மழை
அழுக்கான மனங்களுக்காய் அலுத்துப்போய்
பூமியை மட்டுமாவது சுத்தம் செய்ய
பொழிகிறது மழை.
ஆசை
குளத்து நீரில் பாசியாய்
வாழ்வின் வசந்தங்களில்
படர்ந்து கிடக்கிறது ஆசை
குழவி(குழந்தை )
காதருகே சொன்னபோதும்
குழப்பமாகவே கேட்டது
குழவியே உன் கவிதை
தனிமை
ஓசையில்லா என் தனிமையில்
பேசிப்பேசி கலைத்து போயின
மரங்களும் ,தென்றலும்!
கதிரவன்
கதை கட்ட போகிறார்கள் என்னோடு நடவாதே
களங்கம் உனக்கும் தான்
கீழ்வான சூரியனே!
`குளிர்பானக்கோப்பை
உன் இதழ்களை நெருக்கத்தில்
பார்த்து வியர்த்திருந்தது
`குளிர்பானக்கோப்பை
-கஸ்தூரி
அழுக்கான மனங்களுக்காய் அலுத்துப்போய்
பூமியை மட்டுமாவது சுத்தம் செய்ய
பொழிகிறது மழை.
ஆசை
குளத்து நீரில் பாசியாய்
வாழ்வின் வசந்தங்களில்
படர்ந்து கிடக்கிறது ஆசை
குழவி(குழந்தை )
காதருகே சொன்னபோதும்
குழப்பமாகவே கேட்டது
குழவியே உன் கவிதை
தனிமை
ஓசையில்லா என் தனிமையில்
பேசிப்பேசி கலைத்து போயின
மரங்களும் ,தென்றலும்!
கதிரவன்
கதை கட்ட போகிறார்கள் என்னோடு நடவாதே
களங்கம் உனக்கும் தான்
கீழ்வான சூரியனே!
`குளிர்பானக்கோப்பை
உன் இதழ்களை நெருக்கத்தில்
பார்த்து வியர்த்திருந்தது
`குளிர்பானக்கோப்பை
-கஸ்தூரி
அனைத்தும் ரசிக்க வைக்கும் வரிகள்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
வருகைக்கும் ,வாழ்த்திற்கும் நன்றி
நீக்குஅத்தனையும் அருமை சகோதரி. ஹைக்கூ கவிதையிலும் கலக்கியிருக்கீறீர்கள். தங்களின் ரசிப்புத்தன்மை கவிவரிகளில் தலைத்தூக்கியுள்ளது கண்டு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் சகோதரி. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குதங்களது தளத்தை பார்த்தேன்.அட்டகாசம் ,வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சார்
நீக்குஎல்லாமே நல்லா இருந்தாலும்,
பதிலளிநீக்குபாசி கவிதை மனதில் ஒட்டிக்கொண்டது.
குழவி கவிதை சரி. இதற்குக் குழந்தை என்பது பொருள் என அடிக்குறிப்பில் போடவேண்டியிருக்கும். இது தேவையான்னு கொஞ்சம் யோசிக்கலாம்.
“பேசிப் பேசிக் களைத்துப் போயின“ என்று வரவேண்டிய வரிகளை
பேசி பேசி கலைத்துப் போயின என்றதால் பாதிமார்க் போச்சு போ!
கவிதையில் கருத்துத்தான் முக்கியம் என்றாலும் எழுத்தில் பிழையின்றிப் பார்க்கவேண்டிய பொறுப்பும் உண்டு தாயி! நல்லா சமைச்சு, கழுவாத கரண்டியில் போட்டா, சாப்பிடுறவங்க ரசிப்பாங்களா, சொல்லு?
என்றாலும் எழுது எழுது எழுதிக்கிட்டே இரு! ஒருநாள் சாகித்திய அகாதெமி உன்னை அழைத்துச் சரியான விருது தருதோ இல்லயோ சாமான்ய மக்கள் தம் நெஞ்ச வரலாற்றில் நினைவேற்றி வைப்பார்கள். வாழத்துகள் தங்கையே!
சும்மா மனநிறைவுக்காகத்தான் எழுதுறேன் .உங்களது வாழ்த்தே விருது பெற்ற மகிழ்வு அண்ணா.நன்றி
நீக்குஆங்... சொல்ல மறந்துட்டேன்.
பதிலளிநீக்குவழக்கம்போலப் படங்கள் அருமை என்றாலும், அந்தப் பாசிக்குளம் கவிதையோடு போட்டிபோட்டு மனசோடு மல்லுக்கட்டி நிற்கிறது... அம்மாடியோவ்! அருமை. மரத்தடி பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் பெண் புடவைகட்டிய தமிழ்ப் பெண்ணாக இருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்குமோ?
அண்ணா வைத்துக்கொண்டு வஞ்சகம் செய்யவில்லை ,எழுத்துப்பிழைகளை சொல்கிறேன்.திருத்திவிட்டேன்.படத்தையும் மாற்றி விட்டேன் இப்போ மகிழ்ச்சி தானே ?
நீக்குமகிழ்ச்சிதான் என் கவித்தங்கையே!
நீக்குஉன் வலைப்பக்கத்தை எனது வலைப்பக்கத்தின் “நண்பர்களின் வலைப்பக்கத்தையும் பாருங்க” என்னும் இணைப்பில் தந்திருக்கிறேன். உன் கவிதைகளை நிறைய நிறையப்பேர் பார்க்க வேண்டும் என்பதால்...
அண்ணா சிறிது உடல் நலக்குறைவு .எனவே உடனடியாக பார்த்து நன்றி சொல்ல முடியவில்லை அண்ணா .மிக்க
நீக்குஅட அட... அத்தனை குறும்பாக்களும் மெத்தன மனதில் அப்பிக்கொண்டன..:)
பதிலளிநீக்குமிக அருமை! படங்களும் அசத்தல்!
வாழ்த்துக்கள் தோழி!
உங்கள் வருகை உற்சாகம் அளிக்கிறது .நன்றி தோழியே !
நீக்குகுளிர்பானக் கோப்பை கவிதையும் படமும் அழகு ....!
பதிலளிநீக்குகோப்பையில் வியர்வைத்துளியை காணலையே :-)....!
google images ல் சல்லடை போட்டேன் கிடைக்கலையே ?வருகைக்கு
நீக்குவருகைக்கு ...... கண்டனமா ? நன்றியா ...? :-)
நீக்குநிச்சயம் நன்றி தான் .எப்படி அந்த வார்த்தை மட்டும் மறைந்ததோ ?தெரியல !மீண்டும் சொல்கிறேன் வருகைக்கு நன்றி !நன்றி!
நீக்குஅனைத்தும் அருமை. எனினும் மிகவும் பிடித்தது 'குழவி' மற்றும் 'தனிமை'.
பதிலளிநீக்குவாழ்த்துகள் தோழி!
மிக்க நன்றி கிரேஸ் தங்கள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது
பதிலளிநீக்குரசித்தேன்
பதிலளிநீக்குஅருமை
சகோதரியாரே
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குஇருமுறை ஒரே பின்னூட்டம் எனவே நீக்கினேன்...
நீக்குதங்கள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது சகோதரரே!வாழ்த்துக்கு நன்றி!
பதிலளிநீக்குஅட!அடா!அள்ளித்தூவி அசத்திட்டீங்க! அருமை.
பதிலளிநீக்கு