இசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 2 பிப்ரவரி, 2015

வயலின் - என் நிறைவேறாத காதல்.

               



       உடலும் , மனமும் சோர்ந்து போயிருந்த ஒரு மாலையின் முடிவில், இரவின் தொடக்கத்தில் எப்போதடா இரவு உணவை முடித்து, படுக்கையில் சாயலாம் என சமையல் முடித்து,இரவு உணவை எடுத்து வைத்துக்கொண்டிருந்தேன். ஹாலுக்கு போனவளை, அங்கேயே நிறுத்தி வைத்தது அந்த இசை. செல்பேசிக்கு அந்த பாடலை தரவிறக்கி பாட கத்துகொடுத்தேன். அன்று தூங்க வெகு நேரமானது.

                 

வெள்ளி, 3 அக்டோபர், 2014

கைப்பை -3





 டைரி 

                  வரவர நிறைக்குட்டி பேச்சில்  நகைச்சுவை ஊற்றெடுக்கிறது. ஒரு செருப்புக்கடையை  கடந்த போது சொன்னாள் "அம்மா, இந்த செப்பல் கடைகாரர் நல்ல புத்திசாலிதான். நான் "ஏன்டா அப்டி சொல்லுற?" பாருங்கம்மா கோவிலுக்கு பக்கத்துல வைச்சுருக்காரே! அங்க செப்பலை தொலைச்சவங்க, இங்க வாங்கிக்குவாங்க இல்ல".

செவ்வாய், 22 ஜூலை, 2014

கைப்பை- 1



அமென்!!

உலகின் வெகு சுவாரஸ்யமான விசயங்களில் ஒன்னு பெண்களுடைய கைப்பை என சொல்லகூடிய ஹான்ட் பேக்! ஒரு பெண்ணின் கைப்பை முழுமையாக பார்க்கமுடிந்தால் கூட அவளைப்பற்றி எடைபோட்டுவிட முடியாது. ஆனால் அத்தனை சுலபமாக அவளது கைப்பையையும்  (நம்பிக்கையை) பெற்று விட முடியாது!! இப்போதெல்லாம் கைப்பையின் அளவு குறையக்குறைய அதன் விலை அதிகமாக இருக்கிறது! பயன்படுத்தும் கைப்பையை கொண்டே அந்த பெண்ணின் ரசனையை, வயதைக்கூட  ஊகிக்கமுடியும்.

ஞாயிறு, 1 ஜூன், 2014

வாழ்க்கையோடு ஒரு உடன்படிக்கை! (game starts)

 நான் மிஸ் பண்ணுன, என்னை மிஸ் பண்ணுன இனிய நண்பர்களே!! நலமா?(எங்க அதான் வந்துட்டியே:( அப்பிடின்லாம் சொல்லக்கூடாது )

                                               I'M BACK!!

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

விகடன் வியந்த விஜயலட்சுமி !!

 விகடனில் விமர்சனம் படித்துக்கொண்டிருந்தேன்(படம்_குக்கூ). பாடல்களை பற்றி குறிப்பிடும் கடைசி பத்தியில் 'கோடை மழை போல' பாடலை பாடியதற்காக வைக்கம் விஜலக்ஷ்மியை கொஞ்சம் தூக்கலாய் புகழ்ந்திருந்தார்கள். ஏதோ மேட்டர் இருக்கு என்று தோன்றினாலும் வேறு சில கட்டுரைகள்(ப்ராயிலர்பள்ளிகள், மீத்தேன்) என்னை திசை திருப்பியதால், அந்த பேரை நினைவில் குறித்துக்கொண்டு நகர்ந்துவிட்டேன்.

     விடுமுறை தினத்தின் வழக்கமாய், நேற்று மியூசிக் சேனலை ஒலிக்கவிட்டு சமயலறையில் இருந்தேன். 'புதிய உலகை புதிய உலகை' எனும் கோடை குயில் ஒன்றின் குரல் என்னை ஹாலுக்கு இழுத்து வந்தது(ஸ்டவ்வை சிம்மில் வைச்சுட்டு தான்). பார்த்தநொடி மனம் வலிக்கத்தொடங்கியது. 'என்னமோ ஏதோ' படத்திற்காக இமாம் ஆல்பம் ஸ்டைலில் அமைத்திருந்த பாடலை பாடிக்கொண்டிருந்த அந்த குயில் பார்வைத்திறன் அற்று இருந்தது. பாடலுக்கு இடையே வீணை போன்ற ஒரு இசை கருவியை வைத்து மீட்டவும் சேர்த்தார் அவர். அடுத்த நிமிடம் அந்த பாடலை என் கைபேசியில் தரவிறக்கி என்னை தாலாட்ட வைத்தேன். அப்போது தான் தெரிந்தது அவர் பெயர் தான் வைக்கம் விஜயலட்சுமி.




ஆர்வம் உந்தித்தள்ள நம் wiki அண்ணாவை மேல் விபரம் கேட்டேன். வைக்கம் மில் பிறந்த விஜயலட்சுமி மீட்டுவது ஒற்றை கம்பி காயத்ரி வீணை. செல்லுலாய்ட்எனும் மலையாள பாடத்தில் 'காற்றே காற்றே' பாடலுக்கு ரெண்டு விருதுகள் பெற்றிருக்கிறார் என்றது விகடன் சினிமா. கடப்பவர்களை எல்லாம் திரும்பிப்பார்க்கவைக்கும் திறமை கொண்ட விஜயலட்சுமி பெண்ணாய் பிறந்தால் சாதிக்க முடியாது, மாற்று திறனாளிகள் சாதிக்க முடியாது என ஒடுங்கிப் போவோர்க்கு ஒரு உற்சாக டானிக் !! என் இரவுகளின் தந்திகளை குரலால் மீட்டும் வைக்கம் விஜயலட்சுமி உங்கள் பாடலை கேட்கையில் இறந்து பின் பிறந்து வந்ததாய் உணர்கிறேன் !!