![]() | |
| aha!! |
காலை நேர பரபரப்புகளுக்கு இடையே கவனம் கோரவே செய்கின்றன சில நம்பர் ப்ளேட்கள். பொதுவாக போலீசும், பிரஸ் பெருமக்களும் தங்கள் துறையை நம்பர் ப்ளேட்டில் குறித்து வைத்துக்கொள்வது வழக்கம் இல்லையா? என் தோழி ஒருவரது மகன் இப்போ மெடிசின் மூன்றாம் ஆண்டு படிக்கிறார். அந்த தோழியின் வண்டியில் டாக்டர்களின் அடையாளமான சிலுவை மீது சுற்றிக்கொண்டிருக்கும் பாம்பு போல ஒரு லோகோ இருக்கிறது. வருங்கால டாக்டரின் அம்மாவாம்!! என் தம்பியின் பல்சருக்கு 5014 எனும் எண்கிடைத்ததில் பெருமகிழ்ச்சி. பின்ன SOLA என அதை எழுதமுடியும் சாத்தியத்தில் என் அப்பாவின் பேரான சோலைராஜ் என்பதில் பாதி வந்து விடுகிறதே. 6055என்பதை bossஎன்றும், 8055என்பதை BOSS என்றும், 8045 என்பதை BOYS எழுதியிருக்கும் நம்பர் ப்லேட்களை பார்த்திருக்கிறேன். PRAISE THE LORD களும் அதிகம்.
![]() |
| தமிழ்ப்பற்று!! |
பத்துவருடத்தில் மிக பெரிய சமூக மாற்றம் ஒன்று நிகழ்ந்திருப்பதை இந்த வண்டி ஓவியங்களில் கண்கூட காணமுடிகிறது. முன்பெல்லாம் வண்டிகளில் தங்கள் ஆண் வாரிசுகள் பெயரை மட்டுமே எழுதிவைத்திருப்பார்கள். ஆனால் இப்போ ரெண்டு பெண்ணாய் இருந்தாலும் சரி, ஆணும் பெண்ணுமாய் இருந்தாலும் சரி அந்த பெயர்களை எழுதிவைத்திருக்கிறார்கள். குழலி, யாழி என எழுதி இரண்டு பெயருக்கும் பொதுவாய் னி போட்டு எழுதியிருக்கும் மருது சங்கர் அண்ணாவின் வண்டி இன்னும் மனக்கண்ணில் ஸ்டாண்ட் போட்டு நிற்கிறது.
நாங்க bad பாய்ஸ், அடங்க மாட்டோம்டா மாதிரியான அட்ராசிட்டி பசங்க எல்லாம் அதிக பட்சம் இருபத்திநான்கு வயதுக்குள் தான் இருக்கிறார்கள். (அப்பறம் என்ன? வீட்ல இருக்கிறவங்க ஒரு கல்யாணம் பண்ணி வச்சாங்கன்னா அந்த இடத்தில் லவ் birds படம் தான்). இந்த நம்பர் ப்ளேட் கலாட்டாவில் தமிழக அளவில் திருவள்ளுவர், ஜீசுஸ், பிள்ளையார், மெக்கா, பெரியாரை விட பாதிக்கப்பட்ட ஒரு தலைவர் இருக்கிறார். அவர் தன் சொத்தையெல்லாம் தேச விடுதலைக்காக செலவு செய்தவர், மக்கள் பணிக்காக போற்றுதலுக்கு உரிய பல தியாகத்தை செய்திருக்கிறார் என்றும் படித்திருக்கிறேன். அவர் எதற்காக போராடினார் என நன்கு உணர்ந்த, புரிந்துகொண்ட இளைஞர்கள் அவரை நெஞ்சில் நிறுத்தி பணி செய்வதை பார்த்தும் இருக்கிறேன். ஆனால் அந்த பேருக்காக மட்டும் அவரை தன் ப்ளேட்டில் வைத்திருப்பவர்கள், அவரும் தானும் ஒன்று என கருதுகிறார்கள் என்பதே எனக்கு கவலை அளிக்கிறது. ஒரு நாள் முதல்வர் போல் ஒரு நாள் ட்ராபிக் போலிஸ் வேலை கிடைத்தால் அதில் ஒரு சிலரையாவது நிறுத்தி அந்த படத்தில் இருப்பவரை பற்றி ஒரு நாலு விஷயம் சொல்லுப்பா என கேட்க ஆசை. f.b, டீ-ஷர்ட் என அவர் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார். "பலபேர் கமெண்ட் போட்டாலும் அதில் உள்ள ஒரு பொண்ணு கமெண்டுக்கு மட்டும் ரிப்ளை பண்ணி லைக் தட்டினால் நீயும் என் தோழனே" என்பது மாதிரியான பல படுகொலைகளை சந்தித்திருக்கும் இவர் மேற்கோள்கள் திருக்குறளுக்கு ஈடாக ரீமேக் ஆகி தவிக்கின்றன. சே என்றால் நண்பன்(தோழர்) என்று பொருளாம். இந்த பாழாய்ப்போன முகபுத்தகத்தால் வீணாய் போன மற்றொரு சொல் "தோழர் " எனும் தோழர் வெங்கியின் ட்விட் / ஸ்டேட்டஸ் சரிதானே:))


