வீதி கலை இலக்கியக் களம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வீதி கலை இலக்கியக் களம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 24 ஜனவரி, 2016

வீதியில் சந்தித்த பயணச்சித்தர் !!

                சில நாட்களுக்கு முன் தொடர்பதிவு ஒன்றை தொடங்கி இருந்தேன். பயணம் பற்றிய அந்த பதிவுச் சங்கிலியில் கோர்க்கப்பட்ட வெங்கட் நாகராஜ் அண்ணா, தான் நீண்ட விடுப்பில் செல்லபோவதால் வெளியிடுகிறேன் என உடனே பயணங்கள் முடிவதில்லை பதிவை வெளியிட்டார். பயணம் நன்கு அமைய வாழ்த்துக்கள் என வாழ்த்துச் சொன்ன போது நான் துளியும் நினைத்துப் பார்க்கவில்லை இந்த பயணத்தில் அவரை சந்திப்பேன் என்று!! புதுகை கணினித் தமிழ் சங்கத்தில் தான் முதன் முதலில் வலைசித்தரை சந்தித்தேன். நிலவன் அண்ணா புத்தக வெளியீட்டு விழாவில் புகைபடச்சித்தரின் தரிசனம் கிடைத்தது. இன்று இருபத்திமூன்றாம் வீதி கூட்டத்தில் நம் பயணச்சித்தர் வெங்கட் நாகராஜ் அண்ணாவை பார்க்க முடிந்தது அத்தனை சந்தோசம்.