வியாழன், 14 ஆகஸ்ட், 2014

கைப்பை-ii




 ஒரு நிகழ்வு
         சுதந்திர தினத்திற்காக மாணவர்களுக்கு பாரத சமுதாயம் என்கிற பாரதியார் பாடலை பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தேன்.
   இனி ஒரு விதி செய்வோம்
   அதை எந்தநாளும் காப்போம்
   தனியொருவனுக்கு உணவில்லை எனில்
   சகத்தினை அழித்திடுவோம்
என அவர்களது குரல் உச்சம் தொட்டபோது சிலிர்த்துப்போனது!! இவங்க செஞ்சாலும் செஞ்சுவாங்க:)



ஸ்மைலி
      தோழியின் தோட்டத்தில் பறித்த மாங்காய்களை அரிசி போடும் கண்டைனரில் பழுக்க போட்டிருந்தேன். காலையில் அரிசி எடுக்க அதனை திறந்த போது உள்ளே ஒரு சிவப்பு ஆப்பிளும் கண்சிமிட்டிகொண்டிருந்தது. மகியின் வேலை.

கண்டுபுடுச்சுட்டேன்
    அது ஏன் ப்ரபோஸ் பண்ணும் போது டைமண்ட் ரிங் கொடுக்கிறாங்க? ஏன் என்றால் கிட்டத்தட்ட எல்லா நவரத்தின கற்களிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட மூலக்கூறுகள் இருக்கும். வைரத்தில் ஒரே மூலக்கூறு தான் (கார்பன்). புரிஞ்சதா?

நிலைத்தகவல்
      தவறவிட்ட பின் தான் அதன் சிறப்பு இரு மடங்காய் தெரிகிறது# தத்துவம்லாம் இல்லை பாஸ் ஜஸ்ட் புடவை செலெக்சன்

 டீ டைம்
   இஞ்சி டீ யும் பிரிட்டானியா ரஸ்க் கும் என்ன காம்பினேஷன்!! ரசித்து தேநீர் அருந்தும் ஒவ்வொரு நொடியும் தியானம் என்கிறது ஒரு ஜென் தத்துவம். so இப்போ தினமும் தியானிக்கிறேன்!!

ஒடோமாஸ்
  காலை இடைவேளையில் ஒரு மாணவி  கொடுக்காபுளி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.  என்னை அறியாமல் நான் புன்னகை செய்ய, என்ன மிஸ் விஷயம் என்று பாடாய் படுத்திவிட்டாள். விஷயம் இது தான். கொடுக்காபுளி விதையில் பளுப்புத்தோல் கிழியாமல் கறுப்பு நிறைத்தை மட்டும் அகற்றி விட்டு தலையணைக்கு கீழ்வைத்துக்கொண்டால் ஆசைப்பட்ட எல்லாம் கிடைக்கும் என்று என் பள்ளி நாட்களில் நானும் என் நட்புகளும்  நம்பினோம் என்றேன். நடந்தா மிஸ்? என்றாள்.
    உறிக்கவே நாலஞ்சு நாள் ஆகிடும். பின் ஏழுநாள் முடிவதற்குள் விடுமுறை முடிந்து விடுதிக்கு திரும்பிவிடுவேன் என்றேன். இப்போ நினைச்ச சிரிப்பா வருது என்றேன்.மதிய இடைவேளையில் அதே வகுப்பின் மூன்று மாணவிகள் மும்மரமாய் தோல் உரித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் நினைத்ததும் நடக்கட்டும்:))

பென் டிரைவ்
  ஹரிஹரனின் குரல் ரோலர் கோஸ்டர் போல் ஏறி இறங்குவதை கேட்பதே அலாதி. அதிலும் இந்த பாடலில் வரிகள் வேறு வண்ணமாய் அப்பிக்கொள்கின்றன மனதில்.


இனிய சுதந்திர தின வாழ்த்துகள் நட்பூஸ் !!!







38 கருத்துகள்:

  1. மிகவும் சுவாரஸ்யம் நிறைந்த கைப்பை.அதுவும் கொடுக்காப்புளி எனது பழைய நினைவையும் கொண்டுவந்துவிட்டது.. கண்டுபிடிப்பு- நல்ல தகவல். ஸ்மைலி- க்யூட். நிலைத்தகவல், டீடைம்- செய்தி. பாடல் - இனிமை,இதம். நல்லதொரு பகிர்வு. நன்றி. உங்களுக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தோழி தங்கள் ஆழ்ந்த ரசனைக்கும் , விரிவான பின்னூட்டத்திற்கும் !

      நீக்கு
  2. இன்னைக்கு டீச்சரை குழப்பிவிட வேண்டியதுதான்.. கார்பன் தனிமமா இல்லை மூலக்கூறா? :) சரி சரி, வைரத்தில் உள்ள கார்பனை மூலக்கூறுனே சொல்லுவோம்- ஏகப்பட்டது சேர்ந்து இருப்பதால் அது கார்பன் மூலக்கூறுனு சொல்லிடுவோம்.

    அப்புறம் பெண்களுக்கு இன்னொரு ஐடியா!!!

    ப்ரேக்-அப் ஆகும்போது, வைரத்தின் எடையிலேயே ஒரு கரித்துண்டை திருப்பி கொடுத்துடலாம் அந்த மாஜி காதலனுக்கு! ரெண்டுமே கார்பன்தானே? :)))

    --------------
    உங்க "தியானம்"!!! :))) ஜென் தத்துவத்தைக் காட்டிலும் "மைதிலி தத்துவம்" பிரம்மாதம்தான் போங்க! :))))

    -------------
    கொடிக்காப்புளீ!!! (சாப்பிட்டு எவ்ளோ நாளாச்சு! :( )

    இதெல்லாம் அநியாயம்! டீச்சர் ஆசையாப் பார்க்கிறாஙகளேனு நாலு கொடிக்காய்புளி டீச்சர்க்கு கொடுப்போமேனு உங்க "பிள்ளைங்க" கொடுக்கவே இல்லையா?!!! :( டீச்சரை பார்க்க வச்சிட்டு சாப்பிட்டால் வயிறுவலிக்காதா? :))

    -------------
    சுதந்திர வேட்கையில் நாட்டை விட்டே ஓடிவிட்ட எங்களுக்கு எந்நாளுமே சுந்தந்திர தினம்தான்!

    இந்தாங்க! உங்களுக்கு சுதந்திரதின வாழ்ந்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ***இன்னைக்கு டீச்சரை குழப்பிவிட வேண்டியதுதான்.. **
      கார்பன் தனிமம் தான் ஆனால் வைரத்தில் அந்த ஒரேஒரு தனிமம் மட்டுமே மூலக்கூறாக இருக்கிறது! அப்புறம் இப்படியெல்லாம் தொடக்கத்தில் குழப்பல்லேன்னா rest of the comment படிச்சுட்டு ஒரு வேளை இது வருண் fake ஐ டி யோன்னு எனக்குமே சந்தேகம் வந்திருக்கும்:))
      **ப்ரேக்-அப் ஆகும்போது, வைரத்தின் எடையிலேயே ஒரு கரித்துண்டை திருப்பி கொடுத்துடலாம் அந்த மாஜி காதலனுக்கு! ரெண்டுமே கார்பன்தானே? **
      you may know something அதிக அழுத்தத்திற்கு பிறகும் வெகுகாலம் பூமியில் புதைந்து போயிருக்கும் கரித்துண்டு வைரமாகிறது, கொஞ்சம் முன்னர் வெட்டி எடுத்தால் அது நிலக்கரி:) இதை காத்திருக்க நேரும் அல்லது அழுத்தத்திற்கு ஆளாகும் என் நண்பர்களுக்கு ஆறுதல் வார்த்தையாய் நான் அடிக்கடி சொல்வதுண்டு:))

      நீக்கு
  3. தர்பூஸ் கேள்விபட்டிருக்கிறேன் நட்பூஸ்... தமிழ்ல புச்சு புச்சா சொல்றீங்கோ....

    பதிலளிநீக்கு
  4. எல்லோரது வாழ்விலும் சுதந்திரம் கிட்ட வேண்டும் என்று
    வாழ்த்துகின்றேன் தோழி !

    பதிலளிநீக்கு
  5. //தனியொருவனுக்கு உணவில்லை எனில்
    சகத்தினை அழித்திடுவோம்///

    பாரதியார் இப்படி எழுதிவிட்டு போகவில்லையென்றால் நம் மக்களுக்கு உணர்ச்சி என்ற ஒரு உணர்வே இல்லாமல் போயிருக்கும். இப்படி பாடுவதால் எந்த பலனுமில்லை நமக்கு உண்ர்ச்சி என்ற ஒரு உணர்வு இருக்கிறது என்பதை அறிவதை தவிர

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முத்தெடுப்பவன் முயற்சிகளில் அயரக்கூடாது(நோட் பண்ணுங்க இது மைதிலி தத்துவம்)
      உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன். இப்போ கஸ்தூரி(என் கணவர்) பணிபுரியும் பள்ளியில் தான் பல அரசியல்வாதிகளின் தூக்கம் கெடுக்கும் சகாயம் ஐ.ஏ.எஸ். ஆரம்பக்கல்வி கற்றார்.
      தேவதாசி முறையை எதிர்த்து ஒழித்த முத்துலக்ஷ்மி அம்மையார் படித்ததும் புதுகையில் தான். தொடர்ந்து நம்பிக்கையோடு பணிசெய்வேன். நாளை என் மாணவமணிகளும் சாதிப்பார்கள்:) ( ஆமா என்னாச்சு சகா? ரொம்ப சீரியஸா கருத்துசொல்லிருக்கீங்க?) sorry, if i hurt you?

      நீக்கு
  6. நல்ல கலவையான ஒரு பகிர்வு. மகியின் வேலையை நினைத்து புன்னகை புரிந்தேன். நல்ல வேளை அவர் பயப்படுகிற மாதிரி எதையும் உள்ளே வைக்கவில்லை.

    தினமும் இஞ்சி டீ குடிக்கிறேன்னு சொல்லுங்க, அதென்ன பெருசா தியானிக்கிறேன்னு சொல்றது?

    சுதந்திர தின வாழ்த்துக்கள் சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. **தினமும் இஞ்சி டீ குடிக்கிறேன்னு சொல்லுங்க, அதென்ன பெருசா தியானிக்கிறேன்னு சொல்றது?**
      ஹா....ஹா...ஹா...
      நன்றி சகோ!!

      நீக்கு
  7. இனிய சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்!
    சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  8. #இவங்க செஞ்சாலும் செஞ்சுவாங்க:)#
    ஜெகத்தினை அழிக்கும் வேலையைதானே?
    த ம 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...ஹா...ஹா..
      ( நண்பர் தமிழன் அவர்களுக்கு எழுதிய பின்னூட்டம் படிக்க)
      நன்றி பாஸ்!

      நீக்கு
  9. டீயோட ரஸ்க்... ஆஹா... என் இனமம்மா நீ. ஸ்மைலியும் நிலைத்தகவலும் ஜோர். அந்தக் கொடுக்காப்புளி மேட்டர்... சின்ன வயசுல நிறையத் தின்னதுண்டு நான். பட்.... இந்த சென்டிமென்ட் நம்பிக்கை சமாச்சாரம் புதுசு எனக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! அப்போ கண்டிப்பா வாங்க அண்ணா ஒருநாள் டீ குடிப்போம்:)
      முரளி அண்ணா சொல்வதை பாருங்க. நன்றி அண்ணா!

      நீக்கு
  10. சுதந்திர தின வாழ்த்துக்கள் அம்மு ! மகியின் சேட்டையை தான் நினைத்து மகிழ்ந்தேன். இவர்களை மனக்கண்ணில் கண்டது சரியாகவே உள்ளது இல்லையா ? அருமையான கலவை நிலைதகவல் அருமை, டீ டைம் அனைத்தும் ரசித்தேன். அம்மு தொடர வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனியாச்செல்லம் ப்ரோபைல் படம் மாத்தியாச்சா?
      ரொம்ப அழகு:)
      ரசித்தமைக்கு நன்றி தோழி!

      நீக்கு
  11. ஸ்மைலி என்பதற்கு பதிலாக ஸ்மை(தி)லி என்று போட்டுவிடலாம். அனைத்தும் குட்டி குட்டி சுவாரசியங்கள்.
    மாணவப் பருவத்தில் போட்டி போட்டுக்கொண்டு 40கொடுக்காப்புளி விதைகளை பழுப்பு தோல் தெரியும் வண்ணம் உரித்து வெற்றிபெற்ற அனுபவம் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. **ஸ்மைலி என்பதற்கு பதிலாக ஸ்மை(தி)லி என்று போட்டுவிடலாம். அனைத்தும் குட்டி குட்டி சுவாரசியங்கள்.**
      அப்படியா அண்ணா?!? மிக்க நன்றி அண்ணா!
      **மாணவப் பருவத்தில் போட்டி போட்டுக்கொண்டு 40கொடுக்காப்புளி விதைகளை பழுப்பு தோல் தெரியும் வண்ணம் உரித்து வெற்றிபெற்ற அனுபவம் உண்டு. *** ஐ!! நம்ம ஒரே ஊர்பக்கம்னு நினைக்கிறேன் அண்ணா! ரொம்ப ரொம்ப நன்றி!

      நீக்கு
  12. கைப்பையில் இருந்தது அனைத்தும் நல்லதா வைச்சுருக்கீங்க....ரொம்ப ரசிச்சோம்.

    மகியின் வேலை குறும்புச் சிரிப்பை வரவழைத்தது.....கொடுக்கப்புளி போல,,, மயில் இறகு பிச்சு புக்குக்குள்ள வைச்சா குட்டி போடும்னு சொல்றத நம்பி வைச்சக் காலங்கள் உண்டு....எடுத்து எடுத்து குட்டி போட்ருக்கானு பாத்ததும் உண்டு......ஹாஹாஅஹாஅ....

    தனியொருவனுக்கு உணவில்லையெனில்.....சுதந்திர தின விழாவுக்காக நீங்க பயிற்சி கொடுத்துருக்கீங்க.. நல்ல விஷய்ம....இங்க பாருங்க இன்னிக்கு நியூஸ் சுதந்திரம்னு சொல்லிகறோம் ஆனா இன்னும் வீட்டுக்கும், சோத்துக்கும் வழி இல்லாம, அகதிகளும், ஒதுக்கப்பட்டவர்களும் இருக்கின்றார்கள் என்று....இதுல என்ன வேடிக்கைனா....மத்த நாள் ல எல்லாம் கண்ணுல படாதவங்க இந்த சுதந்திர தின விழா அன்னு மட்டும் மீடியா கண்ணுல படறாங்களே எப்படி? ஆனா சகத்த யாரும் இதுக்காக அழிக்கல....தண்ணிக்காகவும், மண் ஆசைக்காகவும், எண்ணைக்காகவும், மத வெறினாலயும் அழிக்கறாங்க...சோறு கிடைக்கலனு இல்ல....ம்ம்மென்னத சொல்ல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப நன்றி சகாஸ்!
      மயில் இறகு மேட்டரும் உண்டு:)
      நண்பர் தமிழனுக்கு எழுதிய பின்னூட்டம் பாருங்க சகாஸ்!

      நீக்கு
  13. இருந்தாலும் சுதந்திர தின வாழ்த்துக்கள்! சுதந்திரமும் வீக்காயிடுச்சு....ஓல்ட்?!?

    பதிலளிநீக்கு
  14. கைப்பையில் சிக்கிய பொருட்கள் சிறப்பு! ஓடோமோஸ்! ரசிக்க மட்டுமல்ல சிரிக்கவும் வைத்தது!

    பதிலளிநீக்கு
  15. கைப்பைக்குள்ள இவ்வளவு வச்சிருக்கீங்களா... அஹா அருமை...
    கொடுக்காபுளி எம்புட்டுத் தின்னிருக்கோம்... சுவை...
    பாடல் அருமை...
    இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் சகோதரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அண்ணா! ஒவ்வொரு விசயாமா ரசித்திருகீங்க:)

      நீக்கு

  16. கைப்பைக்குள்ள இவ்வளவு இருக்கா
    சிறந்த பகிர்வு

    பதிலளிநீக்கு
  17. நிகழ்வு நிலைத்தகவல் கண்டுபிடிப் பெல்லாம்
    அகன்ற அறிவின் அடை!

    இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  18. பதிவு நன்றாக இருக்கிறது. அதிலும் இஞ்சி டீ, கொடுக்காபுள்ளி விசயங்கள் அருமை. இனிய சுதந்திர தின வாழ்த்துகள் சகோ !

    பதிலளிநீக்கு
  19. இனிமையான பகிர்வு. வாழ்த்துக்கள்! ஒரு சின்ன தகவல். கிராமத்து பக்கம் கொடுக்காய்ப்புளி இலை, கிளைகளோடு அதன் காய் மற்றும் பழங்களையும் ஆடுகளுக்கு போடுவார்கள்.
    த.ம.6

    பதிலளிநீக்கு
  20. பாரதியார் பாடலைப் பாட வைத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்! மகிகுட்டிக்கு ஏன் நீங்க பழுத்த ஆப்பிள் வாங்காம காயா வாங்கிக்கொடுத்தீங்க? இது சரி இல்ல, ஆமா சொல்லிட்டேன். :)
    இஞ்சி டீயும் பிரிட்டானியா ரஸ்கும் - சூப்பர் தியானம் ஆச்சே டியர்!
    கொடுக்காபுளி சாப்பிட்டதும், விதையை உரித்த நினைவுகளும் இனிமை தோழி. கைப்பை நல்ல விசயமா வச்சுருக்கே :)

    பதிலளிநீக்கு