புதன், 4 டிசம்பர், 2013

கொஞ்சம் English part ii


                   நம் பேச்சில் சுவை சேர்க்க பழமொழிகளையும் ,சில மரபுத்தொடர்களையும்  தொன்று தொட்டு பயன் படுத்துகிறோம்."மாற்றான் தோட்டத்து மல்லிகை" என அண்ணா முதல் "அடுத்தவன் ஆட்டோ க்கு ஆயுதபூஜை பண்ணனும்னு நினைக்கிறது தப்பு ப்ரோ" என சந்தானம் வரை தமிழில் நமக்கு நிறைய அறிமுகம் இருக்கு .இங்க கொஞ்சம் ஆங்கில  மரபுத்தொடர்கள் .வாங்க சுவாரசியமா ஆங்கிலம் பேசலாமா?


idioms and phrases

the apple of my eye-"என் கண்ணின் மணி போல" என சிவாஜி முதல் விஜய் வரை தங்கச்சியை கல்யாணம் பண்ணி கொடுக்கையில் சொல்வாங்களே அந்த மேட்டரு

upset the apple cart-"நல்லாதானே போயிட்டு இருந்துச்சு "என வடிவேலு புலம்புவரே!ஆமாம்  .குட்டையை குழப்பிவிட்டார் .சூழ்நிலை தலைகீழாய் மாறிவிட்டது அப்படினு சொல்லாம்

on cloud nine-அதே தான் "வானத்தில பறக்குறேன்" தானே சொன்னிங்க ?

wool gathering-என்ன ட்ரீம் அடிக்கிறியா ?என கேட்டு வாங்கிக்கட்டி கொள்ளாமல் என்ன wool gatheringஆ ?என ஸ்மார்டா கேளுங்களேன்

when pigs fly-அத்தைக்கு மீசை முழச்ச அப்புறம் பாக்கலாம்.எடுத்துக்காட்டுறேன் he will keep his promise when pigs fly"(தேர்தல் வாக்குறுதிகள் )

kicked the bucket-அவரு டிக்கெட் வாங்கிட்டாரு.எந்த ஊருக்குன்னு கேட்டா நீங்க நெஜமாவே குழந்தைதான் .he kicked the bucket

my wires are crossed-நான் குழம்பிவிட்டேன் (அதான் தெரியுதேன்னு தானே சொல்றிங்க .உங்க மைண்டு வாய்சு கேட்குது )

a little bird told me-எனக்கு ஒரு பட்சி சொன்னுச்சு (நோ பஜ்ஜி ,பட்சி ன பறவை)

raining cats and dogs-its raining cats and dogs மழை அடிச்சு ஊத்துது அப்டிங்கறத இப்டி சொல்றாங்க .
                                                           "English is really funny"

blow your own trumpet   -தற்பெருமை பேசுதல் . don't blow your own trumpet போதும் உன் முதுகில் நீயா தட்டிக்காதே அப்டினா சொன்னீங்க?
   ரைட்டு கெளம்புறேன்
                                                                                                           கஸ்தூரி
பகுதி ஒன்று
பகுதி மூன்று
பகுதி நான்கு 



18 கருத்துகள்:

  1. நல்லாருக்கே நீங்களே தட்டிக்கலாம் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி

      நீக்கு
    2. நல்ல பதிவு. பயன்படுத்திப் பார்ப்போமே

      நீக்கு
  3. நல்ல பதிவு. பயன்படுத்திப் பார்ப்போமே

    பதிலளிநீக்கு
  4. ஆகா... அருமையா இருக்கே? நாம ஊசிக்காது (“காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே“) னு சொல்றத ஆங்கிலத்துல eye of the needleனு சொல்வாங்களாமே நமக்கு இந்த இங்லீஷ்தான் மூனாம்ப்புலேர்ந்து முக்கல் முணகலாயிருச்சி! அதுல பாரு... எனக்கு அப்ப இங்லீஷ் நடத்துன பிஈடி டீச்சர் வேற குட் குட்டர் குட்டஸ்ட் னு டிகிரி ஆப் கம்பேரிஷன் நடத்துனாங்களா...அந்தக் கொடுமைதான் நம்மள தமிழ்ப்பக்கம் தள்ளிவிட்டுருச்சு! நீ எழுதுன மாதிரியானதையெல்லாம் தொகுத்தா சின்னப் புத்தகமாப் போடலாம் போல இருக்குப்பா...அதைவிட உன் லாங்வேஜ் (விளக்கம்) ரொம்ப கலக்கல் போ! (பெரிய எழுத்தாளர் ஒருத்தர் உனக்குள்ள ஒளிஞ்சிருக்கிறத நீ எப்பத்தான் சிறுகதையா, நாவலா வெளியிடப் போறியோ? )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. #குட் குட்டர் குட்டஸ்ட்#செம காமெடி .you are right.என் அடுத்த பதிவு ஐம்பதாவது பதிவு ஒரு சிறுகதை ...
      வாழ்த்துக்கு நன்றி அண்ணா

      நீக்கு
  5. சகோதரிக்கு வணக்கம்
    மிக அழகான எழுத்து நடை. idioms and phrases ஐ இப்படியும் சொல்லிக் கொடுக்கலாமோ! ம்ம்ம் இது போன்று சொல்லிக் கொடுத்திருந்தா நாங்களும் ஆங்கிலத்தில சென்டம் எடுத்துருப்போம். எங்களுக்கு இப்படியொரு டீச்சர் கிடைக்கலையே. சும்மா.. கொஞ்சம் ஆங்கிலம் பார்ட் 1 பதிவிட்ட பொழுது தங்களது தளத்திற்கு எனது இரண்டாவது வருகை என்று நினைக்கிறேன். தொடர்க சகோதரி வாழ்த்துகளோடு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  6. ஆங்கிலத்தில் ரசிக்க எவ்வளவோ இருக்கு சார்.என்னை கேட்ட TET போன்ற தேர்வுகளில் பாட அறிவை மட்டும் சோதிக்காமல் APTITUDE TEST பாடத்தின் மீதான விருப்பத்தையும் சோதிக்கலாம் .செய்யுளை சும்மா விளக்கிவிட்டு போகும் சில ஆசிரியர்களை பார்க்கும் போது மனம் வலிக்கிறது.உங்களை போன்றவர்கள் விதிவிலக்கு என்று மகிழ்வோமாக?தொர்ந்து வருக சகோதரரே.நன்றி

    பதிலளிநீக்கு
  7. சொல்லுவோர் சொன்னால் எதுவும் விளங்கும்
    விளங்கும்படி படி சொன்னால் எதுவும் சொல்லாகும்...
    இப்படி அருமையாக ஆங்கில சொல்லாடல்களை எங்களுக்கு
    அருமையாக விளங்க உரைத்தீர்கள் சகோதரி
    நன்றிகள் பல. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  8. தங்கள் வாழ்த்துக்கு நன்றி அண்ணா
    தங்களது கவிதைகளும் ,படத்தேர்வும்
    அருமையாக உள்ளது !

    பதிலளிநீக்கு
  9. தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  10. மிகவும் ரசித்தேன் சகோ. examples சொல்ல உங்களை அடிச்சுக்க ஆளே இலலை.பயனுள்ள குறிப்பு.நிச்சயமாக என் மாணவக் கண்மணிகளுக்கு எடுத்து சொல்வேன்.அவர்கள் campus interview க்கு தயாராகும் போது உதவும்.

    பதிலளிநீக்கு