சனி, 25 ஏப்ரல், 2015

பகுத்தறிவு என்றால் எங்க பாஸ்!!

எல்லா சாதியையும் தானே சொல்லிருக்கார்!!!
          

            இந்தமுறை தொடர்பதிவு  என அறிவிக்காமலே ஒரு தொடர்பதிவை தொடங்கிவைத்திருக்கிறார்  தமிழன் சகா:) ஒரு மாதம் கழித்து  வலைப்பக்கம் எட்டிப்பார்க்கிறேன். வகுப்புக்கு தாமதமாக வந்த மாணவனை வெளியே நிறுத்தி கடினமான கேள்வி கேட்பதை போல பகுத்தறிவாளர்கள் பதில் சொல்லுங்க சொல்லிப்புட்டார். பெரியார், ஏங்கல்ஸ், மார்க்ஸ் அளவு நமக்கு சொல்லத் தெரியாட்டியும், நம்ம மணிவண்ணன் அய்யா ஸ்டைல சொல்லலாம்னு பார்க்கிறேன். தமிழனின் இந்த பதிவை படித்துவிட்டால் கீழ் உள்ள பதிவு கொஞ்சம் தெளிவா புரியும்னு நினைக்கிறேன்.


          ரகுவீரன் பகுத்தறிவாளர்களிடம் கேட்க நினைத்த கேள்வியை வீரமணியிடம் கேட்டபோதே அந்த கேள்விகள் பிசுபிசுத்துப் போய்விட்டதென்பது என் கருத்து. பகுத்தறிவு என்றால் என்ன என்று தான் எல்லோரும் நினைக்கிறார்களோ புரியவில்லை. கடவுள் மறுப்போ, வெறும் பிராமண மறுப்பு மட்டுமே பகுத்தறிவில்லை என்பதே என் புரிதல். எல்லோரும் பிறப்பால் சமம் என்பதுதான் பெரியார் சொல்ல வந்த விசயத்தின் சாரம். இது ரகுவீரன் அவர்களுக்கு புரிவில்லை என்றால் பரவாயில்லை. நிறைய கருப்புச்சட்டைகாரர்களுக்கே புரியவில்லை என்பது தான் வருந்த வேண்டிய விஷயம். அர்த்தம் புரியாமல் ஆகமவழிபாடுகள் செய்வதுதற்கு சற்றும் குறையாததாக வறட்டுத்தனமாய் இன்னும் பிராமணர்களை மட்டுமே தாக்கிக் கொண்டிருப்பதும். இன்னும் மோசமாய் இங்கு தலைகீழாய் ஆட்டம் போடும் ஆதிக்க சாதியினரை பார்க்கவே செய்கிறேன். பெரியார் இருந்திருந்தால் நிச்சயம் அவர்களுக்கு எதிராக குரல் கொடுத்திருப்பார். அந்த துணிச்சல் இல்லாத இன்றைய பல கருப்புசட்டைகள் அந்த கோவிலில் அப்படி விளக்கு போடுவது தான் முறை என்பது போல பிராமணர்களை எதிர்ப்பதுதான் பகுத்தறிவு என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை என்னவென்பேன். எனவே முதல் கேள்விக்கான என் பதில் பெரியாரின் காலத்தில் மிக ஆதிக்கம் மிக்கதாய் பிராமணியம் இருந்ததால் அவர் அதற்கு எதிராக குரல் கொடுத்தார், இன்றும் சில ஒரிஜினல்(!?) பகுத்தறிவாளர்கள் இன்றைக்கு ஆதிக்கத்தில் இருக்கிற சாதிக்கு எதிராக கேள்வி கேட்பவராகவே இருக்கிறார்கள். 




    மூன்றாவது கேள்விக்கும் சேர்த்து முதல் கேள்வியில் பதில் சொல்லிவிட்ட போதும், நறுக்குனு ஒரு பதிவு இருக்கு. இதையும் ரகு சார் கருத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் படித்துபாருங்கள்;.
         
பூணூல் அறுத்து எறிவதோ, அல்லது தாலி அறுப்பதோ அவரவர் பயன்படுத்தியதை அவரரவர் அறுத்தெறிந்தால் அது அவர்கள் உரிமை, அடுத்தவர் கழுத்தில் கை வைப்பது மனித உரிமை மீறல். அம்புட்டுதான்.
     
சரி விடுங்க, ராகுவீரன் அய்யாவிற்கும், தமிழன் சகாவிற்கு நான் சொல்லிக்கொள்ள ஆசைபடுவதொன்று உண்டு. அது" மனிதனை மதிக்கத்தெரியாதவன் பகுத்தறிவாளனே அல்ல, அவர்களிடம் கேள்வி கேட்டு நீங்கள் பெரும் விடைகள் எப்படி சரியானதாய் இருக்கமுடியும்".

சொல்ல நிறைய இருக்கு. நேரம் போதவில்லை. மீண்டும் வருகிறேன். இப்போதைக்கு இம்புட்டுதான்.

24 கருத்துகள்:

  1. நன்றின்பால் உய்ப்பதே அறிவு...! அதுவே பகுத்தறிவு...!

    பதிலளிநீக்கு
  2. மிக சரியாகவும் அதே நேரத்தில் மிக தெளிவாகவும் உங்கள் கருத்தை தெரிவித்து இருக்கிறீர்கள் அதற்காக உங்களுக்கு எனது தனிப்பட்ட பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  3. நமது தமிழக பகுத்தறிவுவாதிகள் ஒரு குறிப்பிட்ட மதத்தையும் மற்றும் சாதியை சார்ந்தவர்களை மட்டும் பழித்துரைப்பது ஏன் என்று கேட்டால் அதற்கு இந்த போலி பகுத்தறிவு வாதிகள் சொல்லுவது இந்த பிராமனர்கள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி நாசம் செய்கிறார்கள் எனவே அவர்களின் ஆதிக்கத்தை ஒழித்துகட்ட வேண்டும் அதன் பின்தான் மற்ற சாதியினர் என்று என சூளுரைக்கின்றனர்.. இந்த போலி பகுத்தறிவு வாதிகள் சொல்வது உண்மை என்று எடுத்து கொண்டால் கூட இந்த இந்த ஜாதியினர் இந்தியாவில் மட்டும்தான் தங்கள் ஆதிக்கத்தை செலுத்துகின்றனர் ஆனால் மேலைநாடுகளும் இதே மாதிரிதானே வேறு மதங்களின் பெயரை சொல்லி உலகத்தை அழித்து தங்கள் ஆதிக்கத்தை செய்து வருகின்றனர் அப்படி என்றால் இவர்களைதானே முதலில் அழித்து ஒழிக்க வேண்டும் அதன்பிந்தான் மற்றவர்களை குறை சொல்ல வேண்டும், ஆனால் இப்படி பகுத்தறிவுவாதிகள் செய்யமாட்டார்கள் அதற்கு இந்த பகுத்தறிவுவாதிகளுக்கு தைரியம் வருவதில்லை

    பதிலளிநீக்கு
  4. சரியான பதில்பா..புரிந்து கொள்ளாமல் பெரியாரை தூற்றுவதே வாடிக்கையாகிப்போய் விட்டது..இது பிராமணீய ஆதரவாளர்களுக்கு வசதியாய் போய்விட்டது...

    பதிலளிநீக்கு
  5. அதே பேஸ்புக்கில் முனைவர் ஜீவா என்றொருவரின் " பூணூல் அறிக்கப்படவில்லையென்கிற அறிக்கையை வெளியிட தமிழருக்கு ஏன் தயக்கமென்றே தெரியவில்லை

    பதிலளிநீக்கு
  6. பெரியாரிடம் ஒருவர் கேள்வி கேட்டார், அவரை மாட்டிவிட வேண்டும் என்று.
    கேள்வி இது தான்,
    யார் பிராமணர்கள்?
    அவரின் பதில், யாரெல்லாம் அடுத்தவர் உழைப்பில் உண்டு களிக்கிறார்களோ அவர்கள் தான் பிராமணர்கள் என்றார்.
    நல்லவர் எல்லா இடத்திலும் உண்டு,
    அவர் அல்லவர்களைத் தான் சாடினார், அரசியல் பன்னும் அறிவீளிகளை அல்ல.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  7. 'ரகுவீரன் பகுத்தறிவாளர்களிடம் கேட்க நினைத்த கேள்வியை வீரமணியிடம் கேட்டபோதே அந்த கேள்விகள் பிசுபிசுத்துப் போய்விட்டதென்பது என் கருத்து' அருமை மைதலி. மதுரைத் தமிழனின் இந்தப் பதிவை அங்கேயே படித்தருந்தாலும், “வாதத்துக்கு மருந்துண்டு, பிடிவாதத்துக்கு மருந்து ஏது“ ன்னு போயிட்டேன். மதுரைத் தமிழன் பெரும்பாலும் சரியாகவே சிந்திக்கக் கூடியவர்தான். பகுத்தறிவு வாதிகளுக்கு அவர் எதிரியல்ல என்றே இப்போதும் நினைக்கிறேன். வீரமணிமேல் உள்ள கோபத்தில் மொத்தப் பகுத்தறிவு வாதத்தையும் கேலிசெய்யும் யாரோ ஒருவரின் கேள்விகளை இவர் ஏன் எடுத்துப் போட்டார் என்னும் கவலையும் எனக்கு வந்தது. “குளத்துமேல கோவிச்சுக்கிட்டு...“ எனும் நம்ம ஊர் சொலவடைதான் நினைவுக்கு வந்தது. இருந்தாலும் நீ இதற்குப் பதில் சொன்னதும் மகிழ்ச்சிதான்.
    பெரியாரைக் கிண்டல் செய்பவர்கள், மற்ற தென்மாநிலங்களோடும் வடமாநில “மூடத்தனத்தின் முடைநாற்றமடிக்கும்“ வழக்கங்களோடும் தமிழ்நாட்டை ஒப்பிட்டுப் பார்த்து, பெரியாருக்கு நன்றியோடு வாழக்கடமைப் பட்டவர்கள் என்பதை உணர வேண்டும். பெரியாரோடு எனக்கும் சில கருத்து வேறுபாடுகள் உண்டுதான். அது தந்தைக்கும் மகனுக்கும் உள்ளதைப் போன்றது. அவரை இழிவு செய்ய நினைப்பவர் யாராயினும் அறிவுபூர்வமாகச் சிந்திக்க மறுப்பவரே அன்றி வேறல்லர். அவர் படத்தில் சிறுநீர்கழித்த மற்றும் செருப்பாலடித்த ஜந்துக்கள், இதை உணராத மூடர்களன்றி வேறல்லர். நாய் நம்மைக் கடிக்கிறது என்பதற்காக நாமும் அதைக் கடிக்க முடியுமா என்ன?
    ஒரு விஷயம் மைதிலி, சங்கராச்சாரி கைதை எதிர்த்து, டெல்லியில் மூன்று முன்னாள் பிரதமர்கள் உண்ணாவிரதமிருந்த நாட்டில், சங்கராச்சாரி கைதான தமிழகத்தில் பெரிய அளவிற்கு எதிர்ப்பு இல்லாததன் காரணம் இந்தக் கிழவனின் கருத்துப் பரவல்தான் என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்.
    வீரமணியிடம் ஏராளமான பலவீனங்கள் உண்டு. அவற்றைக் கொண்டு, பெரியாரை விமர்சிக்க முடியாது என்பதை முதலில் உணரவேண்டும். இந்த சொத்தைக் கேள்விகளைப் போல மூடபக்தர்களிடம் மதவெறி-சாதிவெறி மூர்க்கர்களிடம் கேட்க நமக்கும் ஓராயிரம் கேள்விகள் உண்டு. அதைத்தான் பெரியார் 96வயதிலும் மூத்திரப் பையைச் சுமந்துகொண்டு ஊர்ஊராய்த் திரிந்து கேட்டுக்கொண்டே இருந்தார்... அவருக்குப் பதில் சொல்ல முடியாதவர்கள்தான் செருப்பை அப்போதும் எறிந்தார்கள், இப்போதும் எறிகிறார்கள். இந்தக் கேள்விகளாலோ இவர்களின் சிறுநீராலோ அந்த எரிமலையை அணைத்துவிட முடியாது! விடு!
    ஆனால், உன் பாணியில் பதில் சொன்னதை ரசித்து வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “நல்ல எழுத்தாளர்கள் சோம்பேறிகளாகவும், வணிக எழுத்தாளர்கள் சுறுசுறுப்பாகவும் இருக்கிறார்கள்“ என்ற “காலச்சுவடு“ இதழ் நிறுவனர் எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் பொன்மொழி எனக்கு மிகவும் பிடிக்கும் - மன்னிக்கவும், த.ம.5

      நீக்கு
  8. Should I explain 2 + 2 = 4?

    Let me try the first question..

    I have already written, why brahmins are hated..

    Check this link out!

    http://freethoughtblogs.com/nirmukta/2013/06/15/brahmins-only-housing/

    They like to isolate themselves from other hindus whenever they want to show they are "higher class". The above is such.

    But they will join hands with hindus whenever they want to show they are in MAJORITY.

    You can not have both ways.

    Why brahmins are targeted? This is why!

    The justification they often offer is, Are only brahmins Casteists? How about the backward class?

    Raghuveeran: Your question was why brahmins are hated. The answer is given above. Dont finger at some other moron that he is worse than brahmins. That will NEVER make brahmins/you innocent.

    Now should I explain, 4+5 = 9?

    You do your math,folks..

    ------------------------
    .***17. பார்ப்பனன், வைசியன், ஷத்திரியன் சூத்திரன் என்ற பிரிவு அவரவர்களின் பிறப்புத் திறனை கொண்டு நெறியமைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா? ***

    சாதிய அடையாளங்களை நியாப்படுத்தும் ரகுவீரன்!!! ஆண்மை இருக்கா? பெண்மை இருக்கா? தைரியம் இருக்கா? ஆட்டுக்குட்டி இருக்கா? மண்ணாங்கட்டி இருக்கா? னு ரகுவீரன் குரைத்துவிட்டு.. இப்போ ஜாதிய அடையாளங்களை நியயப்படுத்துகிறது..

    நெறி அமைக்கப்பட்டுள்ளதாம்ப்பா!

    பாப்பான் பஜனை செய்வான். மத்தவன் இவன் குப்பையை அள்ளனும்? ஏன்னா நெறி அமைத்து வைத்து இருக்காம்? பார்ப்பான் பிறப்பால் உயர்வானவன்னு??

    This is what brahmins are. Even when they try to pretend/plead they are innocent, they will show their TRUE COLOR that they are brain-dead and worthless trash for the society.

    There are chinense geniuses, japanese geniuses who eat meat, pig, cow, fish.. They will fall in sudra category according to Indian caste system. They create things which are unimaginable by these guys who justify caste system.

    Brahmins always justify caste system. They are rotten apples in our society. They need to be kept apart carefully.

    Raghuveeran is a rotten apple! Because he was not removed on time, now madurai tamilan started stinking as well He has become another rotten apple. Now sathya priyan, muralidharan are all started stinking. This is what happens to society if the rotten apples are not kept apart from the food ones. Now MT, SP, TNM are needed to be removed as they spoil other apples! :)

    Mythili: If you do not publish this, I will publish it in my blog. I know you need to maintain quality in your blog. It is ok if you moderate and do not publish this.take care!

    பதிலளிநீக்கு
  9. மனிதனை மதிக்கத்தெரியாதவன் பகுத்தறிவாளனே அல்ல,
    உண்மைதான் சகோதரியாரே
    தம +1

    பதிலளிநீக்கு
  10. பெரியார் பாம்பை விட மோசமாக இருந்ததை அடிக்க சொன்னார்,அதையே இன்றும் செய்தால் ,அது செத்த பாம்பை அடிப்பதற்கு சமம் :)

    பதிலளிநீக்கு
  11. தோழர் முத்துநிலவன் அவர்களின் கருத்திற்கு உடன்படுகிறேன் . மீண்டும் பழைய கருவாட்டுக் கதையை பின்னூட்டமாக்கியிருக்கிறார் தோழர் மதுரை தமிழன் . உலக நாடுகளின் மத ஒடுக்குமுறையென்பது " பிரிவினை" இந்துத்துவம் இந்தியத்தின் ஒடுக்குமுறை என்பது "வகுப்புப்பிரிவினை வாதம்" இரண்டிற்கும் வேறுபாடுண்டு, பகுத்தறிவென்பது இவைகளைத்தையும் எதிர்ப்பதுதான்.

    பதிலளிநீக்கு
  12. பாம்பின் தலை வெட்டினாலும் வெட்டிய தலையை முழுதாய் களையாமல் விட்டால் அதுவே மீண்டும் கொத்தும் என்பது பாம்பின் குணம் பகவான்ஜி தோழரே,

    பதிலளிநீக்கு
  13. //
    Raghuveeran is a rotten apple! Because he was not removed on time, now madurai tamilan started stinking as well He has become another rotten apple. Now sathya priyan, muralidharan are all started stinking. This is what happens to society if the rotten apples are not kept apart from the food ones. Now MT, SP, TNM are needed to be removed as they spoil other apples! :)
    //

    எனது பெயரையும் குறிப்பிட்டு சொல்லியதால் பதிலளிக்கிறேன் வருண். 70 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பார்ப்பன ஆதிக்க நிலை என்பது வேறு. இப்போது இருக்கும் நிலை வேறு.

    பெரியார் மற்றும் திராவிட கொள்கைகளினால் மட்டுமே கடந்த 20 ஆண்டுகளில் பல பின் தங்கிய வகுப்பினரின் அடுத்த தலைமுறைக்கு கல்வி மற்றும் பொருளாதார உயர்வு கிடைத்துள்ளது.

    இப்போது இதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது நமது தலைமுறையினரின் வேலை. மற்ற வகுப்பினருக்கு கிட்டிய அந்த வாய்ப்பு இன்னும் தலித்களுக்கு கிடைக்கவில்லை என்பது தான் அப்பட்டமான உண்மை. இன்னும் 50 ஆண்டுகள் இப்படியே இருந்தாலும் அந்த நிலை மாறாது.

    எவ்வளவு தலித்துகள் IT கம்பெனிகளில் வேலை பார்க்கிறார்கள்? எவ்வளவு தலித்துகள் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருக்கிறார்கள். விடை பூஜ்ஜியம். இதனை மாற்றுவது முக்கியமா இல்லையா என்பதை படிப்பவர்களின் கருத்துக்கே விடுகிறேன்.

    இதனை மாற்ற வேண்டும் என்றால் அன்றைக்கு பார்ப்பனர்களை எதிர்த்த அதே வேகத்துடன் மற்ற ஆதிக்க சாதிகளை இப்போது எதிர்க்க வேண்டியது அவசியம்.

    நமது முன்னோர்கள் நடந்து சென்றார்கள், மாட்டு வண்டியில் சென்றார்கள். அவர்களது உழைப்பால் நாம் காரில் செல்கிறோம். நமது அடுத்த தலைமுறையினரை நாம் நமது உழைப்பால் ஃப்ளைடில் பயணம் செல்ல வைக்க வேண்டும். அவர்களை காரிலேயே பயணம் செல்ல வைப்பது நமக்கும் இழுக்கு நமது முன்னோர்களுக்கும் இழுக்கு.

    பதிலளிநீக்கு
  14. சத்யபிரியன்: எதுக்காக இந்த லெக்ச்சர் கொடுக்குறீங்கனு தெரியவில்லை! ஒண்ணு தெரிஞ்சுக்கோங்க..யாரும் யாரு பூனூலையும் அறுக்கவில்லை! ரகுவீரன் பூனூலை எவன் அத்தான்?? சும்மா எவன் தாலியையோ எவனோ அத்தால் எனக்கென்னனு பார்ப்பானுக இருக்காமல், பொங்கி, சும்மா கேள்வி கேக்கிறேன்னு பொய் குற்றச்சாட்டை வைக்கக்கூடாது! சொல்லப்போனால் பார்ப்பனர்களைப் பத்தி எவனும் கவலைப்படவில்லை. இவனுக இருந்தால் என்ன செத்தால் என்னனு பதிவுலகில் அவன் அவன் அவனவன் வேலையைப்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதை நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை.

    மேலும் தேவையான நேரத்தில் உயர்சாதி முட்டா திராவின்களையும் அவனுக சாதி வெறியையும் விமர்சிச்சுக் கொண்டுதான் இருக்கிறோம். அது உங்கள் பார்வைக்கு தெரியவில்லைனா, அதுக்கு நாங்க என்ன பண்ணுறது??


    சும்மா கெடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டினு திடீர்னு, பரோபகாரி (இவருக்கு என்ன வேணும்னு தெரியவில்லை?) இந்தாளு போயி எவனோ முகநூலில் வைத்த ஒப்பாரியைக் கொண்டு வந்து போட்டது மட்டுமல்லாமல், இவருக்கு உள்ள தாலி செண்டிமெண்ட், இந்துமதப் பற்றால், தேவையே இல்லாமல் இஸ்லாமியப் பெண்களின் பர்தாவை இழுனு சண்டை மூட்டி விடுவது.. இதெல்லாம் செய்றவன் யாரு?? வேலை வெட்டியில்லாத மூளை வளர்ச்சியில்லாத "நீங்கள் சொல்லும்" அதே திராவிடன் தான் செய்கிறான். இந்த வேலை செய்வது பார்ப்பான் இல்லை! அதை மொதல்ல புரிஞ்சுக்கோங்க. So your lecture is not warranted here at all.That's the whole point. Otherwise why would I care about you or your opinions? It is none of my business!

    பதிலளிநீக்கு
  15. எல்லா சாதியைத் தான் சொல்லியிருக்கார் என்ன பிரச்சனை என்றால் பார்ப்பனர் எல்லோரும் தம் சாதிக்கு இது பொருந்தாது சூத்திரர் தான் சாதிவெறியாடுகின்றனர் எனவும், சூத்திரர் எல்லோரும் தம் சாதிக்கு இது பொருந்தாது பார்ப்பனர் தான் சாதி வெறியூட்டுகின்றனர் எனவும் விரல் காட்டிக் கொண்டோ மறுகையால் கைகுலுக்கிக் கொண்டு சாதீயம் வளர்ப்பது தான்.. முதலில் சாதீயம் பற்றி பேசுவோர் தம் வீட்டில் இருந்து சாதீயம் ஒழிக்கத் தொடங்கட்டும். சாதீயக் குறியீடுகளான பூணூலோ கடுக்கனோ வட்டார மொழியோ அல்லாவற்றையும் விட்டொழியுங்கள், அடுத்து மற்ற சாதி சனத்தோடு மண உறவு கொள்ளுங்கள். இரண்டையும் செய்ய முடியவில்லையா? பொத்திக் கொண்டு பேசாமல் இருங்கள், சாதியை ஒழிப்பது பற்றி நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடந்த 20 அல்லது முப்பது வருடங்களில் அநேக பார்பன குடும்பங்கள் மிகவும் மாறிவீட்டன எனக்கு தெரிந்த பல பிராமிணப் பெண்கள் மிக அதிக அளவில் அடுத்த சாதி மதம் இனம் தாண்டி திருமணங்கள் புரிந்து கொண்டனர் & புரிந்து கொண்டும் இருக்கின்றனர் என்பது உண்மைதான். அதே நேரத்தில் இன்னும் பழமையான பழ்க்க வழக்கங்களை கைகொண்ட பழமைவாதி பிராமின் களும் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். ஔ வேளை பெரியாருக்கு பின் அவரைபோல சீர்திருத்த வாதி அவரது இயக்கத்தை தொடர்ந்து இருந்தால் அந்த நிலமையிலும் மாற்றம் எளிதில் வந்து இருக்கலாம் ஆனால் அது நீங்கள் சொன்னதுது போல திராவிட கழங்களில் இந்த பகுத்தறிவு மாட்டிக் கொண்டு அது புதைக்கப்ட்டுவிட்டது போலத்தான் இருக்கிறது

      நீக்கு
    2. திராவிடக் கழகங்களில் கூட பல பிராமீன் மருமகள்கள் வந்திருக்கின்றனர். திராவிடக் கழகங்கள் பெரியாருக்கு பின் அப்படி ஒரு பிராமீன் எதிர்ப்பரசியலை செய்ததாக எனக்குப் படவில்லை. திராவிடக் கழகங்களில் தலைவராகவும் பிராமீன் பெண் வந்திருக்கின்றாரே. ஆக ! திராவிடக் கழகங்கள் பிராமீனை வறுத்துக் கொண்டு இருப்பதாக சொல்லப்படுவது என்பது பச்சைப் பொய் என்பதே என் வாதம். திமுக தோற்றத்தின் போதே பிராமீன் ஆட்களின் சுவராஜ்ய கட்சி ஆதரவு தந்ததும் விபி ராமன் போன்றோர் திமுக கொறாடா உறுப்பினராக வந்ததும் கூட உண்டு.

      ஆம் ! பிராமீன்கள் மட்டுமல்ல தேவர்கள், செட்டியார்கள், கவுண்டர்களில், வன்னியர்களில், நாடார்களில் கூட நானறிந்து பலரும் வேறு சாதியினரை மணந்துள்ளனர். இது தான் உண்மை. அதே போல அந்த சாதிகளினைப் பற்றிக் கொண்டு இருப்போரும் உள்ளனர்.

      இதில் சில சூட்சும சங்கதிகளை நீங்கள் அவதானிக்க வேண்டும்.. எப்போது ஜாதியை விட்டுக் கொடுக்கின்றார்கள் எனில், தமது மரபார்ந்த ஊர்களில் இருந்து வெளியூருக்கோ வெளிநாடுக்கோ புலம்பெயரும் போது, அங்கு தம்மளவிலோ தம்மைவிடவோ பொருளாதார வசதி மிக்க, மற்றும்/அல்லது அரசியல், அதிகார மட்டத்தில் செல்வாக்குடைய மாற்றுச் சாதியினரை மணக்கத் துணிகின்றனர். இது தான் எதார்த்தாம் இதில் பிராமீன் பிராமீனல்லாதோர் என்ற பேதமில்லை. ஆனால் இவை யாவும் உள்ள பட்சத்திலும் தலித்களை மட்டும் பிராமீனோ, பிராமீனல்லாதோரோ மணக்க தயக்கம் காட்டுகின்றனர்.

      இன்று பிராமீனையல்ல நாம் எதிர்ப்பது பிராமீனால் உருவாக்கப்பட்ட ஜாதியத்துவம், இந்துத்வம் ஆகியவற்றையே நாம் எதிர்க்கின்றோம். அந்த ஜாதியத்துவம், இந்துத்வம் ஆகியவற்றுக்கு அகில இந்திய அளவிலும் உலகளாவிய ரீதியிலும் நெய்யூற்றி வேள்வி வளர்ப்போரில் பெரும்பங்கினர் பிராமீன் கூடவே பனியா. தமிழகம் உட்பட சூத்திரர் ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்களில் பிராமீன் + பனியா அரசியல் ஏகாதிபத்தியோடு சற்சூத்திரர் மற்றும் சற்சூத்திரராக முயல்வோருகளில் சிலரும் ஆதரவு தருகின்றனர். ஆழமாக நோக்குங்கள் புரியும்... !

      நாம் ஒரு பிராமீன் பிராமீனாக இருப்பதால் மட்டும் எதிர்க்கவில்லை, அல்லது பிராமீனோடு சேர்ந்து ஜாதித்துவம் மதத்துவம் வளர்க்கும் பிராமீனல்லாதோரை அடிவருடி என திட்டவில்லை. ஆனால் ஒரு பிராமீன் பூணூல் தரித்துக் கொண்டும், பிராமீனல்லாதோர் அப் பூணூலுக்கு வக்கலாத்து வாங்குவதையும் தான் எதிர்க்கின்றோம்.

      இங்கே பூணூல் என்பது ஒரு ஜாதிய குறியீடு மதக் குறியீடல்ல என்பதை காண்க ! ஒருவேளை இந்து எனப்படுவோர் எல்லோருக்கும் பூணூல் அணியும் அனுமதி இருந்தால், அப்போது பூணூலை எதிர்க்க மாட்டோம். இந்து எனப்படுவோர் எல்லோருக்கும் கோவில் மந்திரம் ஓதுவது முதல் சமூக அந்தஸ்து சரிசமமாக தரப்பட்டால் அப்போது யாம் எதிர்க்க மாட்டோம். அப்படி தரப்படும் பட்சத்தில் சூத்திரர் சற்சூத்திரர் தலித் என்ற பேதம் தானாகவே போய்விடும்.

      ஏனெனில் பிராமீனுக்கு இணையாக அனைவரும் வந்த பிறகு பிராமீனுக்கு அடுத்த இரண்டாம் இடத்துக்கு போட்டி போடுவதற்கு சற்சூத்திரரோ சற்சூத்திராக ஆக முனைவோரோ இருக்க மாட்டார்களே !

      புரிந்ததா? புரியவில்லை என்றால் தொடர்ந்து பேசுவோம்.

      நீக்கு
  16. வருண் அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறுவது எனது நோக்கமல்ல. எனது குறைகளை போக்கி என்னை திருத்திக் கொள்வதே எனது நோக்கம்.

    //
    யாரும் யாரு பூனூலையும் அறுக்கவில்லை
    //

    இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது இது. நேரமிருந்தால் படித்து பாருங்கள்.

    http://www.thenewsminute.com/article/they-beat-him-and-threw-away-his-sacred-thread-six-held-attacks-brahmins-chennai

    78 வயது முதியவரையும், 12 வயது சிறுவனையும் அடித்துவிட்டால் சாதி ஒழிந்து விடுமா?

    எனது சிந்தனை உங்களுக்கு நாற்றமாக தோன்றலாம். தவறிருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்.

    மற்றபடி வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா, ஒரு முதியவரை வீம்பாக அடிக்கும் அளவுக்கு தமிழன் இருப்பான் என்று நான் நம்பவில்லை.
      இதனையும் படியுங்கள்.

      "மயிலாப்பூரில் அர்ச்சகரின் பூணுல் அறுக்கப்பட்டதாக கூறப்படும் பின்னணியில் வெளிவராத உண்மைகள்:
      சென்னை மயிலாப்பூரை சேர்ந்த அர்ச்சகர் விஸ்வநாதனை தாக்கிய கும்பல் ஒன்று அவரது பூணுலை அறுத்ததாக செய்தி வெளியானது. இந்த சம்பவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஊடகங்களும், நாளேடுகளும் செய்தி வெளியிட்டன. இது தொடர்பாக திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படும் 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆனால் விஸ்வநாதன் தாக்கப்பட்டதன் பின்னணியில் பூணுல் அறுப்பு உள்ளிட்ட அரசியல் எதுவும் இல்லை என்பதே உண்மை. கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற அறுபத்து மூவர் திருவிழா அன்று மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோவில் எதிரில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் உள்ள விநாயகருக்கு பூஜை செய்வது தொடர்பாக ஒரு பக்தருக்கும், அர்ச்சகர் விஸ்வநாதனின் மகனும் காரணீஸ்வரர் கோவில் அர்ச்சகருமான சண்முகநாதனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. சாமிக்கு அலங்காரம் செய்வதில் திறமைசாலியான அந்த பக்தர் ஆட்டோ நிறுத்தத்தில் உள்ள விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்துள்ளார். இதற்கு ஒரு உபயதாரர் உதவியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அர்ச்சகர் சண்முகநாதன் சாமி சிலையை தொட்டு பூஜை செய்வதற்கு உங்களுக்கு உரிமையோ, அருகதையோ இல்லை, அதை வைதீக பிராமணர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று கூறி அந்த பக்தரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பக்தர் மாலை போட்டிருந்ததால் பதில் கூறாமல் சென்றுள்ளார். இந்நிலையில் கோவிலுக்கு சென்று திரும்பிய அந்த பக்தர் நேற்று முன்தினம் மாலையை கழட்டியுள்ளார். அன்றைய தினமே சிலரை ஏற்பாடு செய்து சண்முகநாதன் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார். அப்போது காரணீஸ்வரர் கோவில் சாவியை வாங்க சண்முகநாதனின் வீட்டிற்கு சென்ற விஸ்வநாதனை தவறுதலாக அந்த கும்பல் தாக்கியுள்ளது. அப்போது அங்கிருந்த பெண்கள் கூச்சலிட்டதால் அந்த கும்பல் தப்பியோடியது. இந்த சம்பவத்தை விஸ்வநாதனின் இரண்டாவது மகனான அர்ச்சகர் மங்கலநாதன், திட்டமிட்டு பூணூலை அறுத்ததாக அரசியல் சாயம் பூசினார். இதற்கு வலுவூட்டும் வகையில் அசோக் நகரில் ஒரு முதியவரின் பூணூலை ஒரு கும்பல் அறுத்துவிட்டு ஓடிவிட்டதாக கதை புனையப்பட்டது. (இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது). இந்து மதத்தின் பிரதிநிதி தாங்கள் தான் என்று கூறும் பார்ப்பனர்களின் பிரதிநிதியான சண்முகநாதனின் அடாவடித் தனம் மயிலாப்பூருக்கே தெரிந்த விஷயம். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காரணீஸ்வரர் கோவில் நடை ஒரு நாள் கூட காலை 6 மணிக்கு முன்னதாக திறக்கப்பட்டதில்லை. இன்று கூட அந்த கோவில் 7 மணிக்கு தான் திறக்கப்பட்டது. இந்த கோவில் மாதவ பெருமாள் கோவில் நிர்வாக அலுவலரின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் அவர் காரணீஸ்வரர் கோவில் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலும் தலையிடுவதில்லை. சாமி சிலைகளை தொட்டு பூஜை செய்ய பிராமணர்களுக்கு மட்டுமே உரிமை உள்ளதாக எந்த சட்டத்திலும் கூறப்படவில்லை. தெருவோர நடைபாதையில் உள்ள பிள்ளையாருக்கு பூஜை செய்த பக்தரிடம் சண்முகநாதன் மோதியது பிராமணீய ஆதிக்கத்தின் வெளிப்பாடே. சிலைகளை வைத்து பூஜை செய்வது இந்நாட்டின் பூர்வீக மக்களின் வழிபாட்டு முறையாகும். இது ஆரியர்களின் வருகைக்கு முன்பே இந்தியாவில் இருந்துள்ளது என்பதற்கு ஏராளமான வரலாற்று சான்றுகள் உள்ளன. இந்த உண்மை மிதவாதிகளாக இருக்கும் பெரும்பான்மை பக்தர்களுக்கு தெரிந்தால் பிராமணர்கள் கோவில்களில் இருந்து வெளியேறுவதை தவிர வேறுவழியில்லை."

      நீக்கு
  17. பயனுள்ள விவாதங்கள். நல்ல ஒரு சிந்தனையை உண்டாக்கி பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. சத்ய பிரியன்: நீங்க சொல்லும் செய்தி, ஹிந்து, எக்ஸ்ப்ரெஸ், தினமணி, தினமலர்ல எல்லாம் காணோம்!!! செலெக்டிவா ஒரு சில "பத்திரிக்கைகளில்" மட்டும் வந்து இருக்கு. அப்படியே அதுமாதிரி எதுவும் நடந்து இருந்தால், அவனுகளைப் பிடிச்சு 2 வருடம் உள்ள போடுவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இதுபோல் அடாவடித்தனத்தை எல்லாம் நான் ஒரு போதும் சப்போர்ட் பண்ணவில்லை. சட்டப்படி அவர்களைத் தூக்கி உள்ளே போடணும் என்பதில் மாற்றுக் கருத்து எனக்கில்லை.

    பதிலளிநீக்கு
  19. It was indeed published in The Hindu Varun. Someone shared it in FB. I just gave the same link.

    http://www.thehindu.com/news/cities/chennai/six-dvk-men-held-for-attacks-on-priests-in-chennai/article7127953.ece

    While I condemn this just like you, I also feel that uncouth and barbaric act of urinating on Periyar statue could have triggered this.

    As far as the topic in concerned let us give it a rest. There are other critical issues :-)

    பதிலளிநீக்கு
  20. பெரியார் என்பவர் மிகச் சிறந்த சமூக சீர்திருத்த வாதி. நீங்க சொன்ன அத்தனை கருத்துக்களும் மிக மிக அற்புதம். ஏற்புடையதே. பெரியார் மறைந்து இத்தனை ஆண்டுகள் கழித்து மக்கள் கொண்டுள்ள கடவுள் நம்பிக்கைகள் இந்த அளவுக்கு வளர்ந்ததற்கு காரணம் என்னவாக இருக்கும் என்பதை வீரமணி உணர்ந்துள்ளரா? என்பது மில்லியன் டாலர் கேள்வி? எங்கே இவர்கள் கோட்டை விட்டார்கள்? அதன் பின்னால் உள்ள காரணங்கள் என்ன?

    பதிலளிநீக்கு