புதன், 12 ஆகஸ்ட், 2015

வண்ணத்துப்பூச்சிகள் மதிப்பெண்ணுக்காக அல்ல

                            "கையை நீட்டுங்க மிஸ்" என்றான் ஹரி. நீட்டினேன். "ரெண்டு கையும்" என்றவனின் கைகள் முதுகுக்குப் பின் இருந்தன. நான் கைல வெச்சதும் உங்க கையை மூடிக்கனும். சரியா? என்றான். வைத்தான். மூடினேன். மூடிய  கைகளுக்குள் ஒரு குறுகுறுப்பு.

 
                            ஆர்வம் தாங்காமல் கையை விரித்தேன். உள்ளங்கையில் கொஞ்சம் விந்திவிந்தி நடந்தது ஒரு மஞ்சள் நிறப்பட்டாம்ப்பூச்சி. "அச்சச்சோ! பெரும்பாலான இந்த சிறிய வடிவ வண்ணத்துப்பூச்சிகள் றெக்கை முளைத்த பின் ஒரு வாரம் தான் வாழும். அதையும் இப்படி நொண்ட விட்டுட்டியே ஹரி? பாரு இதோட றெக்கையில் இருந்த நிறம் உன் விரலில் ஒட்டிருக்கு. இப்போ அதன் றெக்கையின் பலமும் குறைந்திருக்கும். பாவமில்ல" நான் சொல்லிமுடித்தபோது பக்கத்தில் நின்றுகொண்டிருந்த நாகராஜ் விளையாட்டுத்திடலை நோக்கி ஓடினான் "டே! மிஸ்ஸுக்கு பட்டாம்ப்பூச்சி வேணாமாம். வேற யாரும்  பிடிக்காதீங்க" அப்பாடா! இந்த பசங்ககிட்ட இருந்து ஒரு பத்து  பட்டாம்ப்பூச்சிகள் தப்பின என்று மகிழ்ந்து போனேன். வாழ்கை தான் எத்தனை சுவாரஸ்யமானது!! அன்று மாலை நிறைமதியின் ஹோம்வொர்க் டைரியில் " make an insect box. stick a butterfly and mark the parts. என்றிருந்தது. அதாவது ஒரு பட்டாம்பூச்சியை பாடம் பண்ணி, பாகம் குறித்துத்தர வேண்டும். எங்கள் வீட்டுக்கு அருகே அப்படி பிடிக்க வழியில்லை என்பதையும், இனி என் மாணவர்களிடம் நான் செய்யவேண்டாம் என சொன்னதை செய்யச்சொல்லி கேட்க வேண்டி வருமோ எனவும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். என் புலம்பலை கேட்டுகொண்டே வந்த கஸ்தூரி சொன்னது ஒரு வாசகமென்றாலும் திருவாசகம். " பத்து மார்க்குக்காக ஏன் ஒரு பட்டாம்பூச்சியை கொல்லனும்?" வேற ஏதாவது செய்ய முடியுமான்னு யோசி. ஒரு மொழி ஆசிரியர் இத்தனை மென்மனதோடும், மார்க்குகளை புறந்தள்ளும் தெளிவோடும் இருந்துவிட்டால் போதாதா! அவரிடம் பயிலும் மாணவர்கள் மனிதநேயத்துடன் வளர்வார்களே! 

     கஸ்தூரி என்கிற கஸ்தூரி ரெங்கன் (மது)அவர்களது  கைபேசிக்கு "சார்! டென்த் ஹால் டிக்கெட் எப்போ கிடைக்கும்? 
ரிசல்ட் வந்துடுச்சு எந்த ஸ்கூல்ல ப்ளஸ் ஒன் சேரட்டும்?
என்ன டிகிரி எந்த காலேஜ்ல சேரட்டும்? 
இங்க இன்டர்வியூ வந்திருக்கு சார். 
சார் வேலை கிடைச்சுடுச்சு லீவில் வந்து பார்க்கிறேன். 
சார்! சண்டே தான் கல்யாணம். அவசியம் வரணும். 
சார்! புது கார் வாங்கிருக்கேன் ஒரு டிரைவ் போகலாம் நீங்க ப்ரீயா? 
சார்! இன்னும் பத்து நாளில் லீவ் முடியுது. யு.எஸ்.போறேன். இனிக்கு நைட்டு டெர்மினேட்டர் போலாமா? என விதமாய் அழைப்புகள் தந்தபடியே இருக்கும் மாணவர்களின் குரல்கள் காதில் ஒலித்தபடி இருந்தன. பிளாஸ்டிக் வண்ணத்துப்பூச்சி  ஒன்றை ஒட்டி பாகம் குறித்து அனுப்பினேன். பெற்றுக்கொண்ட நிறையின் முகத்தில்  மலரில் துயிலும் வண்ணத்துப்பூச்சின் அமைதி தவழ்ந்தது.

51 கருத்துகள்:

  1. மதிப்பெண்களுக்காக வண்ணத்துப்பூச்சிகளை கொல்வது பாவமே.....
    அதைப் பிடிக்காமல் சுதந்திரமாய் பறக்க விடுவது லாபமே....

    பதிலளிநீக்கு
  2. படித்து முடித்ததும் மனதில் ஒலித்த பாடல் ..ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹா! ஓ! பட்டர்பிளை பாடல் தான் பதிவை எழுதி முடிக்கும் வரை மனதில் ஓடிக்கொண்டிருந்தது பாஸ்:)

      நீக்கு
  3. உங்கள் இருவரை போலவும் எல்லா ஆசிரியர்களும் இருந்துவிட்டால் இந்தியா வல்லரசாக அல்ல மிக நல் அரசாக மாறிவிடும்... ஆமாம் இந்த அளவிற்கு நேயம் மிக்க உங்களை எப்படி அந்த ஸ்கூலில் இன்னும் விட்டு வைத்திருக்கிறார்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. * ஆமாம் இந்த அளவிற்கு நேயம் மிக்க உங்களை எப்படி அந்த ஸ்கூலில் இன்னும் விட்டு வைத்திருக்கிறார்கள்?* இங்கு அரசியல் பேசகூடாது:)))) தேங்க்ஸ் சகா!

      நீக்கு
  4. நேயத்தை வளர்க்கும் பதிவு. அருமை.

    பதிலளிநீக்கு
  5. பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்தால் தான் பேச முடியும் காரணம் இது தானோ...?

    மனிதநேய இனிய நண்பருக்கு பாராட்டுகள்... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட நீங்க வேற அண்ணா! அந்த பசங்க டைம் கொடுத்தா தான் நானே கஸ்தூரியிடம் பேசமுடியும்:)

      நன்றி அண்ணா!

      நீக்கு
  6. நல்ல மனம் வாழ்க
    நாடு போற்ற வாழ்க
    நன்றி சகோதரியாரே
    தம +1

    பதிலளிநீக்கு

  7. சரி சரி நீங்க எத்தனை பட்டு சேலை வைச்சிருக்கீங்க சொல்லுங்க ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி டீப்பா யோசிக்கிறதுக்கு முந்தி வாங்கினது தான். இப்போ trendy ஆ silk cotton கிடைக்குதே! லைட்டா, கசகசன்னு இல்லாம:)

      வருண் கூட ஒரு பதிவில் பட்டுப்புடவையை பற்றி எழுதியது நினைவுக்கு வருகிறது சகா.

      நீக்கு
  8. மனதை நெகிழ வைத்துவிட்டீயேம்மா..தம்பியின் அன்பும் ஒரு பட்டாம்பூச்சியை காப்பாற்றி விட்டது...மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  9. உயிர்களிடத்து அன்பு வேணும். நல்ல காரியம் செய்தீர்கள். எத்தனை நாளைக்கு இந்த பிளாஸ்டி வண்ணத்துப் பூச்சி செய்முறை எடுபடும்? மனிதனின் உடல் பாகங்களைக் குறி என்றால், விட்டால் மனிதனையே பாடம் செய்து விடுவார்கள் போலிருக்கிறது. இந்த செய்முறையை நீக்க, நீங்களும் கஸ்தூரியுமே முன்னோடியாக செயல்படலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மருத்துவப்படிப்பில் அது தவிர்க்க முடியாததது தான், ஆனால் பள்ளியில் அதுவும் ஐந்தாம் வகுப்பில் இது தேவையில்லை என்றே தோன்றுகிறது! நன்றி அண்ணா!
      ^தாழ்மையான கருத்து.* என்றும் பணியுமாம் பெருமை!

      நீக்கு
    2. அய்யா இப்போது பெருவாரியான பள்ளிகளில் இந்த முறை இல்லை.
      மென்பொருள் வந்துவிட்டது.
      நாங்கள் படிக்கும் பொழுது எலியை கொன்றோம்!
      அப்புறம் உயிர்வதைச் தடுப்புச் சங்கங்கள் இவற்றை தடைசெய்து விட்டன.
      சிலர் ஆர்வத்தில் கேட்பார்கள்தான்.
      ஆனால் பள்ளிக் கல்வித்துறை தடை உத்தரவை வெளியிட்டு பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்று நினைக்கேன்.

      நீக்கு
  10. குழந்தையிலிருந்தே உயிர்களை நேசிக்கும் பக்குவம் வளரவேண்டும்.வளர்க்கப்படவேண்டும். உங்களிருவரின் சிந்தனையும் செயலும் ஒத்துழைப்பும் உங்கள் குழந்தைகளை மட்டுமல்லாது, மாணவச்செல்வங்களையும் நல்லவழியில் நடத்தும் என்பது மறுக்கமுடியாத உண்மை. அன்பான பாராட்டுகள் இருவருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா அக்கா! உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி!

      நீக்கு
  11. அடடா அம்மு என்ன ஒரு இளகியமனம் அப்படியே உருகிட்டேன்மா என் சகோவுக்கு ஒரு சல்யூட் அம்முக்குட்டிக்கும் தான். இப்படி மனித நேயம் மிகுந்தால் வாழ்வே சொர்க்கம் தான் இல்லம்மா ஏனோ மனம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது நன்றிம்மா ! வாழ்த்துக்கள் .....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களைப்போல் இளகிய மனம் கொண்ட தோழமைகளோடு பழகும் இதம் தான் செல்லம்:) நன்றி தோழி!

      நீக்கு
  12. அவர்கள் பயாலஜி பாடம் எடுத்து மருத்துவம் படிக்க வேண்டுமென்றால்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல வேலை சார், என் மகள்கள் ரெண்டு பேரும் கிளாஸ் first எல்லாம் இல்லை:) அவர்கள் இருவரும் பாடத்தை புரிந்து படிக்கும், என்னையும் கஸ்தூரியையும் போல ஆவரேஜ் மாணாக்கர் தான்:)

      நீக்கு
  13. பட்டாம்பூச்சியின் மீதான பரிவு தேவையே.

    பதிலளிநீக்கு
  14. வண்ணத்துப் பூச்சிகள் இல்லையெனில் - மகரந்தச் சேர்க்கை நிகழாது..

    உலகின் வசந்த காலம் குறைந்து போகும்.. மனித மனங்களின் நல்லுணர்வு வறண்டு போகும்!..

    நானும் உயிரியில் பயின்ற போது - Insect Box செய்திருக்கின்றேன்.. அரை மயக்கத்தில் கிடக்கும் - மண்புழு , கரப்பான், பூச்சி, தவளை, எலி - இவற்றின் உடல்களைப் பிளந்திருக்கின்றேன்..

    அவை நமக்காக - இன்னுயிர் ஈந்த தியாகிகள்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. *அவை நமக்காக - இன்னுயிர் ஈந்த தியாகிகள்!.. * ஹஹஹா ...... ஆமாம் சார் ரைட்டா சொன்னீங்க :)

      நீக்கு
  15. It is impossible to be a perfect human being but we can certainly be a better human being.

    I notice some people just think differently and do not have any guilt when treating animals unfairly.

    Some religions are carefully designed to justify that as "not wrong"..Sometimes I go and read what religions say about it. There are long justifications but I certainly find that as "BS"! The guy who justifies acts like "HE KNOWS what GOD thinks or want's him to do". Remember, it is all his "imagination" only. He does not know what God thinks although he created him for his convenience. The bottom line is we are all cheap human beings and selfish and do things for our selfish reasons and justify that or finding hard to justify. That's how life goes on as long as we live of course!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாஸ் !!! சத்தியமா புரியல. கமல் பதிவு போட்டாலும் போட்டீங்க கமல் மாதிரியே பேசுறீங்களே :))) j.k.

      but one thing varun . I cant sleep a night, unless i got justification for my deeds. thanx varun!

      நீக்கு
  16. மனித நேயம் மிக்க மனிதர்!..
    பெருமைப் பட்டுக் கொள்கிறோம் தோழி அவர் எங்களுக்கும்
    ஒரு நல்ல நண்பர் என்று!

    குடும்பத்தினர் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள் மா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வாழ்த்துகள் கண்டு அகம் மகிழ்ந்து போகிறேன் தோழி!! மிக்க நன்றி தோழி!

      நீக்கு
  17. பத்துமார்க்குக்காக ஏன் ஓர் உயிரைக் கொல்லனும்! கஸ்தூரியின் வார்த்தைகள் உள்ளத்தில் இருந்து வந்தவை! அருமை! இருவரும் ஆதர்ச ஆசிரிய தம்பதிகள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி சார்:) மிக்க மகிழ்ச்சி!

      நீக்கு
  18. ஆசிரியர் இப்படித்தான் இருக்க வேண்டும் ! பதிவுக்கு நன்றியும் பாராட்டும்!

    பதிலளிநீக்கு
  19. //பத்து மார்க்குக்காக ஏன் ஒரு பட்டாம்பூச்சியை கொல்லனும்?" //
    அருமை

    பதிலளிநீக்கு
  20. கஸ்தூரி “பத்து மார்க்குக்காக ஏன் ஒரு பட்டாம்பூச்சியை கொல்லனும்?" என்றது குழந்தைகளுக்கும் பொருந்தும். அவர்கள் மனசைக் கொலைக்குத் தயாரிப்பதிலிருந்து தவிர்க்க இந்த வரிகள் உதவும்பா. குழந்தைகளுக்கு அறிவுரை சொல்வதைத் தவிர்த்து, இப்படிப் ப்ராக்டிகலாக நடந்து காட்டும்போதுதான்...“மிஸ்சுக்கு பட்டாம்பூச்சி வேணாமாம்டா..” வண்ணத்துப் பூச்சியை எழுத்தில் பறக்க விட்டு என்னமோ செய்துட்டேம்மா.. அருமைடா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. *அவர்கள் மனசைக் கொலைக்குத் தயாரிப்பதிலிருந்து தவிர்க்க இந்த வரிகள் உதவும்பா.* உங்களை போன்றவர்களின் வழிக்காட்டுதல் தான் அண்ணா:) மிக்க நன்றி!

      நீக்கு
  21. வண்ணத்துப்பூச்சியை ஏன் கொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
  22. ஆசிரியர் தொழிலை வெறும் கடமையை செய்யும் கற்பித்தல் தொழிலாகக் கருதாமல் தேவைப் படும்போது மனித நேயத்தையும் தன் செயல் மூலம் கற்பிப்பவரே சிறந்த ஆசிரியர்.அவ் வகையில் நீங்கள் இருவரும் சிறந்த ஆசிரியர்கள் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  23. ஐந்தாம் வகுப்பிலேயேவா? பாவம் தான் அந்த பட்டாம்பூச்சி.

    பிளாஸ்டிக் பட்டாம்பூச்சி - நல்ல ஐடியா..... இருந்தாலும் பிளாஸ்டிக்-உம் நல்லதல்லவே!

    பதிலளிநீக்கு
  24. இந்த மைதிலியும் கஸ்தூரி அண்ணாவும் என் நண்பர்கள்! எல்லோரும் கேட்டுக்கோங்க!! :)
    வாழ்த்துகள் டியர், உங்கள் இருவருக்கும் செல்லக் குட்டீசுக்கும்.

    பதிலளிநீக்கு
  25. அப்பாடா தப்பித்த பட்டம்பூசிகளின் எண்ணிக்கை ௧௧... அருமையான PATHIVU

    பதிலளிநீக்கு
  26. இது பதிவு இல்லை, அழகானதொரு குட்டிச் சிறுகதை!

    அருமை சகா! உங்கள் இருவரையும் போல் ஆசிரியர்கள் எல்லாரும் இருந்தால் நம் தமிழ்ப் பிள்ளைகள் திறமையாக மட்டுமின்றிப் பண்போடும் வளர்வார்கள்!

    பதிலளிநீக்கு