வெள்ளி, 19 ஜூலை, 2013

ஒப்பனை மனிதனின் தெய்வம்


ஒரு தேர் திருவிழா நாளில்
ஒரு துரோகத்தின் ,வஞ்சகத்தின்
சூழ்ச்சியின்  ஊதியத்தில்
ஒரு பங்காய் வந்த வைர கிரிடம் சூடி
வெட்கி முகம் சிவந்த அம்மனுக்கு
ஒப்பனை செய்தாயிற்று
சந்தனக்காப்பென்ற பெயரில்     -கஸ்தூரி

2 கருத்துகள்:

  1. மு.நி அண்ணா இது o.k யா.கண்ணீர் ,பந்தயகுதிரைகள்,தகவமைப்பு என்று எதற்கு முன்னரே சில முயற்சிகள் செய்திருக்கிறேன் .தங்கள் பொன்னான நேரத்தை செலவு செய்து படித்துப்பார்த்தால் மகிழ்வேன் .

    பதிலளிநீக்கு
  2. அய்யோடா... ஓங்கி அறைவது போல இருக்கிறது. உள்ளடக்கம் சரிதான்.
    நம் கருத்தை இன்னும் எதார்த்தமாகச் சொல்லணும்ப்பா...
    “மீனாட்சியம்மன்
    கழுத்தில் கிடக்கும்
    சங்கிலி பார்க்கும்
    பகுத்தறிவாளரே ஓ பகுத்தறிவாளரே,
    மேயரின் கழுத்தில்
    மினுக்கும் சங்கிலி
    நூறு பவுனய்யா?!” எனும் கந்தர்வனின் கவிதை மாதிரி... வாழப்பழத்துல ஊசி ஏத்துன மாதிரி ஏத்தணும்... கடப்பாறையால ஒரே போடாப் போடவேண்டிய இடம் இதுவல்ல... என்றாலும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு... தொடர்ந்து எழுதுப்பா...

    பதிலளிநீக்கு