வியாழன், 14 நவம்பர், 2013

மழை

மதில் ஏறி கன்னம் வைக்கும் கள்வனாய்
மழைச்சரம் பிடித்துவிண்ணைத் தொட ஆசை



கரையேறி கடல்சேரும் அலைகளாய்
மழை முகில்மீது ஊஞ்சலிட ஆசை

உப்பாய் சர்க்கரையாய் ஒருநாளேனும்
உருகியே மழைநீரில் கரைந்திட ஆசை

தொலைத்த வயதை, நினைத்து வருந்த
தோன்றினாயோ மழையே?

வயதை தொலைத்து,வருத்தம்தொலைத்து
உன்னில் கரைவேன் மழையே!

== கஸ்தூரி ==

20 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரி..
    தங்கள் ஆசைகள் அழகான ஆசைகள் தான்.
    முதல் வரிகளில் மனது கவிக்குள் சங்கமமாகி கரையேர மறுக்கிறது. அற்புதமான வரிகள். எனக்கும் ஒரு ஆசையுண்டு சகோதரி தொலைந்த மழையைக் கண்டு விட.. அழகான பகிர்வுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும். தொடர்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சார்
      மழை எல்லோரையும் மழலை போல் ஆக்கிவிடுகிறது.வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி

      நீக்கு
  2. விளையாடும் பருவம்
    விரைந்தேறிப் போனாலும்
    மழை கண்டால்
    மகிழ்ந்தாடாதோ மனம்!

    மிக அருமை..
    மழையோடு மன உணர்வினையும் பதித்த கவிவரிகள் அழகு!

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழி !

      நீக்கு
  3. ஆகா... சின்னச் சின்ன ஆசை? அருமைதான் எல்லாருமே நினைப்பதுதான் அருமையான வார்த்தைகளில் உன் கவிதையாகியிருக்கிறது. கடைசி 4வரிகள் நல்ல சந்தத்தில் வந்திருக்கின்றனவே! மரபுக்கவிதை உன் மனசுககுள் கிடக்கிறது...! தொடர்ந்து எழுதினால் அதைத் தோண்டி வெளிக்கொண்டு வரலாம்னு தோணுது. அதிலும் முயற்சி செய்க. பாராட்டுகள்.( ஆனாலும் வின்னை - விண்ணை அரை மார்க் போச்சு போ!) அண்ணனின் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அண்ணா,
      பணிச்சுமை காரணமாக உடனுக்குடன் நன்றி சொல்ல முடியாமல் போகிறது..

      நீக்கு
    2. இதே பாணியில் மற்றொரு கவிதையும் கைவசம் இருக்கிறது உங்களின் ஊக்கத்தினால் விரைவில் அதைப் பதிவாய்ப்போடலாம் என்று இருக்கிறேன்.

      நீக்கு
    3. ஓ! மரபுக்கவிதை இன்னொன்றும் இருக்கிறதா? போடு போடுன்னு போடு மரபறிந்து மீறக்கூடிய புதுக்கவிதைக்காரர்களுக்கும், நேரடியாகப் புதுக்கவிதை மட்டும் எழுதக் கூடியவர்களுக்கும் சில வேறுபாடுகள் உண்டு. அதுபற்றித் தனிக்கட்டுரை எழுத வேண்டும் - உன் அடுத்த கவிதை பார்த்துத்தான் முடிவு செய்ய வேண்டும். சீக்கிரம் போடுப்பா...
      (இடையில் 24-11-2013 காரைக்குடியில் நடக்கும் கவிதை முகாமில் பங்கேற்பாளர்களுக்கு நகலெடுத்து மாதிரிக்குத் தர நல்ல சில கவிதைகளை எடுத்து வைததிருக்கிறேன். அதில், நம் நண்பர்களின் கவிதைகளோடு உன் கவிதையும் ஒன்றுண்டு!.. உடம்பையும் பார்த்துக் கொள், கவிதையை மறந்துவிடாதே!)

      நீக்கு
    4. நீங்கள் என் கவிதையை எடுத்தாள்வது எனக்கு மிகுந்த தன்னம்பிகை அளிக்கிறது .நன்றி அண்ணா.

      நீக்கு
  4. மழைக் கவிதை அருமை.சாரல் தீண்டும் மென்மையாய்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் புத்தகத்திற்கான அண்ணாவின் முன்னுரையும் உங்கள் கவிதைகளும் அருமையாக இருந்தது டீச்சர். தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி

      நீக்கு
  5. மழை கவிதை அருமை! மழை என்றால் எனக்கும் பல ஆசைகள் தான்.

    பதிலளிநீக்கு
  6. உங்கள் சின்ன சின்ன
    ஆசைகளுக்குசிறகு
    வைத்து பறக்கவிட்டால்
    அது
    விண்ணைத்தொடும்
    பின்
    மண்ணைத்தொடும்
    பின்
    என்னையும் தொடும் .
    தொட்டுவிட்டது ...
    வயதைத்தொலைத்தாலும்
    வாய்த்ததை தொலைக்காத
    வாய்மை .
    வார்த்தைகள் வசமாகின்றன
    உங்களிடம் .
    அருமை !

    பதிலளிநீக்கு
  7. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு