இதோ 2015 வந்துடுச்சு. டெக்னிகலா உலகம் ரொம்ப முன்னேறி இருக்கு! குழந்தைகள் கூட இப்போ பாரதி சொன்ன மாதிரி விளையாடாமல், டெம்பிள் ரன், candy crush தான் பண்ணுறாங்க. இன்னும் அந்த பழைய ஆய கலைகள் அறுபத்தி மூன்று தான் என சொல்லமுடியாது இல்லையா... நிறைய கலைகளில் மாற்றங்கள் வந்திருக்கு. புதிதா பல கலைகள் தோன்றிருக்கு. போன பதிவில் food carving பத்தி பார்த்தோம்ல. அது போல இப்போ கலக்குற சில கலைகளை பார்ப்போம்.
செல்பி (selfi)
தன்னை தானே போட்டோ எடுத்துக்கிற இந்த செல்பி தான் இப்போ செம hot trend. சும்மா நம்மல நாமே போட்டோ எடுத்துகிறது கலையானு கேட்டீங்கன்னா இன்னும் அந்த trend ல குதிக்காத ஆசாரமான ஆளு தான் நீங்க. பின்ன ஒரு பெர்பெக்ட் செல்பி எடுக்கிறதுக்குள்ள தாவு தீந்து போய்டும்.. அதில் பலர் சேர்ந்து எடுக்கிற groupie வேற இப்போ கிளம்பி இருக்கு.
போட்டோ ஷாப்
எடுத்த செல்பி யை அப்படியே உங்க f.b லஏத்துற ஆளா நீங்க!! நீங்க ஹமாம் சோப்பைவிட நேர்மையானவர்னு சொல்லலாம்...இல்ல, பாவம் அப்பாவின்னு சொல்லலாம். நம்ம படத்தை Photoshop ல work பண்ணும் போது யாருகண்டா நாமலே கூட அழகா தெரிய வாய்ப்பிருக்கு. மதுரை தமிழன், கில்லர்ஜி அண்ணா எல்லாம் இந்த பீல்ட்ல இப்போ கலக்கிகிட்டு இருக்காங்க!
ஜோலி என்னம்மாஜோலிக்கிறாங்க..எல்லாம் போட்டோஷாப்ஜொலித்தான்:) |
சோசியல் நெட்வொர்க்
இந்த f.b, blog, goggle +, ட்விட் மட்டும் இல்லேன்னா பல சூப்பர் எழுத்தாளர்களை நமக்கு தெரியாமலே போயிருக்கும். ஆட்டோவுக்கு பின்னாடி ஸ்டேடஸ் போட்ட தமிழ் பரம்பரை இளைஞர்கள் தினம் தினம் தன் சமூக வலை தளத்தில் எழுதிவிட்டு comment க்காக காத்திருப்பது ஒரு தவம் போல கருதுகிறார்கள்! அதுல பல விஷயங்கள் பயனுள்ளதாவும், சுவாரஸ்யமாவும் இருக்குங்கறத ஒத்துக்கத்தான் வேணும் இல்லையா!நான் பெயர் குறிப்பிடாத எல்லா நண்பர்களும் இந்த வகையில் வந்துடுவாங்க:)
க்வெல்லிங்
உலோகம், அப்புறம் களிமண் போன்றவற்றில் எல்லாம் நகை செய்து ஓய்ந்த பெண்கள் இப்போ பேப்பர் நகைகளில் கலக்குறாங்க நாம் தோழிகள் இளமதி, பிரியசகி , ஆதிவெங்கட், அஞ்சலின் போன்றோர் என்ன அழகா quelling பண்றாங்க!!
இது கம்மல் தான், |
இதுவும் பேப்பர்நகை தான்! |
ஓவியம்
ஓவியம் தாளில் மட்டும்தான் என்ற காலம் மலையேறி ரொம்பநாள் ஆச்சு! சுவர் ஓவியங்கள், சாலை ஓவியங்கள், 3-d ஓவியங்கள் என இப்போ எவ்ளோ இருக்கு!!!
என்னமா அசத்துறார்!! |
ஹலோ! இது ஓவியம் தான் .நம்புங்க. |
DIY (do-it- yourself)
எளிமையான பொருட்களை கொண்டு, அல்லது art out of waste என்ற தத்துவத்தை கொண்டோ உருவாக்கப்படும் சின்ன சின்ன கலைப்பொருட்கள் இருக்கே. இவங்களுக்கு மட்டும் எப்படி இப்படி எல்லாம் தோணுது என வியக்கவைக்கும்! நம்ம கிரேஸ், தமிழ் முகிழ் போன்றோர் blog ல இதுபோன்ற விசயங்களை பார்க்கலாம்
குறும்படங்கள் மற்றும் திரைப்படங்கள்
நாடக்கலை தான் இன்று பரந்து விரிந்து சினிமா வாகும், short film ஆகவும் மாறி இருக்குனு நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியத்தில்(எம்புட்டு நேரம் நீ சொல்லித்தான் மத்ததெல்லாம் தெரிஞ்சுதுன்னு நினைச்சியா?? ஆக! ஆரம்பிச்சுட்டாங்களே! ரைட்டு இதோட அப்பீடக்கிகோம்)அதுக்குமுன்னால நம்ம சகாஸ் தில்லையகம் துளசி அண்ணா, ஆ.வி., அரசன் சகோ நடிச்ச இந்த குறும்படத்தை பாருங்க.
பி.கு
இன்னும் பற்பல மைக்ரோ,macro கலைகள் இருக்கு, அவற்றை இன்னொரு பதிவில் பார்ப்போம். சென்ற பதிவில் சாம் அண்ணா விஜூ அண்ணாவிற்கு கொடுத்த அசைன்மென்ட் இது. நாம தான் ஆர்வ கோளாறு ஆச்சே!! இந்த 150 வது பதிவை எவ்ளோ ஸ்பெஷலா போடலான்னு யோசிச்சுகிட்டிருக்கும் போது(அப்படா ஒரு வழியா சொல்லியாச்சு) சாம் அண்ணா கொடுத்த அசைன்மெண்ட நாமளும் செய்தா என்ன என்று தோன்றியதன் விளைவு. எல்லோருக்கு என் இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்!
150 ??!!!!
பதிலளிநீக்குVazlthukkal.
Ta ma ?
ஆஹா! first reply:) thanks அண்ணா:)
நீக்குகணினி பிரச்சனைஇஇ!
பதிலளிநீக்குபதிவு 150 ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ..!
வாழ்த்துகள்..
15 இல் இது 500 ஆகட்டும்..!
ரொம்ப ஆசையோ ““யானை பிழைத்த வேல்!!““
நன்றி!
த ம ?!!!
ஓகே ! ஓகே! எண்ணிய எண்ணியாங்கு ஏத்துவர்:))))) மீண்டும்மீண்டும் நன்றி அண்ணா!
நீக்குஇந்த செல்பிக்கு விகடனில் போட்டியே வைத்திருக்கிறார்கள்! செல்பியால் உயிரிழந்தவர்களும் உண்டு!
பதிலளிநீக்கு3d ஓவியங்கள் உண்மையிலேயே அசத்துபவை. நானும் ரொம்பவே ரசித்திருக்கிறேன்.
அந்தக் குறும்படம் பார்த்து நானும் ரசித்திருக்கிறேன்.
மிக்க நன்றி ஸ்ரீ சகோ. இந்த ஆண்டு முதல் உங்க blog கை follow பண்ணபோறேன்:) மிக்க நன்றி!
நீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி சகா:)
நீக்கு
பதிலளிநீக்கு150 க்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். எங்களையும் அழகாக அறிமுகப்படுத்தி பெருமை படுத்தியதற்கு பாராட்டுக்கள். டீச்சரம்மா பதிவில் அறிமுகம் கிடைச்சா யாருக்குதான் சந்தோஷமாக இருக்காது. சரி மீண்டும் உங்களை அடுத்தவருடம் சந்திப்போம்
** எங்களையும் அழகாக அறிமுகப்படுத்தி பெருமை படுத்தியதற்கு பாராட்டுக்கள்.** யாரை யாரு அறிமுகபடுத்துறது! நான் லிங்க் மட்டும் தான் கொடுத்திருக்கேன் தல:) என்றாலும் இந்த ஜூனியருக்கு இவ்ளோ சப்போர்ட் பண்ணுறதுக்கு ரொம்ப thanks சகா:)
நீக்குவாழ்த்துக்கள் புத்தாண்டுமிகச்சிறப்பானதாகட்டும்( அம்மா, சார்,
பதிலளிநீக்குபெப்பி, மகிஎல்லாருக்கும்),அப்டேட்+கலை=சூப்பர்.சகோதரிகளின்
தளம் சென்று பர்க்கிறேன்.ஒருசிலவிடயங்கள் நானும் செய்து
கொண்டிருக்கிறேன் அதையும் தளத்தில்போடுவோம்(ஏனோ
உங்ககிட்டச்சொல்லல,மத்தகதைஓடிக்கிட்டே.........;)))
மிக்க நன்றி டீச்சர்:) நீங்க என்கிட்டே ஒரு முறை சொன்னீர்கள், அர்டிபிசியால் ஜ்வெல்ஸ் பத்தி...போட்டோகளை ஆவலோடு எதிர்பார்கிறேன்:)
நீக்குபுத்தாண்டில் புதுச்சிந்தனைகள் பல பிறக்கட்டும்.வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி அண்ணா!
நீக்கு"அன்பும் பண்பும் அழகுற இணந்து
பதிலளிநீக்குதுன்பம் நீங்கி சுகத்தினை பெறுக!
வலைப் பூ சகோதரியே!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
நட்புடன்,
புதுவை வேலு,
www.kuzhalinnisai.blogspot.fr
மிக்க நன்றி சகோ:)
நீக்குதங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதம 1
மிக்க நன்றி அண்ணா!
நீக்குஅருமை! எல்லாமே! சில நொடி சினேகம் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி! செல்ஃபி ஆம் இப்போது மிகவுமே படுத்துகின்றது. ஆனால் பழக்கமில்லை எடுத்து....3 டி ஓவியங்கள் அருமை. பார்த்திருக்கின்றோம்....
பதிலளிநீக்குதோழி...நான் மதுரைப் பதிவர் விழாவுக்கு வருவாதாக இருந்ததால் வரும் போது உங்கள் செல்லங்களுக்கு இந்தக் க்வில்லிங்க் நகைகள் - நான் செய்தது - கொண்டு வர எடுத்து வைத்திருந்தேன். ஆனால் இறுதியில் வர இயலவில்லை. வருத்தமாகிவிட்டது. கீதா.
ஆஹா! நீங்க எந்த துறையை தான் விட்டுவைக்கலை!!! ஓகே அடுத்த சந்திப்பு புதுக்கோட்டையில் தானே, அப்போ வாங்கிறேன்:)))))
நீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅன்புடனும், நட்புடனும்,
துளசிதரன், கீதா
மிக்க நன்றி சகாஸ்:)
நீக்குபேச்சோடு பேச்சாக - சக வலைப்பதிவர்களையும் அறிமுகம் செய்தாயிற்று!..
பதிலளிநீக்குஅன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..
அதே! அதே!
நீக்குமிக்க நன்றி அய்யா!
ரசிக்கத்தக்க 150வது பதிவு ,வாழ்த்துகள்...நேற்று பல்லி மாடலில் ஒரு காதணி (படம் )பார்த்தேன் ,நல்ல வேளை,அது உங்கள் கண்ணில் படவில்லை போலிருக்கு :)
பதிலளிநீக்குத ம 2
பல்லி மாடலா???? நல்லவேளை நான் பார்க்கலை. எனக்கு பல்லினா அலர்ஜி:((
நீக்குதமவுக்கு நன்றி பாஸ்:)
மென்மேலும் சிறந்த ஆக்கங்கள் பொலியட்டும் தோழி ! கை
பதிலளிநீக்குவேலைகள் செய்தே கலக்கும் எங்கள் இளவரசிகளுக்கும் எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .வாழ்க வளமுடன் .
தோழிகளை புகழும் உங்க மனது அழகு:))) நன்றி தோழி!
நீக்குவாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஇனிய 2015 புத்தாண்டு வாழ்த்துகள்
நன்றி அண்ணா!
நீக்குவரும் புத்தாண்டில் உனது நூல் வெளிவர வாழ்த்துகள்மா...
பதிலளிநீக்குஎங்க கீத்தா... புத்தகம்னு பேச்செடுத்தாலே ஓடிருது தங்கச்சி... நாமதான் வளைச்சுப் புடிச்சு இழுத்தாரணும் போலருக்குது...
நீக்கு:))
நீக்குஇருவரின் அன்புக்கும் நன்றி!
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தோழி!
பதிலளிநீக்குஉள்ளம் வருடிய உன்னதப் பதிவு. அதில் க்விலிங் கைவேலையோடு
என்னையும் இணைத்து நினைவு கூர்ந்த உங்கள் அன்புகண்டு
திகைத்து நிற்கின்றேன்! மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி தோழி!
அடேயப்பா!.. பதிவுகள் நூற்றைம்பதை எட்டிவிட்டதோ..!
அருமை!.. அருமை!!
இன்னும் பல பல பதிவுகள் படைத்துச் சாதனை பல புரிய
உள்ளன்போடு வாழ்த்துகிறேன்!
நான் உங்களை பார்த்து முதன்முதலில் ப்ரமித்தத்து இந்த விசயத்தில் தான் தோழை! வாழ்த்துக்கு மிக்க நன்றி தோழி!
நீக்குஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரி.....
பதிலளிநீக்குநன்றி அண்ணா!
நீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ....mythili ..நீங்களும் விரைவில் செய்யுங்க quilling ..congratulations for the 150th post
பதிலளிநீக்குசெஞ்சுட்டா போச்சு:) மிக்க நன்றி தோழி!
நீக்குரசித்தேன்...
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
நன்றி அண்ணா!
நீக்குகலைகள் இப்போதுள்ள ட்ரெண்ட்படி மாறிக்கொண்டே உள்ளது. எல்லோரும் பயன்படுத்த வாய்ப்பு கிடைப்பதே பெரிய விசயம் அல்லவா. சக வலைப்பதிவர்களின் திறமையையும் அடையாளப்படுத்தியது சிறப்பு. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅப்படியா! நன்றி சகோ:)
நீக்குமனம்நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோ!
நீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குமிக்க நன்றி சகா!
நீக்குதங்களுக்கும், பதிவுலக நட்புகள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி !
நீக்குபுத்தாண்டு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமிக்க நன்றி !
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி சகோ !
நீக்குஆஹா அருமையான தொகுப்பு கலைகள் பெருகிக் கொண்டு தான் வருகிறது என்பதை சொல்லி மாளாது அத்தனை உள்ளது தான். மிக்க நன்றி. நம் வலை உறவுகளும் சளைத்தவர்கள் இல்லை என்பதையும் எடுத்துக் காட்டியது மிகவும் சிறப்பே. quilling அனைஹ்டும் அசத்தலே
பதிலளிநீக்குஅம்முவின் திறமைகள் அனைத்தும் வெளிவரவும் ஆக்கங்கள் பெருக்கவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்மா ...!
மகிழ்நிறைக்கும் மது அம்முவுக்கும் அனைத்து சிறப்புகளும் அமைந்து மகிழ்வினில் திளைக்க இவ்வினிய புத்தாண்டில் மனமார வாழ்த்துகிறேன் .....!
இன்னும் ரெண்டு பதிவு அளவு மேட்டர் வைத்து கொண்டிருக்கிறேன் இனியாச்செல்லம்:) அவ்ளோ கலைகள் இருக்குல்ல!!! மிக்க நன்றி டா !
நீக்குஅடடா நான் எப்படி இதை கவனிக்காது விட்டேன் ம்..ம்..ம்.. மன்னிச்சுக்க தாயி 150 து 1500 ஆகி 150000க்கும் மேல் ஆகணும் என்று வாழ்த்துகிறேன். குடு குடு கிழவி ஆனதுக் க்கபுறமும் அனைத்தையும் வாசித்து கருத்து இடனும் ok வா ஹா ஹா..... நடக்கட்டும் நடக்கட்டும் அம்முக் குட்டி.
நீக்குஅட விதம் விதமா கலக்குறாங்களே மைதிலி டியர் னு படிச்சுட்டே வந்தா..என் பெயர்!! உங்க அன்பில் எப்பொழுதும் நான்...நன்றி டியர்..
பதிலளிநீக்குதமிழ் தளத்தை விட கைவினைகள் ஆங்கிலத்தளத்தில் நிறையப் பகிர்ந்திருக்கிறேன்..
அதன் முகவரி, http://innervoiceofgrace.blogspot.com/
உங்களுக்கும் அண்ணாவுக்கும் நிறை, மகி செல்லங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் டியர் :)
இதச் சொல்ல மறந்துட்டேன் டியர்...மூன்று ஐம்பது பதிவுகள்!!! ஆயிரம் ஆயிரமாய் வளர வாழ்த்துக்கள் டியர்! அடுத்த பதிவர் சந்திப்பில் உங்கள் நூலும் வெளிவர வாழ்த்துகள்! :)
நீக்குஒன்னு தெரியுமா கிரேஸ்...இந்த பதிவை தட்டி முடிக்க ரெண்டு மணிநேரம் ஆச்சு, so நான் பிளான் பண்ணினபடி உங்க INNER VOICE ப்லாக் எடுக்க இன்னும் டைம் ஆகும்னு இது கிடைத்தவுடன் இணைத்து விட்டேன். மன்னிக்கவும்:)
நீக்குநிறை மங்கலம் நீடு புகழ் பெற்று நல்வாழ்வு வாழ இறைவன் நல்லருள் பொழிவானாக!..
பதிலளிநீக்குஅன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..
மிக்க நன்றி அய்யா !
நீக்குஒண்ணரை சதம் போட்டாச்சாம்மா...? மகிழ்வா இருக்குது பாக்க. சுவர் ஓவியங்கள் அசத்திருச்சு. அசைன்மெண்டை அழகாச் செஞ்சிருக்க. உனக்கும் மதுவுக்கும் குட்டிச் செல்லங்களுக்கும் இதயம் நிறைந்த இனிய பிறந்ததின நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு**மகிழ்வா இருக்குது பாக்க. சுவர் ஓவியங்கள் அசத்திருச்சு. அசைன்மெண்டை அழகாச் செஞ்சிருக்க.**மிக்க நன்றி அண்ணா!
நீக்கு150க்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇப்பத்தான் புரியுது, கில்லர்ஜியோட படத்துல எப்படி இவ்வளவு பெரிய மீசைன்னு .
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
ஹலோ சகோ மைதிலி சொன்னது புகைப்படக்கலையைப்பற்றி மீசையை பென்சிலில் வரைந்து வச்சு இருக்கேனு நினைச்சீங்களோ.... நேரில் பார்த்தவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள் ஏன் ? Australia Sydney Banks town Airportல, பார்கும்போது தெரியலையா ?ஆமாமா நீங்கதான் கழட்டி விட்டுட்டு போயிட்டீங்களே...
நீக்குஹா..ஹா...ஹா...சரிசரி உங்க செல்ல சண்டையை அப்புறம் வைச்சுக்கலாம்:)) happy new year சகோஸ்:)
நீக்குசகோ, என்னோட நீண்ட....... கருத்துரை என்ன ஆச்சு... ?
பதிலளிநீக்குஅதானே என்னாச்சு???????????
நீக்கு150 பதிவுகள். மனமார்ந்த வாழ்த்துகள் கஸ்தூரி.....
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
மிக்க நன்றி அண்ணா!
நீக்குஇந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.
பதிலளிநீக்குபுத்தாண்டு நல்வாழ்த்துகள் !
http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
மிக்க நன்றி சாம் அண்ணா:)
நீக்குஇதெல்லாம் எனக்கு எட்டாத விஷயம்!
பதிலளிநீக்குபுத்தாண்டு வாழ்த்துகள்
எழுத்து எனும் கலை தான் உங்களுக்கு அழகா கைவருதே!! அப்புறம் என்ன:) மிக்க நன்றி சார்:)
நீக்குசகோதரி அவர்களுக்கு வணக்கம். தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப்
பதிலளிநீக்குபுத்தாண்டு (2015) நல் வாழ்த்துக்கள். புத்தாண்டு கவிதைக்கு நன்றி.
த.ம.8
மிக்க நன்றி அண்ணா:)
நீக்குஆயகலைகள் அறுபத்து நாலுதான். இதெல்லாம் அந்த அறுபத்து நாலில் உள்ள கிளைகள்தான். :)
பதிலளிநீக்கு------------------------------
அந்த பாம்பு வரைந்த படம் மாதிரியே இல்லைனு, உங்களை நம்பாமல் போயி என்னனு கூகில் செய்துபார்த்தேன். ப்ரெசில் நாட்டு ஓவியர் இதில் பெரியாளுனு கற்றுக்கொண்டேன். இன்னும் எப்படி 3 D ல ஓவியம் வரையிறதுனு புரியலை. என்னால் ட்ரேஸ் பண்ணிக்கூட ஒரு ஓவியத்தை ஒழுங்கா வரைய முடியாது. நம்ம ஸ்கில் அப்படி! :))) இவர் என்னடானா.. :)
---------------
****இந்த f.b, blog, goggle +, ட்விட் மட்டும் இல்லேன்னா பல சூப்பர் எழுத்தாளர்களை நமக்கு தெரியாமலே போயிருக்கும்.****
This coin has two sides. அதே நேரத்தில் இந்த சோஷியல் நெட் வொர்க் எல்லாம் இல்லைனா பலர் எழுத்துக்களை வாசித்து "மூட் அவ்ட்" ஆகாமல் நிம்மதியா இருந்து இருக்கலாம். :))) இப்போ பல குப்பைகளை வாசிக்க வேண்டிய நிர்பந்தமும் உண்டாகியுள்ளது. :(
----------------------------
நடிகர் "ப்ராட் பிட்"டை சுத்தமாகப் பிடிக்காது. எனக்குத் தெரிய பல பெண்களுக்கும் இந்த ஆணழகனைப் பிடிக்காதுங்க..ப்ராடை பிடிக்காதனாலயோ என்னவோ ஆஞ்லீனா ஜோலி மேல் பெருசா ஈர்ப்பும் கெடையாது. நம்ம தீபிகா படுகோனே ஃபோட்டொ ஷாப் அடுத்த முறை போடுங்க :))))
----------------------
மேற்கொண்டு தெரிந்துகொள்ள google ல தேடுனேன் னு சொல்லாம, என்னை நம்பாமல் என்று உண்மையா உரக்கசொல்லி வருண் , வருண் தான் என நிலைநாட்டியதற்கு ஒரு பொக்கே.
நீக்கு**This coin has two sides. ** no vn, every coin has got two side :)))
கம்மெண்ட படிக்கும் போதே நினைச்சேன். ஓகோ தீபி போட்டோ வை கேட்கிறாரோனு:)) make over இல்லாத தீபிகா பார்த்திருக்கிங்களா? நம்ம பக்கத்துக்கு வீட்டு பொன்னு மாதிரி அவ்ளோ simple அழகு:)
ஆச்சரியமான, சுவாரஸ்யமான தகவல்கள் அடங்கிய பதிவு.
பதிலளிநீக்குபோட்டோ ஷாப்புல அழகா தெரியற வாய்ப்பு இருக்கற அதே நேரத்தில் நம்ம போட்டோவுக்கு ஆபத்தும் வர வாய்ப்பிருக்கு சகோ ! குடும்பம் சார்ந்த புகைப்படங்களை வலைதளங்களில் ஏற்றும் போது ஜாக்கிரதை அவசியம்.
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
**குடும்பம் சார்ந்த புகைப்படங்களை வலைதளங்களில் ஏற்றும் போது ஜாக்கிரதை அவசியம்.** ஆமா அண்ணா, கஸ்தூரி கூட இதை பல முறை சொல்வதுண்டு:) உங்க அச்சைன்மெண்டை எப்டி முடிச்சென்னு சொல்லவே இல்லையே:((
நீக்குமேலும் சிறக்க வாழ்த்துக்கள் தோழி.
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி தோழி :)
நீக்குவணக்கம் அக்கா
பதிலளிநீக்குஅனைத்தும் வித்தியாசங்கள் நிரம்பியவை. ம்ம்ம் உலகம் எங்கோயோ போயிட்டு இருக்கு. நான் தான் இன்னும் தூங்கிட்டு இருக்கேனா? 2015 ல முழிச்சுப்போம். இந்த ஆண்டு இனிய ஆண்டாக அமைய எனது அன்பு வாழ்த்துகள் நமது இல்லத்தார் அனைவருக்கும்... நன்றிகள் அக்கா...
புடிச்ச ஹீரோயின் யாருன்னு தாங்கள் வினவிய போதே இதுல எதாவது உள்குத்து இருக்குமொ என நினைத்தேன்...
பதிலளிநீக்குஇப்போத் தெரியுது மேம்..
இனிமே சொல்லுவேன்..?
a picture is worth a thousand wordsன்னு சும்மாவா சொன்னாங்க. 150 பதிவா? வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்..
பதிலளிநீக்குஅட! 150 வதா?!!!!! எப்படி நாங்கள் விட்டோம்!!உங்களை வாழ்த்தாமல்!!!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோதரி! நீங்கள் இன்னும் நிறைய எழுதணும்! னாங்கல்லாம் இருக்கோமே! நிறைய நீங்கள் சாதிக்க வேண்டும் ! வாழ்த்துக்கள்!