இருமுடி கட்டி மலையேறும்
வாகனம் போலவே காட்சியளிக்கும்
எல்லாப்பள்ளி வாகனமும்
திருநீரா ?பௌடர் தீற்றலா?
சந்தேகம் விலக்கும் முன்
கடந்து விடுகிறார்கள் ஸ்கூட்டி பெண்கள்
நிறபொருத்த உடையில் எதிர்ப்படும் ஆணின்
மனைவி இல்லாள் இல்லையெனில்
அவன் ரசனைக்காரன் தான்
சந்தை ஓய்ந்த பின்னிரவாய்
சாலையை பார்க்கவேணும்
சாத்தியமாகுமா ஒரு தற்செயல் விடுப்பு -கஸ்தூரி
வாகனம் போலவே காட்சியளிக்கும்
எல்லாப்பள்ளி வாகனமும்
திருநீரா ?பௌடர் தீற்றலா?
சந்தேகம் விலக்கும் முன்
கடந்து விடுகிறார்கள் ஸ்கூட்டி பெண்கள்
நிறபொருத்த உடையில் எதிர்ப்படும் ஆணின்
மனைவி இல்லாள் இல்லையெனில்
அவன் ரசனைக்காரன் தான்
சந்தை ஓய்ந்த பின்னிரவாய்
சாலையை பார்க்கவேணும்
சாத்தியமாகுமா ஒரு தற்செயல் விடுப்பு -கஸ்தூரி
அடடே! ஐக்கூபோலவும் எழுதுவாய் போல...! அருமை அருமை!
பதிலளிநீக்குஇன்னும் சற்றே சிரமப்பட்டிருந்தால் அருமையான அய்க்கூக்கள் கிடைத்திருக்குமே! அந்த வடிவமும் அழகான கவிதைதான்!
அதிலும் அந்த “நிறப்பொருத்த உடை” என்னும் புதிய சொல்லாடல் “மேட்சிங் ட்ரெஸ்“ என்பதற்கு அழகுபொருத்தச் சொல்தான்!
முதலும், முடிவுமாய் வந்த கவிதைகள் என்னைக் கவர்ந்தன.
இரண்டாவது வெறும் செய்திச் சிதறல்போல...
மூன்றாவது கவிதை -உண்மையைச் சொல்கிறேன்- புரியவிலலையே!
இல்லத்தரசிகள் கணவருக்காக உடைகளை எடுத்து வைத்து விடுகிறார்கள்.ஆனால் மனைவியும் பணிபுரியும் பெரும்பாலான வீடுகளில் கணவனே ஆடைகளை தேர்ந்தெடுக்க வேண்டுமல்லவா?மற்றொரு முறை கவிதையை தெளிவாக எழுத முயல்கிறேன் அண்ணா
நீக்குரசனையை ரசித்தேன்... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குரசித்தமைக்கு நன்றி.
நீக்குஅன்பின் மைதிலி கஸ்தூரி ரங்கன் - வேலை நாட்களில் சாலை காட்சிகள் கவிதை அருமை - மகிழ்ந்தேன் - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
நீக்குஅருமை சகோதரி. வாழ்க்கை நடப்புகளைக் கவனித்து அதை படைப்பாக மாற்றுபவர் தான் படைப்பாளி, அந்த வகையில் ஒரு படைப்பாளியாய் தாங்கள் மிளிர்வது மகிழ்வளிக்கிறது சகோதரி.
பதிலளிநீக்குதொடரும் தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குஅருமை தோழி. நிறபொருத்த உடை - ரசித்தேன்.
பதிலளிநீக்குஇல்லாள் இல்லையெனில் - மிக அருமை..
கலக்கிட்டீங்க மைதிலி. ஆமாம், மகிவதனா நீங்க தானா? :)
பொருத்தமான தலைப்பு அருமை சகோதரி.
பதிலளிநீக்கு