திங்கள், 1 ஜூன், 2015

புறம்போக்கு என்கிற பொதுவுடைமை






       
  இது விமர்சனம் இல்லை. இந்த  படம் குறித்த என் பார்வையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவே!


         இந்த  படம் பார்க்க  முக்கியமான காரணங்கள்
      
   ஜனநாதன் அவர்களது படம்.


   பல இந்தியர்களை போல எனக்கும் கம்யுனிஷம் பேசவும், கேட்கவும் பிடிக்கும்.(உண்மை கம்யூனிஸ்ட்டுகள் மன்னிக்க)


     கொடை விடுமுறையையும், மகி, நிறையோடு பார்க்க முடிந்த படம் என்பதையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்த விடுமுறையில் நான்  வெள்ளித்திரையில் பார்த்த ஒரே படம். திருமணம் ஆனபின் தோழிகளோடு பார்த்த முதல்படம். நிற்க, அதற்குத் தக ஜெயா அம்மாவும், தென்றல் கீதா அக்காவும், மகி, நிறை என ஒரு செட்டா  போய் பார்த்தோம்.
 
கதாப்பாத்திரங்களுக்கு வைத்திருக்கும் பெயர்களிலேயே எத்தனை குறியீடுகள்!!! இறுக்கமாக சட்டத்தையே கட்டிக்கொண்டு அழும் கதாப்பாத்திரத்துக்கு பெயர் மெக்காலே. hang man பெயர் எமலிங்கம். வெயிலை விரும்பும் குயிலின் பெயராய் பெண் போராளி குயிலி!!


வசனம், வசனம், வசனம். சும்மா சொல்லக்கூடாது. கருத்து என்பது  கத்தி மாதிரி இருக்கணும், காட்டுக்கத்தலா இருக்கக்கூடாது இல்லையா? அப்டி இருந்துச்சு வசனம்.

போராளிகளே மைனாரிட்டி தானே?

குடிக்கிற நாங்க தான் காந்தி, மகாவீரர் எல்லாத்தையும் ஞாபகம் வச்சுக்கிறோம்.

 ஜெயில்லஎன்னன்னு நினைச்சே, இது ஒரு அறிவியல் கலைக்கூடம் டா.

எனநறுக்குத் தெரித்தார் போல அட்டகாசமான வசனங்கள். அமைதிப்படை மணிவண்ணன் வசனங்கள் முன்பு ஆடியோ கேசட்டா கெடச்சது. கேட்டுக்கேட்டு இப்போகூட பல வசனங்கள் துல்லியமா நினைவிருக்கு. அது போல இந்த படத்தின் ஒலிநாடா கிடைத்தால் வாங்கி கேட்டுக்கிட்டே இருப்பேன்.

ஆரியாவிற்கு எப்போதாவது இப்படி நல்ல படங்கள் கிடைத்துவிடுகிறது. கிடைத்த வாய்ப்பை அருமையாய் பயன்படுத்தி இருக்கிறார். சாம் தான் பாவம். இத்தனை நல்ல நடிகரை தெரிந்துகொள்ள இத்தனை வருடம் நமக்கு தேவைப்பட்டிருக்கிறது. விஜய் சேதுபதியை பற்றி சொல்லவும் வேண்டுமா? அவர் ஸ்டைலில் சொல்வதென்றால் அசால்ட்டு தெய்வம் சார் நீங்க.

கார்த்திகா புல்லட் ஓட்டுகிறார். லுங்கி கட்டிக்கொண்டு தோழர்களோடு தேநீர் குடிக்கிறார். மனித வெடிகுண்டு பயிற்சியின் முடிவில் "என் கடைசி ஆசை என்னன்னு கேட்க மாட்டீங்களா ?" என கேட்டுவிட்டு அவர் நிறுத்துகிறபோது கஸ்தூரியோடு பார்த்த ஒன்றிரண்டு ஆங்கிலப்படங்கள் நினைவு வந்து மகி, நிறை பார்த்து நான் திருதிரு என விழிக்க, நல்ல வேளை ஜனநாதன் ஒரு பாடலோடு அவர் மேல் நாம் வைத்த நம்பிக்கையை  காப்பாற்றி விடுகிறார். ஆனா இத்தனை காத்திரமான பெண் போராளிக்கு இம்புட்டு make over ரும், காஸ்ட்லி காஸ்டியுமும் ஒட்டவே இல்லை ஜனா சார்.


கிளாமர் காம்ரேட்


அதென்ன முறைபெண்ணா வரும்காட்சியில் மட்டும் புடவையில் வருகிறார் கார்த்திகா ? மேத்தா பட்கர் நினைவிருக்கா ஜனா சார்.

தமிழுக்காக போராடினா கடைசில என்ன கதி னு ஒரு தமிழ் போராளியை வச்சுனு நெத்தில அடிச்ச மாதிரி காட்டிட்டார்.

இஸ்ரேல் ட்ரைனிங் முடிச்ச சாம் RQcode சட்டைய கண்டுபிடித்துவிடுவார்னே நம்பினேன். ஜனா இந்த முறை நம்பிகையை காப்பற்றவில்லை.

வெளிநாட்டு குப்பைகளை பற்றி படமோ என்கிற விதமாய் தொடங்கி தூக்குதண்டனையை தான் அதிகம் முன்னிருத்தியிருக்கிறார்கள்.

நமக்காக போராடுனா என்ன ஆகுமோ அது தோழர் பாலுக்கும் ஆகிறது. எப்படி சட்டத்திற்கும், நமக்காக போராடும் தலைவனுக்கும் இடையில் ஊசலாடி இப்போ நாம இருக்கிறோமோ அதுபோல கடைசியில் விஜய் சேதுபதி ஆகிறார். ஏதோ, இன்னும் நம்மள நம்பி இப்படி படம் எடுக்கும் திறமையாளர்களை அவமதிக்காமல் தியேட்டரில் போய் படம் பார்க்கணும் நட்புக்களே! நீங்களும் சொல்லுவீங்க "சல்யூட் காம்ரேட்"






   

26 கருத்துகள்:

  1. சரியான பார்வை மா...உங்களுடனும் ஜெயா கூடவும் பார்த்த இந்த படம் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாய்....அனைவரும் பார்க்க வேண்டிய படமாய்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் அக்கா, செம எக்ஸ்பீரியன்ஸ்:)) மிக்க நன்றி அக்கா:)

      நீக்கு
  2. ராயல் சல்யூட்,விமரசனமே படம் பார்க்கிற ஆவலைத்தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு
  3. ரைட்டு... பார்த்தாச்சி... பிடித்திருந்தது - உங்களின் விமர்சனமும்...

    பதிலளிநீக்கு
  4. நிச்சயம் பார்க்க வேண்டும் என்று மனதில் வைத்திருக்கும் படம். நன்றி.

    பதிலளிநீக்கு
  5. தங்களது விமர்சனம் படம் பார்க்க தூண்டுகிறது தோழி. விரைவில் பார்த்து விடலாம்.

    பதிலளிநீக்கு
  6. \\\ ஏதோ, இன்னும் நம்மள நம்பி இப்படி படம் எடுக்கும் திறமையாளர்களை அவமதிக்காமல் தியேட்டரில் போய் படம் பார்க்கணும் நட்புக்களே! நீங்களும் சொல்லுவீங்க "சல்யூட் காம்ரேட்"/// கரெக்ட் அம்மு நியாயம் தான். இங்க தான் நீங்க நிக்கிறீங்கடா சரி சொல்லிட்டீங்க இல்ல பார்திட்டாப் போச்சு. தலைப்பும் நல்லாத் தான் இருக்கு இல்ல ம்..ம்..ம் பார்க்கும் ஆவலை தூண்டும் வண்ணம் எழுதியுள்ளீர்கள். இங்கு தியட்டருக்கு வருமா தெரியலையே. எல்லாப் படங்களும் சரி பார்க்கலாம்.wow குரூப்பாக போனமையினால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் இல்லையா. ம்..ம்.ம் என்னை இப்படி பொறாமைப் பட வைத்து விட்டீர்களே அம்முக் குட்டி. ....just kidding.ம்மா

    பதிலளிநீக்கு
  7. நானும் இந்த விடுமுறையில் திரையரங்கில் மனைவியுடன் போய்ப் பார்த்த ஒரே படம் இதுதான். ஜனாவின் வசனங்களை ரசித்த அளவிற்கு காட்சி அமைப்புகள் கதைப் போக்குகளை ரசிக்க முடியல.. ஏதோ துப்பறியும் படம்போல உணரவைத்துவிட்டார். கம்யூனிசம் என்பது காட்டுக்குள் கைலிகட்டிக்கொண்டிருக்கும் க்ளாமர் கேர்ள் போல கவர்ச்சியானதல்ல... மக்களின் உணர்வுகளைப் புரிந்து அவர்களிடம் கற்று அவர்களுக்கான பணியை உணரவைப்பது. இது ஏதோ கற்பனைப் பாத்திரங்களைப்போலத்தான் இருக்கிறது. பலமொழி தெரிந்தும் மௌன மொழியிலேயே பேசிய நரசிம்மராவ் போல தப்பிக்க எந்த முயற்சியும் தானாகச் செய்யாத பாலுவும் “தப்பிச்சிடுவேன்“ என்று அடிக்கடி சொல்வது நல்ல காமெடி! ஜனாவின் முயற்சிக்கு மட்டுமே லால்சலாம். படம் முழுமையல்ல! நான் கடவுள் ஆர்யாவும் பொறம்போக்கு(?) ஆர்யாவும் ஒன்றுதான் நடிப்பில் எனில் அவருக்கென்று என்ன பாணி ? தெரியலயே? பற்பல கேள்விகள் இருந்தாலும் ஜனாவின் அடுத்த முயற்சியாவது முழுமை பெற இந்தப்படத்தைப் பார்த்து அவருக்கு நம்பிக்கை ஊட்டவேண்டும்தான். பேராண்மையில் “கிராமத்துப் பொண்ணுங்க மாராப்பை இழுத்துவிட்டுக்கறதும், நகரத்துப் பொண்ணுங்க முன்தலையில் விழும் முடியை இழுத்துவிட்டுக்குறதும்“ எனும் வசனம் போல சில வசனம் இதிலும் உண்டு...ஆனாலும்.. கம்யூனிசம் பற்றிய படமா? தூ.தண்டனைக்கு எதிரான கதையா? குழப்பம்தான். ஏதாவது ஒன்றைத்தானே மையமாக வைக்க முடியும்? நன்றிம்மா

    பதிலளிநீக்கு
  8. படம் பார்க்கும் ஆவலை இவ்விமர்சனம் தூண்டிவிட்டது. தியேட்டரிலே போய் படம் பார்ப்போம். நன்றி.

    இந்தியன் எக்ஸ்பிரசில் வந்த எனது நேர்காணலை வாசிக்க வருக.
    http://www.ponnibuddha.blogspot.com/2015/06/tracing-footprints-of-buddhism-in-chola.html

    பதிலளிநீக்கு
  9. தங்கள் கைவண்ணம் அழகு!..
    ஆனாலும் விமரிசனம் இல்லை என்று சொல்லிவிட்டீர்கள்!..

    வாய்ப்பு கிடைக்கும் போது - நிச்சயம் பார்க்கின்றேன்..

    பதிலளிநீக்கு
  10. நச்சுன்னு விமர்சனம். பார்க்க ஆவலாய் இருக்கிறது...கையைக் கொடுங்கள் குலுக்க.....
    தம +1

    பதிலளிநீக்கு
  11. பார்த்தார்கள் நல்லா இருந்தது என்று சொன்னார்கள், தங்கள் பகிர்தலும் அருமைம்மா, நன்றி.

    பதிலளிநீக்கு
  12. யதார்த்தமான விமர்சனம் அருமை
    தமிழ் மணத்தில் நுழைக்க 7
    கவிதை மா3 எழுதினேன் 1 வருக...எனது தளம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ எனது கவிதை இணைப்பு

      http://killergee.blogspot.com/2015/05/blog-post.html

      நீக்கு
  13. //இன்னும் நம்மள நம்பி இப்படி படம் எடுக்கும் திறமையாளர்களை அவமதிக்காமல் தியேட்டரில் போய் படம் பார்க்கணும் நட்புக்களே// - இதையே நானும் வழிமொழிகிறேன்!

    வழக்கம் போலச் சுவையாகத்தான் எழுதியிருக்கிறீர்கள் என்றாலும், இப்படி ஒரு படத்துக்கு 'உங்களிடமிருந்து' நான் இன்னும் நிறைய எதிர்பார்த்தேன். எப்படியோ இதைப் படித்த பிறகு இன்னும் சிலராவது படத்தைப் போய்ப் பார்த்தால் அது இந்தப் பதிவுக்கு வெற்றியே! நன்றி!

    பதிலளிநீக்கு
  14. ***வெளிநாட்டு குப்பைகளை பற்றி படமோ என்கிற விதமாய் தொடங்கி தூக்குதண்டனையை தான் அதிகம் முன்னிருத்தியிருக்கிறார்கள்.***

    பல நாடுகளில் பெரிய கொலைக் குற்றங்களுக்கு காப்பிட்டல் பனிஷ்மெண்ட் வழங்குகிறார்கள். அது தவறானதுனு பலர் வாதிடுறாங்க. எனக்கு இதில் ஒரு தெளிவான ஒப்பீனியன் இல்லைனுதான் சொல்லணும். ஒரு சிலர் யு எஸ்ல எல்லாப் படத்தையும் தியேட்டர்ல பார்த்து விடுறாங்க. அவர்களுக்கு சினிமா முக்கியப் பொழுதுபோக்கு. சினிமா பார்க்காமலே பொழுது ஓடிருது எனக்கு! :)))

    பதிலளிநீக்கு
  15. படம் பார்க்கல இன்னும்.....ஆனா நிச்சயமா பார்க்கணும்....இருவரும் கொஞ்சம் பிச்ச்ச்ச்சி....இன்னும் கொஞ்சம் கூட நீங்க பேசியிருக்கலாமோ படத்தப் பத்தி.....ம்ம் ஆனா இதுவே போதும்...பார்த்தாதான் நம்ம வியூ கிடைக்கும்....

    பதிலளிநீக்கு
  16. மிக ரசணையான விமர்சனம்... நான் படத்தை பார்க்கவில்லை ! ஜனநாதனின் படங்கள் சராசரி போலிருக்காது என்ற எனது நம்பிக்கையை உங்கள் விமர்சனம் உறுதி செய்கிறது.

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    எனது புதிய பதிவு : " பொறுமை என்னும் புதையல் ! "
    http://saamaaniyan.blogspot.fr/2015/06/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  17. அன்பு வலைப்பூ நண்பரே!
    நல்வணக்கம்!
    இன்று 08/06/2015 அன்று முதலாம் ஆண்டினை நிறைவுசெய்யும் "குழலின்னிசை"க்கு
    தங்களது அன்பான ஆதரவும், கருத்தும், அளித்து அகம் மகிழ்வுற செய்ய வேண்டுகிறேன்.

    முதலாம் ஆண்டு பிறந்த நாள் அழைப்பிதழ்
    அன்பின் இனிய வலைப் பூ உறவுகளே!
    "குழலின்னிசை" என்னும் இந்த வலைப் பூ!
    உங்களது மனம் என்னும் தோட்டத்தில் மலர்ந்த மகிழ்ச்சிகரமான நாள் இன்று.
    ஆம்!
    கடந்த ஆண்டு இதே தினத்தன்றுதான் 08/06/2014, "குழலின்னிசை" வலைப்பூ மலர்ந்தது.
    http://kuzhalinnisai.blogspot.com/2015/06/blog-post_7.html#comment-form
    சரியாக ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வலைப்பூவானது, நல் இசையை நாள்தோறும் இசைத்து, அனைவருக்கும் நலம் பயக்குவதற்கு, உள்ளன்போடு உங்களது நல்லாசியைத்தாருங்கள்.
    தங்களது வருகையை எதிர் நோக்கும் வலைப்பூ நண்பர்கள்.
    மற்றும்!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    TM 10

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் சகோ.

    பொதுவாகத் திரைப்பட விமர்சனங்களைப் பார்ப்பதில்லை.
    அதற்கு இரண்டு காரணங்கள்.
    ஒன்று, படம் பார்க்கும்முன் விமர்சனங்களைப் படிப்பது படம்பார்க்கும் போது கதை தெரிந்து போய் சுவையாய் இருக்காது என்பதால்.

    இரண்டு, பொதுவாகப் படம்பார்க்கும் ஆர்வம் குறைவு என்பதால் படத்தைப் பார்க்க முடியாமலே போய் விமர்சனத்தைக் கடைசிவரை படிக்க முடியாமல் போய்விடும்.

    புறம்போக்கு பார்த்தேன்.

    உங்கள் பார்வையையும் அதன் பின்னால்..!

    இரண்டும் பிடித்திருக்கிறது.

    பெயரின் ஒப்பீட்டளவில், ஒருவிடுபடல்,

    பாலு என்பதும் தூக்குமேடை ஏறிய கம்யூனிச வாதியின் பெயரென்பது.

    பல இடங்களில் நீங்கள் சொல்வது போல வசனங்களின் கூர்மை, நெஞ்சிறங்கிற்று.

    இனி உங்கள் விமர்சனத்தைப் படிப்பதற்காகவேனும் திரைப்படம் பார்க்கலாம் என்று தோன்றுகிறது.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  19. பார்க்க வேண்டும் என்ற உணர்வைத் தருகின்றது
    உங்கள் பார்வை

    பதிலளிநீக்கு
  20. அன்புள்ள சகோதரி மைதிலி கஸ்தூரி ரெங்கன் அவர்களுக்கு வணக்கம்! உங்கள் வலைத்தள (தமிழ்மணம்) வாசகர்களில் நானும் ஒருவன்.

    நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

    தங்களின் வலைத்தளத்தினை இன்று (20.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

    அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:

    நினைவில் நிற்போர் - 20ம் திருநாள்
    http://gopu1949.blogspot.in/2015/06/20.html

    பதிலளிநீக்கு
  21. படம் பார்க்கவில்லை;ஆனால் பார்க்கத்தூண்டுகிறிர்கள்

    பதிலளிநீக்கு