செவ்வாய், 10 மே, 2022

T.C கொடுப்பார்களா ஆசிரியர்கள்??

 கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பை    பார்த்ததில் இருந்து ஆசிரியர்களுக்கு ஆதரவான, மாணவர்களுக்கு ஆதரவான என்கிற  இரு வேறு வகையான மனநிலைகளை பார்க்க முடிகிறது. இதுவே எத்தனை பெரிய அபத்தம்.

 ஒரு குடும்பத்தகராறில் அப்பா அல்லது கணவருக்கு ஒருசாராரும், மகன் அல்லது மனைவிக்கு ஒரு சாராரும் பேசுகிற நிலை வந்தால் அதற்கு பின் அங்கு ஒட்டுப்போட்ட உறவே சாத்தியம். அதை நிலை தானே இங்கே பள்ளிக்கும். 

                ஒரு சிறுவன் அல்லது சிறுமி தன் வயதுக்கு மீறிய செயல்களை செய்கிறார்கள் எனில் அதற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் இருக்கும். தன் வயதுக்கு மீறிய நட்பு வட்டத்தில் அவர்கள் இருப்பர். அவர்களது நடத்தை மாற்றத்தை உடனடியாக கணித்து மடைமாற்றும் வழிகாட்டி இல்லாதிருப்பர். இன்றைக்கு தேதியில் சிறிதோ, பெரியோ உடல் எடையில் தொடங்கி, தூக்கக்குறைபாடு மாதிரியான மாற்றம் ஏற்படாத பள்ளி வயது பிள்ளைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். கிருமிநாசினி விளம்பர்களில் வருவதைப் போல் 99.9% பிள்ளைகள் பாதிக்கப்பட்டேயிருக்கிறார்கள். 

                 நம் வீட்டு பிள்ளைகளை சரி செய்ய நாம் எடுக்கும் பொறுமையான மெனக்கெடலை ஏன் பள்ளிகளில் எடுக்க முடிவதில்லை. ஒன்று  புரிதல் குறைபாடு அடுத்தது பாடம் முடித்து பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார் படுத்த வேண்டிய அவசர நிலை. ஐயா எட்வின் அவர்கள் தன் பதிவில் குறிப்பிட்டதைப் போல மகிழ்வோடு பள்ளிக்கு வரும் சூழலே ஆசிரியர் மாணவர் உறவுக்கு  புத்துயிர் அளிக்கும் மற்றபடி இந்த டீ.சி கொடுக்கிறத பற்றி எல்லாம் பதற வேண்டாம் சகோதரர்களே! அதுவும் 99.9% சும்மா மிரட்ட மட்டுமே பயன்படும். அப்படி மிரட்டக்கூட வேண்டாத பள்ளிச்சூழலை உருவாக்க என்ன செய்யலாம் என்று சிந்திப்போம், பேசுவோம், செயல்படுவோம்.

4 கருத்துகள்:

  1. டி சியா? ஆ. உங்கள் கருத்தை அப்படியே டிட்டோ செய்கிறேன். பள்ளிச் சூழல் நல்ல நட்புறவு கொண்டாடும் சூழலாக இருக்க வேண்டும் அதாவது ஆசிரியர் மாணாக்கர் நடுவிலும் கூட, அடுத்து, பள்ளியில், ஒன்று ஆசிரியர்கள் மாணவர்களைக் கூர்ந்துகவனித்து வழி நடத்த வேண்டும். அல்லது நல்ல உளவியல் ஆலோசகரை பள்ளிக்குத் தேவை. டிசி கொடுத்தால் பிரச்சனை தீருமா என்ன? அக்குழந்தையை வழி நடத்துவதை விட்டு? பள்ளிக்கும் அந்தப் பொறுப்பு உண்டே. ஒரு குழந்தையின் எதிர்காலத்தை முளையிலேயே பறிப்பதா? எத்தனை குழந்தைகள் அந்த வயதில் சில தவறுகள் சூழல்கள் காரணமாகச் செய்தாலும் பின்னாளில் மிக ப் பெரிய அளவில் படித்து வருவதையும் பார்க்கிறோம்தானே.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. நுணுக்கமாக அணுக வேண்டியது முக்கியம் தான்... எவ்வித பிரச்சனைக்கும் தாய் மனம் போல் அணுகினால் எளிது...!

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் மாணவர்களைக் குழந்தைகளாய்ப் பார்க்கிறீர்கள். மற்றவர்களோ ஆக்கப் பொருட்களாய்ப் (products) பார்க்கிறார்கள். அதனால்தான் சரிவர உருவாகாத பொருட்களைத் தூக்கியெறியப் போவதாய் மிரட்டுகிறார்கள். நீங்கள் கூறுவது போல் அப்படி ஒரு நலமிகு பள்ளிச்சூழல் உருவாக வேண்டுமானால் உங்களைப் போல் தாயுள்ளம் கொண்ட ஒருவர் கல்வியமைச்சரானால்தான் நடக்கும் சகா!

    பதிலளிநீக்கு
  4. சிறப்பு. நுணுக்கமாக அணுக வேண்டிய பிரச்னை. சரியான வழிகாட்டிகள் இருந்தால் நலம்.

    பதிலளிநீக்கு