புதன், 29 ஜனவரி, 2025

இரவுக்கு ஒரு மனம்

 இரவுக்கென ஒரு மணம்

வந்துவிடுகிறது.

மனமும்.


மழைக்கு ஒன்று

இரவுக்கு ஒன்று

என தனித்தனியே

இரண்டு பின்னணி

இசைக்கோப்பு 

வைத்திருக்கிறது இயற்கை. 


இரவின் நாண் அதிர

இருள் மெல்லத் 

துலங்கத் தொடங்கும் வேளை

அத்தனை அரிதாரங்களையும்

களையத் தொடங்குகிறது மனது


புழுக்கம் அதிகரிக்க அதிகரிக்க

வேடங்களைக் களைகிறது. 

நடுநிசியின் மடி நாடி

தலை கவிழ்ந்து

கண் கசிகிறது. 


கண்ணீரின் கரிப்பு

உதட்டுக்கு வந்ததும்

மெல்ல அழுகையடங்கி

உள் ஒலிக்கும் இசையின்

கரம் பற்றுகிற மனம்

விடியும் வரை நிகழ்த்துகிறது

ஒரு ஊழிக்கூத்து. 


_மைதிலி கஸ்தூரிரங்கன்

3 கருத்துகள்:

  1. இரவின் இசை.... நல்லதொரு கவிதை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. இரவுக்கு மணமும் மற்றும் மனமும் இருக்கிறதா?! :)

    மைதிலி!
    மறுபடியும் நீங்களும் மதுவும் பதிவிடுறீங்க போல இருக்கு. நான் இங்கே வந்து ரொம்ப நாளாச்சி. மது பதிவில் (மலர்த்தரு) ஒரு பின்னூட்டம் இட்டேன். ரொம்ப நாள் வெளிவரவே இல்லை. சரி கடையை அடச்சுட்டாரு போலனு நினைத்தேன். இன்று போய் பார்த்தால் பல பதிவுகளுடன் அந்த பின்னூட்டமும் வெளிவந்து இருக்கிறது. :)
    I kind of got busy these days. Just showed up! Hi say hi to Madhu! Take care!

    பதிலளிநீக்கு
  3. இரவு, இசை, கண்ணீர் என மூன்றையும் ஒரே அலைவரிசையில் கோக்கும் இத்தகைய மொழியற்புதமெல்லாம் உங்களால் மட்டுமே இயலும் சகா!

    பதிலளிநீக்கு