ஒரு ஒப்பந்தம்
நண்பர்களே! நம்மில் பலருக்கும் வாழ்வில் ஏதோ ஒரு பருவத்தில் ஒருமுறையேனும் மேகங்களை நேரம் போவதறியாது பார்த்த அனுபவம் இருக்கும். ஒரே மேகம் ஒவ்வோரு கண்களுக்கும் வெவ்வேறு வடிவம் காட்டும். பார்த்துக் கொண்டிருப்பவர்கே கூட முந்தைய நொடிக்கும் அடுத்த நொடிக்கும் வடிவம் மாறி வித்தை காட்டி விடும். அது போலவே ஒரு கதை அல்லது பாடல் என்பது அமைந்துவிடுகிறது. அது கொள்கலனின் வடிவம் கொள்ளும் திரவம் போல் அவரவர் மனம் கொடுக்கும் வடிவம் கொள்கிறது. பார்க்கும் எண் ஆறு என்பதும் ஒன்பது என்பதும் அவரவர் நிற்கும் இடத்தை பொறுத்தது தானே.

