உலகமயமாக்கல், நுகர்வோர் கலாச்சாரம் போன்ற வார்த்தைகளை தெரிந்துகொண்ட நாளில் இருந்து விளம்பரங்களின் அழகியலை மீறி அதன் அரசியலையும் புரிந்துகொள்ளும் தெளிவு கைவரப்பெற்றிருக்கிறது. ஆனாலும் என்ன, குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்ற சிந்தனையோடு, பிரபு போல புரட்சி, போராட்டம் என்று இறங்காமல், நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை (எந்த நாலு பேர்?!) என கமல் (போல) கமர்ஷியல்களையும் சகிக்கப் பழகியாயிற்று.
பதிவர் திருவிழா 2015 மிக சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. முன்னெடுத்து நடத்திய நிலவன் அண்ணா தலைமையிலான புதுகை கணினி தமிழ் ஆசிரியர் சங்கம் பம்பரமாய் சுழன்று விழா வெற்றி பெற உழைத்தது நம் அறிந்ததே! டி.டி அண்ணாவின் உழைப்பு அசாத்தியமானது.