புதன், 24 ஜூன், 2015

காக்கா முட்டை- திரைப்பார்வை

        மீண்டும் ஒரு அருமையான படைப்பை முன்னிறுத்தி, பதிவெழுத தூண்டிய இயக்குனர் மணிகண்டன் அவர்களுக்கு முதலில் ஒரு நன்றியும், பூங்கொத்தும்..........

 
                விலையில்லா சத்துணவு முட்டையை கூட சாப்பிட வழியற்ற இரண்டு சிறுவர்கள் தன் பாட்டியின் அறிவுரைப்படி காக்கா முட்டை குடித்து வளர்கிறார்கள். அவர்களுக்கு பீட்சா சாப்பிட ஆசை வந்தால் எனவாகும் என்பது தான் கதை. ரெண்டே ரெண்டு குட்டி பசங்களை வைத்துக்கொண்டு இன்றைய சமூகத்தின் அத்தனை சாபங்களையும் போகிற போக்கில் லெப்டில் அடிக்கிறார் இயக்குனர்.

                     அரசியல்வாதிகளையும், போலீசையும் மட்டும் வளைத்து வளைத்து குறை சொல்லாமல், உலகமயமாக்கல், டாஸ்மாக்மயமாக்கல், கம்யுனிசம் என அத்தனையையும் வலிந்து திணிக்காமல், காட்சிப்படுத்திய நேர்த்தியும், வசனங்களும் செம, செம

                       "திருடுரோமா ??? இல்ல எடுக்கிறோம்" இதைவிட எளிமையாய் எப்படித்தான் வர்க்க போராட்டத்தை முன்னிறுத்த முடியும்?! சிட்டி சென்டரின் பிரமாண்டம் பார்த்து வியந்து  "சத்தியமா நம்மள உள்ள விட மாட்டாங்க டா" என சின்ன காக்கா முட்டை சொல்லும் வசனம் ப்ளாக் ஹுமர்.  cheif சியாதல் அமெரிக்க அதிபருக்கு அனுப்பிய "வானத்தை எப்படி வாங்கவோ, விற்கவோ முடியும் எனும் உருக்கமான கடிதத்தை நினைவு படுத்துகிறது காட்சிகள். அந்த அமெரிக்க நிஜத்தின் நீட்சியாகத்தான் தெரிகிறது அந்த சிறுவர்கள் விளையாடிய திடல் பின் அவர்கள் நெருங்கவே முடியாத உயர்தட்டு உணவகமாகும் காட்சி.

             இருபத்தி ஐயாயிரம் ரூபாய் நாய்க்குட்டி, எப்போதும் செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டே இருக்கும் சிறுவர்கள், வீடு, தொழில் மறந்து குடிக்கும் கதாபாத்திரம் என இன்றைய தங்கத்தமிழகத்தின் நிலையை பறைசாற்றும் காட்சிகள் ஒவ்வொன்றைப்  பற்றியும் தனித்தனி பதிவே எழுதலாம். 

          பாதிக்கப்பட்ட சிறுவர்கள் யாரென்றே தெரியாமல், அவர்களையே நகரசொல்லி, செய்தியை தொகுக்கும், அவர்களுக்காக குரல் கொடுக்கும்(!!) மீடியா மக்களின் சென்சேசன் உத்தியையும், தொழிலாளியை பலிகொடுத்து, கடையை காப்பாற்றும் முதலாளித்துவ தர்மத்தையும், ஒரு வீட்டுக்கு  இரண்டு டி.வி கொடுத்து, அரிசி ஸ்டாக் இல்லை என கைவிரிக்கும் நம் ரேஷன் கடை லட்சணங்களையும், சின்ன பிள்ளைகள் கண்ட கண்ட சினிமா வசனங்களையும் பேசிகாட்டச் சொல்லி ரசித்திருக்கும் நம் குடும்ப சூழல் அவலங்களையும் என இந்த சின்ன காக்காமுட்டைக்குள் பல கனமான விஷயங்களை அடைத்து  வைத்திருக்கிறார் இயக்குனர்.

             துறுதுறு காக்கா முட்டைகள் ரெண்டுமே சூப்பர் !! தீர்க்கமான கண்களோடு பெரியவனும், குறும்பு கண்களோடு சின்னவனுமாய் அந்த சிறுவர்கள் காக்கா முட்டைகளாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமா!! அடிக்கக்கூடாதுனு பாலிசி வச்சிருக்கேன் எனும்  அன்பு அம்மா ஐஸ்வர்யாவை இந்த தமிழ் சினிமாக்காரர்கள்  இத்தனை நாளாய் எப்படி வீணடித்திருக்கிறார்கள்? அந்த பாட்டி அப்படியே நம் பாட்டிகளை கண்முன் நிறுத்துகிறார். இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம்.

          அப்புறம் ஒரு சின்ன சந்தேகம்.  படத்தில் பல இடங்களில் சிம்புவை செமையாய்  கலாய்த்திருக்கிறார்கள். இந்த படத்தை தனுஷ் வாங்கி வெளியிட்டிருக்கிறார். இதில எதாவது உள்குத்து இருக்கா பாஸ்:)

             படத்தில் மிகப் பெரிய இரண்டு மகிழ்ச்சிகள். ஒன்று. திரையில் படத்தின்  ஹீரோக்கள் இரண்டு பேரும் எந்த சூழலிலும் கையேந்த கூடாது என்றும், தட்டிப்பறிக்கக்கூடாது என்று தீர்மானமாக இருக்கிறார்கள். இரண்டு. திரைக்கு முன் இப்படி ஒரு கூட்டத்தை, அதுவும் குடும்பம்,குடும்பாக பார்த்து எத்தனை நாள் ஆயிற்று!!! வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் தியேட்டரில் பாருங்க இந்த உலக சினிமாவை.
      


52 கருத்துகள்:

  1. வணக்கம் அக்கா
    எதார்த்தமான படத்திற்கு தங்களின் எதார்த்தமான விமர்சனம் மிகவும் பொருத்தமானது. எடுத்தவுடனேயே பாராட்டி பூங்கொத்து கொடுத்து விட்டீர்கள். படித்தேன் மகிழ்ந்தேன். பகிர்ந்தமைக்கு நன்றிகள் அக்கா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தம்பி !! வருக! வருக! நீண்ட நாட்களுக்குப் பின் இப்போ பழையபடி இனைய சூறாவளியாய் கலக்குகிறீர்கள் போல!!! வாழ்த்துக்கள் சகோ:)

      நீக்கு
  2. காக்கா குட்டை விமர்சனம் படிக்கையில் உடனே பார்க்க ஆசை. ஆனா...முடியாதே...என்ன செய்வது...ம்...வரும் போது பார்க்க வேண்டியது தான். பள்ளிக்கூடம் திறந்ததால் பிஸியாகியாச்சு போல. நன்றி சகோ .

    தம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரக்ட் தோழி! கொஞ்சம் பிசி தான்:) வாய்ப்பு கிடைக்கும்போது தவறவிடாமல் பாருங்க தோழி! நன்றி!

      நீக்கு
  3. அருமையான விமர்சனம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அய்யா! உங்கள் தம வுக்கும் நன்றி :)

      நீக்கு
  4. நல்ல விமர்சனம். படம் பார்க்கவில்லை, ஆனால் பார்த்த நிலையை உண்டாக்கியது பதிவு.

    பதிலளிநீக்கு
  5. அது சிம்புவை தானா...? தெரியாமப் போச்சே...!

    பதிலளிநீக்கு
  6. அருமையான விமர்சனம்
    அவசியம் படம் பார்க்கின்றேன் சகோதரியாரே
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அண்ணா! உங்கள் தம வுக்கும் நன்றி :)

      நீக்கு
  7. அட அம்மு அதற்குள் படம் பார்த்தாச்சா ம்..ம் எந்தப் படம் பார்ப்பது என்று குழம்பும் விருப்பம் இருக்காது பார்ப்பதற்கு. இப்படி நீங்கள் விமர்சனம் தந்தால் விருப்பதொடு உடனும் சென்று பார்க்கலாம். இங்கு வந்து விட்டதா தெரியலை வந்தால் நிச்சயம் பார்ப்பேன் உடனே பரர்க்க வேண்டும் போலவே உள்ளது. அம்மு! ஆமா அம்முக்குட்டிக்கு என்ன ஆச்சு இடையில வந்து ஒருமுறை திருமுகத்தை காட்டுவது. அப்புறம் ஆளைக் காணக் கிடைக்காது என்ன தான் நடக்குது செல்லம். ம்ம்..ம்..ம் அழகாக முக்கியமான விடயங்களை எல்லாம் பட்டியல் இட்டு பக்குவமாக எழுதியுள்ளீர்கள் மா நன்றி நன்றி சிறப்பான பதிவுக்கு! மேலும் தொடர வாழ்த்துக்கள். !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனியாச்செல்லம் !! இனி அடிக்கடி இங்கு வரவேண்டும் என்பது தான் என் ஆசையும்:) வாய்ப்புகிடைத்தால் அனைவரும் பார்க்கவேண்டிய படம் ! எனவே நீங்களும் பாருங்க அம்மு! நன்றி டா!

      நீக்கு
  8. படம் பார்க்கும் போது நமக்கு இயல்பாகவே கழிவிரக்கம் போல ஏதோவொன்று நம் நெஞ்சை தாக்குகின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அண்ணா! பல இடங்கள் நெகிழ்த்துகின்றன!! மிக்க நன்றி அண்ணா!

      நீக்கு
  9. ஆகா... பார்த்துட்டோம்ல..!
    நான் என்ன எழுதணும்னு நினைச்சனோ அதையே நீயும் எழுதிட்டப்பா..
    “அரசியல்வாதிகளையும், போலீசையும் மட்டும் வளைத்து வளைத்து குறை சொல்லாமல், உலகமயமாக்கல், டாஸ்மாக்மயமாக்கல், கம்யுனிசம் என அத்தனையையும் வலிந்து திணிக்காமல், காட்சிப்படுத்திய நேர்த்தியும், வசனங்களும் செம, செம“
    ஆனாலும் உன் லாங்வேஜ் நமக்கு வராதுதான்.. அருமைடா த.ம.கூ.1
    (பள்ளிக்கூடங்களில் பசங்க பெற்றோர்கள் எல்லாருக்கும் போட்டுக் காட்ணா தேவல.. அல்லது போய்ப் பாக்கச் சொல்லணும்.. நானும் இந்தப் படத்தையும், புறம்போக்கு, 36வயதினிலே படங்கள் பற்றிய ஒரு கலந்துரையாடல் வைக்கலாம்னா.. மக்கள் கேட்டாத்தானே?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. **ஆனாலும் உன் லாங்வேஜ் நமக்கு வராதுதான்.. அருமைடா த.ம.கூ.1** ஆத்தி!!! அண்ணா, ஏன் இப்படி!! ஆன பரிசுக்கு மிக்க நன்றி அண்ணா! நீங்கள் சொல்வது மிக அருமையான யோசனை தான். இந்த நிலா(நிலவன்) முற்றத்தில் கைகூடும் என நினைக்கிறேன்:)

      நீக்கு
  10. பொதுவாக நான் திரைப் படங்களை! பார்ப்பதில்லை! பலரும் பாராட்டி யுள்ளதால் பார்த்தேன்! தங்கள் விமர்ச்சனம் சரியே

    பதிலளிநீக்கு
  11. இப்படம் பற்றி படித்த அனைத்து விமர்சனங்களும் படம் பார்க்கத் தூண்டுபவையாக இருக்கின்றன. பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  12. யதார்த்த சினிமா ,இது போல் வந்து நீண்ட நாளாகி விட்டது .தமிழ் சினிமாவில் இது ஒரு மைல் கல் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே பாஸ்! அப்படி சொல்லுங்க! வருகைக்கு மிக்க நன்றி பாஸ்!

      நீக்கு
  13. அருமையான படம் பார்க்க வேண்டிய படம் தங்கள் விமர்சனம் அருமை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி!

      நீக்கு
  14. டீச்சரம்மா ரொம்ப நாளா காணோம்னு பார்த்தேன்! அழகான பட விமர்சனத்துடன் வலையுலகம் திரும்பியமைக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  15. என் நண்பர்களும் இதையே தான் சொன்னார்கள்..
    ஆனாலும் - பார்ப்பதற்கான சூழ்நிலைதான் அமையவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமையும்போது அவசியம் பாருங்க அய்யா:) மிக்க நன்றி!

      நீக்கு
  16. இந்தப் படத்தை முகநூலில் மது மிக ரசித்து சிலாகித்து எழுதியிருந்தார். இப்போ இங்கே மைதிலியின் ரசனை... அவசியம் பாத்துடறேன் நானும் இந்தப் படத்தை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒ! நீங்க இன்னும் பார்க்கலையா அண்ணா! அவசியம் பாருங்க:)

      நீக்கு
  17. வெகு நேர்த்தியான விமர்சனம்
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  18. அன்புச் சகோதரி,

    ‘தியேட்டரில் பாருங்க இந்த உலக சினிமாவை’-பார்க்கத் தூண்டும் அருமையான விமர்சனப் பார்வை.

    நன்றி.
    த.ம.13

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அண்ணா! உங்கள் வருகைக்கும், வாக்குக்கும்:)

      நீக்கு
  19. நான இன்னும் படம் பார்க்கவில்லை, படம் பார்ப்பதைவிட பல கோணங்களில் விமர்சிக்கப்படுவதையும், பாராட்டுவதையும் வாசிக்கும் போது. படம் பார்க்க வேண்டும் போல இருக்கிறது.
    இதைக் கொஞ்சம் படிச்சிப் பாருங்க http://www.vinavu.com/2015/06/19/plight-of-noon-meal-scheme-and-its-workers/

    பதிலளிநீக்கு
  20. காக்கா முட்டையை ஆஹா ஓஹோனு எல்லாரும் புகழ்றாங்க. நீங்களும் மதுவும் இதற்கு விதிவிலக்கல்லனு தெளிவு படுகிறது! நான் "காக்கா முட்டை" பத்திக் கேள்விப்படாத ஒரு தெற்கத்தியத் தமிழன். அதாவது யாரையும் யாரும் "காக்கா முட்டை" னு சொல்லியோ அல்லது "காக்கா முட்டை" சாப்பிடுறவங்களையோ சிறு வய்ய்ய்திலிருந்து எனக்குப் பரிச்சயம் இல்லாத கல்ச்சரில் வளர்ந்த ஒரு "ஆத்த்ப் பையன்" :). சிறு வயதிலிருந்து "ச்சீ ச்சீ" இந்தப் பழம் புளிக்கும்" என்று கிடைக்காததை நினைத்து ஏங்காமல் வளர்ந்தவன்/வளர்க்கப்பட்டவன் நான்னு சொல்லணும். அதனால் காக்கா முட்டை படம் எனக்குப் பிடிக்குமா என்பது சந்தேகமே! :). படம் பார்த்துட்டு இன்னொரு பின்னூட்டம் இடுறேன். It might take a LONG while but I will. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. watch twice ... u will love it...
      it will be more lovely in the second time... i bet ...

      நீக்கு
    2. வருண்!!
      சிறுவயதில் நாம் அப்படி பக்குவமாய் இருந்தமைக்கு நம் பெற்றோரின் வளர்ப்பும் ஒரு காரணம் என்று நீங்களே சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் இன்றைய பெற்றோர்க்கே அத்தனை முதிர்ச்சி இல்லை என்பதுதான் உண்மை. அன்று இதுபோல பொழுதுக்கும் கூவிகூவி விற்கும் மீடியாக்கள் இல்லை. இத்தனை பெரியமனித தனம் நிறைந்த குட்டிபிள்ளைகள் இல்லை. நம் நண்பர்கள் நம்மைப்போல குழந்தைத்தனத்தோடு தான் இருந்தார்கள்! இன்றைய சூழலில் இப்படி ஆசை தூண்டப்படும் வறுமை சூழ் உலகை, அதன் குழந்தைகளை சமூக அக்கறையோடு காட்டியதற்காக நாம் அந்த படத்தை பாராட்டலாம் என்றே நினைக்கிறேன். கொஞ்சம் சமரசம் செய்துகொள்ளாத ஒரு அசல் சினிமா! நீங்கள் இன்று வசிக்காத, நான் வசிக்கும், தினமும் பார்க்கும் இந்த தமிழகத்தின் அசல் முகத்தை காட்டியிருக்கிறார் இயக்குனர். பதிவு பாகம் இரண்டு எழுதும் அளவு இன்னும் விஷயம் இருக்கிறது. பார்த்துவிட்டு சொல்லுங்க பாஸ்:)

      நீக்கு
  21. வணக்கம் சகோ !

    நானும் இந்தப்படம் பார்க்கணும் பார்க்கணும் என்று முயற்சிக்கிறேன் இன்னும் தெளிவான படம் வரவில்லையே இணையத்துக்கு ஆனால் உங்கள் விமர்சனம் பார்த்தபின் படம்பார்த்ததுபோல் இருக்கிறது எதற்கும் பார்த்தே ஆகவேண்டும் நன்றி !

    தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! சீராளன் சகோ !! படத்தை ஆனமட்டும் திரையரங்கில் பார்க்க முயற்சி செய்யுங்கள்! அதுவே அந்த படைப்புக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும் இல்லையா:) நன்றி சகோ!

      நீக்கு
  22. திரை அரங்கில் திரைப்படம் பார்த்து பார்த்து மாதங்கள் பல ஆகிவிட்டன. இந்தப் பட விமரிசனங்கள் பார்க்கத் தூண்டுகிறது/ வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  23. நல்லதொரு விமர்சனம்..எல்லோரும் நன்றாகவே விமர்சித்துள்ளார்கள்...படத்தைப் பற்றி நல்ல்ல கருத்து....இன்வேரியபிலி. சகோதரி! பார்க்க வேண்டும் என்று எப்போதோ முடிவு செய்துவிட்டு இன்னும் பார்க்க முடியவில்லை....துளசி வரும் திங்களன்று என்று முடிவு செய்துவிட்டார். பாலக்காட்டில் வந்திருக்கிறது....கீதா சென்னையில் இருந்தும் இன்னும் பார்க்கவில்லை.....என்னத்த சொல்ல...

    ஏம்பா சிம்புவும், தனுஷும் நல்லாத்தானே இருக்காங்க....நாம சிண்டு முடிஞ்சு வைச்சுருவோமோ...அஹ்ஹஹ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல போற மாதிரிதான் இருக்கு!! ஆன நாம அதை அப்படியே விடலாமா சகாஸ்:) ஏதோ நம்மளால முடிஞ்சது:))))) அவசியம் பாருங்க சகாஸ்!

      நீக்கு
  24. படம் பாக்கக் காத்துட்டுருக்கேன் டியர், இந்த மாதிரி படமெல்லாம் இங்க திரையிட வர மாட்டேங்குதேன்னு ஒரு ஏக்கம்.
    தேவையில்லாத பகட்டைக் கண்டு ஏங்கும் குழந்தைகளைப் பார்த்திருக்கிறேன், வருந்தியிருக்கிறேன். சில சமயம் தோன்றும், ஆரோக்கியமில்லாத உணவு பழகாமல் இருக்கும் வரை நல்லது என்று, ஆனால் கிடைக்காதது நல்லதோ கெட்டதோ, அதற்கு பெரும் ஈர்ப்பு உண்டு அல்லவா? வீட்டின் அருகே இருந்த வீட்டு வேலை செய்பவரின் நாத்தனார் மகளையும் அவள் மகனையும் pizza hut அழைத்துச் சென்று சாப்பிட வைத்தேன். அவர்களுக்கு அப்படி ஒரு வெட்கம், சந்தோசம். ரொம்ப தேங்க்ஸ் கா என்று பல முறை சொல்லிக் கொண்டிருந்தாள். இது நடந்தது 2009 இல். அவளும் கிராமத்திற்குச் சென்று விட்டாள். சென்ற வருடம் நான் அங்கு இருந்த பொழுது "அத்தை வீட்டிற்கு வந்தேன், நீங்க வந்துட்டிங்கன்னு சொன்னாங்க, அதான்கா வந்தேன்" என்று சொல்லி வந்து பார்த்துச் சென்றாள் ஒரு நாள். இருவருக்கும் அவ்ளோ சந்தோசம். எப்பொழுதுமே அவள் கண்ணில் எனக்கு ஒரு ஏக்கம் தெரியும். அது நினைவு வந்தது எனக்கு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. **வீட்டின் அருகே இருந்த வீட்டு வேலை செய்பவரின் நாத்தனார் மகளையும் அவள் மகனையும் pizza hut அழைத்துச் சென்று சாப்பிட வைத்தேன். அவர்களுக்கு அப்படி ஒரு வெட்கம், சந்தோசம்.**
      கிரேஸ் டியர்! நீங்க உண்மையாவே ரொம்ப வித்தியாசமானவங்க தான்! செம! இந்த மாதிரி தருணங்கள் வாழ்வில் மிக அருமையானவை தான்! வாய்ப்புகிடைத்தால் பாருங்க டியர்!

      நீக்கு
  25. நல்ல பார்வை சகோதரி...
    இன்னும் படம் பார்க்கவில்லை... இந்த வாரத்தில் பார்க்கணும்.

    பதிலளிநீக்கு