இந்த சாமியை போல இந்த சாதியையும் வைத்த இடத்தில சத்தமில்லாமல் இருந்துவிட்டால் எனக்கு எந்த சச்சரவும், சங்கடமும் இல்லை தான். (என்ன ஒரே "சா" வா இருக்கே மைதிலி! சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட்டா ஒரே சாவா இருக்குமோன்னு ஒரு டென்ஷன் தான்)
மத்திய அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடத்திய சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவை வெளியிடப் போவதாக அறிவித்திருக்கிறது. பொதுவாக இந்தியர்களை இரண்டு விதமாக பிரிக்கிறேன். சாதின்னு ஒன்னு இருக்கு அவ்ளோ தான் என நினைப்பவர்கள் ஒருவகை. அவர்களைப்பற்றி ஒரு பிரச்சனையும் இல்லை. ஆன நன்கு உணர்ந்தோ, தன்னை அறியாமலோ தன் சாதி இது என்ற உணர்வில் ஊறி வளர்ந்தவர்கள் இன்னொரு வகை. அவர்கள் தான் இன்று காலையில் இருந்து என் தலைவலிக்கு காரணம்:(
மத்திய அரசு வெளிடப் போகும் முடிவில், மூன்று சாத்தியக்கூறுகள் உள்ளன. oc பிரிவினர் அதிகமாக இருப்பின் அப்புறம் V.H.P மற்றும் B.J.P யின் கை(!?) ஓங்கிவிடும் அபாயம் உண்டு. அல்லது BC பிரிவில் தமிழக அளவில் ஆண்ட பரம்பரையாக கருதிக்கொள்ளும் அவர்கள் அதிகமாக இருப்பின், நினைக்கும்போது கண்ணில் ரத்தக்கண்ணீர் வருகிறது. அல்லது பட்டியல் பிரிவினர் அதிகமாக இருப்பின் இத்தனை நாள் அடங்கித்தானே போனோம் என்று சீற கிளம்பிவிட்டால்??? நான் ஏற்கனவே சொன்னதுபோல் சாதியை மனதில் ஒட்டிகொண்டிருப்பவர்களின் செயல்கள் அல்லது எதிர்வினைகளை நினைத்துத்தான் பற்றமாக இருக்கிறது.
இங்கு அவசியமான என் சொந்தக்கதை ஒன்று. என் கைப்பையை கிளறிப்பார்க்கும் அவசரக்காரர்கள் எவரும் இதெல்லாம் ஒரு டீச்சரா என நொந்துகொள்ளும் அளவுக்கு வாராவாரம் விஜய் படம் போட்ட லாக்கெட்டோ, தனுஷ் வாட்சோ, சூர்யா மோதிரமோ கிடைக்கக்கூடும். அத்தனையும் மாணவக் கண்மணிகளிடம் பறிமுதல் செய்யப்பட்டவை. ஆனால் இத்தனை வருட ஆசிரிய அனுபவத்தில் முதல்முறையாக ஒரு சாதித்தலைவரின் படம் போட்ட லாக்கெட் ஒன்று இப்போது என் பையில் இருக்கிறது. ஆறாம் வகுப்பு மாணவன் அவன்.
யார்டா உனக்கு இதை மாட்டிவிட்டது என்றேன் எரிச்சலாக.
எங்க அண்ணன் தான் மிஸ். என்ன படிக்கிறான்?
அவர் பெரியவரு மிஸ் ஜே.சீ.பி ஓட்டுறார்.
எனக்கு இன்னமும் அந்த அண்ணன் பெரியவர்தானா என்பதில் சந்தேகம் தான். இந்த பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் அந்த பெரியவர், இந்த கணக்கெடுப்பின் முடிவை எப்படிக் கையாளப் போகிறார்? அவனுக்கு அடுத்தே சேகுவேரா லாக்கெட் போட்ட மாணவனும் இருந்தான். பன்னிரெண்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் அவன் அண்ணன் இந்த படத்தை கழுத்தில் மாட்டிவிட்டதாக சொன்னான். கல்வி மாற்றத்தைத் தான் விதைத்திருக்கிறது என்ற நம்பிக்கையும், அந்த அண்ணனும் என் மாணவன் தான் என்னும் ஆறுதலும் ஏற்பட்டது. அதற்குப்பின் அவர்களுக்கு சாதி போராட்டத்திற்கும், வர்க்கப்போராட்டத்திருக்கும் உள்ள வேறுபாடுகளை எடுத்துக்கூறினேன். புரிந்தது போலத்தான் தலையாட்டினார்கள் அந்த சிறுவர்கள். எது எப்படியோ அதிகம் எதிர்பார்க்கப்படும் விஷயங்கள் நமத்துபோவதும், எதிர்பார்க்காத கயிறுகள் பாம்புகள் ஆவதும் நம் நாட்டின் நடைமுறை. பொறுத்திருந்து பார்ப்போம் இந்த கணக்கெடுப்பின் விளைவை!
>>> சாதின்னு ஒன்னு இருக்கு அவ்ளோ தான்!... <<<
பதிலளிநீக்குஆமாங்க... நமக்கெல்லாம் வேற வேலை இருக்கு.. வயித்துப் பாட்டுக்குப் பாக்கணுமில்லையா!..
வேலை வெட்டி..ன்னு இருந்த நாடு வெளங்கிடும்.. ஆனா.. வெட்டுறதே வேலையா இருந்தா!?..
**நமக்கெல்லாம் வேற வேலை இருக்கு.. வயித்துப் பாட்டுக்குப் பாக்கணுமில்லையா!.. ** ரைட் சார்! உழைத்துப் பிழைப்பவர்களுக்கு சாதி இல்லை, வர்க்கம் மட்டும் தான்.
நீக்குவணக்கம்,
பதிலளிநீக்குதங்கள் தலைவலிக்கான காரணம் உண்மையே, ஆனால் தாங்கள் கடைசியில் சொன்னது போல் ஊசி பட்டாசாய் போனா சரி தான்,,,,,,,,,,
இது தேவையா என்பதை பொறுத்தே மனங்கள் போக்கும்,
நல்ல சமூதாயத்தை உருவாக்கும் உங்கள் பணி தொடரட்டும்.
நன்றி.
**நல்ல சமூதாயத்தை உருவாக்கும் உங்கள் பணி தொடரட்டும்.** நல்ல சமுதாயத்தை உருவாக்க என்னாலான பங்களிப்பை மட்டுமே செய்கிறேன்.வாழ்த்துக்கு மிக்க நன்றி தோழி!
நீக்குநியாயமான அச்சம்தான்.
பதிலளிநீக்குoc அதிகமாக இருக்க வாய்ப்பு இல்லை. நிறைய ocக்கள் எல்லாம் பி.சி ,எம்.பி சி என்றல்லவா சான்று வைத்திருக்கிறார்கள் .சாதி நஞ்சு சிறிய வயதிலேயே விதைக்கப் படுவது வருந்ததக்கது. படிக்கும் காலம் வரை சாதிகள் இல்லையடி பாப்பா என்றுதான் சொல்லித் தரப்படுகிறது. ஆனால் நடைமுறையில் செயல்பாடுகளில் வெளிப்படுவதில்லை. சாதி ஒழிப்பு படிப்பிற்காக மட்டும்தான் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.
**oc அதிகமாக இருக்க வாய்ப்பு இல்லை. நிறைய ocக்கள் எல்லாம் பி.சி ,எம்.பி சி என்றல்லவா சான்று வைத்திருக்கிறார்கள்** ஆமாம் அண்ணா அப்படி சான்றிதழ் வைத்துக்கொண்டே சாதியம் பேசும் பெரிய மனிதர்கள் சிலரையும் நான் அறிகிறேன்:) வருகை மிக நன்றி அண்ணா!
நீக்குதமிமணப் பட்டை வேலை செய்யவில்லையே டெம்ப்ளேட் மாற்றினீர்களா
பதிலளிநீக்குஆமாம் அண்ணா! இப்போ சரி செய்தாகி விட்டது:)
நீக்குலாக்கெட் வே(ற)றா...? கெட்டது போங்க....
பதிலளிநீக்குஆமா அண்ணா ,,,, ஆமாம்:((
நீக்குதளத்தை blogpsot.com என்று மாற்ற வேண்டும்...
பதிலளிநீக்குஆச்சு அண்ணா:)
நீக்குஉங்கள் அச்சம் மிக நியாயமானதுதான்
பதிலளிநீக்குஅரசியல் வாதிகள் நரிகளைப்போல காத்திருக்கிறார்கள். ஆடுகளுக்காக அழப்போகிறார்கள்.
நாமெல்லோரும் நிதர்சனத்தையும் நிஜத்தையும் தொலைத்துவிட்டு மந்தைகளாய் பின் செல்லப்போகிறோம்.
அச்சமாய்த்தான் இருக்கிறது.
மிக நல்ல பதிவு.
God Bless You
**நாமெல்லோரும் நிதர்சனத்தையும் நிஜத்தையும் தொலைத்துவிட்டு மந்தைகளாய் பின் செல்லப்போகிறோம்** வேறு வழியில்லாமல் போவோமோ என்னவோ!! வேதனையா தான் இருக்கு!
நீக்குவணக்கம் மேடம் ...
பதிலளிநீக்குநெடுநாள் கழித்து வந்திருக்கிறேன்! சாதி வாரி கணக்கெடுப்பை உங்களைப் போல் நானும் எதிர்க்கிறேன் இருந்தும் அதை ஒரேயடியாக ஒதுக்கி வைத்துவிடவும் முடியாது! சாதியை சார்ந்திருக்கும் இட ஒதுக்கீடு மற்றும் இன்னபிற ... சலுகைகளை? எதைக் கொண்டு கணக்கிட இயலும் என்று நினைக்கிறீர்கள்? ஒரு வகையில் சாதியை ஒழிக்க முற்பட்டிருக்கும் அரசு தான் இன்னொரு மறைமுக வழியில் சாதியை ஊக்குவிக்கிறது! இங்கு சாதியை வைத்து தான் சமூகமே சுழலுகிறது என்று ஏன் அரசாங்கமும் தான்!
எதையோ சொல்ல வந்து எதையோ போட்டு குழப்பிக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன்! ஒவ்வொரு தலைமுறையிடம் நெருக்கமாக இருக்கும் ஆசிரியப் பணியிலிருக்கும் தாங்கள் சற்று அழுத்தமும் திருத்தமாக சொல்லி கொடுங்கள் சாதியின் கோரங்களை!
பதிவுக்கு என் வணக்கங்கள்
ஆமாம் சார் ! ரொம்ப நாள் கழித்து வந்திருக்கிறீர்கள். நன்றி! நலமா?
நீக்கு**சாதியை சார்ந்திருக்கும் இட ஒதுக்கீடு மற்றும் இன்னபிற ... சலுகைகளை? எதைக் கொண்டு கணக்கிட இயலும் என்று நினைக்கிறீர்கள்?** எண்ணிகையை கொண்டு ஏன் சலுகை கொடுக்கவேண்டும் என்றே என் சிறிய மூளைக்கு புரியவில்லை சகா? யார் வளர்ச்சியில் பின்தங்கிய நிலையில் இருக்கிறார்களோ அவர்களுக்குக் கொடுத்தால் போதாதா??? என்னாலான வரை சாதி பற்றி அழுத்தமாகவே சொல்லிவருகிறேன்.மிக்க நன்றி சகா!
சாதிவாரிக் கணக்கெடுப்பு...என்னக் கணக்கெடுப்போ...சரி அதை எதற்கு வெளியிட வேண்டும்? எங்களுக்குப் புரியவில்லை...பொறுத்திருப்போம் ஏதும் விளையாது என்றும் நினத்திருப்போம்..
பதிலளிநீக்குஎதிர்கால சந்ததியினராவது இந்த சாதி என்பதே இல்லாமல் வாழ்ந்தால் நல்லது....சரி இங்கு அதிகம் இதைப் பற்றிப் பேசவில்லை...பின்னூட்டம் இடுகை போல் ஆகிவிடும் அபாயம்..ஹஹஹஹ்....
நல்லது நடந்தால் சரி...
**எங்களுக்குப் புரியவில்லை...பொறுத்திருப்போம் ஏதும் விளையாது என்றும் நினத்திருப்போம்..** ஆமாம் நம்புவோம் சகாஸ்! நம்பிக்கை - அதானே எல்லாம்(ஒ! இது கல்யாண் ஜ்வேல்லேரி ஆட் :)))
நீக்குசாதி இரண்டொழிய வேறில்லை என்ற ஔவையின் பாடலை அரசாங்கம் நினைவில் கொண்டால் போதும்! இப்போதுள்ள அரசாங்கம் எதைச்செய்து தமிழகத்தில் காலூன்றலாம் என்று யோசிக்கிறது! என்ன செய்ய?
பதிலளிநீக்குஆமா சார்!! அரசியல் தான் சாதியை வளர்கிறது:((
நீக்குஇந்தியாவில் ஜாதியை வைத்து ஏற்ற தாழ்வுகள் இருக்கும் வரை ஜாதி வாரி கணக்கெடுப்புகள், அட்டவணையில் குறித்தல் போன்றவை இருக்கத்தான் செய்யும்.
பதிலளிநீக்குஒரு பள்ளி மாணவன் (அதுவும் 6 ஆம் வகுப்பு) கையில் ஜாதீய அடையாளம் என்பது வேதனையான செய்திதான் சகோதரி!
**ஒரு பள்ளி மாணவன் (அதுவும் 6 ஆம் வகுப்பு) கையில் ஜாதீய அடையாளம் என்பது வேதனையான செய்திதான் சகோதரி! ** ஆமாம் அண்ணா! மிகுந்த வேதனையாகத்தான் இருக்கிறது!
நீக்குத.ம.2
பதிலளிநீக்குநன்றி அண்ணா!
நீக்குசாதிவாரிக் கணக்கு வெளியீடு ,சாதீய மோதலுக்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமே இல்லை !
பதிலளிநீக்குஆஹா! பாஸ் நீங்களே இப்படி டெரிபிக்கா கம்மென்ட் போடலாமா?? எனக்கு மெரிசலாகுது:((
நீக்குசாதி வேண்டாம் என்று சொன்னாலும் அரசு வாழ சாதி வளர்க்கப்படுகிறது. நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மையே... என்னத்தை சொல்ல இன்னைக்கி நம் நாட்டாராக இருந்த காமராஜரையும் நாடாராக்கி கோலாகலமாக கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்... இனி சாதித்தேர் சந்து பொந்தெல்லாம் இழுக்கப்படும்... ஒன்றும் செய்வதற்கில்லை...
பதிலளிநீக்குஉண்மை தான் குமாரண்ணா:(( காமராஜரை நாடார் என பிரிப்பது என்னை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறது:(( எப்போதான் திருந்தப் போறாங்களோ!!!
நீக்குஆமாம். இது கவலையுடன் கனிக்கவேண்டிய விடயம்
பதிலளிநீக்குமுதல் கருத்து என நினைக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்!
நீக்குஎங்கும் அரசியல்.... சாதியிலும் அரசியல்...
பதிலளிநீக்குசாதி இரண்டொழிய வேறில்லை என்று சத்தம் போட்டு சொல்லிவிட்டு, பக்கத்தில் அழைத்து காதோடு காதாக, “நீ என்ன சாதி?” என்று கேட்பவர்கள் தான் இன்று அதிகம்.....
இளம் பிள்ளைகளுக்காவது சாதி வெறியை தூண்டாது இருந்தால் சரி.
த.ம. +1
ஆமா அண்ணா! இந்த ஜென்மங்கள் எப்படியோ தொலையட்டும். இப்படி சின்ன குழந்தையின் மனதை கேடுக்கலமா:(
நீக்குசாதியை ஒழிக்கிறோமோ இல்லையோ முதலில் சாதிய கட்சிகளை முதலில் தடை பண்ணினாலே போதும்
பதிலளிநீக்குஅப்படி சொல்லுங்க சகா! அதான் அதே தான்:)
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஉண்மையில் இறைவனால் வகுப்பட்டது. ஆண் பெண் இரண்டு சாதி மட்டுமே மற்றவை எல்லாம் மனிதன் வகுத்தது... போலியானது... எல்லா சாதிக்கார மனிதர்களின் உடம்பில் ஓடும் குருதியின் நிறம் சிகப்புத்தான்.. இதை உணர்ந்தால் நன்று.த.ம6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரூபன் சகோ!! நீங்கள் எனக்கு இதுவரை அளித்த பின்னூட்டத்திலேயே நீளமானது இது தான். so, பதிவு உண்மையாகவே அர்த்தமுள்ளதாக இருக்கிறது போலவே!! மிக்க நன்றி சகோ!
நீக்குநியாயமான அச்சம். மாற்றங்களை மாணவர்களிடமிருந்து தொடங்குங்கள் என்பார்கள். அப்போதுதான் எதிர்காலத் தலைமுறை சரியாய் வரும் என்பதால்! இந்த விஷயத்திலும் அதைப் பின்பற்றி இருக்கிறார்கள்.
பதிலளிநீக்குஅவங்க பின்பற்றுவதற்கு முன் நாம் சுதாரிக்கவேண்டும் இல்லையா சகா!
நீக்குசாதியம் பற்றிய புரிதலை மாணவர்களுக்கு உருவாக்கும் உங்கள் முயற்சி பாராட்டத் தக்கது.. தொடர்ந்து செயல்படுங்கள் கல்வியின் மூலமே மாற்றம் கொணர முடியும்...
பதிலளிநீக்குநன்றி சகோ! நானும் அந்த நம்பிக்கையில் தான் இருக்கிறேன்:)
நீக்கு\\\\அதிகம் எதிர்பார்க்கப்படும் விஷயங்கள் நமத்துபோவதும், எதிர்பார்க்காத கயிறுகள் பாம்புகள் ஆவதும் நம் நாட்டின் நடைமுறை. பொறுத்திருந்து பார்ப்போம் இந்த கணக்கெடுப்பின் விளைவை!///
பதிலளிநீக்குஉண்மை தான் அம்மு உங்கள் ஆதங்கம் புரிகிறது.உங்கள் முயற்சி பாராட்டத் தக்கதே. ஆனால் அம்முக்குட்டிக்கு தலைவலி வரும் அளவுக்கு வேண்டாமே ஹா ஹா ..... கேட்கவே வேதனையாக உள்ளது. நமது நாட்டுப் பிரச்சினை வேறு. சிங்களத்திற்கும் நமக்கும் உள்ள பிரச்சினை. ஆனால் நமக்குள் (தமிழர்களுக்குள் )பிரச்சினை இந்த அளவிற்கு போக வில்லை நானறிய. பாடசாலைகளும் சரி வேறு நிர்வாகங்களிலும் , எங்கும் ஜாதி பற்றிய பிரிவினை இருந்ததில்லை அதை பற்றி குறிப்பிட வேண்டிய நிலைமையும் கூட இருந்ததில்லை மற்றபடி உள்ளூர ஒவ்வொருவருக்கும் ஜாதித் திமிர் இருந்திருக்கிறது தான் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் அவர்கள் வளர்ச்சிக்கு எந்தத் தடையும் அங்கு பெரிதாக இல்லை கோவில்களுக்கும் யாரும் போகலாம். என்ற நிலைமையே அங்கு இருந்தது. கல்யாணம் மட்டும் செய்து கொள்ளமாட்டார்கள் அதையும் மீறி செய்தவர்கள் ஒதுக்கப் படுவார்கள். பின்னர் நாளடைவில் கோபம் தணிந்து பாசம் மிஞ்சினால் சேர்ந்து விடுவார்கள். ஆனால் உத்தரவாதம் இல்லை. சேர்வார்கள் என்பதற்கு.ம்..ம்..ம்.
ஆனால் உங்கள் கைகளில் தான் power இருக்கிறதே, ஆசிரியர்கள் தான் தலை எழுத்தை மாற்றவேண்டும். இல்லையா அம்மு. அதற்கும் உங்களைப் போல எல்லா ஆசிரியர்களும் இருப்பார்களா என்ன. எல்லாம் சிக்கல் தான் பொறுத்து இருந்து பார்ப்போம்.பதிவுக்கு நன்றி! அம்மு. நீண்ட நாளின் பின்னர் காண்பதில் அளவு கடந்த மகிழ்ச்சியே. தொடர வாழ்த்துக்கள் ...!
நீங்க சின்னப்பையனைப் பத்தி சொல்றீங்க. பதிவுலகில் "சாதி வேணும்"னு பதிவெழுதியவர்கள் இருக்காங்க..இன்னொரு பக்கம் பிராமணாள் தளம்னு ஒரு தளம்கூட ஆரம்பித்தார்கள். இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.
பதிலளிநீக்குதன்னை ஒரு தனிமனிதனாக சமூகத்தில் அறிமுகம் செய்து வாழத் தைரியமில்லாதவர்கள், இப்படி தான் இன்னாருனு சொல்லி தனக்கும் நாலு பேரு அவங்க சாதி சனம் இருக்காங்கனு சொல்லிக் கொள்வதற்காகத்தான் இதெல்லாம்னு தோனுது.
நம்ம அமரர் ஜெயகாந்தன் தான் பாரதீய ஞான பீடப் பரிசு பெறும்போது, தான் "இந்த சாதி" யைச் சேர்ந்தவர்னு பெருமையாகச் சொல்லிக் கொண்டார். அப்போ அவருக்கு வயசு என்ன? அவர் ஒரு புரட்சிகரமான எழுத்தாளர்னு அவரையும் அவர் சிந்தனைகளையும் புகழாதவர்களே இல்லை. ஆனால் இப்படி கீழ்த்தரமாக நடந்துகொண்டார்.. அதை தப்புனு சொல்றதுக்க்கூட எவனுக்கும் துப்பு இல்லை..ஒரு எழுத்தாளன் சிந்தனைகளே இப்படி இருக்குனா மத்தவன் பத்தி கேக்கணுமா என்ன? இப்படித்தான் இருக்கானுக! என்ன செய்றது??
சகோதரி...
பதிலளிநீக்குமனதை வருத்தும் பதிவு !
நீங்கள் குறிப்பிட்டது அனைத்தும் உண்மை.
ஒரு பத்து வருடங்களுக்கு முன்புவரை, இனிவரும் தலைமுறையினர் ஜாதி,மத பேதமின்றி வளருவார்கள் என அடிக்கடி கூறிக்கொண்டிருப்பேன்... எனது கூற்று பொய்த்துவிட்டது !
புள்ளிவிபர முடிவு வெளியிடப்படுவதே அரசியல் ஆதாயங்களுக்குத்தான் !
விடிவு வேண்டுமானால் இன்னொரு பெரியார் தோன்ற வேண்டும்...
அந்த அற்புதம் ஒரு ஜாதியினர் ஒட்டு மொத்தமாக மனது வைத்தால் முடியும்...
ஆசிரியர் ஜாதி ! உங்களால் ஓராயிரம் பெரியார்களை ஒட்டுமொத்தமாக உருவாக்க முடியும் !!
நன்றி
சாமானியன்
அரசியல்வாதிகளுக்கு கையில் கிடைக்கும் எதுவுமே ஆதாயத்திற்கான ஆயுதம். அதில் சாதியும் ஒன்றாகிவிட்டது. விளைவுகளை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
பதிலளிநீக்குஆமா எங்க என் பின்னூட்டம் காணலையே அய்யய்யோ என்னாச்சு .....
பதிலளிநீக்குஉங்கள் அரும்பணிக்கு என் வாழ்த்துகள் டியர்.
பதிலளிநீக்குஎவ்வளவு விசயங்கள் உலகில் நடந்திருக்கு, நடந்து கொண்டிருக்கு..கற்றும் தெளிந்தும் முன்னேறாமல் ..... வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை..
த.ம.+1
நீங்கள் நல்ல ஆசிரியர் மட்டுமில்லை, துணிச்சலான ஆசிரியரும் கூட என்பதற்கு இந்தப் பதிவு ஓர் எடுத்துக்காட்டு! ஆம்! என்னதான் மாணவர்களாக இருந்தாலும், சாதி போன்ற விதயங்களில் அவர்களிடம் கடுமை காட்டத் துணிவு கொஞ்சம் கூடுதலாகத் தேவை!
பதிலளிநீக்குநீங்கள் மாணவர்களில் ஒருவர் இப்படிச் செய்ததற்கே கவலைப்படுகிறீர்கள்! தென் மாவட்டங்களில் மாணவர்கள் அவரவர் சாதியை அடையாளப்படுத்தும் விதத்தில் கையில் கயிறு கட்டிக் கொண்டே வருகிறார்களாம்! இன்னும் பல கண்ணறாவிகளும் நடக்கின்றன. முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்குச் சாதி மிகத் தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கும் அருவெறுப்பான காலக்கட்டத்தில் நாம் வாழ்கிறோம் சகா!
ஆனால், உண்மைகளை மறைத்து வைப்பதை விடவும் எது எப்படி வேண்டுமானாலும் ஆகட்டும் எனச் சாதிவாரிக் கணக்கெடுப்பு முடிவை வெளிவிடுவதே நல்லது என நம்புகிறேன். காரணம், இன்று ஏதேனும் ஒரு வகைச் சாதிப்பிரிவின் எண்ணிக்கை கூடுதலாக இருந்து, இப்பொழுது நாம் அதை வெளியிடாமல் விட்டுவிட்டு, நாளைக்கு ஏதாவது ஒரு வழியில் அந்த உண்மை திடீரென வெளிப்படும்பொழுது அப்பொழுது அந்தச் சாதிப்பிரிவை விட வேறு ஒரு சாதிப் பிரிவின் எண்ணிக்கை உயர்ந்திருந்தால், வேண்டுமெனவே அந்த உண்மையை வெளிவிடாமல் மறைத்திருக்கிறார்கள் எனும் சீற்றத்தில் இப்பொழுதையதை விடப் பன்மடங்கு கூடுதலான சீற்றம் அந்தச் சாதிப்பிரிவினரிடம் ஏற்பட்டு எதிர்ச் சாதியினர் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு இல்லையா?
*என்னதான் மாணவர்களாக இருந்தாலும், சாதி போன்ற விதயங்களில் அவர்களிடம் கடுமை காட்டத் துணிவு கொஞ்சம் கூடுதலாகத் தேவை!* என் மாணவர்களுக்கும் எனக்கும் இடையே நல்ல அலைவரிசை ஒன்று எப்போதும் இருக்கிறது சகா :) இதுபோல தடாலடியாய் செய்யும் சமயங்களில் ஒரு நல்ல புரிதலோடு மாணவர்கள் இருப்பதே இப்படிஎல்லாம் செயல்பட முடிவதற்கான காரணம்.
பதிலளிநீக்கு**அந்த உண்மையை வெளிவிடாமல் மறைத்திருக்கிறார்கள் எனும் சீற்றத்தில் இப்பொழுதையதை விடப் பன்மடங்கு கூடுதலான சீற்றம் அந்தச் சாதிப்பிரிவினரிடம் ஏற்பட்டு எதிர்ச் சாதியினர் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு இல்லையா?** அப்படியா சொல்கிறீர்கள்!! நான் ஒரு optimist. ம்ம்ம்ம். நேர்மறை எண்ணங்கள் கொண்டவள் என சொல்லவேண்டுமோ?? நல்லதே நடக்கும் என்றும் நம்புவோம் சகா:) உங்கள் விரிவான, சேர்வான பின்னூட்டத்திற்கு நன்றி சகா!
//ளிடம் கடுமை காட்டத் துணிவு கொஞ்சம் கூடுதலாகத் தேவை!* என் மாணவர்களுக்கும் எனக்கும் இடையே நல்ல அலைவரிசை ஒன்று எப்போதும் இருக்கிறது சகா :) இதுபோல தடாலடியாய் செய்யும் சமயங்களில் ஒரு நல்ல புரிதலோடு மாணவர்கள் இருப்பதே இப்படிஎல்லாம் செயல்பட முடிவதற்கான காரணம்// - ஓ அப்படியா! மிக்க நல்லது!
பதிலளிநீக்கு