புதன், 15 அக்டோபர், 2014

இதுக்கு என்ன தலைப்பு கொடுக்கிறது?????

              

அப்படியே இந்த வார்த்தையையும் கத்துகோங்க:)

       எங்க ஊர்ல வைகாசித் திருவிழா வரும். அப்போ கடைசி மூணுநாள் ஏரியாவே களைகட்டும். தாத்தா பூசாரி இல்லை, ஆனா அவர் தான் எங்கள் முனியப்பன் கோயிலில் ஆடு வெட்டுவார் (so என் பேரை பார்த்து நான் பிராமின் என நினைத்தவர்கள் இப்போ புரிஞ்சுக்கங்க நான் non-Brahmin:) அதில் பால் குடம் எடுக்கும் நாளில் நடக்க முடியாத பெரியவர்களை தவிர சாதி மத பேதம் இல்லாம ஊரே காமராஜர் சிலையில் இருந்து ரெங்கவிலாஸ் வரை உள்ள சாலையில் தான் இருக்கும்.
                    
             மணப்பாறையில் மட்டும் இல்லாம அதை சுற்றி உள்ள பல கிராம மக்கள் அங்கே கூடி இருப்பார்கள். அதை லைவ் ரெகார்ட் செய்து உள்ளூர்  சேனல்கள் (அந்த ஊருக்கு நாலு ப்பா) இரண்டு நாட்களுக்கு ஒளிபரப்பும். குட்டிபசங்க வேலைமெனக்கெட்டு அதை பார்த்துக்கொண்டே இருந்து அக்கா, அண்ணி இங்க வாங்க நம்ம அண்ணனை பாருங்க, அட உங்களை பாருங்க என சவுண்ட் கொடுத்தபடி இருப்பார்கள். நம் ஊர் பெரியவர்களில் சில சித்தப்பாக்கள் அரட்டி உருட்டி அவர்களை சற்று அதிக நேரம் படம் எடுக்கச்சொல்ல நம்ம அண்ணன்கள் அலும்பு இருக்கே ........ அப்பப்பா ..... எப்படி கரக்ட் பண்ணுமோ, சில சுடிதார்களை மட்டும் சற்று அதிக நேரம் விடியோ கவர்செய்யும். (சரி இப்போ என்ன சொல்லவர?? ஓகே டென்சன் ஆகாதீங்க. மேட்டருக்கு வரேன்)

                   ஒரு ரெண்டு நாளா நம்ம வலை சனங்க எல்லாம் விடியோவில நம்ம கவர் ஆகிருக்கோமா னு குட்டி புள்ளைகா ரெண்டுநாள் டி.வி பார்க்கிற மாதிரி அந்த பக்கத்திலே போய் பார்த்துவிட்டு வந்து, அட ஆமா என்னுதும் அதில இருக்கு, உன்னுதும் இருக்கு என கீ போர்ட் மேல விரலை வைச்சு அங்கலாய்ப்பதை காணமுடிகிறது. ஏ! மைதிலி இங்க வந்துபாரு நீயும் இதில இருக்கனுன்னு நம்ம இளங்கோ அண்ணா தான் சொன்னார். அவர் முழு மேட்டரையும் சொல்லுவதற்கு முன்னால் (பின்னூட்டம் வழியாகத்தான்) இப்படி தொடங்கி இருந்தார் "இது திருட்டா" கோவை கவி இலங்கா திலகம் பதிவை பாருங்க என கொஞ்சம் இங்கிலிஷில் பின்னூட்டத்தில் பதிவிட "அய்யோயோ! ஒருவேளை தோழியும் இதுபோல பதிவு போட்டிருப்பாங்களோ?? என நான் கன்பீஸ் ஆகிட்டேன். 
          அதே மாதிரி ஒரு பதிவை கீதா அக்காவும் வெளியிட அப்புறம் நல்ல விம் லிக்விட் போட்டு விளக்கியது போல் விஷயம் தெளிவா தெரிஞ்சது. நானும் அங்க போய் பார்த்தேன். வகை தொகை இல்லாம நம்ம கீதாக்கா, பாண்டியன் சகோ, அட! வெங்கட் அண்ணாவின் பதிவு கூட இருக்குங்க. ஆனா கீழ வேற ஒருத்தர் பெயர்!!!!! ஓடாத படத்தையே அது ஏன் ஊடலைன்னு பார்க்கிற நாம ரெண்டு நாளா இந்த ஓட்டம் ஓட்டுற ஒரு புகழ் மிகுந்த ப்லாக் கை மேம்போக்கா விட்டுட முடியுமா? சும்மா சொல்லகூடாது போட்டோ ல்லாம் போட்டிருக்கார்(அவர்க்கு ரொம்ப தைரியம் தான்-இது விஜூ அண்ணா கொடுத்த சர்டிபிகேட்). சைட்ல லேபிள் எல்லாம் போட்டு பக்காவா இருந்தது blog. அதில் ஆசிரியருக்கு, பெற்றோருக்கு என இருந்ததை பார்த்து ஆசை தொத்திக்கொண்டது. நாமளும் தான் கல்வி தொடர்பா நிறையா எழுதிருக்கோம். இதில ஏதாவது நம்மளோடது செலெக்ட் ஆகிருக்கானு பார்த்தேன். ஹ்ம்ம் ஒன்னு கூட தேர்வாகவில்லை:((((( என் கவிதை மட்டும் தான் இருந்தது:((இது போல நம்ம கவிதைகளை எத்தன பேர் புத்தகமாவே வெளியிட்டிருக்காங்களோ எனும் கிரேஸ் டியரின் ஆதங்கத்திலும் அர்த்தம் இல்லாமல் இல்லை. அந்த நண்பருக்கு கீதமஞ்சரி அக்காவின் இந்த கவிதையை டெடிகேட் செய்கிறேன். ஏதோ நண்பர்க்கு  நம்மள முடிஞ்சா உதவி.....என்ன நான் சொல்லறது?


    

45 கருத்துகள்:

  1. பதிவுத் திருட்டு செய்பவர்களும் நம் சகோதர தமிழர்கள்தான். இதைப்பத்தி பலரும் பல சம்யங்களில் எழுதி இருக்காங்க. என்னுடைய பதிவுகளும் இது போல் இன்னொருவர் பெயரில் வந்து இருக்கு..I am intolerant to plagiarism of any kind..I do not respect anyone who does that.

    நீங்க பதிவுலகில் பலவிதமான மக்களைப் பார்க்கலாம்.

    ஆரம்பகாலத்தில் காதல் கதை எழுதுபோது, பொதுவாக என் கதைகளில் ரெண்டு ஹீரோயின் ஒரு ஹீரோனு முக்கோணக் காதல் மாதிரி போகும்.

    விமர்சிக்க வருபவர், கவனமாக "என்ன எம் ஜி ஆர்" மாதிரியா உங்க ஹீரோ என்பார்.

    சரி. It is true statement, ஹி ஹாஸ் எ பாயிண்ட்.. I would just take it. :)

    அதே வாசகர், Completely different plot ல இன்னொரு கதை எழுதினால், அதைப் பத்தி விமர்சிக்காமல் நழுவி விடுவார். அதாவது குறை மட்டுமே விமர்சிப்பார். நிறை இருந்தால் கண்டுக்காதமாரி, அக்கதையை படிக்காதமாதிரி போய்விடுவார். :))) இதுபோல் சிலர். ஒருவேளை "எம் ஜி ஆர் மாதிரி" ஹீர்ரொ கதைகள்தான் அவருக்கும் பிடிக்குமானு தெரியலை. :))

    ---------------------
    இன்னொருவர், ரொம்ப நல்லா விமர்சிப்பார்.

    ஒரு முறை என் தோழி ஒருவர் (என் தோழி என்பதால்), வருண், நீங்க காதல் கதை நீங்க ரொம்ப நல்லா எழுதுறீங்க னு சொல்லிவிட்டார். அது தோழி என்பதால் கொடுத்த "பரிசு"னு எனக்கும் தெரியும். கொஞ்சம் மிகைப்படுத்தி என்னை ஊக்குவித்தார் என்பதே உண்மை.

    இப்போ இந்த வாசகர் என்ன செஞ்சாருனு தெரியுமா?

    I dont think he is such a good love-story-teller னு கூசாமல் பின்னூட்டமிட்டார்.

    Let us face the reality. May be he is HONEST. May be his rating about my ability is "CORRECT". But the point is. it is very impolite to say that when someone complimenting me. Right?

    Well, You will see all kind of people in this "world". It is lot of fun analyzing cheap and creepy human minds around here.

    Take it easy, mythily! Have fun blogging! :)





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆரம்பகாலத்தில் காதல் கதை எழுதுபோது,** ஒ! முக்கோணக்காதல் கதை!!!! அப்படியே அதையும் கொஞ்சம் மீல்பதிவுங்களேன்:))

      இவங்கள வேறென்ன பண்ணமுடியும் வருண்???
      Take it easy, mythily! Have fun blogging! :) தாங்கஸ் வருண்:))

      நீக்கு
  2. புகழ்றீங்களா இல்ல ???? எதா இருந்தாலும் தப்பு தப்பு தானே சகோ.. காட்டமான பதிவு போடாம ரொம்ப மைல்டா போட்ருக்கீங்க??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காட்டமா போட்டா மட்டும் மனுஷன் பொதுமன்னிப்பா கேட்கபோறார்? ப்ரீயா விடுங்க. அப்படியே உங்க பதிவு ஏதும் இருக்கான்னு பாருங்க:)

      நீக்கு
  3. நம்ம பதிவை அவர் திருடலே ,இதிலேர்ந்து நீங்களும் நானும் அவ்வளவு வொர்த் இல்லேன்னு புரியுது )
    த ம 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ! என்னை சேர்க்காதிங்க பாஸ். என் கவிதை ஒன்னு அதுல இருக்கே:)))))

      நீக்கு
    2. அவ்வ்வ்,நான்தான் பல்பு வாங்கிட்டேனா )

      நீக்கு
  4. உனக்கும் மழை என்று பெயர்.. உங்கள் கவிதையும்..அப்படியே படத்துடன் இருக்கே.. எப்படிப்பட்ட மனிதர்கள். .

    பதிலளிநீக்கு
  5. அது சரி...
    பதிவுத் திருட்டு எல்லாப் பக்கமும் இருக்கத்தான் செய்யுது...
    அதானாலேயே கஷ்டப்பட்டு எழுதுவதை பதிவில் வெளியிடுவோமா வேண்டாமா என்ற எண்ணம் கூட வர ஆரம்பித்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா இவங்களுக்காக நாம எழுதுறத விட முடியுமா? அப்புறம் தமிழுக்கு கதி மோட்சம் ஏது:))))))))

      நீக்கு
  6. இப்படியும் சிலர்.

    என்னுடைய பதிவும் அவர் தளத்தில் இருக்கிறதா? எந்த பதிவு மைதிலி.....

    பதிலளிநீக்கு
  7. அந்த வார்த்தையை கத்துக்கிட்டோம் டீச்சர். (ஆமா, அது என்ன வார்த்தை???)

    உங்களோட பதிவுகள் எல்லாம் அந்த திருட்டு மனிதருக்கு பிடிக்கலை போல, இனிமே ஒழுங்கா எல்லோருக்கும் முக்கியமா திருடுறவுங்களுக்கு பிடிக்கிற மாதிரி பதிவை போடுங்க சகோ!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்லாகியாரிசம் -அடுத்தவர் படைப்புக்களை தனது என சொல்லிகொள்ளும் பழக்கம்.
      ஆமா ! அண்ணா இனியாவது கொஞ்சம் பொறுப்பா பதிவு போடனும்:)

      நீக்கு
  8. என்னப்பா இது இங்கு என்ன நடக்குது?!!!!! copy cats...!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களோடதும் இருக்கலாம் எதுக்கும் பார்த்துடுங்க:)))

      நீக்கு
  9. என்ன அம்மு இப்பிடி எல்லாம் திருடுவாங்களா. ரொம்ப ஷாக் இருக்கும்மா. தகவலுக்கு நன்றிடா. நான் போய் பார்த்தேன் வேதனையாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போ அவர் ட்ராபிக் கூடிருக்கும் இல்ல செல்லம்:)

      நீக்கு
  10. வணக்கம்
    ஊர்த்திரு விழா என்றால் ஒரு வித மகிழ்ச்சிதான்... அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  11. ஓ.......நீங்க Non-Veg சாப்பிடுற Non-Brahmino

    பதிலளிநீக்கு
  12. ஆஹா சூப்பர்மா...வளரும் வலைபதிவாளரை நாம் ஊக்குவிக்கிறோம்னு நினைக்க வேண்டியது தான் போல...ஆமா உன் பதிவு வரலயா நம்ப முடியலயே..அடுத்துக்காட்டு சூப்பர்...தமிழிளங்கோ சார் தான் கண்டுபிடித்து சொன்னது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவால்ல அக்கா ஒரு கவிதையை மட்டும் எடுத்திருக்கார்:)))

      நீக்கு
    2. சகோதரி அவர்களுக்கு, இந்த பதிவரைப் பற்றி முதன்முதல் தெரியப்படுத்தியவர் சகோதரி கவிஞர் வேதா. இலங்காதிலகம் அவர்கள்தான். அப்புறம்தான் நான் அந்த பதிவில் உள்ள பல கவிதைகள், கட்டுரைகளைப் படித்ததில் அடுத்தவர்களது படைப்புகள என்று தெரிந்து கொண்டு, உங்கள் இருவருக்கும் தெரியப்படுத்தினேன்.

      நீக்கு
    3. @தமிழ் இளங்கோ அண்ணா
      மிக்க நன்றி அண்ணா .நீங்க இப்படி நட்பை மதித்து எனக்கு தகவல் சொல்லலேன்னா இது தெரிஞ்சிருக்காதே:)

      நீக்கு
  13. எப்படியோ அவருக்கு உங்க பதிவு மாதிரி கிடைக்கிற இலவச விளம்பரங்களால , பார்வையாளர்களின் எண்ணிக்கை எகிறியிருக்கும்.
    இந்தப் பதிவை படிக்கிற ஒவ்வொருத்தரும் எங்க நம்ம பதிவை அய்யா அலேக் பண்ணியிருக்காரன்னு பாக்குற ஆர்வத்தில , ஒரு பதிவு விடாம தேடப்போறாங்க..!
    அடடா..
    நம்ம பிளாகுக்கு ஒரே நாள்ள இவ்வளவு பார்வையாளர்களான்னு மனுஷன் ரொம்ப சந்தோஷமாகி இந்தப் பதிவையே தூக்கி அவர் பிளாக்ல போட்டாலும் போட்டு விடுவார். அப்பறம் எனக்கு என்ன சந்தேகம்னா போட்டோ அவருதா இல்ல அதையும் ஏதாவது பிளாக்ல இருந்து எடுத்திருப்பாரோ...???!!
    ம்ம்
    ஆனாலும் தெய்வீகச் சிரிப்பைய்யா உமது..!
    ( என் பிளாக் ல இருந்தும் ஏதாவது ஒண்ணு ரெண்ட எடுத்து விட்டிருக்கலாமில்ல..!
    தேடித் தேடி ஏமாந்து போய் தான் இவ்வளவு காட்டமாகப் பின்னூட்டம் இடுகிறேன்.)
    நல்லாயிருங்கய்யா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் இதை தான் நினச்சேன் அண்ணா:))))

      அலேக் பண்ணியிருக்காரன்னு** அம்பியா இருந்த விஜூ அண்ணாவை இந்த பதிவுலகம் இப்படி அட்ராசிடியா மாத்திடுசே:(( அதுவோன்னும் இல்ல சேர்மானம் சரியில்ல:))))))
      நம்ம பிளாகுக்கு ஒரே நாள்ள இவ்வளவு பார்வையாளர்களான்னு மனுஷன் ரொம்ப சந்தோஷமாகி இந்தப் பதிவையே தூக்கி அவர் பிளாக்ல போட்டாலும் போட்டு விடுவார்.**
      முடியல அண்ணா!! சிரிச்சு சிரிச்சு வாய் வலிக்குது:))))
      அப்பறம் எனக்கு என்ன சந்தேகம்னா போட்டோ அவருதா இல்ல அதையும் ஏதாவது பிளாக்ல இருந்து எடுத்திருப்பாரோ...???!!
      ம்ம்** வேணாம் :)))
      ஆனாலும் தெய்வீகச் சிரிப்பைய்யா உமது..!*** அப்புறம் அழுதுடுவேன்:))))
      என் பிளாக் ல இருந்தும் ஏதாவது ஒண்ணு ரெண்ட எடுத்து விட்டிருக்கலாமில்ல..!** நீங்க எழுதுறதை புரிந்துகொள்ளும் அளவுக்கு மண்டையில் சரக்கிருந்தால் அவர் ஏன் காப்பி அடிக்கபோறார்:)))

      நீக்கு
    2. அய்யாவையை ரொம்ப புண்படுத்தி விட்டேனோ......???!!!
      சரி சரி ஆதரவாக ஏதாவது சொல்லி வைப்போமே....
      “ பகுத்துண்டு பல்லுயிர்..
      நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை“ (குறள்- 322)
      என்னும் குறளில்,
      பரிமேலழகர் திருவள்ளுவரைப் பற்றிக் கூறுகிறார்,
      “ எல்லா நூல்களிலும் நல்லன எடுத்து எல்லார்க்கும் பொதுப்படக் கூறுதல் இவர்க்கு இயல்பு“
      எல்லா பிளாகுகளிலும் நல்லன எடுத்து எல்லார்க்கும் பொதுப்பட வழங்கக் கருதிய உங்கள் சேவை....!
      யாராவது ஏதாவது கேட்டால் இதைப் போட்டு இனிமேல் தாக்குங்கள்!
      சரியா..?!!!

      நீக்கு
    3. அம்மாடியோ பாருங்க அம்மு ஊமை மாதிரி இல்ல இருந்தாரு இப்ப பாருங்க எப்படி எல்லாம் கலாய்கிறாரு. wow சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாப் போச்சில்ல.

      நீக்கு
  14. இது மாதிரி பதிவர்களை பாதிக்கப்பட்ட பதிவர்கள் அடையாளம் காட்டினாலே போதும். அவருடைய சாயம் வெளுத்து விடும். அந்த வலைத் தளத்தில் இனி அவர் சுயமாகவே எழுத முயற்சித்தாலும் யாரும் அவரை நம்ப மாட்டார்கள். இதுவே அவருக்கு தண்டனை.

    இதுக்கு என்ன தலைப்பு கொடுக்கிறது????? - அவருடைய பெயர் சிவ ராமா என்பதனையே “அட ராமா!” என்று வைக்கலாம்.

    த.ம.6

    பதிலளிநீக்கு
  15. எல்லோரும் சேர்ந்து கூகுலுக்கு ரிபோர்ட் பண்ணலாம். பதிவர்களில் யாராவது ஒரு லாயர் இருந்தால் நோட்டீஸ் அனுப்பலாம். இல்லைன்னா பேசமா இருக்கலாம் இல்லை தமிழில் கெட்டவார்தைகளை மிகவும் நன்றாக பேசும் பதிவரிடம் வேண்டி இவரைப்பற்றி நல்ல பதிவு எழுதி எல்லோரும் ஷேர் செய்யலாம்

    கடைசியாக எல்லோரும் பதிவு எழுதுவதை கொஞ்ச நாள் நிறுத்தி வைக்கலாம் அப்படி செய்தால் அவருக்கு காப்பி பேஸ்ட் செய்ய பதிவுகளே கிடைக்காது

    பதிலளிநீக்கு
  16. ******கடைசியாக எல்லோரும் பதிவு எழுதுவதை கொஞ்ச நாள் நிறுத்தி வைக்கலாம் அப்படி செய்தால் அவருக்கு காப்பி பேஸ்ட் செய்ய பதிவுகளே கிடைக்காது***

    ஹாஹாஹா! rotfl

    ஒரு சிலர் இதுபோல் ஆட்களுக்கு பயந்துகொண்டு பதிவுலகைவிட்டு ஓடியும் இருக்காங்க!

    யாருனு கேக்காதீங்க!

    நம் கற்பனையில் எழுதினாலே முழு திருப்தி வர மாட்டேன் என்கிறது. இதில் இன்னொருத்தன் கற்பனையைத் திருடி அதை வெளியிட்டு அதில் எப்படி திருப்தி கிடைக்கும்னு சத்தியமா எனக்கு விளங்கவில்லை!

    பரிதாபத்திற்கு உரியவர்கள் இவர்கள்! :((((

    பதிலளிநீக்கு
  17. என்னோட படைப்பையும் திருடி இருந்தார்! நல்லா சூடு கொடுத்துட்டு வந்து இருக்கேன்! திருந்துவாரா பார்ப்போம்! இவருக்கு பேஸ்புக்குல இன்னிக்கு கிடா வெட்டு வைக்கிறேன்! வந்து கலந்துக்குங்க! நன்றி!

    பதிலளிநீக்கு
  18. பேஸ்புக்கிலே கெடாவெட்டு தொடங்கியாச்சு பார்ப்போம்!

    பதிலளிநீக்கு
  19. அம்மாடியோவ்.. இத்தனை கூத்து நடக்குதா?..

    ஏதோ ஒரு சிலரது மட்டும்ன்னு நினைச்சேன் நான்...
    இங்கைப் பார்த்தா.... அடக் கடவுளே!....:0
    அவ்வ்வ்..:( எனக்கு இன்னுமே விடியலைன்னு விளங்கிடிச்சு!

    இவ்வளோ பேர் சொன்ன பிறகும் சூடில்லாமலா ஒருத்தர் இருக்கப் போறாங்க..

    காலம் முத்திப்போச்சு!.. என்ன சொல்றதென்னே தெரியலை மா!..:(

    பதிலளிநீக்கு
  20. என்னடா இது, இத்தனை பேருடைய பதிவுகளை திருடி இருக்கார், நம்ம பக்கம் வரவில்லையே என்பதை நினைக்கையில் ஒரு தாழ்மையான உணர்வை வருவதை தடுக்க இயவில்லை. On a serious note, திருடனா பார்த்து திருந்தா விடில்....!

    பதிலளிநீக்கு
  21. பதிவு திருட்டு இப்போது எல்லாம் சர்வ சாதாரணம்.!ம்ம்ம்

    பதிலளிநீக்கு
  22. அன்புச்சகோதரி,

    ‘இதுக்கு என்ன தலைப்பு கொடுக்கிறது’ என்று (அறிஞர் அண்ணா பேசியதைப்போல்) கேட்பதைப்போல் அதே தலைப்பிலே ஓர் மணப்பாறையில் வைகாசித் திருவிழாவைப் பற்றி வீடியோ எடுத்து கேபிள் டி.வி.-யில் போடுவதை அருமையாக... படம் பிடித்துக் காட்டுவதைப்போல் சொல்லியிருந்தது மிகுந்த பாராட்டுக்குரியது.

    ‘ மேட்டருக்கு வரேன்...’என்று சொல்லிய மேட்டர் எனக்கு உடனடியாக புரியவில்லை...பிறகு தான் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
    ‘இவர்கள் இருக்கிறார்கள்’ என்பதைத் தெரிந்து கொண்டேன்.

    " " " எனது சிறுகதைகளைப் படித்து கருத்திட அன்புடன் வேண்டுகிறேன்.

    நன்றி.
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.

    பதிலளிநீக்கு
  23. அடவிடுங்க ! அடுத்தவர் வாந்தியை அவர் விரும்பி சாப்பிடறார்ன்னா நாம என்ன செய்ய முடியும் ?!

    இவ்வளவு காட்டமா ஏன் சொல்றேன்னா... இவர்களால் நம்மிடமிருந்து வந்த பதிவுகளைதான் திருட முடியும்... மூளை நம்மகிட்ட இருக்கே !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு