திங்கள், 21 அக்டோபர், 2013

என் செல்ல டைனமைட் (part i)

ஆல்பிரெட் நோபல்
 உங்கள் கவனத்திற்கு . டைனமைட் என்பது ஒரு வெடிபொருள் .என்ன ஒரு வெடிமருந்தை கொஞ்சிக்கொண்டிருக்கிறேன் என்று பார்த்தீர்களா? பின்னே கட்டுரையை படியுங்கள் உங்களுக்கும் பிடிக்கும். டைனமைடை கண்டுபிடித்தவர் ஆல்பிரெட் நோபல் .இவர் பல வெடிமருந்துகளை கண்டுபிடித்திருந்தாலும் பொருளையும் ,புகழையும் தேடிதந்ததென்னவோ டைனமைட் தான் .இரண்டாம் உலகப்போர் நடந்த காலகட்டத்தில் இவரது கண்டுபிடிப்புக்கு ஏக கிராக்கி .அப்புறம் என்ன காசு ,பணம்,துட்டு,மணி மணி தான்.

பதக்கம்
     
 ஒரு நாள் காலை செய்தித்தாள் பார்த்த நோபலுக்கு பெரும் அதிர்ச்சி .தனது மரண அறிவிப்பை தானே படிக்க நேர்ந்தால் யார்தான் அதிர்ச்சியடையமாட்டார்கள் ?அதில் “மரண வியாபாரி மரணம்”என்ற தலைப்பின் கீழ் டைனமைட்டை கண்டுபிடித்த ஆல்பிரெட் நோபல் மரணமடைந்தார் என கூவிக்கொண்டிருந்தது ஒரு செய்தி .
                       உண்மை என்வென்றால் இறந்து போனது நோபலின் சகோதரர் லட்விக் நோபெல் .அந்த பிரெஞ்சு பத்திரிக்கையால் நோபல் தான் இறப்புக்கு பின் உலகால் எவ்வாறு பார்க்கப்படப்போகிறோம் என்பதை உணர்ந்தார் .ஸ்வீடன் கண்டுபிடிப்பாளரான இவர் ஒரு ஸ்கன்டிநேவியன் கமிட்டியை நிறுவினார்.தனது சொத்தில் 91% அந்த கமிட்டியிடம் ஒப்படைத்து physics, physiology or medicine, literature என பல துறையில் மதிப்பிட முடியாத பெரும் சாதனை செய்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்க1895 ஆம் ஆண்டு வழிசெய்தார்.    Peace, economics துறைகளுக்கான விருது 1968 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. அவரது கேர்ள்பிரெண்ட் அவரை கழட்டிவிட்டு விட்டு ஒரு கணிதப் பேராசிரியரி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம். அதனால் கணிதத் துறைக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதில்லை என்று ஒரு பேச்சு. இப்படி அருமையான ஒரு பரிசு கிடைக்க காரணாமாக இருந்தது டைனமைட்தானே? இன்னும் நோபல் பரிசை பற்றி சுவையான சில செய்திகள் அடுத்த பதிவில்.

கஸ்தூரி

12 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான செய்திகள்... தொடர்க... நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. அன்பு சகோதரிக்கு, நலம் தானே!
    புதிய செய்தியை அறிந்து கொண்ட மகிழ்ச்சி. டைனமைட் இதுவும் செய்துள்ளது கண்டு வியப்பு. MY BLOG LIST ல் எனது வலைத்தளத்தையும் இணைத்தமைக்கு நன்றீங்க சகோதரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலம் சகோதரரே ,தாங்கள் நலமா?தங்கள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.

      நீக்கு
  3. சுவையான செய்திகள், தொடருங்கள் சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  4. டைனமைட்... செய்தியும் டைமண்ட்தான்...
    நல்ல செய்திப் பகிர்வு.
    நன்றியும் வாழ்த்துக்களும்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் நட்பை போல என்று உங்கள் மைன்ட் வாய்ஸ் சொன்னதா ?மிக்க மகிழ்ச்சி தோழி!

      நீக்கு
  5. நல்ல செய்திகள் வாழ்த்துக்கள் தோழி

    பதிலளிநீக்கு
  6. மிக்க நலம் சகோதரி. தங்கள் அன்பையும், எனது சகோததர் கஸ்தூரி அண்ணாவின் அன்பையும் என்றும் மறவேன். இணைந்த நட்பில் தொடர்ந்திருப்போம். நன்றீங்க சகோதரி....

    பதிலளிநீக்கு
  7. அன்பின் மதி வதனா - என் செல்ல டைனமைட் - பதிவு அருமை - நோபல் பரிசு பற்றிய பதிவு நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு