ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

பேரம் பேசினால் தவறா? (நிபந்தனை உட்பட்டது*)

கென்னடியும் இதை தானே சொல்றார்!
     பேரம் என்றாலே நமக்கு அரசியல் குதிரை பேரங்கள் தானே(!?) நினைவுக்கு வருகின்றன? ஆனா பெரிய மனுசங்க விஷயம் எல்லாம் நமக்கு எதுக்கு? பெட்ரோலோ, பெரிய வெங்காயமோ விலையேறினால் புலம்பத்தொடங்கும் என் சக நடுத்தர வர்க்கத்தினருக்கும், ச்சே ச்சே இதெல்லாம் ஒரு விசயமே இல்லை என்று பகட்டுக்காக பேசும் சுவிஸ் பாங்கில் அக்கவுன்ட் இல்லாத க்ரீமி லேயர் நடுத்தர வர்க்கத்துக்கும் நான் கேட்க நினைக்கும் கேள்வி இது.
           

     நான் கல்லூரி நாட்களில் சென்ற ஆக்ரா, டெல்லி சுற்றுலாவை பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கேன் இல்லையா (அதுக்கென்ன இப்போ? அட இருங்கப்பா) (இந்த பதிவை படிக்க இங்க சொடுக்குங்க) அங்க தான் முதன்முதலில் பேரம் பேசக்கற்றுகொண்டேன். தாஜ்மகால் நுழைவாயிலுக்கு வெளியே பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கொண்டு அழகிய நடன மங்கை சிலைகளை விற்றுக்கொண்டிருந்த அந்த வடஇந்திய நடைபாதை வியாபாரி தான் என் குரு:) முதலில் நூற்றி இருபது ருபாய் என அவர் விலை சொன்ன பொம்மைகளை எங்கள் பேராசிரியர் முதல் தாஜ்மஹாலை பார்த்துவிட்டு அப்புறம் ஷாப்பிங் என்று சொல்லிவிட்டதால் வாங்க முடியவில்லை. சுற்றிபார்த்துவிட்டு வெளியே வந்த போது மற்றொரு வியாபாரி அந்த சிலைகளை ஒரு வெள்ளைக்காரருக்கு ஐம்பது ரூபாய்க்கு விற்றுகொண்டிருப்பதை பார்த்து திகைத்துப் போய் நாமும் கொஞ்சம் முயற்சிக்கலாமே என பார்த்தபோது அவற்றை இருபது ரூபாய்க்கு வாங்க முடிந்தது.அப்போதொடங்கியது எனது பேரம் .
              அதில் எனக்கு ஏற்பட்ட புரிதல்களை உங்ககிட்ட பகிர்ந்து கொள்ள நினைகிறேன். கல்லெறிந்து பாப்போம் கிடைத்தால் கனி, இல்லை என்றால் கல் தானே எனும் நம்ம பெரியவங்க சொல்வது போல் ஒரு பொருளை வாங்கியவுடன் விலையை கேட்டுவிட்டு "சரி  நான் எவ்ளோ கொடுக்கட்டும்?" என சில சொல்லெறிந்து பார்ப்பதால் பல நேரம் லாபம் தான் கிடைக்கிறது எனும் போது அப்படி கேட்பதில் என்ன குறைந்து விடப்போகிறோம்? பேரம் பேச சில நேரம் சிலருக்கு ஸ்டேடஸ் தடுக்கும். ஒன்றை புரிந்துகொள்ளுங்கள். நாம் எந்த நிறுவனத்தில் பேரம் பேசத் தயங்குகிறோமோ அவர்கள் கொள்முதல் செய்யும் போது பேரம் பேசாமல் சரக்குகள் எடுப்பதில்லை. மற்றவர் பேரம் பேசி எந்நூறு ரூபாய்க்கு வாங்கிய பொருளை நீங்க கேட்ட விலையை கொடுப்பேன் எனும் முடிவில் ஆயிரம் ரூபாய்க்கு வாங்குவது தான் புத்திசாலித்தனமா?  அந்த இருநூறு ரூபாயையும் உழைத்துத்தானே பெறுகிறோம். இங்கே பேரம் கிடையாது என சில கடைகளில் எழுதி இருக்கும். நாலு கடை விலையை ஒப்பிடும் போது சரியான விலைதான் என தெரிந்தால் அங்கே பேரம் பேசாமல் வாங்கலாம் ஆனா இதுக்கெல்லாம் எனக்கு நேரம் இல்லை என்பவர்களால் தான் இன்று துணிக்கடையிலோ, நகைக்கடையிலோ பேரம் பேசாத நடைமுறை வந்துவிட்டது. அதுக்காக கூடையில் சுமந்து, வெயிலில் திரியும் வயதானவர்களிடம் ஐந்துக்கும், பத்துக்கும் இரக்கமில்லாமல்  பேரம் பேசச் சொல்லவில்லை. சீட்டிங் சீட்டு நிறுவனங்களோ, ஈமூ கோழிகளோ முழுங்கும் அளவிற்கு ஏமாறாமல் இப்படியான பாட்டிகளிடம் ஆசை ஆசையாய் ஐந்தும், பத்தும்  ஏமாந்து, அவர்களுக்கே தெரியாமல் அந்த முதிய கண்களில் ஒரு நொடி வெளிச்சமும், சுருங்கிய உதடுகளில் ஒரு துளி புன்னகையும் காணும் சுகத்திற்காய் எத்தனை முறையும் ஏமாறுவேன் பேரங்கள் இன்றி:))) 



(பேரங்கள் இன்னும் இருக்கு. இன்னொரு பதிவில் பார்க்கலாம். வருண், தமிழன் சகாக்கள்  என் வாயை கிளறி அதையும் பின்னூட்டத்தில் சொல்ல வைத்துவிடும் சாத்தியங்களும் உண்டு:))
          
              

15 கருத்துகள்:

  1. வியாபாரம் என்பது சட்ட பூர்வமாக்கப்பட்ட திருட்டு - என்று தனது நாவல் ஒன்றில் மாக்சிம் கார்க்கி சொன்னதாக நினைவு. நாம் சாதாரண வியாபாரிகளிடம்தான் பேரம் பேசுகிறோம். லேபிள் போட்டு கொள்ளையடிப்பவனிடம் கேட்ட காசை கொடுத்து விடுகிறோம். தங்களுக்கு குருவாகிப் போன அந்த நடைபாதை வியாபாரிக்கு நன்றி!
    த.ம.2

    பதிலளிநீக்கு
  2. இன்று பேரம் என்பது சிறுகடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை வந்தாச்சு...
    இங்கு மலையாளி கடைகளில் 70 திரஹாம் என்று சொன்னால் 25, 30 க்கு வாங்க முடியும். அதே மலையாளிகள் நம்மிடம் 20 திரஹ்முக்கு கொடுத்ததை அரபிக்காரனிடம் 150 சொல்லி விற்றுவிடுவான்...

    ஆனால் இப்போ பல அரபிகள் பேரம் பேசக் கற்றுக் கொண்டுவிட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் சொன்ன இடத்தில் பிளாஸ்டிக் தாஜ்மகாலை,மூன்று நூறு ரூபாய்க்கு வாங்கினேன் ,முதலில் சொன்ன விலை ஒன்று அறுபது ரூபாய் !
    வயதானவர்களிடம் பேரம் பேசாத கொள்கையை என்னவளும் கடைப் பிடிக்கிறாள் !
    த ம 1

    பதிலளிநீக்கு
  4. ஏழை வியாபாரிகளிடம் பேரம் பேசத் தெரியாதமாதிரி ஏமாந்து அவர்களை சந்தோஷப்படுத்தலாம் என்கிற தத்துவம் நல்லாயிருக்கு! :)

    In US you need to buy summer clothes during winter. And winter clothes in summer for getting a good deal! After Christmas sale and after new-year sale, winter clearance summer clearance.. You could get stuff 75% off of the original price and additional 10% off too. :)

    Recently I bought an used book for someone. It costs $15. I did not own that book either. Then I searched for getting my own copy, and found another used book of same "edition" in Bookbyte. I bought the same book for $1 (it was in a pretty decent shape). So, when you buy and where you buy matters most to get a good deal. :)

    If you are looking for something which you need "RIGHT NOW" you might not have much chance to get a "good bargain"! So, it all depends on how desperate you are as a customer I think! :)

    பதிலளிநீக்கு
  5. உண்மைதான் சகோதரி. பெரிய கடைகளில் பேரம் பேசாதவர்கள் அதன் வாசலில் வயிற்றுப் பிழைப்புக்காக பொருட்கள் விற்பவர்களிடம் பேரம் பேசும் நிலை இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது....

    பதிலளிநீக்கு
  6. அருமையாகச் சொன்னீர்கள் சகோதரரே!

    பாட்டியென்றாலும் சரி பவுண் வியாபாரி என்றாலும் சரி
    பேரம் பேச எனக்குத்தெரியாது. கேட்பதை அப்படியே கொடுத்துவிட்டு
    வாங்கிக் கொள்வேன். இதற்காக நான் வீட்டில் நன்றாக வாங்கிக் கட்டிய சம்பவங்கள் நிறைய..:)
    அருமையான பதிவு! தொடர்ந்து தாருங்கள் சகோ!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட.. மன்னிக்கவும் தோழி!...:)
      உங்களையும் உங்கள் கணவரையும் வலையில்
      பதிவுகளை மாற்றி நினைத்து சகோதரரே என்று எழுதிவிட்டேன்!
      இப்போழுதான் ’விழி’த்துக் கொண்டேன்...:)
      மன்னியுங்கள் என்னை!

      நீக்கு
  7. எனக்குக் கைவராத ஒரு கலை பேரம் பேசுவது...எவ்வளவு குறைத்துக் கேட்பது என்று தெரியாது, அபபடியே கேட்டு கடைக்காரர் முடியாது என்று சொல்லிவிட்டால் அதற்கு மேல் பேசத் தெரியாது..உங்கள் பதிவிலிருந்தாவது கற்றுக் கொள்கிறேனா என்று பார்ப்போம் டியர்

    பதிலளிநீக்கு
  8. தேவைப்படும் போது பேரம் பேசுவதில் தவறில்லை! கூடை சுமந்து விற்கும் முதியவர்களிடம் தவிர்ப்பது நலம்!

    பதிலளிநீக்கு
  9. நாம் சாதாரண வியாபாரிகளிடம்தான் பேரம் பேசுகிறோம். லேபிள் போட்டு கொள்ளையடிப்பவனிடம் கேட்ட காசை கொடுத்து விடுகிறோம்.
    ஐயா தி.தமிழ் இளங்கோ அவர்கள் சொன்னதை வழி மொழிகிறேன்.

    பதிலளிநீக்கு
  10. பெரிய கடைகளில் பேரம் பேசாதவர்கள் அதன் வாசலில் வயிற்றுப் பிழைப்புக்காக பொருட்கள் விற்பவர்களிடம் பேரம் பேசும் நிலை இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  11. நல்ல விடயம் எடுத்து வந்தீர்கள் அம்மு பெரிய ஸ்டோர்ஸ் எப்போதும் fixed price தானே சிறிய கடைகள் பேரம் பேசுவார்கள் என்பதால் கூடக் கூட வைத்து சொல்லுவார்கள் சிலர் கேட்டு பெற்றுக் கொள்வார்கள் மற்றவர்கள் அப்படியே கொடுத்து விடவேண்டி இருக்கும்.அது அநியாயம் தானே அதனால் கேட்டு பார்த்துவிட வேண்டும். அதில் தவறு இல்லை ஆனால் நான் கேட்டுப் பார்ப்பேன் சில சமயம்(மறந்து) விட்டு விடுவேன். வறியவர்களிடம் பேரம் பேசுதல் நீங்கள் சொல்வது போல் உண்மையில் வருந்த வேண்டிய விடயம் தான். ஒரு பொருளுக்கு அதிகமான விலை கொடுப்பது மனவருத்தம் தரும் விடயம் என்றே நான் எண்ணுகிறேன். அம்மு நன்றிடா தேவையான பதிவு தான். தொடர வாழ்த்துக்கள் அம்மு

    பதிலளிநீக்கு
  12. எளிமையை தாழ்த்தியும்,படோடோபங்களை பெரிதாகவும் பார்க்கும் எண்ணம் நம்மில் இயற்கையாகவே/இருபது ரூபாய்க்கு தாஜ்மாகலின் முன் பிளாட்பாரத்தில் வாங்க முடிந்த பொருள் கண்ணாடி போட்ட கடையில் வாங்க நினைத்திருந்தால் முடியுமா என்னவொ தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  13. பெரிய கடைகளில் பேரம் பேச முடியாது....அங்கு போர்டும் வைத்திருப்பார்கள். நாமும் அங்கெல்லாம் நம் கைவரிசையைக் ஸார்....வாய் வரிசையைக் காட்டவும் மாட்டோம்...பொதுவாக மக்கள் சைக்காலஜி என்னவென்றால், நம்மை விட கீழே இருப்பவரிடம் தானே நம்ம வாயக் காட்டறது....நடைபாதை வியாபாரிகளிடம் தான்.....ஆனால் அங்கும் கூட ஒரு பொருளினி நியாயமான விலையும், அவர்க்கு அதில் கிடைக்கும் லாபத்தையும் மீறி விலை சொன்னால் பேரம் பேசலம்......

    தாங்கள் சொன்ன கருத்தைத்தான் நாங்களும்.....
    அதுக்காக கூடையில் சுமந்து, வெயிலில் திரியும் வயதானவர்களிடம் ஐந்துக்கும், பத்துக்கும் இரக்கமில்லாமல் பேரம் பேசச் சொல்லவில்லை. சீட்டிங் சீட்டு நிறுவனங்களோ, ஈமூ கோழிகளோ முழுங்கும் அளவிற்கு ஏமாறாமல் இப்படியான பாட்டிகளிடம் ஆசை ஆசையாய் ஐந்தும், பத்தும் ஏமாந்து, அவர்களுக்கே தெரியாமல் அந்த முதிய கண்களில் ஒரு நொடி வெளிச்சமும், சுருங்கிய உதடுகளில் ஒரு துளி புன்னகையும் காணும் சுகத்திற்காய் எத்தனை முறையும் ஏமாறுவேன் பேரங்கள் இன்றி:))) //


    பதிலளிநீக்கு
  14. பெரிய கடைகளில் ஐம்பது பைசா ஒரு ரூபாய் கொடுக்காமல் போகும் போது கேட்கத் தயங்கும் நாகரிகம், அதே ஐம்பது பைசா ஒரு ரூபாய்க்காகத் தெருவோரச் சிறுவியாபாரியிடம் பேரம் பேசும் போது புத்திசாலித்தனமாகி விடுகிறது.
    ஒரு ஒற்றுமை தெரியுமா அதே நடனமங்கைகளின் கருப்புவண்ணச் சிலைகளை அதே டெல்லியில் இருந்து நானும் முப்பது ரூபாய்க்கு வாங்கி இருக்கிறேன். அவர் சொன்ன விலை 150.
    என் நண்பர்கள் 60 ரூபாய் முதல் 130 வரை வாங்கி இருந்தார்கள்.
    அவர்களை விட்டு நகரும் ஒவ்வொரு அடிக்கும் விலை குறைந்து கொண்டே இருந்தது.
    பின் தொடர்ந்த அவர்களின் தொல்லை தாங்காமல் தரமாட்டார்கள் என்று நினைத்து 30 ரூபாய்க்குக் கேட்க இந்தா பிடி எனத் தலையில் கட்டி விட்டார்கள்!
    சுற்றுலா நினைவுகள் மீண்டும் எழுகின்றன...
    கட்டுரையாய்த் தொடங்கிக் கவிதையாய் முடித்த விதம் அருமை!

    பதிலளிநீக்கு