கூகிளில் சுட்டது |
ராஜபக்சேவின் சட்டையை
உங்கள் அறையில் பத்திரமாய் இருந்தபடியே
உலுக்கிவிட்ட ஒரு இற்றைக்கும்
சமந்தா வின் புன்னகைக்கு
ஒரு லைக் தட்டலுக்கும் இடையே
தட்டிவிடுகிறீர்கள் உங்கள் மனைவியின்
உப்புமா குறித்தொரு பகடியை
பரம்பரை பகையை போல்
கடத்தி வருகிறீர்கள்
உப்புமா மீதான வெறுப்பையும்
அதை செய்யும் அவள் மீதான
அக்கறையின்மையையும்
இட்லி,கோதுமை என அத்தனை மாவும்
கையிருப்பு தீர்ந்தபின்
நிராயுதாபாணியாய்-அவள்
உப்புமாவை சரணடைந்திருக்கக்கூடும்
ஒரு பயணத்தின் தொடக்கத்திலோ
அல்லது அது தந்த அலுப்பிலோ
மனமோ,உடலோ களைத்தவேளையிலோ
அது சமைக்கபட்டிருக்கலாம்
வகைகொன்றாய்உங்களுக்கும்
உங்கள்பிள்ளைகளின் சிற்றுண்டிக்கும்
குறிப்பேடுகள் தொகுக்கும் அவள்
துணைப்பொருள் தேடும் தலைவலிக்கு
ஒருநாள் ஓய்வளிக்க நினைத்திருக்கலாம்
வாரம்தோறும் வரும் ஞாயிறுகள் அல்ல
அவள் சமையலறைக்கு வாய்த்ததெல்லாம்
இந்த உப்புமா தினங்களின்
ஓரிரு மணித்துளிகள் தான்
வாழ்நாள் எல்லாம் உங்களை சகிப்பவளுக்காக
எப்போதேனும் உப்புமாகளை சகித்துக்கொள்ளுங்கள்
இல்லையேல் முயன்று தோற்ற
உங்கள் நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்
உப்புமா செய்யவும் தான் எத்தனை பொறுமைவேண்டும் என்று !
(ஒரு நாளும் என் உப்புமாவை வெறுக்காத கஸ்தூரிக்கு நன்றி)
அன்புச்சகோதரி,
பதிலளிநீக்குஉப்புமா எனும் விடுமுறை-படித்தேன். நன்றாக இருந்தது.
‘வாழ்நாள் எல்லாம் உங்களை சகிப்பவளுக்காக
எப்போதேனும் உப்புமாகளை சகித்துக்கொள்ளுங்கள்’
ரவையில் செய்கின்ற உப்புமா சர்க்கரை தொட்டு சாப்பிட எனக்குமிகவும் பிடிக்கும்... ஆனால் வீட்டில் செய்வதே இல்லை... நானும் கேட்பதும் இல்லை...நாளை விடுமுறைதானே... உப்புமாதான்!
நன்றி.
அப்படியா!! என்ஜாய் பண்ணுங்க:)
நீக்குநிலைய வித்துவான் வயலின் வாசிக்கக் கேட்கலாம் என்பதைப் போல இல்லத்தரசிகளின் கடைசி புகலிடம் உப்புமா தானே )
பதிலளிநீக்குஉண்மையில் ,ரவையை வறுக்காமல் செய்தால் களிதான் என்பதை அனுபவப்பூர்வமாய் நானும் உணர்ந்து இருக்கிறேன்(தின்று பார்த்துதான் )))))
த ம 2
ஹா...ஹா...ஹா.,,,நன்றி அண்ணா!
நீக்குஉப்புமா குறித்து அழகான கவிதை...
பதிலளிநீக்குஉப்புமாவுக்கும் நமக்கும் ரொம்பத்தூரம்.... அதனால் என் மனைவி நான் வீட்டில் இருக்கும் போது உப்புமா செய்வதில்லை...
நீங்களே எப்போதாவது தானேஅண்ணா வீட்ல இருக்கீங்க:) மிக்க நன்றி அண்ணா!
நீக்கு***வாழ்நாள் எல்லாம் உங்களை சகிப்பவளுக்காக
பதிலளிநீக்குஎப்போதேனும் உப்புமாகளை சகித்துக்கொள்ளுங்கள்***
கணக்கு "டேல்லி" ஆயிடும்னு சொல்றீங்க! :)))
சீரியல்தான் பொதுவாக காலையில் சாப்பிடுவது. உப்புமாவை எல்லாம் (முந்திரிப்பருப்பு நெறையா இருக்கும் இல்ல?) குறை சொன்னால் நான் நல்லாவே இருக்க மாட்டேன்! :)
அப்புறம் ஒன்னு சொல்ல மறந்துட்டேன். உப்புமா சாப்பிட எனக்கு தொட்டுக்க தேங்காய் சட்னி வேணும். "சுகர்" தொட்டுக்கிட்டுலாம் சாப்பிட முடியாது. :)))
**அப்புறம் ஒன்னு சொல்ல மறந்துட்டேன். உப்புமா சாப்பிட எனக்கு தொட்டுக்க தேங்காய் சட்னி வேணும். "சுகர்" தொட்டுக்கிட்டுலாம் சாப்பிட முடியாது. :)))** ஒன்னு சொன்னா கோச்சுகாதீங்க, எம்.ஜி.யார் க்கும் தேங்காய் சட்னி ரொம்ப பிடிக்குமாம்:)))
நீக்குசீரியல்தான் பொதுவாக காலையில் சாப்பிடுவது.** டயட் கான்ஷியஸ் :)
இதிலே கோவிச்சுக்க என்ன இருக்கு மைதிலி? :)
நீக்குநான் பொதுவாக என் தோல்விகளையும் வெற்றியாக ஆக்க என் பார்க்கும் கோணத்தை மாற்றிக்குவேன். சீரியல்லுக்குத்தான் வழி இருக்குனு தெரிந்தவுடன்..சீரியல்ல ஃபாட் கெடையாது, நெறையா நார் சத்து இருக்கு, நல்லதுதானேனு அதையே நல்ல விசயமாக மாற்றிக்கொண்டு போய்விடுவேன். மனச்சலவை நம் வாழ்வுக்கு இன்றியமையாதது. Not everyone can take failures or inability as positive aspects. If one learns to do that, nobody can beat him/her!
என்ன மதுரைத்தமிழனுடன் சரிக்குச் சரி நிக்கிறீங்க? அவர் பாவம் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர். உடனே "நான் என்ன கெட்டவளா?"னு ஆரம்பிச்சுடாதீங்க.:)))
தீபாவளிக்கு தீபாவளி காசை கரியாக்குவதில் நம்பர் ஒன் ஆசாமி நான். வீக்னெஸ் இல்லாத ஆட்களே உலகில் இல்லையாம். கடவுள்கூட புகழுக்கு அடிமைதானே? அது மிகப்பெரிய வீக்னெஸ் இல்லையா? எனக்கு பட்டாசு வீக்னெஸ்! எனிவே, இப்போ நாடு கடந்து வந்துவிட்டதால், நம்ம நாட்டில் "பொல்லுஷன்" கம்மியாயிருக்க்கும்னு நெனைக்கிறேன். :) எதோ என்னாலான உதவி! :)))
மகி, நிறை இருவருக்கும் நெறையா மத்தாப்பு வாங்கிக் கொடுங்க- நான் வாங்கிக்கொடுக்கச் சொன்னதாகச் சொல்லி! சரியா? :)
என்ன மதுரைத்தமிழனுடன் சரிக்குச் சரி நிக்கிறீங்க?** உங்கள மாதிரி பிரெண்ட்ஸ் கிட்டதானே சண்டை போடமுடியும்:))))
நீக்குமகி, நிறை இருவருக்கும் நெறையா மத்தாப்பு வாங்கிக் கொடுங்க- நான் வாங்கிக்கொடுக்கச் சொன்னதாகச் சொல்லி! சரியா? :)***** :)))) ஓகே:) wish you a happy diwali :)
அட அட அட சமத்து எல்லோருக்கும் உறைக்கும்படியாக நச்சுன்னு சொன்னிங்கடா எவ்வளவு பெரியவிடயம் தெரியுமா wow புரிந்துணர்தலும் அன்பும் இருந்தால் வெறுப்புக்கும் அலட்சியத்திற்கும்அங்கென்ன வேலை. அந்தவகையில் (ஒரு நாளும் என் உப்புமாவை வெறுக்காத கஸ்தூரிக்கு நன்றி) சகோதரர் மது is greatம்மா அவர் மீது மேலும் மேலும் மரியாதை கூடிக்கொண்டே போகிறது. I am really proud of him. அவருக்கு என் வாழ்த்துக்கள்....! இந்த முறை உங்களுக்கு இல்லைம்மா ஒன்லி சகோ வுக்கு மட்டும் தான். ஹா ஹா ....
பதிலளிநீக்குநீங்க இத்தனை நாளும் கஸ்தூரியை தானே பாராட்டிக்கிட்டு இருந்தீங்க செல்லம்!! பின்ன நான் வேற என் கஸ்தூரி வேறயா என்ன?:)) (வெச்சோம்ல லாக்:) thanks டா செல்லம்:)
நீக்குஆஹா...உப்புமாவுக்கு இப்படி ஒரு கவிதையா ...பேஷ் பேஷ்...
பதிலளிநீக்குthanks தோழி!
நீக்கு///ஒரு நாளும் என் உப்புமாவை வெறுக்காத கஸ்தூரிக்கு நன்றி///
பதிலளிநீக்குஆகா
நன்றி அண்ணா!
நீக்குதம 4
பதிலளிநீக்குஉப்புமாவா...?
பதிலளிநீக்குசிறந்த பாவரிகள்
தொடருங்கள்
நன்றி அய்யா!
நீக்குஉண்மைதான் சகோ... உப்புமாவின் அருமைகள் பசியின் போது தான் தெரியும், அது பெரும்பாலான நேரங்களில் விரும்பப்படுவதில்லை என்பதற்கான காரணமே அது குறைந்த நேரத்தில் செய்யப்படுகிறது என்பதனால் தான்..
பதிலளிநீக்குநம்மை போல ஹாஸ்டல் பார்டிக்கள் அல்ரெடி உப்மாவுக்கு பழகிபோயிருப்போம் இல்லையா சகோ:))
நீக்குஉப்புமா அவசர கால உணவுகள் எதுவும் குறைந்ததில்லை.
பதிலளிநீக்குஆமா அண்ணா!
நீக்குஎதன் பின்னாவது அல்லது எதன் நினைவாகவாவது பயணித்துக்கொண்டிருப்பதுதான் எழுத்தின் பலன் போலும்/
பதிலளிநீக்குfact அண்ணா! மிக்க நன்றி!
நீக்குஉப்புமா கவிதை - உப்புமா போலவே சுவைக்கிறது!
பதிலளிநீக்குநன்றி அண்ணா!
நீக்கு///ஒரு நாளும் என் உப்புமாவை வெறுக்காத கஸ்தூரிக்கு நன்றி)///
பதிலளிநீக்குவாயில்லாத புள்ளைக்கும் சண்டே அன்று உப்புமா பண்ணி போட்டதும் அல்லாம இப்படி ஒரு உப்புமா கவிதையா?
ஹலோ ! உங்க ஒரு ட்விட் டை பார்த்துதான் இதை நான் எழுதினேனே:)))
நீக்குநல்ல வேளை என் ட்வீட்டை பார்த்துதான் இதை எழுதினேண் என்று சொல்லி இருக்கீங்க.. அப்படியில்லாமல் என் ட்வீட்டை பார்த்துதான் உப்புமா பண்ணீங்க என்று சொல்லி இருந்தா கஸ்தூரி சார் இப்ப அருவாளை எடுத்துகிட்டு இந்நேரம் அமெரிக்காவை நோக்கி பறந்து வந்து கொண்டிருப்பார்
நீக்கு
பதிலளிநீக்கு//ஒரு பயணத்தின் தொடக்கத்திலோ அல்லது அது தந்த அலுப்பிலோ மனமோ,உடலோ களைத்தவேளையிலோ
அது சமைக்கபட்டிருக்கலாம்//
அந்த பயணத்தின் போது காரை, பைக்கை ஒட்டியவர் கணவராக இருக்கலாம் அவர் தோள்மீது சாய்ந்து தூங்கிவிட்டு அல்லது ரயில் பஸ் பயண்த்தில் கணவர் மடி மீது படுத்து உறங்கிவிட்டு அலுப்பிலோ மனமோ,உடலோ களைத்தவேளையிலோ என்று கதைவிடுவதை என்னான்னு சொல்லுறதுங்க
ரைட் ! நீங்க பணயம் முடிந்துடன் ஆண்கள் போல பெண்களால் உடனே ஓய்வு எடுக்கமுடியாதுனு தான் நான் இதுல சொல்லிருக்கேன். ஆர்க்யு பண்ணுறதுக்கு முன்னால கொஞ்சம் யோசிச்சு பாருங்க:)
நீக்குஹலோ ஆண்கள் வண்டியை ஒட்டுவதாலோ அல்லது உங்களை சுமப்பதாலோ அவர்கள் பயணம் முடிந்ததும் கண்டிப்பாக ஒய்வு எடுக்கதானே வேண்டும்...
நீக்குநெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்ன தெரியமா என்றொரு கார்த்திக் சௌந்தர்யா பாடல் பார்த்திருகீங்களா சகா, இல்ல சுமப்பதுன்னு சொன்னவுடன் அந்த பாட்டு நினைவுக்கு வந்தது:) என்ன சொன்னாலும் உங்களுக்கு புரியவைச்ச முடியாது, ஏன்னா உங்களுக்கு அல்ரெடி புரிந்த விஷயம், தூங்குற மாதிரி ஆக்ட் பண்றவங்கள எழுப்பமுடியாதே:))))))
நீக்கு///எப்போதேனும் உப்புமாகளை சகித்துக்கொள்ளுங்கள்//
பதிலளிநீக்குஉப்புமாவை சகித்து கொண்டுதான் சாப்பிடுகிறோம் இல்லை என்றால் பூரிக்கட்டையால் அடித்தே எங்கள் உடம்பை உப்ப வைத்துவிடுவீர்களே
இல்லையானாலும் உங்களை கட்டிகிட்ட அந்த மகராசிக்கு கோவில்கட்டிதான் கும்பிடனும், அவங்க பேரையாவது தெரிஞ்சுக்க ஆசை. பாலா அண்ணா தான் அவர் ட்ராஜிடியை சொல்லும்போது அழகா மனைவிக்கும் கிரடிட் கொடுத்து சரிதா னு சொல்லுறார்:))(உங்க ஒரிஜினல் பேர் எனக்கு தெரியுமே! ஒருமுறை தமிழ்மணம் மக்கர் பண்ணும்போது லிஸ்ட்ல காட்டுச்சு:)
நீக்குஎன் ஒரிஜனல் பேரை நான் உங்களுக்கு நேரடியாக என் டிரைவர் லைசன்சை காண்பிக்காத நேரம் வரை உங்களுக்கு தெரியாது ஏன் நான் வேலை பார்க்கும் இடத்தில் கூட நான் அணிந்திருக்கும் ஐடியில் கூட ஒரிஜனல் பெயர் இருக்காது எனது நிறுவனத்திடம் சொல்லி அதை கூட funny name ஆக மாற்றிதான் இருக்கிறேன் அதுமட்டுமில்லை எனது உறவினர்களுக்கு கூட எனது ஒரிஜனல் பெயர் கூட இன்னும் தெரியாது எல்லோரும் எனது நிக் நேமைதான் சொல்லி அழைப்பார்கள் ஏன் நமது வலைத்தள நண்பர்களிடம் பகிரும் போது கூட அவர்களுக்காகவே ஒரு ஒரிஜனல் நேம் என்ரு சொல்லி ஒரு நேமை வலம் வரஸ் செய்து இருக்கிறேன் ஹீ.ஹீ.. நான் மதுரக்காரன் மட்டுமல்ல ஒரிஜனல் திருநெல்வேலிக்காரன் கூட அல்வா நம்ம ஸ்பெஷாலாலிட்டி ஹீஹீ
நீக்குOK உலகத்திலேயே அதிசயமான அந்த பேரை நீங்களே வச்சுகோங்க Mr.லைட். நாங்க மணப்பாறை so முறுக்கிட்டு போறோம்:)))
நீக்குநீங்க் பண்ணிய உப்புமா வாயில் வைக்க முடியுமோ சுவையாக இருக்குமோ என்பது பற்றி எனக்கு தெரியவில்லை ஆனால் உப்புமா பற்றிய இந்த கவிதை மிக அருமையாக வந்திருக்கிறது. அதை பாராட்டி உங்களுக்கு தங்கத்தில் பேனா செய்து தரலாம் என்று நினைத்தேன் அதன்பின் தான் தங்கத்துகே தங்கம் கொடுத்தால் நல்லா இருக்காது என்று நினைத்து விட்டுவிட்டேன். அதனால் என்று நான் உங்களை பார்க்கிறேனோ அன்று உங்களுக்கு உப்புமா பண்ணி போட்டு அசத்ஹிடலாம் என நினைக்கிறேன்
பதிலளிநீக்குநீங்க சமைக்க ரெடி! ஆன மாமி சாப்பிட்டு ஒரு மணிநேரம் ஆனதை கன்பார்ம் பண்ணினா தான் நான் சாப்பிடுவேன், சொல்லிட்டேன் , ஏன்னா கஸ்தூரி அடிக்கடி சொல்வதுண்டு"எனக்கு இருக்கிறதே ஒரே ஒரு மனைவி":))
நீக்கு///கஸ்தூரி அடிக்கடி சொல்வதுண்டு"எனக்கு இருக்கிறதே ஒரே ஒரு மனைவி":)///
நீக்குபாத்தீங்களா அவர் தனக்கு இருக்கும் காதலியை பற்றி சொல்லாமல் விட்டுவிட்டார்
ஹலோ நான் சமைச்சதை சாப்பிட ஆரம்பிச்சீங்க நீங்க டபுள் தங்கமாக மாறிவிடுவீங்க...
நீக்குஅப்போ மாமி தான் உங்கள் காதலி+மனைவின்னு ல நினைச்சேன்னு. அவங்க பூரிக்கட்டை எடுகிறதில தப்பே இல்ல:))
நீக்குமாமி எனது பழைய காதலி இன்றைய மனைவி. காதலிக்கு மனைவி ப்ரோமஷன் கொடுத்ததும் என் பவர் போயிடுச்சு அதாவது ஜெயலலிதா கட்சியின் தலைவராக ஆனவுடன் எப்படி அவரை தூக்கிவிட்டவர்களுக்கு பவர் போச்சோ அதுமாதிரிதான் இதுவும். அந்த அனுபவத்தினால்தான் இப்போது உள்ள புதிய காதலிகளுக்கு புரோமோஷன் கொடுக்காம வைச்சுருக்கேன்
நீக்குஉப்புமா புராணம்!..
பதிலளிநீக்குஉப்புமாவைப் போலவே சுவை!..
அப்படி சொல்லுங்கண்ணா! நன்றி:)
நீக்குஉப்புமா என்றாலே ஊறுதே வாய்மிக
பதிலளிநீக்குதப்பென்பார் யாரோ தவிர்த்து!
அசத்திட்டீங்க உப்புமாவால்! அருமை!
வாழ்த்துக்கள் தோழி!
ஆஹா! குரள்பா !! நன்றி தோழி!
நீக்குஉப்புமா பற்றி மட்டும் அல்ல,அடுக்களை வேலை செய்யும்
பதிலளிநீக்குஅனைத்து பெண்களின் நிலை பற்றியும்,அவர்களின் ஓய்வின்மை பற்றியும் மிக அருமையாக சொன்னீர்கள் தோழி.கஷ்டப்பட்டு சமைத்ததை அசால்ட்டாக குறை சொல்லும் ஆண்கள் அதிகம்.எப்போதுதான் திருந்துவார்களோ?
மேட்டரை நீங்க தான் கரெக்டா கேட்ச் பண்ணிருகீங்க தோழி:)) மிக்க நன்றி!
நீக்கு//இட்லி,கோதுமை என அத்தனை மாவும்
பதிலளிநீக்குகையிருப்பு தீர்ந்தபின்
நிராயுதாபாணியாய்-அவள்
உப்புமாவை சரணடைந்திருக்கக்கூடும்
//நான் அறிந்தவரை வீட்டில் சமைக்கும் ஆண்கள், என்னக்கொடுமையானாலும் சரி உப்புமாமட்டும் செய்யவே மாட்டார்கள். கவிதை எழுதி சாக்கு சொன்னாலும் குற்றம் குற்றமே.
***வீட்டில் சமைக்கும் ஆண்கள்***
நீக்குநல்லா பாருங்க, நான் அவள் சரணடைந்திருக்க கூடும்னு தானே எழுதிருக்கேன்:)) கேள்வியிலேயே க்ளு கொடுத்த நண்பருக்கு நன்றி:) உங்க பேர் வித்யாசமா இருக்கு, டக்குனு சொல்ல முடியல!!!!!! முதல் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி!
நான் சொல்ல வந்தது, ஆண்களின் ஜீனிலேயே இருக்கும் உப்புமா மீதான ஒவ்வாமையை, பெண்கள் புரிந்துகொள்ளாமல் கவிதைவேறு கிண்டுகிறார்களே என்பதுதான் :)
நீக்குmen are from mars, women are from venus:) so இது முடியபோறதே இல்லை:))
நீக்குஉப்புமாவை மட்டுமா பொறுத்துக் கொள்கிறோம்! இன்னும் என்னவெல்லாமோதான்! நகைச்சுவைக்கு உங்களை கலாய்க்கிறோம்! இல்லாவிடில் யாரைப்போய் கலாய்ப்பது? எங்க வீட்டில் எங்கம்மா செய்யும் உப்புமா அடிக்கடி காலை உணவு! அதனால் உப்புமா பழகிவிட்டது டீச்சர்!
பதிலளிநீக்குஅட ! ப்ரீயா விடுங்க சார் :)) இதுக்கெல்லாம் கோபப்படுவேனா:)) மேல பாருங்க மதுரை தமிழன் எப்படி கழுவிக்கழுவி ஊத்திருக்கிரார்னு:)))
நீக்குசகோதரி! கவிதை அருமை! ஆஹா நான் அடிக்கடி செய்யும் உப்புமா புராணமா இன்று! பாலக்காட்டில் இருக்கும் போது தன் கையே தனக்குதவி! எனவே பாதி நாள் உப்புமாதான்.....வீக் என்ட் தான் வீடு! நிலம்பூர்! ....
பதிலளிநீக்குஉப்புமா கை கொடுக்கும் தெய்வம்! வயிற்றிற்கு! ..டக்குனு செய்ய ஆனால் வறுக்காமல் செய்தால்....ஐயகோதான்....எனவே அதையும் ஏற்கத்தான் வேண்டும்! நான் உப்புமாவிற்கு ஆதரவு! - துளசி
நாங்கள் இருவருமே! ஆதரவுதான்.....
உப்புமா பத்தி ஆரம்பிச்சேன்னு வைங்க...பெரிய பதிவாகிடும்.......உப்புமா பிடிக்காத மதுரைத் தமிழனும் ........கூட அம்மா தாயே நான் வரல இந்த விளையாட்டுக்குனு சொல்லி "லைக்" போட்டுருவாரு! ஹஹஹ...- கீதா
அப்படா! நம்ம உப்புமா சங்கத்துக்கு ஒரு ரெண்டு மூணு பேர் தேறிடாங்க :)))
நீக்குநன்றி சகாஸ்:)) உங்க உப்புமா பதிவு காண ஆவலாய்!!
உப்புமா கவிதை அழகு ஆனால் எனக்கு பிடிக்காது:))))
பதிலளிநீக்குஒ! அப்படி யா:((
நீக்குஉப்புமா அதிகம் பிடிக்காது என்று சொல்ல வந்தேன் :)))
பதிலளிநீக்குஇப்போ புரிஞ்சுடுச்சு சகோ:)) மிக்க நன்றி!
நீக்குநானும் உப்புமாவை வெறுக்காத இனம்தான். உனக்கும் மதுவுக்கும் மகிழ், நிறைக்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்மா.
பதிலளிநீக்குஅண்ணா,
நீக்குஇவ்ளோ டீடைல விஷ் பண்றது ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா! மிக்க நன்றி அண்ணா! தங்களுக்கும், குடும்பத்தார்க்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் அண்ணா!
முதல்ல அந்த படத்தை பார்த்தவுடன், அது பல வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட தங்களுடைய படம் என்று தான் நினைத்தேன். ஹீ.. ஹீ...ஹீ...
பதிலளிநீக்குகவிதை அருமை. இந்த உப்புமா கவிதையை படிப்பதற்கும் பொருமை வேண்டும் தானே சகோ!!!
இப்படி உப்புமாவையே அடிக்கடி செய்யும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதற்காக. நண்பர் கஸ்தூரிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். அவருக்கு மட்டும் வாழ்த்துக்கள் இல்லை, என்னுடைய இரண்டு மருமகள்களுக்கும் தான். பாவம் அவர்கள், ஒன்றும் சொல்லாமல் இந்த உப்புமாவையே சாப்பிடுவதற்கு.
நான் ஒன்னும் அவ்ளோ ஓல்ட் இல்ல சகோ:////
நீக்குஇப்படி உப்புமாவையே அடிக்கடி செய்யும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதற்காக. நண்பர் கஸ்தூரிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். அவருக்கு மட்டும் வாழ்த்துக்கள் இல்லை, என்னுடைய இரண்டு மருமகள்களுக்கும் தான். பாவம் அவர்கள், ஒன்றும் சொல்லாமல் இந்த உப்புமாவையே சாப்பிடுவதற்கு.** கர்ர்ர்ரர்ர்ர்ரர் இப்படி கலாய்கிறீங்க சகோ:((
அப்பப்பா உப்புமாவுக்கும் கவிதை சூப்பர்...
பதிலளிநீக்குமுதல் முறை வரும் தோழிக்கு நன்றி:)
நீக்குசாரி சகோ !
பதிலளிநீக்குநான் ரொம்ப லேட்.... எல்லாம் உப்புமா பிடிக்காத காரணம்தான் !!!
உப்புமா பற்றிய கவிதை " உப்புமா " அல்ல, சுவையான பிரியாணி !!!
ஒரு தகவல் துணுக்கு ! : உப்புமா கம்பெனி என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்... ஷூட்டிங்கின் போது காலை டிபனாக இட்லி, வடை, உப்புமா கொடுப்பார்களாம்... வசதி குறைவான அல்லது நொடிந்த கம்பெனியின் தயாரிப்பென்றால் " உப்புமா " மட்டுமே டிபன் ! பெயர் காரணம் புரிகிறதா ?!
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
உன் பாணியில்லாத -கொஞ்சம் நீள நீளமான சொற்களுடனான கவிதை.
பதிலளிநீக்குவேறுவழியில்லாமல் உப்புமா நானும் செய்திருக்கிறேன் - என் மனைவிக்கு உடல்நலமில்லாதபோது, நம்ம ஸ்பெஷல் ஐட்டமே உப்புமா ப்ளஸ் முட்டை மாஸ்தான்.
“வாரம்தோறும் வரும் ஞாயிறுகள் அல்ல
அவள் சமையலறைக்கு வாய்த்ததெல்லாம்
இந்த உப்புமா தினங்களின்
ஓரிரு மணித்துளிகள் தான்“ - ரொம்ப ரசித்த வரிகள்.
என்ன இதிலேயே கொஞ்சம் உருளைக்கிழங்கு, கேரட், கோஸ் போன்றவற்றைப் பொடிப்பொடியாய் நறுக்கிப்போட்டு கொஞ்சம் இஞ்சியைத் தட்டிப்போட்டு, ஒற்றைத் தக்காளியுடன் ஓரிரு பச்சைமிளகாயைக் கூட நறுக்கிப்போட்டுப் பார்... அதுதான் ரவா பாத்! மினி டிஃபன்! சூப்பரா இருக்கும். இன்றும் என் பிள்ளைகள் என் சமையலில் விரும்பிக் கேட்பது இது!
அன்புத் தங்கைக்கு.
பதிலளிநீக்குகஸ்தூரிக்கு உப்புமாமேல் வெறுப்பு வராததற்குக் காரணம்...அதில் கவிதையுமல்லவா கலந்திருக்கிறது..
..நல்ல மணமான,சுவையான கவிதை!
...நீண்ட நாளுக்குப் பின் என் வலையில் "வள்ளுவத்தாய்" எழுதியிருக்கிறேன்..
நன்றி.
உனக்குள்ளிருக்கும் கவிஞர் தன்னை வெளிப்படுத்த துவங்கிவிட்டார்மா....சூப்பர்..நச்னு..இருக்கு
பதிலளிநீக்குத.ம.8
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஉப்புமா என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் புனைந்த கவிவரிகளும் நன்று.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-