சனி, 9 மே, 2015

பார்ப்பனர்கள் ஏன் பகுத்தறிவுவாதிகளின் எதிரியாகிறார்கள்???

          ஊரெல்லாம் சாதி சங்கங்கள் இருக்க, குடிசைகள் பற்றி எரிய, தீண்டாமைச்சுவர்கள் வளர்ந்தோங்க, இளவரசன்கள் சாக, அத்தனையையும் விட்டுவிட்டு ஏன் பார்ப்பனர்களை மட்டும் பகுத்தறிவுவாதிகள் குறி வைக்கிறார்கள்.





        பகுத்தறிவு என்றால் எங்க பாஸ் எனும் சென்ற பதிவை படித்தீர்கள் இல்லையா? அதில் அவகாசம் கிடைக்காத காரணத்தால் சில விஷயங்கள் நன்றாக விளக்கவில்லை என்ற குறை மனதை அரித்துக்கொண்டே இருந்தது. நல்லதும், அல்லதுமாய் சொல்ல பல விஷயங்கள் சேர்ந்துவிட்ட இந்த கால இடைவெளியில், பதிவுப்பக்கமே வரமுடியாத நேர நெருக்கடி வேறு. ஆனால் ஒன்று. சென்ற பதிவு என் வலைப்பூவிற்கு பல பெரும்பதிவர்களை அழைத்துவந்தது. அவர்களுக்கு என் வணக்கங்களும், நன்றிகளும்.  நீண்ட, நெடிய விமர்சனங்கள். கூச்சலாக தொடங்கிய விவாதம் கூர்மையாக தொடர்ந்தன. தவறிலும் பெருந்தவறாக, பின்னூட்டங்களுக்கு பதிலளிக்க அவகாசம் அற்ற அந்த பொழுதில் அந்த பதிவை இட்டதாக கருதுகிறேன். நண்பர்கள் மன்னிக்க. இனி நடுவுல கொஞ்சம் காணாமல் போன பக்கம்.

       என் ஊர் பற்றியும், அதில் என் தெருவின் இயல்பு பற்றியும் ஏற்கனவே இந்த பதிவில் எழுதியிருக்கிறேன். போய் வர பொறுமை இல்லாதவர்களுக்கு சின்ன intro. நான் பிறந்து, வளர்ந்தது மணப்பாறையில், சாதி அடையாளம் கொண்ட ஒரு தெருவில். அது ஆதிக்க சாதியையும் அல்ல, அடிமை சாதியையும் அல்ல. ஆனால் அந்த பரந்த இடத்தில் எண்பது சதவிகிதத்திற்கு பரவி, தன் சாதியின் பெயர் அந்த தெருவுக்கு அடையாளம் சொல்லவேண்டிய அளவுக்கு, காடாக கிடந்த செம்மண் பூமியை வளமான பூமியாக, மக்கள் வாழ தகுதியான இடமாக மாற்ற என் பாட்டனின் பாட்டன் வெகுபாடு பட்டிருக்கவேண்டும். (இப்போ எதுக்கு சொந்த கதை என்றா கேட்கிறீர்கள்?? அதுதானே பதிவின் சாரமே)

      ஆரம்பத்தில் ஊர்கோடியில் இருந்த முனியப்பனையும், மறு எல்லையில் இருந்த முத்துமாரியம்மனை மட்டுமே வணங்கி வந்திருக்கிறார்கள். (இப்போது ஏனோ வேப்பிலை மாரியம்மன் என்கிறார்கள்). தலைமுறைகள் சில கழிந்த பின், எங்கள் தெருவின் பெருமைமிகு அடையாளமாக தியாகேசர் ஆலை எனும் பஞ்சாலை ஒன்று அமைக்கப்பட்டு எம் மக்களின் கலாச்சாரத்திலும், வாழ்க்கை முறையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த காலகட்டத்தில் பல்வேறு இனமக்கள் வந்துசென்ற, புழங்கிய சூழலில், மில்லுக்கு கணக்கெழுத வந்த ஒரு ஐய்யர், என் தாத்தாவை கூப்பிட்டு (அவர்தான் அப்போதைய நாட்டண்மை) " உங்க தெருவுக்கு தெய்வ அருள் கிடைத்திருக்கிறது அய்யா! பாருங்க அரசமரத்தில் வேம்பு முளைத்திருக்கிறது. இப்படி முளைத்தால் அருகே ஒரு பிள்ளையார் கோவில் கட்டினால், உங்க மக்கள் வளமாய் வாழ்வார்கள். சந்ததிகள் அரசாளும்" என எக்கச்சக்கமாய் அருள்வாக்குகூற, என் தாத்தாவும், அந்த தெருமக்களும் (எல்லோரும் உறவினர்கள்) கைப்பணம் போட்டு சிறிய கோவில் எழுப்பிகொண்டிருந்த ஒரு இரவில், தாத்தா தன் நண்பர்கள் இருவரோடு மூன்று ஊர் தாண்டி ஒரு கோவிலில் பிள்ளையாரை தூக்கிக்கொண்டு வந்திருக்கிறார் (திருட்டுப் பிள்ளையார்தான் சக்தி வாய்ந்ததாய் இருக்கும் என்று நம்பிக்கை). கண்ணப்பநாயனார் சிவனை வழிபட்டதை போல அந்த பிள்ளையாரை எம் தெருமக்கள் வழிபட்டு வந்தார்கள் ( பூசாரி மொதகொண்டு காவாளிபயலா இருக்காங்களே! எனும் வடிவேலுவின் வசனத்தை கேட்ட நொடியில் எங்கள் பிள்ளையார் கோவில் தான் எனக்கு நினைவுக்கு வந்தது)

               மார்கழி மாதம் முழுக்க மண்டகபடி நடக்கும். எத்தனையோ ஏழை எளிய திருமணங்கள் அந்த சின்ன கோவிலின் வாசலில் நடந்திருக்கிறது. எங்கள் தெருவில் எந்த பிள்ளைக்கு, பெற்றோரோடு சாதகம் பொருந்தவில்லை,கிரகம்  சரியில்லை என்றாலும் அந்த பிள்ளையை, அந்த பிள்ளையாருக்கு தவிட்டுக்கு விற்றுவிடுவார்கள். (நானும் அப்படி விற்கப்பட்டவள் :) இவ்வாறெல்லாம் எங்களோடு, எங்கள் உணவை உண்டு, உங்கள் உடை ரசனைக்கு உடுத்தி, திருவிழா நாட்களில் பெரிய திரையில் எங்களோடு  எம்.ஜி.யார் படம் பார்த்து, என் அத்தையும், அண்ணனும் குளிப்பட்ட வாழ்ந்து வந்த விநாயகருக்கு வந்து சோதனை. கோவில் ஹைவேஸ் இடத்தில் இருக்கிறது என்று ஒரே தட்டாய் தட்டி, பிள்ளையாரை பெயர்த்து எங்களிடம் தந்துவிட்டது மணவை நகராட்சி.

   இங்கே தொடங்குகிறது பிள்ளையாரின் செகண்ட் இன்னிங்க்ஸ். என் தம்பி தனக்கு சொந்தமான இடத்தை என் தாத்தாவின் அனுமதியோடு கோவில் கட்ட தந்துவிட, என் சித்தப்பா கோபி பெரும் பகுதி பணம் போட, எம் தெருமக்கள் மீதி பணம் போட்டு, ஆசை ஆசையாய் முறைப்படி, ஆகமவிதிப்படி இப்போது ஒரு கோவில் எழுப்பியிருக்கிறார்கள். கும்பாபிசேகம் முடிந்தது. நான் அந்த விழாவிற்கு செல்லவில்லை. அன்று வேலைநாள்.

இன்னறுங்கனிச் சோலைகள் செய்தல்,
...........இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
...........ஆலயம் பதி னாயிரம் நாட்டல்
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
...........பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
..........ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்“
            
          என அல்ரெடி ஒரு அந்தணர் சொல்லிவிட்டார் இல்லையா, அதனால் நான் அன்று பள்ளிக்கு போய்விட்டேன்:). நாற்பத்திஎட்டு நாள் அவசியம் பூசை செய்யவேண்டுமாம். கும்பாபிசேகம் செய்த அய்யர் ஒருவரே அந்த பூஜைக்கு பொறுப்பேற்றிருக்கிறார். அதற்கு அவர் விதித்திருக்கும் நிபந்தனைகள்.

1.அவர் சமைத்துக் கொண்டு வந்த அன்னத்தை மட்டுமே கருவறைக்குள் எடுத்துபோகவேண்டும்.


2.மக்கள் மண்டகப்படிக்கு செய்து வந்த பிரசாதத்தை வெளியே வைத்துதான் வாங்கவேண்டும், அப்படியே விநியோகித்துகொள்ளலாம்.

வேறென்ன சொல்ல !! என்னைபோலவே என் சொந்தபந்தங்களை பார்த்து  அந்த பிள்ளையாரும் சிரித்திருப்பரோ என்னவோ!! இந்த கொடுமைக்காக பூணூலே அணிந்துகொள்ளாதா என் தோழி கீதாவின் மகனிடமும்  முகத்தை திருப்பிக்கொள்ளவும் முடியாதே. இந்த நேரத்தில் பாலகுமாரனின் உடையார் படித்துக்கொண்டிருக்கிறேன். கதையைத் தாண்டி, சோழர் காலத்தில் பிராமணர்களின் வாழ்க்கை பற்றி நடுநிலையோடு சில விசயங்களை பாலகுமாரன் முன் வைத்திருக்கிறார். இன்னும் இரண்டு பாகத்தை முடித்துவிட்டு அதை வேற்றொரு பதிவில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இப்போ நீங்க தொடங்கலாம் :)

         

58 கருத்துகள்:

  1. ரைட்டு...

    மண்டகப்படி தொடரட்டும்...!

    பதிலளிநீக்கு
  2. அக்கா ! பார்ப்பனர்கள் மட்டுமல்ல . இன்னும் நம் மக்களுல் பலர் அந்நம்பிக்கைகளையே மனதில் வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் . கோவில் விடயங்களில் இன்னும் நம் மக்களிடம் பார்பனர்கள் கூறுவதையே வேதவாக்காக எடுத்துக்கொள்ளும் அடிமைத்தனம் இருந்துகொண்டே தான் இருக்கிறது . அதற்கு பிராமின்களை மட்டும் குற்றம் சொல்வது தவறானது . என்னைப்பொறுத்தவரை சாதியை எதிர்க்கிறேன் பேர்வழி என்று பகுத்தறிவு கூறிக்கொண்டு என் இனம் என்ற பெயரில் பெரிய அளவிளான மக்களை பிரித்து வைத்துப்பார்க்கும் கூட்டத்திற்கு பதில் சாதியப்பிரிவுகள் எவ்வளவோ மேல் . இந்தியா , தமிழன் , திராவிடன் , இந்து என்ற பிரிவுகளைக்காட்டிலும் சாதிப்பிரிவுகள் ஆபத்து குறைந்தவை . மிஞ்சிமிஞ்சி போனால் சாதியக்கலவராத்தால் லட்சம் பேர்தான் சாவார்கள் . ஆனால் தமிழன் என்ற பிரிவினையால் இலங்கையில் இறந்த மக்கள் , இந்து என் பெயரால் குஜராத் , டெல்லி கலவரங்கள் , இந்தியன் என்ற பெயரால் காஷ்மீரில் மற்றும் சீனப்போரில் இறந்த மக்கள் , மேலும் வருங்காலத்தில் அணுவைக்கொண்டு நடத்தப்பட இருக்கும் போர்களில் இறக்கப்போகும் மக்களைக்காட்டிலும் சாதியக்கலவராத்தல் இறப்பவர்கள் குறைவே . முதலில் பிரிவினையை எதிர்ப்பவர்கள் கண்டப்பிரிவினை , நாடுப்பிரிவினை , மதப்பிரிவினை , இனப்பிரிவினை , மொழிப்பிரிவினை போன்ற பெரும்பான்மையான மக்கள் வாழும் பிரிவினையை எதிர்த்துவிட்டு பின் சாதியப்பிரிவினையை எதிர்ப்பதுதான் உத்தமம் . வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம் வாடினேன் என்பதே பிரிவினையை எதிர்க்கும் பகுத்தறிவாளர்களின் உண்மையான நோக்கமாக இருந்திருக்கவேண்டும் . யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உயர்ந்த நோக்கத்துடன் பகுத்தறிவாளர்கள் நடந்திருந்தால் நானும் பெருமையானதொரு பகுத்தறிவு கூட்டம் தமிழகத்தில் உள்ளதென மார்தட்டிச்சொல்லியிருப்பேன் . ஆனால் இங்கிருக்கும் பகுத்தறிவாளர்கள் என்பவர்கள் பெரும்பான்மையின , மத , ஜாதி மக்களை மட்டம் தட்டுவதும் , சிறுபான்மையினருக்கு ஆதரவாக எழுதுகிறேன் என் போர்வையில் உண்மைகள் மறைத்து அல்லது திரித்து எழுதுவதையுமே அறிகிறேன் . இளவரசன் பற்றி நீங்கள் ஒற்றைவரியில் குறித்திருந்தாலும் வாழ்க்கையைப் பற்றிய அடிப்படை ஞானமே இல்லாத ஒரு விடலைப்பையன் தன் காம எண்ணங்களுக்கு வடிகால் இட ஒரு பெண்ணை முறையற்றத்திருமணம் செய்துகொண்டு அதனை சமூகம் அங்கிகரிக்கவில்லை என்று புலம்பி 18 வயதில் மதுவில் விஷம் கலந்து குடித்து இன்னுயிரை மாய்த்துக்கொண்ட கோழையாகவே எனக்குத்தெரிகிறான் . முதலில் மாற்றுசாதியினர் என காரணம் காட்டி காதல் திருமணத்தை நிராகரித்ததாக கருதுவதே தவறு . அதற்கென்று சாதி பிரச்சனை இல்லையென்று நான் கூறவில்லை . நானும் காதலித்தேன் . என் சாதியைச்சார்ந்த , என் முறைப்பெண்ணை . ஆனால் அவர்கள் வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை . ஏனெனில் காதல் திருமணம் என்றாலே பெற்றோர்களின் மனதில் ஒருபயம் இன்றும் உலாவுகிறது . காரணத்தை நானே கண்கூடாக பார்த்திருக்கிறேன் . காதலித்து திருமணம் செய்து , ஒரே வாரத்தில் ஒசூரிலும் நாமக்கல்லிலும் அழைத்துச்சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது , தான் பெரிய பணக்காரன் என பொய்க்கூறி அழைத்துச்சென்று அப்பெண்ணின் வாழ்க்கையையே பாழாக்குவது போன்ற சமூகவிரோத செயல்கள் காதலின் பெயரால் தான் நடந்துவருகிறது . அப்படி உங்களுக்கு நேரடியாக பார்க்கவேண்டுமெனில் எங்கள் ஊருக்கு வருகை தாருங்கள் . ஏமாற்றப்பட்டு , தன் வீட்டிற்கும் திரும்பமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் பல பெண்களை நானே காட்டுகிறேன் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெக்னேஷ் ! இந்த நீண்ட பின்னூட்டம் , இந்த பதிவை எத்தனை ஆழமாக நீங்கள் படித்திருக்கிறீர்கள், அல்லது எத்தனை பாதித்திருக்கிறது என்பதை காட்டுகிறது. மிக்க நன்றி. ஆனால் தமிழன் என்று சொல்லிகொண்டதால் தான் இலங்கையில் இத்தனை இழப்புகள் என்பதுபோல நீங்கள் சொல்லியிருப்பது என்னால் ஏற்கமுடியவில்லை. இளவரசன் செய்தி எனக்கு முழுமையாக தெரியாது எனவே என்னால் அது பற்றி வாதிட முடியவில்லை, ஆனால் ஈழ விசயத்தில் நீங்கள் சொல்லவருவதென்ன? அவர்கள் தமிழர்கள் என்ற உணர்விருந்ததால் கொல்லபட்டார்கள், அப்படி ஒரு உணர்வே இருக்கக்கூடாது என்பதா?? ஏனெனில் சாதி உணர்வே தப்பு என்பதுதான் இந்த பதிவின் சாரம், அதை பார்ப்பனர்கள் எப்படி தொடங்கி, இன்றும் வழிநடத்துகிறார்கள் என்பதை தான் நான் சொல்ல நினைப்பதும்.

      அடுத்து . சாதி முறைகளை அழிக்காமல் மத துவேசத்தை அழிக்கவே முடியாது சகோ. என் ஜாதி எனக்கு முக்கியம், உங்கள் ஜாதி உங்களுக்கு முக்கியம், ஆனால் நாம ரெண்டுபேரும் ஹிந்துக்கள் இல்லை என்றா சொல்லமுடியும்.

      **ஒரே வாரத்தில் ஒசூரிலும் நாமக்கல்லிலும் அழைத்துச்சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது , தான் பெரிய பணக்காரன் என பொய்க்கூறி அழைத்துச்சென்று அப்பெண்ணின் வாழ்க்கையையே பாழாக்குவது போன்ற சமூகவிரோத செயல்கள் காதலின் பெயரால் தான் நடந்துவருகிறது . அப்படி உங்களுக்கு நேரடியாக பார்க்கவேண்டுமெனில் எங்கள் ஊருக்கு வருகை தாருங்கள் . ஏமாற்றப்பட்டு , தன் வீட்டிற்கும் திரும்பமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் பல பெண்களை நானே காட்டுகிறேன்** உண்மையில் வருந்தத்தக்கது தான் சகோ. இளவரசன் ரயிலடியில் மர்மமாக இறந்து கிடந்ததாகத் தான் நான் செய்தி படித்தேன். உங்கள் செய்தி என்னை மேலும் அறிந்துகொள்ளும் ஆவலுக்குத்தள்ளி இருக்கிறது. பதிவு திசை மாறும் என்பதால் தான் கீழ்வெண்மணி முதலான விசயங்களை சுருக்கினேன்.

      **மிஞ்சிமிஞ்சி போனால் சாதியக்கலவராத்தால் லட்சம் பேர்தான் சாவார்கள் .**

      வாகன விபத்துக்களில் கூட ஊர் இருவர்தான் சாகிறார்கள். அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாமா சகோ?? பெருமாள்முருகன் தொகுத்த "சாதியையும், நானும் " புத்தகத்தை உங்களுக்கு பரிந்துரை செய்கிறேன். நேரம் இருப்பின் படித்துபார்க்கவும். மேலும் ஒன்று. நாம் கருத்தால் தான் வேறுபட்டு நிற்கிறோம் சகோ, மற்றபடி உங்களை காயபடுத்தி இருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.

      நீக்கு
    2. மெக்னேஷ் திருமுருகன்! நீங்கள் என் கூகுள்+ நண்பர் எனும் முறையில் உங்களது மேற்படி கருத்துக்குப் பதிலாக நான் என்னுடைய சில கருத்துக்களைக் கூற விரும்புகிறேன்.

      சாதி, சமயம் போல நாடு, மொழி, இனம் போன்ற பிரிவினைகளும் ஆபத்தானவையே என்கிற தங்கள் கூற்றை முதலில் உளமாரப் பாராட்டுகிறேன். எல்லா விதப் பிரிவினைகளுமே ஏதாவது ஒரு வகையான அழிவுக்கு வழி கோலுகின்றன என்பது உண்மைதான். ஆனால், இயற்கையாக ஏற்பட்ட பிரிவினைகளுக்கும் சிலர் வாழப் பலரைத் தாழ்த்திச் செயற்கையாக உருவாக்கப்பட்ட பிரிவினைகளுக்கும் வேறுபாடு இல்லையா? தொலைத்தொடர்பு வசதிகளும், போக்குவரத்து வசதிகளும் மிக மிகக் குறைவாக இருந்த காலத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த மக்கள் பல்வேறு இனக்குழுக்களாகச் சேர்ந்து வாழத் தொடங்கி, அவரவர் எல்லைகள் அவரவருக்குரியதாக அறியப்பட்டு நாடு என்பது உருவானது. அந்தந்தப் பகுதியில் மக்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள உருவாக்கிக் கொண்ட ஓசை முறைகள் பிற்காலத்தில் பண்பட்டு மொழிகளாக உருப்பெற்றன. அந்தந்தப் பகுதி மக்களின் இயற்கைச் சீற்றங்கள் தொடர்பான அச்சம் போன்றவை அந்தந்தப் பகுதியின் சமயக் கோட்பாடாக ஆயின. ஆனால், சாதி எப்படி உருவானது? இப்படி இயற்கையாகவா உருவானது? பார்ப்பனர்கள் தாங்கள் வாழ வந்த இடத்தில் தங்கள் வாழ்க்கைநிலையை உறுதிப்படுத்திக் கொள்ள உருவாக்கியது சாதி. அப்படி இல்லை, சாதியும் இயற்கையாக உருவானதுதான் என நீங்கள் கூறுவதாக இருந்தால் இந்தியாவைத் தவிர வேறு எந்தப் பகுதியில் சாதி இருக்கிறது, இந்து சமயத்தைத் தவிர வேறு எந்தச் சமயத்தில் சாதி இருக்கிறது என்கிற கேள்விகளுக்கு நீங்கள் பதில் கூற வேண்டி வரும்.

      ஆம். கிறித்துவ, இசுலாமிய, பௌத்த, சமண சமயங்களில் கூட உட்பிரிவுகள் இருக்கத்தான் செய்கின்றன. அவர்களுக்குள்ளும் அவர்கள் குருதி பெருக்கோட அடித்துக் கொள்ளத்தான் செய்கிறார்கள். ஆனால், அவை இந்துச் சமயத்தின் சாதி முறையைப் போல் ஒன்றின் கீழ் ஒன்று எனும் அடுக்கு முறையில் இல்லை. இந்தச் சாதியை விட அந்தச் சாதி உயர்ந்தது, தாழ்ந்தது என அவர்களின் சமய நூல்களோ, சமயவியலாளர்களோ கூறுவதில்லை. அங்கு இருப்பது பிரிவினை மட்டும்தான். ஏற்றத்தாழ்வு இல்லை. பிரிவினைக்கும் ஏற்றத்தாழ்வுக்கும் இடையிலான வேறுபாட்டை முதலில் புரிந்து கொள்ளுங்கள்!

      அப்புறம், ஈழம் பற்றிச் சொல்லி இருந்தீர்கள். அதுதான் என்னை மிகவும் வேதனைப்படுத்தியது. நான் 'சாதி தமிழுணர்வுக்கு எதிரானது' என அடிக்கடி வலியுறுத்தி வருபவன். ஆனால், இத்தனை நாட்களாக அதை நான் வெறும் கோட்பாட்டின் அடிப்படையில்தான் வலியுறுத்தி வந்தேன். ஆனால், தமிழுணர்வை விட சாதி உணர்வு மேல் என்று நீங்கள் கூறியிருப்பது என் கோட்பாடு எந்த அளவுக்குச் சரியானது என்பதை எனக்கு நடைமுறையிலேயே உணர்த்தி விட்டது.

      சுருக்கமாகச் சொல்கிறேன்; எல்லாப் பிரிவினைகளுமே ஊறு விளைவிப்பவைதாம். ஆனால், சாதி, நிறம் போன்ற ஏற்றத்தாழ்வின் அடிப்படையிலான பிரிவினைகள் உடனடியாகக் களையப்பட வேண்டிய உயர்பெரும் ஊறுகேடானவை! சாதியால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணுக்கை குறைவு, மொழி, நாடு, இனம் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். அதன் பாதிப்பு மிகவும் கூடுதல் என்பதற்குக் காரணம், சாதி இந்தியாவில் மட்டும்தான் இருக்கிறது, உலகின் பிற பகுதிகளில் இல்லை என்பதுதான். இந்த இரண்டையும் முதலில் உணருங்கள்!

      நீக்கு
  3. பிள்ளையார் சிரித்துக் கொண்டேதான் இருக்கிறார்
    நம்மைப் பார்த்து
    அருமை சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  4. ****1.அவர் சமைத்துக் கொண்டு வந்த அன்னத்தை மட்டுமே கருவறைக்குள் எடுத்துபோகவேண்டும்.

    2.மக்கள் மண்டகப்படிக்கு செய்து வந்த பிரசாதத்தை வெளியே வைத்துதான் வாங்கவேண்டும், அப்படியே விநியோகித்துகொள்ளலாம்.***

    அடேங்கப்பா! ஒரு கற்சிலையை வைத்துக் கொண்டு அதுக்கு நாந்தான் சமைப்பேன், நாந்தான் ஊட்டுவேன்னு ஐயர் ரொம்பத்தான் பிகுப் பண்ணூறாரு..

    நாங்க பிள்ளையாரைப் பார்த்திக்கிறோம், ஐயர்வால் நீர் காசிக்கு போயி பகவானிடம் சரணடையும் னு ஐயருக்கு ஒரு டிக்கட் வாங்கிக் கொடுத்து ஒரேயடியா அனுப்பியிருக்கலாமே?

    இப்போவே இப்படி இருக்கிறார்கள் என்றால் பெரியார் காலத்தில் என்ன என்ன சட்டம் போட்டார்களோ? இப்போ அப்பாவி வேடம் போட்டுக்கிட்டு பார்ப்பனர்கள் எல்லாம் திராவிடக் கைக்கூலிகளை வைத்து முழுநேரவேலையாகப் பெரியாரை வஞ்சம் தீர்க்கிறாணுக.

    பார்ப்பனர்கள் இந்து மதத்தையும், இந்துக் கடவுளையும் கட்டி அழுவதே, அவைகளை வைத்து தன்னை உயர்வாகக் காட்டத்தான். பிள்ளையாருக்கு பதிலா ஒரு முனியசாமியையோ அல்லது காளியாத்தாவையோ கும்பிட்டால் பார்ப்பனர்களுக்கு பொழைப்பு ஓடாது. அதான் இப்போ பிள்ளையார் மோகம் அதிகமாகிகிட்டே போகுது.

    யு எஸ் ல வந்து இருந்துகொண்டு பிள்ளையாரை வச்சு தன்னை உயர்த்த முடியாமல் ரொம்பவே டிப்ரெஸ்டாத்தான் இருக்காங்க. :)

    அப்புறம் மைதிலி, imho, கட்டுரைனு ஒரு பொதுவிடயத்தைப் பத்தி எழுத ஆரம்பித்துவிட்டால், சொந்த பந்தம், அப்பா, அம்மா, நண்பன் எல்லாரையும் ஒரு ஓரமாக வைத்துவிட்டு நம்ம கருத்தைச் சொல்லணும். அந்தத் தோழி இன்னாராச்சே, இந்த நண்பன் இன்னாராச்சேனு நம்ம யோசிச்சோம்னா, எந்தக் கட்டுரையிலும் எதையும் நாம் ஒழுங்காகச் சொல்ல முடியாது. It is their responsibility, NOT TO take the "contents" personally. They should have the open-mind to take the write-up in the correct sense. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. **
      நாங்க பிள்ளையாரைப் பார்த்திக்கிறோம், ஐயர்வால் நீர் காசிக்கு போயி பகவானிடம் சரணடையும் னு ஐயருக்கு ஒரு டிக்கட் வாங்கிக் கொடுத்து ஒரேயடியா அனுப்பியிருக்கலாமே?** இதை தான் நானும் என் தம்பியிடம் suggest செய்திருக்கிறேன்:)

      **
      யு எஸ் ல வந்து இருந்துகொண்டு பிள்ளையாரை வச்சு தன்னை உயர்த்த முடியாமல் ரொம்பவே டிப்ரெஸ்டாத்தான் இருக்காங்க. :)***

      அங்க எல்லாம் முருகன் கோவில் என்று கேள்விப்பட்டேனே வருண்!

      இங்கே கீதாவை சமரசம் செய்ய நான் பயன்படுத்தவில்லை வருண். எங்கேயோ கிணற்றடியில் இரண்டு சாதிக்காரர்கள் அடித்துக்கொண்டால் மூன்று ஊருக்கு சாதிச்சண்டை பரவுவது போல தான் அந்த அந்தனருக்காக இவர்களிடம் முறுக்கிக் கொள்ளவதும் என்றே நம்பியதால் தான் இங்கே குறிப்பிட்டேன்:)
      நீண்ட, ஆழமான பின்னூடத்துக்கு thanks வருண்:)

      நீக்கு
    2. வெப்பம் நிறைந்த பல உரையாடல்களுக்குப் வெகு நாட்களுக்குப் பின்னர் வந்த பதிவு..
      அந்த அந்தணர் சட்டைப்பையில் எப்போதும் துருத்திக் கொண்டு நிற்கும் ஹான்ஸ் பொட்டலம் உட்பட பல விசயங்கள் மிஸ்ஸிங்...
      இப்படி சுருக்கமாக பதிவிடும் எண்ணம் எனக்கு இல்லை ஒரு மின் நூலாக வெளியிட விருப்பம் ...
      பார்ப்போம் வருண்

      நீக்கு
  5. ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்பதே என் கருத்து

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு வார்த்தை ஒரு லட்சம் பெறும். சூப்பர் சார்:)

      நீக்கு
  6. ஆகா........... இன்று தான் உள்ளே வர முடிந்தது. மிக நேர்த்தியாக எழுதியிருக்கீங்க. கிட்டத்தட்ட நீங்களும் என் சிந்தனையை ஒத்து இருப்பீங்க போல. மணப்பாறையில் மூத்த அண்ணன் சில வருடங்கள் பணி புரிந்தார். சில வாரங்கள் அங்கே தங்கியிருந்த அனுபவம் உண்டு. உங்கள் பதிவுக்கு திருமுருகன் கொடுத்துள்ள நீண்ட பதில் மிகச் சிறந்த அங்கீகாரம். இன்று நேரம் உள்ளது. வரிசையாக நான் வாசிக்காமல் விட்ட பதிவுகளை ஒரே மூச்சாக படித்து விட முயல்கின்றேன்.

    கவிதைகள் பக்கம் போகாமல் இப்படி எழுத எனது வேண்டுகோளையும் இங்கே வைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. **இன்று தான் உள்ளே வர முடிந்தது. மிக நேர்த்தியாக எழுதியிருக்கீங்க** இந்த தினம் சிறப்பாக இதை விட என்ன வேண்டும்!! மிக்க நன்றி அண்ணா:)

      ** இன்று நேரம் உள்ளது. வரிசையாக நான் வாசிக்காமல் விட்ட பதிவுகளை ஒரே மூச்சாக படித்து விட முயல்கின்றேன். ** ஏற்கனேவே சொன்னதுபோல் பள்ளிக்கு சி.இ.ஒ. ஆய்வுக்கு வந்தமாதிரி திரில்லா இருக்கு அண்ணா:)

      **கவிதைகள் பக்கம் போகாமல் இப்படி எழுத எனது வேண்டுகோளையும் இங்கே வைக்கிறேன்.** ஆஹா! அம்புட்டு கொடுமயாவா என் கவிதைகள் இருக்கு:((((

      எல்லா பின்னூட்டங்களையும் படித்துவிட்டேன் அண்ணா:) மிக்க நன்றி! இப்படி நேரம் கிடைக்கும் போது நீங்கள் வந்து படிப்பது எனக்கு உற்சாகம் அளிப்பதாய் இருக்கும். தொடர்ந்து வாசியுங்கள் அண்ணா:)

      நீக்கு
  7. அன்புச் சகோதரி,

    பிள்ளையாரைத் தியாகேசர் ஆலை தங்கள் தெருவில் இருவரோடு மூன்று ஊர் தாண்டி ஒரு கோவிலில் பிள்ளையாரை தூக்கிக்கொண்டு, திருட்டுப் பிள்ளையார்தான் சக்தி வாய்ந்ததாய் இருப்பார் என்ற ஐதீகம்... இன்றுவரை அந்த நம்பிக்கையே நீடிக்கிறது... பிறகு ஹைவேஸ் இடத்தில் இருக்கிறது என்று ஒரே தட்டாய் தட்டி, பிள்ளையாரை பெயர்த்து தந்துவிட்டது மணவை நகராட்சி.

    தங்கள் குடும்பத்தினர் பிள்ளையாருக்குக் கோயில் கட்டிய வரலாற்றை அறிந்தோம்.

    பிள்ளையாருக்கே மறுவாழ்வு கொடுத்த பரம்பரை...!

    நன்றி.
    த.ம.8.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. **பிள்ளையாருக்கே மறுவாழ்வு கொடுத்த பரம்பரை...!***

      அண்ணா !! ஏன் இந்த கொலைவெறி:))))))

      நன்றி அண்ணா:)

      நீக்கு
  8. மூவாயிரம் வருடத்து இந்திய வரலாற்றை மூன்றுவரி “அய்க்கூ“வில் சொன்னதுபோல் இருக்கிறது மைதிலி.
    “கோட்டை கட்டினோம்- மதில் கோவில் கட்டினோம் – சவ குழிகள் கூட நாங்க வெட்டினோம் – இப்ப கோட்டைவிட்டும் கோவில்விட்டும் தூர நிற்கிறோம் – புதைக்க சுடுகாடும் இல்ல நாங்க தவிக்கிறோம்“ நவகவி வரியில், ‘கரிசல்குயில்’ கிருஷ்ணசாமி பாட்டைக் கேட்ட நினைவெழுகிறது.
    என் கண்ணெதிரில் நா அப்ப மச்சுவாடியிலிருந்து மாமன்னர் கல்லூரி புகுமுக வகுப்புக்கு நடந்து போய்வந்த நாள்களில் ஒன்றில் மின்கம்பியில் அடிபட்டு விழுந்த இரண்டு குரங்காரின் சமாதிதான் இப்போதைய ராணியார் மருத்துவ மனையிலிருந்து டிஇஎல்சி பள்ளிக்குத் திரும்பும் இடத்தில் ஒன்றும், பிருந்தாவனம் கீழ2ஆம் வீதிக்குத் திரும்பும் இடத்தில் ஒன்றுமாய் பெரிய அனுமார் கோவிலாக வளர்ந்திருக்கிறது.. இப்ப அங்கும் பூசை, திருவிழா எல்லாம் பார்ப்பனர்களால் மட்டுமே நடத்தப்படுவது இன்றைய செய்தி.
    கறையான் புற்றெடுக்க... கதைதான்.. வெல்லத்தின் எந்தப்பக்கம் பிட்டாலும் இனிக்கும் என்பதுபோல, சாக்கடையின் எந்த இடத்தில் கைவைத்தாலும்.. என்பது போலத்தான் நம் சமூக வரலாறு. ஆனால், உண்மை வரலாற்றை ஒத்துக்கொள்ளத்தான் பலருக்கும் மனம்வருவதில்லை. உனது எளிய நடைக்கும் வாழ்த்துகள் மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னது ??? நம்ம ஊர் ஆஞ்சநேயர் கோவில் வரலாறு இது தானா?? என்னமோ போங்கண்ணா, இப்படி நாத்திகம் பேசி, சொந்தபந்தங்களிடம் இருந்தெல்லாம் "இந்த புள்ளைய பெரியார் காலேட்ஜில் படிக்கவச்சது தான் தப்பு" என்று புலம்பலை கேட்டது தான் மிச்சம்:)

      முதலில் இதை எழுத தயக்கமாக இருந்தது. சுயவிளம்பரம் போல இருக்குமோ என்று. ஆனால் இந்த தகவல்களை சேர்க்காமல் இந்த பதிவை முழுமையாக விலகமுடியதே என்ற தயக்கம். ஜேம்ஸ் அண்ணா, இனியா போல யாரும் சொல்லிவிட கூடாதே என்ற கலக்கம் ஒரு புறம். ஆனால் செய்தி பலரிடம் சரியாகத்தான் போய் சேர்ந்திருக்கிறது.
      **உனது எளிய நடைக்கும் வாழ்த்துகள் மா.**
      மிக்க நன்றி அண்ணா!

      நீக்கு
  9. வணக்கம்
    நல்ல கருத்தைமுன்வைத்துள்ளீர்கள் பாராட்டுக்கள் தொடருகிறேன் த.ம 10
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  10. 'பகுத்தறிவு என்றால் எங்க பாஸ்' என்கிற முந்தைய பதிவையும் படித்துவிட்டுத்தான் இந்தக் கருத்தை இடுகிறேன்.

    பிய்த்து விட்டீர்கள்! உங்களைப் போல் சுருக்கமாகவே சுருக்கென எழுத நான் எப்பொழுது கற்றுக் கொள்ளப் போகிறேனோ!

    ஆனால், என்னைப் பொறுத்த வரை, ரகுவீரன், 'அவர்கள் உண்மைகள்' தமிழன் போன்றவர்களுக்கு இப்படியெல்லாம் ஊமைக்குத்துக் குத்தினால் போதாது. நேரடியாகவும் சிலவற்றைக் கூறினால்தான் புரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. **'பகுத்தறிவு என்றால் எங்க பாஸ்' என்கிற முந்தைய பதிவையும் படித்துவிட்டுத்தான் இந்தக் கருத்தை இடுகிறேன்.** போகிற போக்கில் படித்துக் கருத்திடமுடியாதவை உங்கள் பதிவுகள். நான் விடுபட்ட நாளின் உங்கள் சில பதிவுகளை படித்துவிட்ட போதும், கருத்திடவில்லை. எனக்கு குற்ற உணர்வாக இருக்கிறது:((

      **பிய்த்து விட்டீர்கள்! உங்களைப் போல் சுருக்கமாகவே சுருக்கென எழுத நான் எப்பொழுது கற்றுக் கொள்ளப் போகிறேனோ!**
      இதெல்லாம் என்ன பாஸ்!! உங்கள் அளவு தெளிவாய், திருத்தமாய், செம்மொழி நடையில் எழுத என்னால் எல்லாம் ஆகாதுபாஸ். உங்க தன்னடக்கத்துக்கு அளவே இல்லையா!?!

      **
      ஆனால், என்னைப் பொறுத்த வரை, ரகுவீரன், 'அவர்கள் உண்மைகள்' தமிழன் போன்றவர்களுக்கு இப்படியெல்லாம் ஊமைக்குத்துக் குத்தினால் போதாது. நேரடியாகவும் சிலவற்றைக் கூறினால்தான் புரியும்.** எப்படி நெத்தியடி அடிக்க வருண், இக்பால் செல்வன் எல்லாம் இருக்கிறார்களே:) இது தான் என் ஸ்டைல்:) மிக்க நன்றி சகா, உங்களை போன்றோர் கூறும்போது, ஏதோ நாமளும் கொஞ்சம் நல்லாத்தான் எழுதுறோம் போல என்கிற நம்பிக்கை பிறக்கிறது:) நன்றி sagaa

      நீக்கு
    2. //நான் விடுபட்ட நாளின் உங்கள் சில பதிவுகளை படித்துவிட்ட போதும், கருத்திடவில்லை. எனக்கு குற்ற உணர்வாக இருக்கிறது// - குற்ற உணர்வு போன்ற பெரிய வார்த்தைகளெல்லாம் தேவையே இல்லை. நீங்கள் பொறுமையாக எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் கருத்தைப் பதியலாம். உங்கள் விருப்பம்.

      //உங்கள் அளவு தெளிவாய், திருத்தமாய், செம்மொழி நடையில் எழுத என்னால் எல்லாம் ஆகாது பாஸ்// - ம்க்கும்! அப்படி எழுதி முடிப்பதற்குள் எத்தனை முடி கொட்டுகிறது என்பது எனக்குத்தானே தெரியும்! :-) தன்னடக்கமெல்லாம் இல்லை சகோதரி! உண்மையிலேயே, மனதில் நினைப்பதை அப்படிக்கு அப்படியே வார்த்தையில் கொண்டு வரும் அந்த மொழி ஆளுமை இன்னும் எனக்குக் கை வரவில்லை. கவிதை எழுதுகிற அளவுக்குக் கட்டுரை எளிதானதாய் இல்லை. அதனால்தான் இயல்பான நடையில், அதே நேரம், மிக வெளிப்படையாகவும் இல்லாமல் நறுக்கு சுருக்கென எழுதும் உங்கள் நடையை நான் பாராட்டுகிறேன்.

      நீக்கு
  11. தமிழ்நாட்டில் பார்ப்பன ஆதிக்கம் எப்படித் தொடங்கியது, இன்றும் அது தமிழர்களை எப்படியெல்லாம் ஒதுக்கி வைக்கிறது என்பவற்றையெல்லாம் எங்கோ வரலாற்றின் பழைய பக்கங்களிலிருந்து நகலெடுக்காமல் உங்கள் முன்னோர்களுக்கு நடந்த, உங்கள் வாழ்வில் நீங்கள் கண்ணால் பார்த்த விதயங்களையே வைத்துக் கூறியிருப்பது செம்மை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிலவன் அண்ணாவிடம் சொன்னதுபோல், சொந்தகதை எழுத வெகு தயக்கமாக இருந்தது. இப்படி நீங்கள் உற்சாகமூடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது:) மிக்க நன்றி சகா:)

      நீக்கு
    2. சொந்தக் கதை எழுதத் தயங்கவே தயங்காதீர்கள் சகோ! காரணம், உங்கள் கதையை, உங்கள் பட்டறிவை, நீங்கள் பார்த்தவற்றை உங்களை விடச் சிறப்பாக வேறு ஒருவராலும் எழுதிவிட முடியாது இல்லையா? மேலும், நம் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளைப் பதிவு செய்வது என்பது நம் காப்புரிமைக்குட்பட்ட விதயம். வேறு ஒரு நூலிலிருந்து மேற்கோள் காட்டுவது, வேறு ஒருவரின் கருத்தை எடுத்தாள்வது, ஏதாவது ஒரு தளத்தின் படத்தைச் சரியோ தவறோ தெரியவில்லையே எனும் தயக்கத்துடனே இடுகையின் முடிவில் நன்றி அறிவிப்புடன் பயன்படுத்திக் கொள்வது போலெல்லாம் இல்லாமல் நம் கதையை நாம் நமக்கே உரிய தனியுரிமையுடன் முழு சுதந்திரத்துடன் சொல்லலாம். வேறு எதையும் நாம் அந்த அளவுக்குப் புற உலகத் தாக்கம் இன்றி எழுத இயலாது. நம்முடைய ஆழ்ந்த சிந்தனையில் தோன்றிய கருத்துக்கள், கோட்பாடுகள் போன்றவற்றில் கூட நாம் பார்த்த, படித்த எனப் புற உலகத் தாக்கம் பெருமளவு இருக்கும். ஆனால், நம் வாழ்வின் சொந்தக் கதை என்பது அப்படி இல்லை. எனவே, சொந்தக் கதை எழுத ஒருபொழுதும் தயங்காதீர்கள் சகோ!

      நீக்கு
  12. நம் வாழ்க்கையை அவாக்களிடம் நாமே ஒப்படைத்து விட்டு கையேந்தி நிக்கிறோம்மா அறிவிருந்தும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா ! கவலையாகத்தான் இருக்கு:(( நன்றி அக்கா!

      நீக்கு
  13. சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லா9 மே, 2015 அன்று PM 8:44

    இப்போது புரிகின்றது ஏன் இதுவரைக்கும் பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களை கோவில்களில் நியமனம் செய்ய முடியாமல் தவிக்கின்றோம் என?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நீலன் சார்!
      உங்களை விஜூ அண்ணாவின் பதிவுகளில் பார்த்திருக்கிறேன். தமிழ்த்தாய் வாழ்த்திற்கு நீங்கள் இட்ட நீண்ட பின்னூட்டம் உங்கள் வாசிப்பின், ஒரு சோறு பதம் போல!!! உங்கள் வருகையும், கருத்தும் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது, மிக்க நன்றி:)

      நீக்கு
    2. பெயரில்லா10 மே, 2015 அன்று AM 8:56

      இறை நம்பிக்கையுள்ள தமிழர்கள் தொடர்ந்து விட்டு வருகின்ற பிழைகளை உங்களது பதிவில் பதிய வைத்துள்ளீர்கள். சொல்லப் போனால் இந்தக் கோணத்தில் எழுதத் துணிந்தமைக்கே உங்களுக்குத் தனிப் பாராட்டுக்கள். பொதுவாக தமிழகத்தில் இருசாரார் தான் இயங்கி வருகின்றனர் இறை நம்பிக்கையுள்ளோர், இறை மறுப்பாளர்கள். இறை மறுப்பாளர்களாக இருப்பது வெகு சுலபமான ஒன்று, சித்தாந்த ரீதியில் எங்கும் தங்கு தடையின்றி போட்டு உடைத்துவிடலாம். மதங்கள், ஜாதிகள், மூடநம்பிக்கைகள் போன்றவற்றை போட்டு உடைத்துவிடலாம். அதே போல மதங்களை இறுக்கிக் கட்டிப் பிடித்துக் கொண்டிருப்போரும் எதோ ஒரு வகையில் லாஜிக்கே இல்லை என்றாலும் மதப் பற்றின் அடிப்படையில் பேசிவிட்டு போய்விடலாம். ஆனால் தமிழகத்தின் மிகப் பெரும்பான்மை மக்கள் யார் தெரியுமா? கடவுள் நம்பிக்கையுள்ள ஆனால் மதப் பற்று குறைந்தவர்களே. அவர்கள் எங்கு நின்று தம் கருத்தை முன் வைப்பது என்பதில் குழம்பி இருக்கின்றனர்.

      அதனால் பொதுவில் பலரும் பேசுவதே இல்லை. உதாரணத்துக்கு தமிழகத்தில் வாழ்கின்ற இந்துக்கள் இருவித வழிப்பாட்டு மரபுகளைப் பேணுகின்றார்கள் - தாம் இந்துக்கள் என்பதாக அடையாளப் படுத்தப்படுவதால் தமக்கு சம்பந்தமே இல்லை என்றாலும் கூட பார்ப்பன சம்பிரதாயங்கள், வட இந்திய இறக்குமதி கடவுள்கள், பண்டிகைகள், பூசைகள் என்பவற்றை பின்பற்றுகின்றனர். ஆனால் குல தெய்வ வழிபாடு என்பதாக அவர்கள் தமது மூதாதையர் வழிபட்ட கடவுள்கள், வழிப்பாட்டு முறைகள், பலியிடுதல், தீமிதித்தல், வெறியாடுதல் போன்றவற்றை பின்பற்றுகின்றனர். இன்று பெரும்பான்மைத் தமிழர்களுக்கு இந்த இருவிதமான இந்து மதத்தில் எதைப் பின்பற்றுவது என்பதில் குழம்பிப் போயுள்ளனர். ஆகையால் படித்த பல தமிழர்கள் பார்ப்பனச் சடங்குகளுக்கு மாறி வருகின்றனர். இதில் ஏன் சிக்கல் எழுந்தது என்றால் இந்தியாவில் இருந்த பல மதங்களை ஒருங்கிணைத்து ஒரே மதமாக்கும் பணி கிபி 8-ம் நூற்றாண்டில் ஆதி சங்கராச்சாரியாரால் தொடங்கிவைக்கப்பட்டது. பின்னர் எழுந்த பக்தி இயக்கங்களும் அதனை வெற்றிகரமாக நிறைவேற்றின. அதன் படி செல்வாக்குள்ள இந்திய மதங்களை பார்ப்பன மதத்துக்குள் இழுத்து வரும் பணி தொடங்கி இன்று வரை நடத்தப்பட்டு வருகின்றது. அதற்கான சட்ட அந்தஸ்தானது 19-ம் நூற்றாண்டில் வெள்ளையர்களோடு இருந்த பார்ப்பனர்களால் பெறப்பட்டது, இன்று வரை இந்தியாவின் பல மதங்களை பார்ப்பனரது மதம் என்றே நம் சட்டம் கூறிவருகின்றது. ( விதிவிலக்காக பௌத்தம், ஜைனம், சீக்கியம் தவிர ). ஆகையால் பழந்தமிழர் வழிபட்ட பின்பற்றிய ஆதி தமிழர் சமயங்களாக இருந்தவைகளும் அவர்களது தெய்வங்களான கொற்றவை, முருகன், மாயவன், வேந்தன், விடங்கன் எனப் பல தெய்வங்களின் தனி மதிப்பு இழக்கப்பட்டு அவை பார்ப்பன தெய்வங்களாக மாற்றப்பட்டன. பின்னர், தமிழர்களது ஊரில் இருந்து சிறுதெய்வக் கோவில்களில் அதிக ஜனங்கள் வரத் தொடங்கும் போது, அதிக செல்வாக்கும் பணமும் புரளத் தொடங்கும் போது அவற்றை ஆகமம், வேதம், சாஸ்திரம், சம்பிரதாயம் எனக் கூறி பார்ப்பனர்கள் பறித்துக் கொள்வார்கள். பின்னர் அந்தக் கோவில்களின் பிரதானத் தமிழ் கடவுள்கள் கருவறைக்கு வெளியே துரத்தப்படுவார்கள், அல்லது பார்ப்பனக் கடவுளாக மதம் மாற்றுவார்கள்.

      இஸ்லாமியரும், கிறித்தவரும் இந்தியாவில் மக்களை மதம் மாற்றினார்கள். ஆனால் பார்ப்பனர்கள் மக்களின் கடவுள்களையே மதம் மாற்றினார்கள். யார் கெட்டிக் காரர்கள் என்பதைப் பாருங்கள்?!! ஆகையால் இன்று முருகன் கூட பார்ப்பன ஸ்கந்தனோடு பிணைக்கப்பட்டு முருகனது தனி அடையாளம் அழிக்கப்பட்டு வருவதோடு, மக்களும் முருகனாக எண்ணி ஸ்கந்தனையே வழிபடுகின்றனர். அந்த ஸ்கந்தனுக்கு பூசை செய்யவும், பணிவிடை செய்யவும் தமக்கே உரிமை உள்ளதாக மக்களின் முருகன் மக்களிடம் இருந்து தூர நிறுத்திவைக்கப்பட்டார்.

      நீக்கு
    3. செம........
      கஸ்தூரியும்(என் கணவர்) இதே போன்ற கருத்தை தான் முன் வைக்கிறார். இந்து மதத்திற்கு முன்னரே ஆசிவகம் முதலான பல மதங்கள் தான் தமிழர்களால் பின்பற்றப்பட்டது என்று அவர் எப்போதும் சொல்வதுண்டு. அதே போல அவர் சொல்லும் மற்றொரு விசயம் பிடாரி கோவிலுக்கு வெகு அருகே ஒரு நீர் நிலையும் அய்யனாரும் கண்டிப்பாக இருப்பார்கள் என்பதும் அங்கு யானை சிலை கல்லால் செய்யப்பட்டதாகவும், குதிரைகள் மண்ணால் செய்யப்பட்டதாகவும் இருக்கும் என்பார். இது தான் பண்டைய தமிழ் வழிபாட்டு முறையாக் இருந்திருகிறது என்றும், யானை ஆசிவகத்தை சேர்ந்தது என்று , அது பின்னர் பிள்ளையாராக அந்தணர்களால் உருமாற்றப்பட்டது என்றும், குதிரை பிற்பாடு ஆரியர்கள் சேர்த்த விஷயம் என்றும் சொல்லவார்.(அவர் மலர்த்தரு எனும் தளத்தில் மது என்கிற பெயரில் எழுதிவருகிறார்)

      நீங்க சொன்ன விசயத்தில் என்னால் வியப்பில் ஆழ்த்தும் ஒன்று, எங்கள் பிறந்த வீட்டில் குலதெய்வமான செந்திரைகருப்பரும் சரி, என் கணவர் வீட்டு குலதெய்வமான வாலி கருப்பரும் சரி நீங்கள் சொன்னது போலவே கோவிலுக்கு வெளியே தான் நிற்கிறார்கள்.இப்போதான் இதன் அர்த்தம் புரிகிறது, ஆனாலும் மணப்பாறையில் எங்கள் முன்னோர் தொட்டு இன்னும் எங்கள் கிராம மக்களால் பூசாரி வைத்து வழிபாடு செய்யப்படும் முனியப்பன் மட்டும் இன்னும் தன் இடத்திலேயே இருப்பதற்கும் பொருள் புரிகிறது. முதல் முறை தயக்கம் காரணமாக சுருக்கமாக பின்னூட்டம் இட்டிருந்தீரகளோ?? இப்படியான உங்கள் பின்னோட்டம் எங்களுக்கு மேலும் பல பயனுள்ள தகவல்களை தரும். உங்கள் நீண்ட பின்னூட்டங்களை ஆவலோடு எதிர்நோக்குகிறேன் சகோ:) மிக்க நன்றி!

      நீக்கு
    4. பெயரில்லா10 மே, 2015 அன்று AM 10:41

      ஆசீவகம் பற்றி பேசியுள்ளீர்கள், அது குறித்தும் மதங்கள் குறித்தும் சில விளக்கங்கள்.

      பண்டைய இந்தியாவில் திராவிடர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் மத்தியில் பலவித தெய்வ நம்பிக்கைகள் இருந்து வந்தன. பின்னர் ஆர்யர்கள் வருகின்றனர். நர்மதை நதிக்கு வடக்கே ஆர்யர்கள் திராவிடர்களது நிலங்களை கைப்பற்றிக் கொள்கின்றனர். வடக்கே வாழ்ந்த திராவிடர்களோடு சில ஆர்யர்கள் கலப்படைகின்றனர். இந்த நிலையில் தான் இந்தியாவில் ஜாதியும், மதங்களும் உருவாகுகின்றன. வந்தேறிய ஆர்யர்கள் வேத மதத்தைப் பின்பற்றியவர்கள். வேதங்களை புனிதமாக ஏற்றுக் கொள்பவர்கள். வடக்கே வாழ்ந்த திராவிடர்கள் இயற்கை வழிபாடு செய்பவர்கள். ஆர்யர் - திராவிடர் கலப்பினால் உருவாகிய மக்கள் ஆர்யக் கொள்கையின் தாக்கத்தில் திராவிட வழிபாடுகளை மீளுருவாக்கம் செய்கின்றனர். ஆர்யர்கள் பார்ப்பனர், சத்திரியர், வைசியர் என மூவர்ணமாக பிரிகின்றனர். ஆர்யர்கள் வேத மதத்தை பிராமணிய மதமாக வளர்ச்சியடையச் செய்கின்றனர். அந்த பிராமணிய மதத்தை சத்திரியரும், வைசியரும் பின்பற்றுகின்றனர்.

      திராவிடர்களோடு கலப்படைந்த ஆர்யர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக மாற்றப்பட்டு சூத்திரர்கள் என ஒதுக்கப்படுகின்றனர். சூத்திரர்களுக்கு வேத மதத்திலோ, அதிலிருந்து வந்த பிராமணிய மதத்திலோ எவ்வித பங்கும் தரப்படவில்லை. ஆகையால் சூத்திரர்கள் அவற்றை எல்லாம் ஒதுக்கு வேதங்களை மறுத்து சிரமண மதத்தை ஏற்படுத்துகின்றனர். ஆர்யர்களால் ஆளப்பட்ட வட இந்தியாவில் வாழ்ந்த சூத்திரர்கள் இந்த சிரமண மதத்தைப் பின்பற்றுகின்றனர். இந்த சிரமண மதமானது கிமு 6-ம் நூற்றாண்டளவில் பல பிரிவுகளாக பிரிகின்றது. அதிலிருந்து தோன்றியது தான் ஆசீவகம், ஜைனம், பௌத்தம். ஜைன மதத்தின் மகாவீரரும், பௌத்த மதத்தின் புத்தரும் ஆசீவக மதத்தின் மாக்கால கோசரிடம் மாணவர்களாக இருந்தவர்கள். அவர்களிடையே ஏற்பட்ட கொள்கை முரண்களால் அவை பிரிந்த தனித் தனி வழியில் சென்றனர். இந்த வட திராவிட மதங்களுக்கு வடக்கில் வாழ்ந்த சூத்திரர்கள், நாகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. ஏனெனில் இந்த மதங்கள் பார்ப்பன மதங்கள் போன்றில்லாமல் அனைவருக்கும் மதத்தில் பங்கு கொடுத்தது.

      இதன் பின்னர் இந்த மதங்கள் தென்னிந்தியாவுக்கு வந்தன. அப்போது ஆர்யரது கலப்பில்லாமல் இருந்த தென்னிந்தியாவில் தொடர்ந்து பண்டைய இயற்கை வழிபாடே இருந்து வந்தன. அதனை சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. பின்னர் வட திராவிட மதங்களான ஆசீவகம், பௌத்தம், சமணம் போன்றவை இங்கு வரவே அவை ஏற்கனவெ இருந்த தென்னிந்திய வழிபாட்டு முறைகளோடு கலந்தன. அவை தனி வடிவங்கள் பெற்றன. தமிழகத்தில் ஜைனம் பெரும் செல்வாக்குப் பெற்றது. கருநாடகத்தில் ஜைனம் பெரும் செல்வாக்கு பெற்றது. ஆந்திராவில் பௌத்தம் பெரும் செல்வாக்குப் பெற்றது. தென்னிந்தியாவில் பரவலாக ஆசீவகம் பலரால் பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால் ஆசீவகம் பௌத்த, சமணத்திடம் தாக்குப் பிடிக்காமல் மறைந்து போனது. அதன் பின்னர் பௌத்தமும் சமணத்திடம் தாக்குப் பிடிக்காமல் மறையத் தொடங்கியது. ஆனால் பௌத்தம் இலங்கை, தாய்லாந்து, சீனம் எனப் பரவி தனி இடத்தை அங்குப் பெற்றுக் கொண்டது.

      இந்நிலையில் சமணத்தை உடைத்து அதனை நிர்மூலம் செய்ய பார்ப்பன மதமானது பல சமண தத்துவங்களை தனக்குள் உள்வாங்கிக் கொண்டதோடு, சமணக் கடவுள்களையும், பிற திராவிடக் கடவுள்களையும் இழுத்துக் கொண்டது. ஆதி சங்கராச்சாரியர் போன்றோரது செல்வாக்கால் பார்ப்பன மதமானது சமணத்தை வீழ்த்தியது. சமணம் வீழ்ந்த பிறகு பார்ப்பன மதமானது சைவம், வைணவம் என பிரிந்தது. அது மட்டுமின்றி ஆசீவகம், பௌத்தம் போன்ற கொள்கைகளை இழுத்துக் கொண்டு மேலும் கணபாத்தியம், கௌமாரம், சௌரம், சாக்தம் என பல பிரிவிகள் தோன்றின.

      நீக்கு
    5. பெயரில்லா10 மே, 2015 அன்று AM 10:41

      ஆசீவகம் தமிழர் சமயம் இல்லை. ஆனால் தமிழர்கள் ஆதியில் ஏற்றுக் கொண்ட வட திராவிட சமயங்களில் ஒன்று. ஆனால் ஆசீவகத்தின் யானைமுகக் கடவுள் வழிபாடு தமிழகத்துக்கு மிகவும் காலந்தாழ்ந்தே வந்து சேர்ந்தது. குதிரைகளும் அவ்வாறே காலந்தாழ்ந்தே வந்தவைகள். யானைமுகக் கடவுளின் வருகை வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாதாபி என்ற இடத்தில் இருந்து பல்லவர்களால் இங்கு கொண்டு வரப்பட்டவை. குதிரைகள் போன்றவையும் நிலவுடைமைச் சமூக எழுச்சிக் கண்ட பின் வந்தவையே.

      ஆதி திராவிட மக்கள் இந்தியா முழுவதும் பாம்புகளை வழிபட்டுள்ளனர். அதனால் தான் சூத்திரர்கள் மத்தியில் உருவான பௌத்தம், சமணம் ஆகியவற்றை வட திராவிடர்கள் பின்பற்றத் தொடங்கும் போது அதில் நாக வழிபாடு இணைந்து கொண்டது. அதே போல மரங்கள், நீர்நிலைகள், மலைகள், காடுகள், குளங்கள், ஆறுகள் போன்றவைகளை தொல் திராவிட மக்கள் வழிபட்டுள்ளனர். இன்றளவும் மத்திய இந்தியாவில் வாழ்கின்ற திராவிட மக்களிடம் இவ் வழிபாட்டு முறைகள் உள்ளன. தென்னிந்திய திராவிடர்களிடம் ஆர்யத் தாக்கம் குறைந்திருந்ததால் இங்கும் இந்த வழிப்பாட்டு முறைகளின் எச்சங்கள் நிறைய உள்ளன.

      ஆனால் இன்று தமிழர்கள் தமது பண்டைய வழிப்பாட்டு முறைகளை விரைவாக இழந்து வருவதோடு பார்ப்பன மத வழிபாடுகளுக்கு மாறிவருவதை அண்மைய சமூக பழக்க வழக்கங்கள் தெளிவாக காட்டுகின்றன.

      நீக்கு
    6. பெயரில்லா10 மே, 2015 அன்று AM 10:49

      குல தெய்வ வழிபாடு என்பது தான் உண்மையில் தமிழர் சமயமே. அதில் கூட பல பார்ப்பனத் தாக்கம் உள்ளது என்றாலும் நாட்டார் வழிபாடு, குல தெய்வ வழிபாடு என்பவை பார்ப்பன மதமான இந்து மதத்தின் அங்கமாக கருதுவது முறையல்ல. சொல்லப் போனால் அவை தனியொரு மதமாக கருதப்படப் பட வேண்டியவை. அடிப்படை விசயங்களில் இருந்து எல்லாமே முற்றிலும் மாறுபட்டவை. அதே போல வட திராவிட மக்களிடம் தோன்றிய பௌத்த, சமண, ஆசீவக, உலகயாத மதங்களும் தனித் தனி மதங்களாகும். அதனால் தான் எந்தவொரு பார்ப்பனரும் புத்தருக்கும், மகாவீரருக்கும் பூசை செய்து அந்தக் கடவுள்களை இந்து மதத்தோடு இணைப்பதில்லை. அதிலும் பௌத்த சமயம் அழிக்கப்பட்ட போது புத்தரும் விஷ்ணுவின் அவதாரம் என இணைக்க முனைந்தனர். ஆனால் நற்பயனாக அப்போது பௌத்தமும் அதன் தத்துவங்களும் இந்தியாவுக்கு வெளியே பரவி அங்கு ஸ்தாபிக்கப்பட்டு விட்டது. ஆனால் தென்னாட்டின் திராவிட சமய நெறியானது ஏனோ மதங்களாக ஸ்தாபிக்கப்படாமல் போனதால் அவை அப்படியே பார்ப்பன மதத்தால் விழுங்கப்பட்டு விட்டது.

      இன்று தமிழகம் முழுவதும் காணப்படும் பல பெருங்கோவில்களின் ஆதிமூலம் குலதெய்வங்கள் எனப்படும் பண்டைய தமிழரது தெய்வங்களே. ஆனால் அதன் பெயர்கள், அடையாளங்கள் மாற்றப்பட்டு அவற்றோடு தலபுராணங்கள் சேர்க்கப்பட்டு பார்ப்பனர்களால் கைப்பற்றப்பட்டுவிட்டது. அது மட்டுமின்றி மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி போன்றவைகள் எல்லாம் ஒரு காலத்தில் பௌத்த, சமண தெய்வங்களின் ஆலயங்களாக இருந்தவை. கண்ணகி கோவில்கள் கேரளாவில் பகவதிகளாகவும் தமிழகத்தில் மாரியம்மன், திரௌபதி ஆலயங்களாகவும் மாறின. பண்டைய தமிழர்களது கொற்றவை துர்க்கையாகவும், முருகன் ஸ்கதனாகவும், சிவனாகவும், மாயவன் பெருமாளாகவும், குருவாயூரப்பனாகவும் மாற்றப்பட்டு விட்டன.

      நீக்கு
  15. அருமையான பதிவு . தமிழர் மண்டையிலே ஏறனுமே! அடிமையாக தான் இருப்பேன் என்று அடம்பிடிக்கும் தமிழனை என்னசெய்ய?

    M. செய்யது
    துபாய்

    Tha. ma +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சையத் சார்! உங்கள் உங்கள் முதல் வருகையும், கருத்தும் மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி சார்!

      நீக்கு
  16. கருவறைக்குள் எங்களைத் தவிர வேறு யாரும் நுழையக்கூடாது என்ற ரூல்ஸ்யை ,தங்களின் மன்மத லீலைகளுக்கு பயன்படுத்திக் கொண்ட காஞ்சிபுரம் தேவநாதன் போன்றவர்கள் வெளிச்சத்திற்கு வந்த பின்னும் ,மக்கள் திருந்திய பாடாய் தெரியவில்லை !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது தான் பாஸ் !! செம...... பதிவை நாளே வரியில் நச்சுன்னு சொல்லிடீங்களே :))) thanks பாஸ்:)))

      நீக்கு
    2. இது தான் பாஸ்! நாலே வரியில் பதிவின் மொத்த கருத்தையும் நச்ச்சுனு சொல்லிடீங்களே!!! சூப்பர் பாஸ்! thanks பாஸ்:)

      நீக்கு
  17. வாங்க அம்மு தங்கள் வரவு நல்வரவாகுக ! அம்மு என்ன சொல்ல. காப்பாற்று என்று நீரில் மூழ்கும் நிலை பிள்ளை யாருக்கே என்று நினைக்கும் போது நாம் எல்லாம் எம்மாத்திரம். இருந்தாலும் அந்தப் பிள்ளையாரை காப்பாற்றி அவருக்கே வாழ்வு கொடுத்துள்ளீர்களே மெய் சிலிர்க்கிறது. மேலும் அம்முவின் எழுத்தாற்றல் வியக்க வைக்கிறது.எவ்வளவு அழகாக எல்லாவற்றையும் தடுமாற்றமே இல்லாமல் முன் வைப்பது ரொம்பவே பிடித்திருகிறது.
    சாதி சாதி என்று நாம் எதையும் சாதிக்கவில்லை மாறாக சங்கடங்களும் சச்சரவுகளுமே அதிகமாகின்றன அமைதி குலைகிறது. என்று நினைக்க வேதனையாகவே உள்ளது. இதனால் ஆக்கங்களுக்கு செலவழிக்க வேண்டிய நேரத்தையும், பணத்தையும், மூளையையும் வீணாக்குகிறார்கள். பல ஆயிரக் கணக்கான உயிர்களையும் இழந்து அநியாயமாக அழிவுக்கு வழி வகுக்கிறார்களே.நாம் எல்லோரும் மனிதர்கள் ஏன்று எண்ணினால் மட்டுமே நாம் அமைதி காணமுடியும்.இன்னும் எழுதலாம். ஆனால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன் அம்மு ! மிக்க மகிழ்ச்சி மீண்டும் காண்பதில்! கலக்குங்கள் அம்மு வாழ்த்துக்கள் ,,,!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனியாச்செல்லம்!

      எப்டி இருக்கீங்க டா!
      **அந்தப் பிள்ளையாரை காப்பாற்றி அவருக்கே வாழ்வு கொடுத்துள்ளீர்களே மெய் சிலிர்க்கிறது.** இது wrong. :(((

      **சாதி சாதி என்று நாம் எதையும் சாதிக்கவில்லை மாறாக சங்கடங்களும் சச்சரவுகளுமே அதிகமாகின்றன அமைதி குலைகிறது.** இது right:))))

      மீண்டும்மீண்டும் சிந்திப்போம் டியர்:) மிக்க நன்றி!

      நீக்கு
  18. பாவம் பிள்ளையார் . பாலகுமார் புத்தகம் வாசிக்கவில்லை. பார்பன ஆதிக்கம் போல இலங்கையிலும் வேளாலர் ஆதிகம் பற்றி அறிய எஸ்.பொ வின் நூல்கள் வாசிக்க சகோதரி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக நேசன் சகோ:) இது போலும் பரிந்துரைகள் மிக பயனுள்ளதாக இருக்கிறது :) மிக்க நன்றி அண்ணா!

      நீக்கு
  19. கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்ட, அல்லது அனுமதி மறுக்கப்பட்ட, நெற்றி நிறய திருநீர் பூசும், கும்குமம் வைக்கும் அனைவரும் ஹிந்துக்கள்தானா ? அப்புறம் ஏன் மனு வேறுமாதிரி பேசுகிறார்? இங்கே ஹிந்து ஹிந்து என்று கூவும் பாதிபேருக்கு தங்களின் ஆதி அடையாளங்கள் தெரியாது,

    மனு எப்படி பிராமணீயத்தை வடித்து, ஹிந்துவெறி ஏற்றி நாட்டை முன்னேற்றப் பாதையில் இருந்து தடுத்துக் கொண்டிருகிறது என்பதற்கான ஒரு சிறிய உதாரணம் இந்தப் பதிவு...
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! அந்த ஹான்ஸ் பாக்கு விசயத்தை மறந்தே போனேனே:((( சீக்கிரம் புத்தகம் வெளியிடுங்க சகா! நம்ம மக்கள் அவசியம் தெரிஞ்சுக்கவேண்டிய விஷயம் அல்லவா அது:) மிக்க நன்றி சகா!

      நீக்கு
    2. அடடா... என்ன நடக்குது இங்க?
      ரெண்டு புத்தகங்கள் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.. வாழ்த்துகள் / கள்.

      நீக்கு
  20. கொஞ்சம் கோவமாத்தான் எழுதி இருக்கீங்க. ஆனாலும் எந்த இடத்திலும் அநாகரீக வார்த்தைகள் இல்லை.
    காலம் நிச்சயம் மாறும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ** ஆனாலும் எந்த இடத்திலும் அநாகரீக வார்த்தைகள் இல்லை.** அண்ணா! நம்ம கோவம் எல்லாம் அம்புட்டுதான் ண்ணா! விஜயகாந்த் ஸ்டைல நாக்க மடிச்சு, ராவடி பண்ணலாம் நம்மால ஆகாது:)))) மாறத்தான் வேண்டும் அண்ணா! மிக்க நன்றி!

      நீக்கு
  21. ஊருக்கு இனைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி 80 போல்தான் நம் வீரர்கள்.
    தமிழ் மணம் 18 ஆம் படி கருப்பர் துணை
    இனிய அன்னையர் தின வாழ்த்துகள் சகோ.

    பதிலளிநீக்கு
  22. அழகாக சொல்லி இருக்கிறீர்கள். பதிவில் தெரிவது ஆதங்கமா, கோபமா, ஏளனமா, வேதனையா என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஒரு வேளை எல்லாம் கலந்த கலவையோ?

    இனி பதிவின் கருத்து பற்றி. தவறு நம் மீது தான் என்றே நான் கருதுகிறேன். ஒருவர் என்னை ஒருமுறை ஏமாற்றினால் அவர் குற்றவாளி, அவரே என்னை தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக ஏமாற்றினால், நான் தானே குற்றவாளி. நாம் தான் விழித்துக் கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  23. எங்கள் கருத்து. சூப்பர் பதிவு! சகோதரி! இங்கு இருவரின் கருத்து என்றுதான் சொல்ல வேண்டி இருக்கின்றது. இருவரின் என்று போடாமல்தான் இதுவரை கருத்துத் தெரிவித்தோம். ஆனால் இதில் அப்படி இல்லை. ஏனென்றால் உங்களுக்கே காரணம் தெரியும். உங்களுக்கு நாங்கள் அனுப்பிய அந்தச் செய்திதான் இரு பதிவுகளுக்கும் பொருந்தும். மட்டுமல்ல நாங்கள் சொல்ல நினைத்ததை திரு அன்புடன் நீலந் அவர்கள் சொல்லிவிட்டார். கிட்டத்தட்ட அந்தக் கருத்தை எங்கள் குறும்படத்தில் சொல்லி உள்ளோம்.

    அதாவது எவரின் வருகையால் சாதி வந்தது என்பதைத்தான்....அது எப்படி விரவி இன்று புரையோடிக் கிடக்கின்றது....ஆனால் தமிழ்நாடு எவ்வளவோ பரவாயில்லை சொர்க்கம் எனலாம் மற்ற மானிலங்களைக் கம்பேர் செய்யும் போது...அது பாஸினால் தான்....

    அது சரி....உங்கள் பதிவின் இறுதியில் கீதாவின் மகன்....+ வருண் அவர்களுக்கு நீங்கள் சொல்லி இருக்கும் கீதா-கருத்துதான் கொஞ்சம் புரியவில்லை....

    பதிலளிநீக்கு