உன்னிடம் தொலைப்பது
வாடிக்கையாகிவிட்டது எனக்கு
இன்று உறக்கம்
ஒருவரை ஒருவர் வார்த்தைகளால்
வெட்டி வீழித்திய பின்
தோற்றிருந்தோம் இருவருமே
மதுக்கோப்பை ஆனது
தேநீர்க் கோப்பை -உன்
இதழ் (கள்) பட்டு
சூடியபின் வாடிய ரோஜாவிற்காய்
நீ செய்த காகிதக்கப்பலில்
நீந்திக்கொண்டிருக்கிறது
நீ நிராகரித்த என் காதல்
பூக்க விரும்பாத மூங்கிலை
துளைத்த தும்பி
புல்லாங்குழலாக்கியது
காற்றெல்லாம் இசை நுகர்ந்தபின்
தும்பிக்கு கைமாறாய்,
தன் மதுவில் தலை சுற்றி மாயாதிருக்க
மலர்களை எல்லாம் தன்னுள்
மறைத்திருந்தது மூங்கில்
பற்றி எரியும் புரவியாய் நீ
நெற்றி நனைக்கும் அருவியாய் நான்
இது காதல் காலம்
(தொடரும்.............) -கஸ்தூரி
கவிதை பிரமாதம் பா.
பதிலளிநீக்குஆனால், தலைப்பு ஏன் தொடர்பே இல்லாமல் இருக்கிறது?
கதைக்கோ கவிதைக்கோ தலைப்பு என்பது அதைச் சுண்டச்சுண்டக் காய்ச்சியபின் கிடைக்கும் ஒருசொட்டுப் பால்போல் இருக்கணும். பொத்தாம் பொதுவான தலைப்பு பொருத்தமில்லாமல் மறந்துபோகும். காதலைப்பற்றி எழுதும் வயதுதான் உனக்கு.
குறுந்தொகை படித்துவிட்டு எழுதிப்பார். இன்னும் அழகா வரும். ஒருசில தட்டச்சுப் பிழைகளைக் கவனித்து நீக்கக் கூடாதா?
பொருத்தமான படங்களை எங்கருந்துப்பா சுடுற?
நல்லாருக்கு. நல்லா இரு!
தலைப்பை மாற்றிவிட்டேன் அண்ணா.பிழைகளை இனி கவனத்தில் கொள்கிறேன்.மனதில் தோன்ற தோன்ற எழுதும் போது இவ்வாறான தவறுகளை கவனிக்க தவறிவிடுகிறேன்.நன்றி அண்ணா
நீக்குகவிஞர் முத்துநிலவன் அய்யா அவர்களின் கருத்து மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டும், வழிகாட்டுவதையும் காணும் போது மகிழ்ச்சியடைகிறது மனம். நன்றீங்க அய்யா.,
நீக்கு//காற்றில்லாம் இசை நுகர்ந்தபின்//
நீக்கு//தன் மதுவில் தலை சுற்றி மாயதிருக்க//
எனும் இருவரிகள் “ காற்றெல்லாம்“ என்றும் மாயாதிருக்க என்றும் இருக்க வேண்டுமா அல்லது வேறேதேனும் கருத்துக் கருதி இப்படி அமைத்திருக்கிறீர்களா?
இதழ்(கள்) பட்டில் “இதழ் கள் ஊறுமடி “ விஜய ராஜேந்தர் தெரிகிறார்.
புதுக்கவிதைப் பக்கம் அவ்வளவாய் வந்ததில்லை.
கொஞ்சம் எழுதிப் பார்த்தால் தானே என் லட்சணம் என்னவென்று எனக்குத் தெரியும்.
அதன் பின் இதே கவிதைக்குப் பின்னூட்டமிட மீண்டும் வருவேன்.
இதை வெளியிட வேண்டாம்.
நன்றி!
வரிகளில் மயங்கினேன்...!
பதிலளிநீக்குமிக்க நன்றி சார் .தங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது
பதிலளிநீக்குஅற்புதமான வரிகள் சகோதரி. ///மதுக்கோப்பை ஆனது
பதிலளிநீக்குதேநீர்க் கோப்பை -உன்
இதழ் (கள்) பட்டு/// போன்ற வரிகள் ரசிக்க வைக்கிறது. தொடருங்கள் ச்கோதரி உங்கள் கவிப்பய்ணத்தை. சிறந்த கவிதைக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும் அன்பு சகோதரிக்கு.
சகோதரருக்கு நன்றி
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் மைதிலி
பதிலளிநீக்குநன்றி சகோதரி!
நீக்குbeautiful.
பதிலளிநீக்கு