கணக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கணக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 செப்டம்பர், 2014

காமெடி கணக்கு !! ட்ராஜிடி எனக்கு!!




     போன வாரத்தில் ஒரு மூணு நாள் நான் கணிதத் திறன் மேம்பட்டுப்பயிற்சியில் கலந்துகொண்டேன். (ஆமா நான் இங்கிலீஷ் டீச்சர் தான்). கணக்குல அவ்ளோ ஆர்வமா அப்டீன்னு அவசப்பட்டு ஒரு முடிவுக்கு வந்துராதீங்க. பாரதியார் போல "கணக்கு எனக்கும் பிணக்கு " தான். ஆனா விதி யாரை விட்டுச்சு. தமிழக அளவில் கற்றல் திறன் ஆய்வு நடத்திய போது புதுகை அரசுப்பள்ளிகளில் உயர்தொடக்கப்பள்ளி  மாணவர்கள் (ஆறாம்  வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை) கணக்கில் ரொம்ப வீக்கா இருக்கிறதா தெரிய வந்ததாம். (அப்ப இங்கிலீஷ் சூப்பரா படிக்கிறாங்கலாமா? இது கணக்கு மிஸ் தோழி வனிதாவின் புலம்பல்) எனவே புதுகையில் மட்டும் 288 ஆசிரியர்களுக்கு கணிதத் திறன் பயிற்சி அளித்து மாணவர்களை முன்னேற்றுவது  என கல்வித்துறை முடிவெடுத்து இப்படி பயற்சி கொடுத்தார்கள். தமிழாசிரியர்கள் மட்டும் விருப்பம் இருந்தால் கலந்துகொள்ளலாம் மற்றவர்கள் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டும். (நீ தாய்மொழியை கைவிட்டதற்கு இது தான் தண்டனை என்று புலம்பியது என் மனசாட்சி)

     இப்படி நொந்து நூடில்ஸ் ஆகி வகுப்புக்கு போனா,  ட்ரைனர்கள் புத்திசாலிதனமாக எங்களை போல பிற பாட ஆசிரியர்களும் கலந்துகொள்ளப் போகிறோம் என்று தெரிந்து வைத்துக்கொண்டு எங்களை வகுப்புக்குள் கொண்டுவர நிறைய புதிர்கள் தயாரித்துக்கொண்டு வந்திருந்தார்கள். சரிவிடு T.N.முரளிதரன் அண்ணா மாதிரி நாமளும் இந்த புதிர்களை பயன்படுத்தி இனி ஒரு ரெண்டு மூணு பதிவு தேத்தலாம் னு என்னை மனசை தேத்திக்கிட்டேன். ஆனா பாருங்க அந்த பயிற்சியில் கொடுக்கப்பட்ட சில புதிர்கள்  அண்ணனின் புதிர்களை போல் இல்லாமல் வழக்கமான வகுப்பறை புதிர்களை போல நிறைய லாஜிக் பொத்தல்களோடு இருந்தது. அதை இன்னொரு பதிவில் சொல்கிறேன். இப்படியே மூனுநாளையும் அந்த ரெண்டு பயிற்சியாளர்களையும் (பெண்கள்) வச்சு வனிதாவும் நானும் கலாய்ச்சே காலிபண்ணினோம். ஆனாலும் பயிற்சியின் இறுதியில் நாங்களும், ட்ரைனர்களும்  நல்ல நண்பர்கள் ஆகியிருந்தோம். (எங்களுக்குள ரொம்ப சைலெண்டா தான். பின்ன அமைதியான பெண்ணாய்  மெய்ண்டைன் பண்ணுற  நம்ம இமேஜ் டேமேஜ் ஆககூடத்தில்ல)