வெள்ளி, 17 மே, 2019

செல்லமே!!

சுழற்றி விழிக்கும் அதன் அழகில் மயங்கி
செல்லம் கொஞ்சுகிறாய் நீ
அதுவோ உன் செம்மைபூசிய கன்னங்களையே பருகிக் கொண்டிருக்கிறது!!



தாமரை இதழடியென நிறம் கொண்ட
அதன் பாதங்களை முத்தமிடுகிறாய்
தன் கூர் நகங்களை உள்ளிழுத்து
உன் கைசிறையில் தஞ்சமடைகிறது அதுவும்.

குளிர் கொல்லும் இரவில்
தன்னையே கீறி,
பொங்கும் குருதியை
விடியும் வரை வெறித்திருக்கும்
அதன் பளிங்குக்கண்களின் நினைவில்
என் அடிவயிற்றில் அமிலம் சுரக்க

ஏதேதோ சொல்லித்தான்
விலக்கிட முயல்கிறேன்
நீயோ என்னைப் போலவே
தொலைத்துக் கொள்கிறாய்
இந்த பொல்லாத காதலிடம்.
           


6 கருத்துகள்:

  1. அவ்வளவு பொல்லாததா காதல்?!

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப நல்ல கவிதையா இருக்கும் போல! (நம்ம மரமண்டைக்கு விளங்கலியே!) எப்படியோ நீ மறுபடியும் வலைப்பக்கம் வந்தது அறிந்து ரொம்ப மகிழ்ச்சிப்பா... அப்ப அடுத்த மாதம் (நீ தந்த தலைப்பு மறக்குமா?) “இணையத் தமிழால் இணைவோம்!” பயிற்சி முகாம் உண்டு! அடுத்து “வலைப்பதிவர் திருவிழா-2019” திட்டமிடுவோமா?

    பதிலளிநீக்கு
  3. செல்லமாகப் பொல்லாத காதல் என்று சொல்லிருக்கீங்க மைத்து!!! ஏதோ அழகா சொல்லியிருக்கீங்க...ஆனா மீண்டும் மீண்டும் வாசித்தேன் மைத்து களி மண்ணால் நிரம்பிய என் மூளை அதை கிரகிக்க முடியலையே ஹிஹிஹி..சரி தனியா கேட்டுக்கிடறேன்

    கீதா

    பதிலளிநீக்கு