செவ்வாய், 27 அக்டோபர், 2015

பெப்ஸி - உங்கள் குளிர்பானம் எங்கள் நெருப்பை அணைக்காது!


                                               உலகமயமாக்கல்,  நுகர்வோர் கலாச்சாரம் போன்ற வார்த்தைகளை தெரிந்துகொண்ட நாளில் இருந்து விளம்பரங்களின் அழகியலை மீறி அதன் அரசியலையும் புரிந்துகொள்ளும் தெளிவு கைவரப்பெற்றிருக்கிறது. ஆனாலும் என்ன, குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்ற சிந்தனையோடு, பிரபு போல புரட்சி, போராட்டம் என்று இறங்காமல், நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை (எந்த நாலு பேர்?!) என கமல் (போல) கமர்ஷியல்களையும் சகிக்கப் பழகியாயிற்று.

                                                     ஆனாலும் சமயங்களில் போகிறபோக்கில் நாம் கட்டிவைத்திருக்கிற மனக்கோட்டைகளை மண்கோட்டைகள் என தகர்த்தெறியும், நம் விழுமியங்களை கேலிசெய்யும் சில விளம்பரங்கள் அவை  நுகர்வோருக்காக  தயாரிக்கபடுபவை அல்ல, அவை முதலாளிகளின் மனத்திருப்திக்காக தயாரிக்கபடுபவை என ஒப்பனை மீறி நிஜ முகம் காட்டி விடுகின்றன. சமீபத்திய பெப்சி விளம்பரம் பார்த்தீர்களா? பார்க்கவிட்டால் பார்த்துவிட்டு தொடர்ந்து படியுங்கள்.

 

பெரியவர்கள், அறிவுஜீவிகள், பிழைக்கத் தெரிந்தவர்கள் எல்லாம் மௌனம் சாதிக்கும் எத்தனையோ பிரச்சனைகளில், இளம்கன்று பயமறியாது என இடர்களையும், இன்னல்களையும் துச்சமாக மதித்து களம் காணும் கல்லூரி மாணவர்களின் போராட்டங்கள் நேற்றும் இன்றும் ஈழம் தொடங்கி மதுஎதிர்ப்பு வரை  நாம் கண்கூடாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அவர்களை கேலி செய்வதுபோல் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக பட்டினி போராட்டத்தை முன்னெடுக்கும் மாணவர் படையில் ஒரு இளைஞர் பெப்ஸியை கண்டதும் மண்டி விடுவதாகவும், பெப்ஸி அதான் குடிச்சேன் என விளக்கம் கூறுவதுமாக இந்த விளம்பரம்  மிக கேவலமாக இருக்கிறது. அய்யா பெப்ஸி விளம்பர தயாரிப்புக் குழுவினரே குடுக்கிற காசுக்கு கூடுதலா கூவுங்க. அது உங்க பிழைப்பு. அதற்காக நாளைய இந்தியா என நாளும் நாங்கள் பார்த்துப்பார்த்து பூரித்து வளர்த்தெடுக்கும் மாணவர்களை கொச்சை படுத்தாதீர்கள். அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும், போராடுகிற ஒவ்வொரு மாணவனுக்கும் பாடத்திட்டத்துக்குள் மாட்டிக்கொண்டு, தேர்வுத்தாள் திருத்திக்கொண்டு, பதிவேடுகள் பராமரித்துக்கொண்டு, கிடைக்கிற சந்தர்ப்பத்தில் எல்லாம் இப்படியான அக்கினி துண்டங்களை ஆங்கோரு காட்டிலோர் பொந்திடை வைத்துக்கொண்டிருக்கும் எங்கள் நெருப்பை உங்கள் குளிர்பானங்கள் கொண்டு அணைத்துவிடலாம் என  நினைக்காதீர்கள். இந்த நினைப்பு உங்க பிழைப்பை கெடுத்து விடக்கூடும். கல்லாபெட்டிகள் ஜாக்கிரதை!

44 கருத்துகள்:


  1. ஏய் மகமாயி பதிவு எழுதாம தூங்கி கிடந்த எங்க வீட்டு புள்ளையை இப்படி பதிவு எழுதி ஆட்டம் போட வைச்சுட்ட மகமாயி இப்ப நான் சொல்லுறடை நல்லா கேட்டுக்கோ... அந்த பெப்சி கம்பெனியை மன்னிப்பு கேட்க சொல்லு இல்லைன்னா எங்க ஆத்தா மைதிலி ஆடா ஆரம்பிச்சா அப்புறம் நடக்குறதே வேற

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகா! எத்தனையோ அவமானங்களை தமிழர்கள் சகித்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனா, ரொம்ப சின்சியரா போராடுற மாணவர்களையும் முடக்கும் விதமா கேலி செய்யலாமா? எந்த நல்ல ஆசிரியரும் என் பிள்ளைகள் என தான் பெத்த பிள்ளையை சொல்லமாட்டோம். எங்களிடம் படிக்கும் மாணவக் கண்மணிகளை தான் சொல்வோம். அவங்கள பத்தி தப்பா பேசினா டென்சன் ஆகுது.

      நீக்கு
    2. அப்படிப் போடுங்க சகோ! நாம் நம் குழந்தைகளை (மாணவச் செல்வங்களை) எப்படியெல்லாம் சீராட்டிப் பாராட்டி வளர்க்கின்றோம்.
      இதுவும் ஒரு விளம்பர யுக்தியோ என்று தோன்றுகின்றது சகோ

      நீக்கு
    3. இங்கு யாருக்கும் வெட்கம் இல்லை மைதிலி. பல உணவகங்களில் உணவோடு கலந்த முக்கிய விசயமாக இந்த குளிர்பானம் மாற்றப்பட்டு விட்டது.

      நீக்கு
  2. சில சமயங்களில் எதிர்மறையில் தூண்டி விட்டுக் கூட விளம்பரம் தேடுவார்கள். எதிர்ப்பு கூடக் கூட இன்னும் விளம்பரம்!
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சொல்றதும் சரிதான். அந்தமாதிரி எதிர்ப்பை பார்த்து பொருள் வாங்கும் மனநலம் குன்றியவர்களை பற்றி பேசிப் பயனில்லை சகா!

      நீக்கு
  3. அருமையான அவசியமான பகிர்வு
    இறுதி வரியில் கொப்பளிக்கும் அந்தத் தார்மீகக்
    கோபம் இப்போது எங்களிடத்திலும்...
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. *கோபம் இப்போது எங்களிடத்திலும்...* அதைத்தானே எதிர்பார்க்கிறேன் :) மிக்க நன்றி அய்யா!

      நீக்கு
  4. உண்மையே. குளிர் பானங்களால் நெருப்பை அணைக்கமுடியாது.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்

    இறுதியில்நல்ல சொன்னீர்கள்
    கல்வி என்னும் தீயை குளிர்பாணம் கொண்டு அணைக்கமுடியாது..சரியாகத்தான் சொன்னீர்கள்... வாழ்த்துக்கள் த.ம 4
    எனது பக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: உன் நினைவுக் கீற்றுக்கள்:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. பண்பாட்டினை சீரழிக்கும் படியான விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன..

    இளம் பெண்ணொருத்தி Fanta குடித்துவிட்டு நடுச்சாலையில் ஆடும் ஆட்டத்தையும் கண்டிருப்பீர்கள். அவளே Fanta ஆக மாறி விடுகின்றாளாம்..

    கேவலங்களுக்கு முடிவு எப்போது என்று தெரியவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. fanta விளம்பரம் முற்போக்குவாதி கமல் மகள் நடித்த விளம்பரம் அல்லவா !! ரொம்ப முற்போக்கா தான் இருக்கும்:) நன்றி அய்யா!

      நீக்கு
    2. முற்போக்குத்தனம் இதுவல்லவே மைத்தூ இல்லையா? அது எண்ணங்களில் அல்லவா இருக்க வேண்டும். ஆனால் நம் பெரும்பான்மையான மக்கள் புரிந்து கொண்டுள்ள முற்போக்குத்தனம் இப்படித்தான் எதில் வேண்டுமோ அதில் இல்லை மிக மிக வேதனை இல்லையா மைத்து

      கீதா

      நீக்கு
  7. ஆத்தி! வந்தாச்சா வரும் போதே கூட்டத்தோடவா...
    சூப்பர் பா.

    பதிலளிநீக்கு
  8. அருமையான பதிவு. வாழ்த்துகள். அந்த விளம்பரம் நிச்சயமாக தடை செய்யத்தகுதியானது. கூட்டமாக சேர்ந்து நின்று நியாயமான ஒரு கோரிக்கைக்காக ஓரணியில் நிற்பவர்கள் அனைவரையும் கேவலப்படுத்துவதுதான் அந்த விளம்பரம்...

    பதிலளிநீக்கு
  9. அந்த விளம்பரம் பார்த்தேன்! போராட்டக்காரர்களை இழிவு படுத்துவதாக எடுத்திருப்பது சரியில்லைதான்! இதற்கும் ஒரு போராட்டம் வரும் என்று எதிர்பார்ப்போம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செஞ்சாலும் தப்பில்லை சார்! கருத்துக்கு மிக்க நன்றி!

      நீக்கு
  10. சரியான சவுக்கடி!! இந்த விளம்பரத்தைப் பார்த்து எனக்கும் சினம் ஏற்பட்டது. ஆனால், நான் அதை வெளிப்படுத்தவில்லை. நீங்கள் அதைச் செவ்வனே செய்திருக்கிறீர்கள்! மிக்க நன்றி தோழரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை எழுதி முடிந்ததும் உங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என நினைத்தேன் சகா! நீங்களே படிச்சுட்டு கருத்துச்சொன்னது அத்தனை மகிழ்ச்சி!

      நீக்கு
  11. இதே நேரத்தில் பெப்சி ஆலையை மூடக் கோரி அறவழியில் போராடிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தோழர்கள் மீது அரசு தாக்குதல் நடத்தியிருப்பதையும் தாங்கள் கண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். பார்க்க: http://www.pathivu.com/?p=47975. அரசுகளே இத்தகையே வெளிநாட்டுப் பண முதலைகளின் கைக்கூலிகளாகி விட்ட இந்நாட்டில் நம்மை இப்படி மட்டுமில்லை இன்னும் கூட இழிவுபடுத்த அவர்கள் துணிவுக்குக் கேட்பானேன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த செய்தி நான் அறியாதது சகா:( இப்போ போய் பார்க்கிறேன். மிக்க நன்றி!

      நீக்கு
  12. தேவையான பதிவு! நல்ல சவுக்கடி!

    பதிலளிநீக்கு
  13. நீங்க என்ன "பெப்ஸி உமா" க்கு எதிராக் கிளம்பிய "ஆன்ட்டி பெப்ஸி மைதிலி" யா?? அதை anti னு வாசிக்கவும், NOT aunty !! :))

    நான் பாட்டில் பாட்டிலாக் குடிப்பது "தஸானி வாட்டர்"தான்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. *அதை anti னு வாசிக்கவும், NOT aunty !! :)) * ஹாஹாஹா. நீங்க சொல்லாட்டியும் நான் இப்போ ஆண்டி தான். நிறையின் நட்புகள் என்னை அப்படித்தானே கூப்பிடுகிறார்கள்:)
      *நான் பாட்டில் பாட்டிலாக் குடிப்பது "தஸானி வாட்டர்"தான்! :)* அது ரொம்ப HEALTHY பழக்கம். அப்புறம் CHEERS வருண் நானும் நிறைய தண்ணி குடிப்பேன்.


      நீக்கு
  14. நல்ல பதிவு அக்கா... ஏர்டெல் 4G சேலஞ்ச் போல இந்த விளம்பரமும் எதிர்ப்புகளால் வந்த இடம் தெரியாமல் போகட்டும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அபிக்குட்டி!! இந்த விளம்பரங்கள் வந்த இடம் தெரியாமல் போகவேண்டும்:) நன்றி டா!

      நீக்கு
  15. மாணவர்கள் இந்த விளம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். பெப்சி, கொக்கோகோலா குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  16. அக்கினிக் குஞ்சுகளை இந்த குளிர்பானம் அணைத்துவிடுமா? நடக்கவே நடக்காது..

    அனல் அட்லாண்டா வரை தகிக்குதே, அருமை டியர்

    பதிலளிநீக்கு
  17. தொலைக்காட்சி பார்க்கும் வழக்கம் மிக மிகக் குறைந்துவிட்டதால் இந்த விளம்பரம் கண்ணில் படாமல் போய்விட்டது. இல்லை என்றால் எங்களில் ஒருவர் நிச்சயமாக போர்க்கொடி உயர்த்தியிருப்பார் ஹஹஹ் யாரென்று உங்களுக்குத் தெரியும்....அடுத்த மெய்நிகர் விழுப்புண்ணிற்குத் தயாராகி நிற்கும் தார்மீகப் போராளிக்கு எங்கள் ஆதரவு! உங்கள் காணொளியைக் கண்டோம்...

    கீதா: பெப்சி கோக் இரண்டிற்குமே பல வருடங்களாக ஏதோ ஒரு வகையில் போராட்டங்கள் ஆங்காங்கே எழுந்தாலும், குறிப்பாக தென்னகத்தில் அதன் ஆலை ஒன்று தொடங்க இருந்த போது விவசாயிகள் குரல் கொடுத்ததும், மற்றும் ஆங்காங்கே அவற்றின் கெடுதலை பல உதாரணங்களுடன் காட்டியும் எழுந்தாலும் அவை எல்லாமே விட்டில் பூச்சிகளைப் போல் அடங்கிவிடுகின்றன. ஏன்? அரசு இவற்றிற்கு மறைமுகமாக, நேரடியாக கைக்கூலிகளாக இருப்பதால். வெற்றிகண்டால் மிக்க மகிழ்ச்சி. விளம்பரத் தடை மட்டுமல்ல குளிர்பானங்களுக்கும் தடை ஏற்பட்டால், நம் ஏழை வியாபாரிகளின் கல்லா கொஞ்சமேனும் நிறையுமே என்ற ஆதங்கம்தான்...

    பதிலளிநீக்கு
  18. உங்கள் கோபம் சுட்டெரிக்கிறதே . அர்த்தமில்லா விளம்பரங்களுள் இதுவும் ஒன்று. என்று ஒதுக்கித் தள்ளுங்கள்

    பதிலளிநீக்கு
  19. பெப்சி விளம்பரத்திற்குப் பின் ஒளிந்திருக்கும் மாபெரும் அரசியலை வெளிச்சம் போட்டுக் காட்டிய உங்களுக்கு பாராட்டுகள் சகோ!
    த ம 12

    பதிலளிநீக்கு
  20. ஆகா.. நா தாமதமா வந்துட்டனே..! வந்துபாத்தா கொதிச்சுக் கிடக்கு பதிவுலகமே! பத்தவச்சிட்டியே மைதிலீ! நல்லதுதான் நீயே அக்கினிக் குஞ்சுன்னு ஆசான் சொற்களைப் போட்டபின் பத்திக்கத்தானே செய்யும்? ஆனா மைதிலி..நா இந்த விளம்பரத்தைப் பாக்கலியே? இந்தியில் மட்டும் வருதா? (பதிவர்விழா வேலைகளில், நான் விரும்பிப் பார்க்கும் மகாபாரதத் தொடரையும் பார்க்க முடியல! இப்பப் பாத்தா அங்க குருட்சேத்திரம் நடக்குது!) கேவலமான விளம்பரமாத் தான் இருக்கு. நெத்தியடி குடுத்திருக்கே. அந்த 4ஜி சேலஞ்ச் பத்தி ஏர்டெல்லுக்கு ஒரு குடு குடுக்கணும் அந்தச் சின்னப் புள்ளய கேவலமாப் பயன்படுத்தியிருக்காங்க.. குப்பைகள் எரிந்து முடியும்வரை கங்குகள் தொடரட்டும் பா.

    பதிலளிநீக்கு
  21. இப்படி பல விளம்பரங்கள்...... மாற்றி மாற்றி முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

    விளம்பரத்திற்கு வேறு யாரும் எதிர்ப்பு தெரிவித்த மாதிரி இல்லையே.....

    நீங்கள் ஆரம்பித்தது நல்லதொரு ஆரம்பமாக இருக்கட்டும்...

    பதிலளிநீக்கு
  22. சகோதரி...

    இந்த பன்னாட்டு நிறுவனங்களில் இன்னும் புதைந்திருக்கும் " காலனியாதிக்க " மனப்பான்மைக்கு சாட்டையடியாக பதிவிட்டமைக்கு ஒரு !

    சில ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு பிரான்ஸ் தொலைக்காட்சியில் ஒரு கார் விளம்பரத்தை காண நேர்ந்தது... அந்த காரினை இந்திய தொலைக்காட்சியில் காணும் இந்தியர் ஒருவர் தன் அம்பாசிடர் காரினை அந்த காரின் அமைப்பை போலவே மற்றிக்கொள்வார்... எப்படி தெரியுமா ? யானையைவிட்டு காரினை உதைக்கவும் மிதிக்கவும் செய்து !!!

    இது போன்ற விளபரங்களில் ஒளிந்திருக்கும் காழ்ப்புணர்ச்சி ஒரு புறம் என்றாலும் இப்படிப்பட்ட பன்னாட்டு நிறுவன விளம்பரங்களை அனுமதிக்கும் அரசியின் கையாலாகாத தனத்தையும் குறிப்பிட வேண்டும்...

    நம் டாட்டாக்களும் அம்பானிகளும் ஐரோப்பிய நாடுகளிலோ அமெரிக்காவிலோ ஏன் ஆப்ரிக்க நாடுகளில்கூட அந்தந்த மக்களின் உணர்வுகளை சுடும் விளம்பரங்களை வெளியிட்டால் அவர்கள் இவர்களின் பெட்டிகளை கட்டி அனுப்பிவிடுவார்கள் !!!

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு