செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012
தித்தித்த பண்டிகைகள்
தீபாவளிக்கு ஒரு மாதம் இருக்கையிலேயே வாழ்த்துஅட்டைகள் வர தொடங்கிவிடும் .பொங்கல் என்றால் கேட்கவா வேணும்?பொங்கல் லீவ் முடுஞ்சு ஸ்கூல் திறக்கும் போது யாருகிட்ட நிறைய கார்டு அல்லது வித்தியாசமான கார்டு இருக்கோ அவங்க தான் அன்னைக்கு வீ.ஐ.பி .
இப்பல்லாம் குறுஞ்செய்தி மட்டும்தான்.சிறிது நேரத்தில் நினைவகம் நிரம்பி விடுக்கிறது இன்றைய உறவுகள் போலவே .பேப்பரை மிச்சப்படுத்தும் என்றெல்லாம் சமாளிக்க வேண்டாம் .சிட்டுக்குருவியை அழிச்சுட்டு காட்டை
காப்பாத்துங்க ஐயா .
சனி, 25 ஆகஸ்ட், 2012
வாசனை -ஒரு நினைவுச்சுரங்கம்
ஒரு அதிகாலைப்பனிமூட்டம் வெகு இயல்பாய் நினைவு படுத்திவிடும் 'கல்லூரி தினங்களை '
ஒவ்வொரு வாசமும் 'நினைவடுக்கில் ஒரு முகத்தை,ஒரு நிகழ்வை ,ஒரு
துயரை ஏன் ஒருசிலிர்ப்பை கூட பதிந்து வைத்திருக்கிறது.
என் மகள் எனும் தேவதையின் பிஞ்சு கை நீட்டி மெஹந்தியை காட்டுகயில்
அந்த மணத்தில் அம்மாவும்,அவள் அம்மியில் அரைத்த மருதாணி கணங்களும் ,விரலுக்கு அம்மா மருதாணி தொப்பிகளும் நினைவுக்கு வருகிறது.
உள்ளங்கையில் வட்டவட்டமாய் அப்பளம் இடும் வேலைஎல்லாம் செய்தது கிடையாது .ஈர்க்குக்குச்சியை வைத்து அப்போதே நிறைய டிசைன் போடுவாள் .அப்பா கூட என்னிடம் மருதாணி போட்டு க்கொண்டதுண்டு .
வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012
நிலவோடு ஒரு ரயில் பயணம்
அவள் கன்னம் மோதிய வண்டு
என் காதருகே இரைந்தது
தான்நிலவையே தொட்டுவிட்டதாய்
இவள்இறங்கிஏறும்
ஒவ்வொருநிலையத்திலும்
ஒவ்வொருநிலையத்திலும்
இருண்டு போனது
ரயில்ப்பெட்டி என்று
ரயில்ப்பெட்டி என்று
வண்டையே
வழிமொழிந்தான்
நண்பனும்
வழிமொழிந்தான்
நண்பனும்
அவன்கண்களையாவது விட்டுவைத்த
அந்த நிலவால்
கிரகணம் பிடித்தது
கிரகணம் பிடித்தது
என் ரயில்ப்பெட்டி முழுமைக்கும்
வெளியே சூரியனும்,
உள்ளே நிலவும்
உள்ளே நிலவும்
குழம்பிப்போயிருந்தது தொடர்வண்டி
என்னைப்போலதான்
உற்சாகம் தாங்காது
நிற்பதும், பின் இயங்குவதுமாய்
நிற்பதும், பின் இயங்குவதுமாய்
அவள் அழகை
சுவாசித்த போதையில்
சுவாசித்த போதையில்
என்இதயமும்
எங்கள் தொடர்வண்டியும்
எங்கள் தொடர்வண்டியும்
சோ. மைதிலி