சனி, 11 ஜூலை, 2015

இந்த முறை நான் விட்டுக்கொடுப்பதாக இல்லை.

                                 மரம் சும்மா இருந்தாலும் காற்று அதை சும்மா இருக்க விடுவதில்லை. நான் அரசியல் எழுதாமல் சும்மா இருந்தாலும்  மோடிவிடுவதில்லை. மறுபடியும் மொதல்ல இருந்தே எழுதவைக்கிறாரே மோடி:(



                  நாடே மாற்றம் வேண்டும் என மோடியை பிரதமராக்கினாலும், தமிழர்கள் அவரை அப்பவும் நம்பலை, இப்பவும் நம்பலை. பதவியேற்றவுடன் "அய்யா ! ஏதோ மாற்றம் கொண்டுவரேன்னு சொன்னீங்களே? என்ன பண்ணபோறீங்க?" என சுதாரிக்கும் முன் எல்லார் கையிலும் துடைப்பத்தை கொடுத்து "போய் நாட்டையும், வீட்டையும் சுத்தப்படுத்துங்கனு சொன்னார். ரைட்டுன்னு நம்ம சமந்தா முதல் சச்சின் வரை ஆளாளுக்கு துடைப்பம் தூக்கித் திரிய, நானும் எங்க பள்ளிகூடத்தை மேலும் சுத்தம் செய்துவிட்டு நிமிர்ந்து பார்த்தால், நம்ம பிரதமரை காணோம்!!!! ஒருவழியா ஊரெல்லாம் சுத்திட்டு டெல்லி ஏர்போர்ட்ல ரெண்டு நிமிச கேப்ல சிக்குன பிரதமர்கிட்ட "என்ன சார் பிரதமர் இப்படி நாடோடிப் பிழைப்பு பிழைத்தால் நாடு எப்படி வளர்ச்சியடையும்?' என நம்ம வெகுஜனம் டென்ஷன் ஆக, "கோபப்பட்டா உடல், மன நலம் கெட்டுபோகும். எல்லாம் போய் யோகா பண்ணுங்க" அப்டின்னு வெரட்டிட்டார். யோகா பண்ணி ரிலாக்ஸ் ஆனோமோ இல்லையோ, அய்யா விஜயகாந்த் யோகா பண்ணினத பார்த்து வெகுஜனம் ரிலாக்ஸ் ஆக, "அப்புறம் மோடி சார், இந்த மாற்றம் அப்டின்னு" என கேட்டு முடிக்கும்முன் " எல்லாம் போய் குடும்பம், குடும்பமா செல்பி எடுங்க. அப்போதான் வீட்டுல ஒற்றுமை வளரும்" அப்டின்னு சொல்லி எஸ்கேப் ஆகிட்டார். நாங்கெல்லாம் 'நீங்க முதலில் இதை செய்வீங்களா? " என கேட்கும் ரகம் இல்லை. பிரதமரே சொல்லிட்டாரேனு விதவிதமா செல்பி எடுத்துக்கிட்டோம். அப்டி நேத்து டி.வீ முன்னாடி குடும்பத்தோட சேர்ந்து செல்பி எடுக்கும்வேளையில்,  திரைல நம்ம மோடி வந்தாரு. அப்படா! இனி ஒருவாரத்துக்கும் நாம பிஸியா இருக்குற மாதிரி பிரதமர் ஏதோ சொல்லப்போறார் என ஆர்வமாய் கவனித்தால், " உங்க எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுங்க, கிராமப் பெண்கள் சமைக்க உதவும் வகையில் உங்க மானியப் பணத்தில் அவுங்களுக்கு இலவச சிலிண்டர் வழங்குறோம்" அப்டின்னு சொல்லுறாரு!!! 

                  அட! தெரியாம தான் கேட்கிறேன். இப்படி ஒவ்வொரு குடிமக்கள் கிட்டையும் கெஞ்சுவதற்கு பதில்,  இந்த எரிவாயு தயாரிக்கும் பெரிய தனியார் நிறுவங்களிடம் வரிச்சலுகை தருவதாக பேசலாமே? 

                         நாங்களாவது மானியவிலையில் எரிவாயு வாங்குறோம். ஆனால்  மத்திய அமைச்சர்கள் எரிவாயுவை இலவசமா தானே பெறுகிறார்கள். அவங்க விலைகொடுத்து வாங்கினால் கூட போதுமே! 

                 கோடிக்கணக்கில் ஊழல்கள் தினம்தினம் செய்தித்தாள்களில் நிறைந்து வழிகின்றன. நான் விட்டுகொடுக்கும் மானியமும் அப்படி சுருட்டப்பட்டுவிடாது, கிராமப்பெண்களுக்குத்தான் போய் சேரும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? மாதம் ஐந்நூறு ரூபாயை கண்ணில்ப்படும் ஏழைக்கும், எளியவர்க்கு தானமாகத் தந்துவிட நான் தயார். ஆனால் மோடிக்கு இந்த முறை நான் விட்டுக்கொடுப்பதாக இல்லை.

60 கருத்துகள்:

  1. நீங்க விட்டு தரவே வேண்டாம் ,உங்க வருமானத்தைப் பார்த்து அவர்களே மானியத்தை வெட்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை .அதுக்குதானே ஆதாரை வங்கிக் கணக்கில் இணைக்க சொல்லி இருக்கிறார்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆதார் எண் வாங்குவது அவரவர் உரிமை. அது யாரும் அதைகேட்டு கட்டாயப்படுத்த முடியாதுங்குது சட்டம். so, நான் இன்னும் ஆதார் எண் வாங்கவே இல்லையே:) முடியும் வரை போராடுவோம் பாஸ்:) முதல் கமென்ட்!!! நன்றி பாஸ்:)

      நீக்கு
  2. ஆமாம் நானும் விட்டுக்கொடுப்பதாய் இல்லை.
    கடைத்தேங்காய்யை வழிப்பிள்ளையாருக்கு உடைப்பானேன்? நம்ம கட்டுற வரிப்பணத்துல என்னதான் செய்வாங்களாம்?
    த.ம.3 டியர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மாதிரி கேள்வியெல்லாம் இந்தியாவில் இருந்துக்கிட்டு கேள்வி கேட்டால், ஒன்று தீவிரவாதி என்பார்கள் இல்லாவிட்டால், மூளை கோளாறு என்பார்கள் டியர் ;)

      நீக்கு
    2. சரிதான், போராடனும்னு தோணுது, எப்டினுதான் தெரிலை டியர்

      நீக்கு
  3. .......!?

    இப்படி விட்டுக் கொடுத்து - விட்டுக் கொடுத்து -
    நான் எங்கே இருக்கேன்..ன்னு தெரியலை!..

    வேலையை பார்க்க விடுங்கையா!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சோக்கா சொன்னீங்க சார்!!! ஆமா நாம இப்போ எங்கே இருக்கோம்!!??

      நீக்கு
  4. சிங்கம் ஒன்று புறப்பட்டதே எங்க மைதிலி சிங்கம் ஒன்று புறப்பட்டதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா:)))) ரொம்பநாள் ஆச்சு சகா உங்களைப்பார்த்து. நலம் தானே!

      நீக்கு
  5. படிக்க ஆரம்பிக்கும் போது நகைச்சுவையாக சொல்லி முடிவில் சீரியஸாக முடித்தது அருமை. பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  6. மோடி அங்க கைவைச்சு இங்க கைவைச்சு கடைசியில கிச்சனில் கைவைச்சா பெண்கள் சும்மா இருந்துவிடுவார்களா என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அல்ரெடி நாலு லட்சம் பேர் விட்டுக்கொடுத்துவிட்டதாக தகவல் :(

      நீக்கு
  7. சூப்பர் பதிவு .

    த.ம + 1

    M. செய்யது
    துபாய்

    பதிலளிநீக்கு
  8. அரசு ஊழியர்களுக்கு மானியம் கட் செய்யப்ப போவதாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அமைச்சர்கள் எம்.எல்.ஏ , எம்.பி.க்களுக்கு கட்டாயம் மானியம் வழங்குவது தவிர்க்கப் படவேண்டும்.
    கோவம் கொஞ்சம் ஜாஸ்தியாத்தான் இருக்கு . இருக்கட்டும் இருக்கட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. *அரசு ஊழியர்களுக்கு மானியம் கட் செய்யப்ப போவதாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்*
      நாம்தானே ஊருக்கு இளைத்தவர்கள்:))
      **கோவம் கொஞ்சம் ஜாஸ்தியாத்தான் இருக்கு . இருக்கட்டும் இருக்கட்டும் ** அப்படியா அண்ணா!!!

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி !

      நீக்கு
  9. வர வரவ துக்ளக் ஆகிக் கொண்டு வருகிறாரோ...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரு எப்பவுமே அப்படிதான்:) நன்றி அய்யா!

      நீக்கு
    2. ஹலோ யாரும்மா அது தனபாலன் சாரை அய்யா என்று அழைப்பது.....அவர் என்றும் பதினாரு வயது கொண்ட மார்கண்டேயன் மாதிரி இருக்காரு...அவரை பார்த்து அய்யா என்று அழைப்பதா?

      நீக்கு
    3. அய்யயோ! வாய்தவறி சொல்லிட்டேன்:)) நன்றி அண்ணா!

      நீக்கு
    4. என்ன நான் அண்ணணா நான் இன்னும் பத்தாம் வகுப்பு தாண்டல

      நீக்கு
    5. நீங்க இன்னும் பால்வாடின்னு தெரியும் தமிழன் சகா, நான் சொன்னது டி.டி அண்ணாவை:)))

      நீக்கு
  10. தங்கள் கோபம் நியாயமானதுதான் சகோதரியாரே
    தம +1

    பதிலளிநீக்கு
  11. நீங்கள் உங்கள் வழியில் போங்கள். அவர்கள் அவர்களது வழியில் போவார்கள். மாறுவது சிரமமே.

    பதிலளிநீக்கு
  12. நையாண்டியாக எழுதி ரசிக்க யோசிக்க வைப்பது கடினம். உங்களுக்கு அது இயல்பாக வந்துள்ளது.

    பதிலளிநீக்கு
  13. //இந்த முறை நான் விட்டுக்கொடுப்பதாக இல்லை..// இந்த தலைப்பை பார்த்து கமெண்ட் போட நினைத்து கடைசியில் பதிவை படித்து அதற்கு கமெண்ட் போட்டு இதற்கு போட மறந்துட்டேன் சரி இப்ப போட்டுடுறேன்.

    ..//இந்த முறை நான் விட்டுக்கொடுப்பதாக இல்லை../// ஆமாம் உங்க கிச்சனில் உங்க வீட்டுகாரர் எவ்வளவு நாள்தான் சமைச்சு போடுவதாம் என்று நினைத்து நீங்கள் இந்த முறை நான் விட்டுக்கொடுப்பதாக இல்லை என்று சொல்லி சென்றது மாதிரி அல்லவா இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே பார்த்தேன், தமிழன் சகா இப்படி கலாய்க்காம, ரொம்ப சீரியஸா கருத்துச்சொல்லி இருக்காரே! ஒரு வேளை fake ஐ.டி யோனு எனக்கே சந்தேகம் தான். இப்படி பேசுனாதானே நம்பமுடியுது:))))

      நீக்கு
  14. இந்த முறை
    நான் விட்டுக்கொடுப்பதாக இல்லை.
    நன்று
    நன்று
    நன்று

    பதிலளிநீக்கு
  15. செம பதிவு....தலைப்பும் அப்படியே.....சகோதரி! எங்களைக் கேட்டால் நாம் மக்கள்தான் பல விஷயங்களில் அரசுக்கு வளைந்து கொடுக்கின்றோம். அவர்களும் நம்மை நன்றாக ஆட்டுவிக்கிறார்கள். இதுங்க என்னத்த செஞ்சுடும் அப்படினு....ஆனா அவங்க ஏதாவது விட்டுக் கொடுக்கறாங்களா? ஏதாவது ஒண்ணு? ...இதே பிரதமர்?? சொல்லட்டும் பார்க்கலாம்...முடியாது அவங்களால...என்னத்த விட்டுக் கொடுத்தார்? நாட்டைத்தான் விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்....என்னமாற்றம் நடந்தது இதுவரை...கீழேதான் போய்க் கொண்டிருக்கின்றோம்..இதற்கு நிறைய சாமிங்க வேற தாடிய வெச்சுக்கிட்டு பின்னாடி இருந்து நல்லா தூபம் போட்டுக்கிட்டு இருக்காங்க...எல்லாம் சுயநலம்....ஏம்பா இவரு சொல்லித்தான் யோகா, செல்ஃபி எல்லாம் இங்க நடக்குதோ....எல்லாம் முன்னாடியே மக்கள் செஞ்சுக்கிட்டுத்தானே இருக்காங்க....அட போங்கப்பா...நல்ல தலைவரு...

    மானியத்தை விட்டுக் கொடுப்பதாக இல்லை......னாங்களும் முன்னாடியே அவருக்கும், இந்த மாநில அரசுக்கும் நு ஒரு கடிதம் எழுதி பாதிலேயே நிக்குது....ஏன்னா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காமெடி பண்ணி நம்ம வயித்தெரிச்சலைக் கொட்டிக்கறாங்களே...அதான்...

    மோடினு சொன்னாலே...வேண்டாம் அந்த வார்த்தை...கோபம் கொப்பளிக்கின்றது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. *
      மோடினு சொன்னாலே...வேண்டாம் அந்த வார்த்தை...கோபம் கொப்பளிக்கின்றது** நானும் அதே மன நிலையில் தான் இருக்கேன் சகாஸ்

      இவர் அடிக்கிற கூத்தில் நம்மையும் சேர்த்து கோமாளி ஆக்குறார்:((

      நீக்கு
  16. அவர் சொல்படி கேட்க வேண்டும் . அவரே முன்னுதாரணம் அல்லவா. “நான் சொல்வதைச் செய். செய்வதைச் செய்யாதே.?மோடி இப்போதெல்லாம் அதிகம் பேசுகிறார். ஹிட்லர் ஆகும் அறிகுறிகள் தெரிகின்றன. .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது கணிப்புமும் இதுதான் மோடியின் ஆட்சி இறுதிகாலத்தில் பாருங்கள் இந்தியா சீரியா போல அழியத் தொடங்கும்... இதை இன்று இரண்டாவது இடத்தில் சொல்லிஸ் செல்லுகிறேன்.. கண்டிப்பாக நோட் பண்ணி வைத்து கொள்ளுங்கள் பின் சரி பாருங்கள் நான் சொல்வது எவ்வளவு சரியாக இருக்கிறது என்று

      நீக்கு
    2. @G.M.B சார்
      அவர் ஹிட்லர் ஆகலாம், ஆனால் இந்தியர்கள் ஜெர்மானியர்கள் அல்ல என்பது என் தாழ்மையான கருத்து. நன்றி அய்யா!

      @தமிழன்
      அழிவதை கண்கூட பார்த்துக்கொண்டிருப்பது மிக கடினமாக இருக்கிறது:(

      நீக்கு
  17. அடடா இங்கு ஒரே மழைப்பா ஏன் பெய்யுதுன்னு இப்பதானே புரிஞ்சுது. அம்முக் குட்டி இங்கு கலக்கிறத இப்பதான் வந்து பார்த்தேன். ம்..ம் மோடி உங்களுக்கு நிறைய ஹோம்வொர்க் தந்து ரொம்ப busy யாவே வச்சிருக்கப் பார்க்கிறார் போல அப்பதானே நீங்க கேள்வி எல்லாம் கேட்க மாட்டீங்க. இதற்குள் யோகா எல்லாம் செய்யச் சொல்கிறார் என்றால், அப்போ உங்கள் உடல் நலனில் தான் எவ்வளவு அக்கறை அவருக்கு. ம்..ம் ஓநாய் நனையுதென்று வேங்கைப் புலி விழுந்து விழுந் தழுகிறதா? என்னமோ அட்டகாசமா வந்திருக்கிறீர்கள் அம்மு கலக்குங்கள். தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள் ...! பதிவுக்கு நன்றி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! இனியாச்செல்லம்!!! வாங்கோ, வாங்கோ:)

      எங்க ஊரில் ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுததாம் ன்னு சொல்லுவாங்க, நீங்க என்னை ஓநாய் நனையுது, வேங்கபுலி அழுகுதுன்னு மோடியை ஒசத்தீடீன்களே!!! என்னம்மா இப்படி பண்ணீட்டீங்களே மா:(((

      நீக்கு
    2. ஓஹோ அப்படி ஒண்ணு இருக்கோ அட அம்முக்குட்டி சொல்லத் தான் புரிகிறது. நான் இப்படிதான் கேள்விப் பட்டு இருக்கிறேன். ஆனால் இதற்கு ஓநாய் தான் பொருத்தமாக இருக்கும் இல்லம்மா. ok மாத்திட்டா போச்சு அம்மு! மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடுகிறது செல்லம்.\\\\என்னம்மா இப்படி பண்ணீட்டீங்களே மா:(((//// ...என்னமோ போலிசை கூப்பிடா விட்டால் சரி தான் ஹா ஹா ....

      நீக்கு
  18. கொடு என்று கேட்டால் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை....

    தரவில்லையெனில் பிடுங்கிக் கொள்வேன் என்று சொல்லும் நாள் வராத வரை நிம்மதி.....

    இதுவரை விட்டுக்கொடுத்தவர்களில் வெகு சிலரே பிரபலங்களும் அரசியல்வாதிகளும்... மற்றவர்கள் சாதாரண மக்கள் தாம்.

    எங்களுக்கு PNG என்பதால் ஏற்கனவே Subsidy இல்லை! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடியும் வரை போராடுவோம் அண்ணா:) உங்களுக்கு ஏற்கனவே இல்லையா! அப்போ சரி:) நன்றி அண்ணா!

      நீக்கு
  19. விழுதுகள் பலமாய் இருக்கிறது
    பெரும்பான்மை கொடுத்த வேர்கள்
    நான்கு ஆண்டுகள்
    தாக்குபிடிக்குமா?
    இதற்கிடையில் மதவெறி பரப்புரையும் நன்றாக
    செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  20. எனக்கும் அந்த மெசேஜ் வந்தது! உங்களுடன் நானும் விட்டுக்கொடுப்பதாய் இல்லை போராட்டத்தில் குதிக்கின்றேன்!

    பதிலளிநீக்கு
  21. ஆதார் எண் வாங்குவது அவரவர் உரிமை. அது யாரும் அதைகேட்டு கட்டாயப்படுத்த முடியாதுங்குது சட்டம். so, நான் இன்னும் ஆதார் எண் வாங்கவே இல்லையே:) முடியும் வரை போராடுவோம். intha vishayaththil naanum unga katchithaan.

    பதிலளிநீக்கு
  22. கேஸ் மானியம் நானும் விட்டுக் கொடுப்பதாயில்லைதான். ஆனால் மானியம் என் கணக்குக்கு வரவேயில்லையே....

    ஆதார் கார்ட் கேட்பது தப்பு என்றார்கள். இன்று அரசு ஊழியர் சம்பளம் வாங்க வேண்டுமென்றால் ஆதார் வேண்டும் என்கிறார்கள்.

    கேஸ் மானியத்தை விட்டுக்கொடுக்க சொல்லும் இந்த அரசியல்வாதிகளின் பார்லிமென்ட் ஹோட்டலின் சாப்பாட்டு விலையைக் கேள்விப்பட்டால் எந்த சாமானியனும் நொந்து போவான்.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம்
    தங்களின் ஆதங்கம் புரிகிறது.. மனதின் வெளிப்பாட்டை அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  24. அப்படி சொல்லுங்க அக்கா. இந்த விசயத்தில் நான் என்ன நினைத்தேனோ அதையே நீங்கள் பதிவாக தந்து விட்டீர்கள். தொடர்ந்து போராடுவோம்..

    பதிலளிநீக்கு
  25. நாம் விட்டுக்கொடுப்பதும் கொடுக்காததும் அவர் கையில், அதாவது அரசு கையில் என்கிற போது.
    என்ன முடியும்.

    பதிலளிநீக்கு
  26. aam, makkal namthan epothum vittu kodukanum, ivargal nammai eamatra vasathiyai, unmayil, pengalin kobam, modiku sabam.

    பதிலளிநீக்கு
  27. வணக்கம்
    இவர்கள் முதலில் தன் சுகங்களை விடட்டும்,
    வான் பயணத்தை விடட்டும்,
    வாங்கும் இலஞ்சத்தை விடட்டும்,
    சொகுசு கார் பயணத்திற்கு முன்னும் பின்னும் வரும் ,,,,,,, விடட்டும்,
    ஒரு வாய் தின்று தூக்கி போடும்,,,,,,,,,,,, விடட்டும்,
    இன்னும் நிறைய விடட்டும்,
    நாம் விட ஏதூம் இல்லை சகோ,
    நிறைய விட்டாச்சு ,,,,,,,,
    இவர்கள் இப்படி கேட்பது இன்னும் என்ன சுகம் அனுபவிக்க என்று தெரியல,
    நல்ல பதிவு சகோ,
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  28. “பேயர சாளும் நாட்டில் பிணந் தின்னும் சாத்திரங்கள்“

    மக்களின் நலனைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாத அரசுகள் எல்லாம் பேயரசுகள் தான்.

    பின்னூட்டத்தில் சொல்லப்பட்டதுபோல வருவாய் எல்லையைக் கொண்டு மானியங்கள் வெட்டப்படும் நாள் விரைவில் வரும்.

    நான் கொடுத்துவிட்டேன்.

    உங்களின் கேள்விகள் நியாயமே!

    நன்றி.

    பதிலளிநீக்கு
  29. நியாயமான கேள்விகள்...
    பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
  30. மோடியின் வாக்குறுதி பற்றி நாம் கேள்வியெழுப்ப நினைக்கும்பொழுதெல்லாம் அவர் அதற்கான வேலையைச் செய்யாமல் மக்களாகிய நம் தலையிலேயே ஏதாவது ஒரு வேலையைக் கட்டி விடுகிறார் எனத் தாங்கள் அடுக்கடுக்காக எழுதியிருந்த விதம் அங்கதம்! சென்னைத் தமிழில் சொல்வதென்றால் செம கிழி!

    பதிலளிநீக்கு