இரு கைகள் நீட்டி அழைக்கின்ற தென்றலே!
இதயத்தை மெல்ல கலைக்கின்ற தென்றலே!
மழை வரும் முன்னே கட்டியம் கூறுவாய் !
மார்கழி மாதத்தில் கட்டியே போடுவாய்!
மெட்டுக்கள் சுமந்து காதிலே மோதுவாய் !
மொட்டுகள் திறந்து தேன்துளி தேடுவாய்!
உச்சந்தலையை மெத்தெனக் கோதி
சொச்ச இதயத்தை சொர்க்கமாக்குவாய்!
விழிநீர் துடைக்க விரலில்லா வேளையில்
வீதி வழிவந்து ரணங்களை மாற்றுவாய்!!
கோபம் என்றால் கோடையில் காட்டுவாய்
சாபம் தந்து சன்னல்கள் மூடுவாய்!!
உயிர்த்தீ வளர்க்கும் உயர்ந்த தென்றல் நீ
உய்யா உலகின் நித்தியக்கன்னி!!!
==கஸ்தூரி ==
சகோதரிக்கு வணக்கம்,
பதிலளிநீக்குதங்கள் கவிவரிகள் தென்றலாய் தேகம் தொட்டு பட்டுபோல தீண்டிச்செல்கிறது. நல்ல கருப்பொருள். நடையும் அழகு.
//மெட்டுகள் திறந்து தேன்துளி தேடுவாய்!// மெட்டுகள் என்றா வரும்! அருள்கூர்ந்து கவனியுங்கள் சகோதரி. அழகான தென்றல் கவிதைக்கு நன்றிகள்.
கவனக் குறைவு ... சுட்டியதற்கு மிக்க நன்றி..
பதிலளிநீக்குதென்றல் காற்று அருமை
பதிலளிநீக்குகருத்துக்கு மிக்க நன்றி... அய்யா
நீக்குnice
பதிலளிநீக்குநன்றி ....
நீக்குரசித்தேன்... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குசகோதரி
இரு கைகள் நீட்டி அழைக்கின்ற தென்றலே!
இதயத்தை மெல்ல கலைக்கின்ற தென்றலே!
தங்களின் கவிதையில் உள்ள உணர்வுமிக்க வரிகள் தென்றல் காற்றாக வலையுலகில் வீசுகிறது மிக அருமை தொடருங்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி...
நீக்குசிந்தையுள் ஊர்ந்திட்டே தென்றல் தருகின்ற
பதிலளிநீக்குவிந்தை படைத்தாய் விரைந்து!
தென்றலின் சாகசம் மிக மிக அருமை!
ரசித்தேன் தோழி!
வாழ்த்துக்கள்!
கவிதைக்கு கவிதையாலே கருத்திட்டமைக்கு நன்றி தோழி...
நீக்குஅருமையான மரபு ஓசையுடன் கூடிய கவிதைக்குப் பாராட்டுகள் பா!
பதிலளிநீக்கு''மெட்டுக்கள் சுமந்து காதிலே மோதுவாய் !'' என்பதற்குப் பதிலாகப் ”பாடுவாய்” என்று போட்டிருந்தால், அடுத்த வரியின்
“மொட்டுகள் திறந்து தேன்துளி தேடுவாய்!” என்பதற்கு இயைபாகவும் இன்னும் பொருள் செறிவாகவும் வந்திருக்கும்ல? அவசரக்குடுக்கை மாதிரி எழுதியதுமே பதிவை ஏத்தாம இன்னும் கொஞ்சம் யோசிக்கலாம்ல? என்றாலும் அழகான கற்பனைக்கும், அளவான மரபு ஓசைக்கும் பாராட்டுகள் டா! - அன்புடன் அண்ணன்.
well said அண்ணா .அடுத்தமுறை கொஞ்சம் பொறுமையா படிச்சுட்டு அப்புறம் பதிவை இடுகிறேன்.நன்றி \
நீக்கு“மொட்டுகள்” என்பதன் முதல்வரிக்கு உரிய எதுகை மோனையாக அல்ல, கள்விகுதி வருமிடததில் எல்லாம் க் ஒற்று மிகவேண்டியதிலலை என்னும் இலக்கணப் படியே “மெட்டுகள்“ என்றே வரலாம். (நாட்கள் என்பது தவறு, நாள்கள் என்பதே சரி, வாழ்த்துக்கள், எழுத்துக்கள், என்பனவும் தவறு, வாழ்த்துகள் எழுத்துகள் என்பதே சரி. இணையத்தில் சென்று, கவிக்கோ ஞானச் செல்வன் (தினமணிக்கதிரில் தொடர்ந்து எழுதியதை) http://thoguppukal.wordpress.com/2012/02/19/ பார்க்க வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குமறுபடி மறுபடி இப்படி தப்பு பண்றேன் .கண்டிப்பா படிக்கிறேன் அண்ணா .ஒரு உண்மை என்னன்னா இந்த இலக்கணத்துக்கு பயந்து தான் ஆங்கிலமே படிச்சேன் .இனியாவது இலக்கணம் தெரிந்து கொள்ளவேண்டும்
நீக்குஒரு கவி சுவைக்க தென்றலாய் தவழ்ந்து வந்த கணணி நுழைக் கவிக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குதங்களின் முதல் வருகை மகிழ்ச்சியளிக்கிறது
நீக்குஅருமையான ஒரு வாழ்த்துக்கு நன்றி சகோதரி..
தென்றல் தொடர்ந்து தவழ வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு