னால், "என்னடா பொழுது போயிருச்சே, இன்னும் வடிவேலு சம்பந்தமா எதுவும் கண்ணில படலியேன்னு பார்த்தா எப்படியாவது பட்டுடுது". அந்தளவுக்கு வடிவேலு நாம் வாழ்வில் இரண்டறக் கலந்திருக்கிறார். பழையதாக இருந்தாலும் அந்தப் பெருங்கலைஞனுக்கு உங்களுடைய இந்தக் கட்டுரை ஒரு நல்ல பிறந்தநாள் பரிசுதான்!

    பதிலளிநீக்கு