உப்பு இருக்கான்னு பார்க்கிறேன், வெந்துடுச்சான்னு பார்க்கிறேன் என
அடுப்படியையே சுற்றிவர ஆளில்லா வீடுகளில் அசைவம் சமைக்க விரும்புவதில்லை பெண்கள்.
குழந்தைக்கு பிசையப்படும் சோற்றில் நாசி நிறைப்பதை தாய் மணம்(மனம்)
என்று சொல்லலாம் #நெய்மணம் என்றும் சொல்லலாம்.
அம்மா, காதலி, மனைவி, மகள், பேத்தி என பெறப்படும் முத்தங்களை கொண்டும்
கணக்கிடலாம் ஆணின் பருவங்களை.
குழந்தைத்தனம் என்பதை இப்பல்லாம் குழந்தைங்ககிட்ட கூட பார்க்க
முடியிறதில்லை # டெர்ரர் குட்டீஸ் சுட்டீஸ்
ஏழாம்அறிவுல டாங்லி போட்டு தள்ளுன கெட்ட ப்ரபசர் தான் ஏற்வமாட்டின் விக்கிறாரு.
யாரும் கவனிச்சிங்களா?
என் சொந்த ஊரில் மாடர்ன்னாகவும், பணியிடத்தில் மண் மணம் மாறாத நேட்டிவிட்டியோடும்
இயல்பாய் நடிக்கக்கற்றுதந்திருக்கிறது வாழ்க்கை.
முன்னெல்லாம் வேட்பாளர் சரியில்லேன்னா நம்ம ஊருப்பக்கம் துடைப்பத்தை
காட்டுவாங்க, இந்த முறை வேட்பாளரே துடைப்பத்தோடு வந்ததை சொல்லிச்சொல்லி அப்பத்தா
ஆத்துபோராக.
கல்யாண வீடுகளில் பம்பரமாய் சுற்றி வேலை பார்ப்பவர் மணப்பெண்ணினால் அண்ணன்
ஆக்கபட்டவராகவும் இருக்கலாம்.
சேகுவேரா டீ.ஷர்ட் எடுத்துத்தரட்டுமா என்றேன். பெரியார் படம் போட்டு
வரட்டும் என்கிறான் என் சகோதரன்.
பரபரப்பான காட்சிக்கிடையே வரும் விளம்பரம் போல்
சட்டென தூங்கிவிடுகிறார்கள் குழந்தைகள் # பயணப்பொழுதுகள்
பி.கு;
மே மாதம் முழுக்க net fasting. so blogக்கு லீவ். நாளை மட்டும் தான் வருவேன். நாம் சொந்தபந்தங்களோடு மனதை ரீசார்ஜ் செய்துவிட்டு ஊர்த்திருவிழா கதையோடு திரும்ப வருகிறேன். அதுவரை have a nice time மக்களே(நோ, நீ கிளம்பிட்டா nice டைம் தானேன்னுலாம் சொல்லக்கூடாது :)))