கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 10 மே, 2022

T.C கொடுப்பார்களா ஆசிரியர்கள்??

 கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பை    பார்த்ததில் இருந்து ஆசிரியர்களுக்கு ஆதரவான, மாணவர்களுக்கு ஆதரவான என்கிற  இரு வேறு வகையான மனநிலைகளை பார்க்க முடிகிறது. இதுவே எத்தனை பெரிய அபத்தம்.

 ஒரு குடும்பத்தகராறில் அப்பா அல்லது கணவருக்கு ஒருசாராரும், மகன் அல்லது மனைவிக்கு ஒரு சாராரும் பேசுகிற நிலை வந்தால் அதற்கு பின் அங்கு ஒட்டுப்போட்ட உறவே சாத்தியம். அதை நிலை தானே இங்கே பள்ளிக்கும். 

                ஒரு சிறுவன் அல்லது சிறுமி தன் வயதுக்கு மீறிய செயல்களை செய்கிறார்கள் எனில் அதற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் இருக்கும். தன் வயதுக்கு மீறிய நட்பு வட்டத்தில் அவர்கள் இருப்பர். அவர்களது நடத்தை மாற்றத்தை உடனடியாக கணித்து மடைமாற்றும் வழிகாட்டி இல்லாதிருப்பர். இன்றைக்கு தேதியில் சிறிதோ, பெரியோ உடல் எடையில் தொடங்கி, தூக்கக்குறைபாடு மாதிரியான மாற்றம் ஏற்படாத பள்ளி வயது பிள்ளைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். கிருமிநாசினி விளம்பர்களில் வருவதைப் போல் 99.9% பிள்ளைகள் பாதிக்கப்பட்டேயிருக்கிறார்கள். 

                 நம் வீட்டு பிள்ளைகளை சரி செய்ய நாம் எடுக்கும் பொறுமையான மெனக்கெடலை ஏன் பள்ளிகளில் எடுக்க முடிவதில்லை. ஒன்று  புரிதல் குறைபாடு அடுத்தது பாடம் முடித்து பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார் படுத்த வேண்டிய அவசர நிலை. ஐயா எட்வின் அவர்கள் தன் பதிவில் குறிப்பிட்டதைப் போல மகிழ்வோடு பள்ளிக்கு வரும் சூழலே ஆசிரியர் மாணவர் உறவுக்கு  புத்துயிர் அளிக்கும் மற்றபடி இந்த டீ.சி கொடுக்கிறத பற்றி எல்லாம் பதற வேண்டாம் சகோதரர்களே! அதுவும் 99.9% சும்மா மிரட்ட மட்டுமே பயன்படும். அப்படி மிரட்டக்கூட வேண்டாத பள்ளிச்சூழலை உருவாக்க என்ன செய்யலாம் என்று சிந்திப்போம், பேசுவோம், செயல்படுவோம்.

புதன், 12 ஆகஸ்ட், 2015

வண்ணத்துப்பூச்சிகள் மதிப்பெண்ணுக்காக அல்ல

                            "கையை நீட்டுங்க மிஸ்" என்றான் ஹரி. நீட்டினேன். "ரெண்டு கையும்" என்றவனின் கைகள் முதுகுக்குப் பின் இருந்தன. நான் கைல வெச்சதும் உங்க கையை மூடிக்கனும். சரியா? என்றான். வைத்தான். மூடினேன். மூடிய  கைகளுக்குள் ஒரு குறுகுறுப்பு.

சனி, 23 மே, 2015

தற்கொலை செய்துக்கப் போறீங்க! ஒரு நிமிடம் ப்ளீஸ்!



           இது தன்னம்பிக்கைக்கட்டுரை இல்லை. மாறாக தற்கொலைக்கு உதவும் விதமாக வழிசொல்லும் பதிவும் இல்லை. தற்கொலை செய்து கொள்ள போகிறவர்களிடம் கேட்க நினைக்கும் ஒரு நியாயமான  கேள்வி. அதற்கு பதில் தேடித்தான் இந்த பதிவு.

வெள்ளி, 23 ஜனவரி, 2015

கடலை மன்னன் கார்வரும், என் ஏழாம் வகுப்பு மாணவர்களும்

இது தான் அந்த புத்தகம் 



            

                இருபதாம் தேதி ஆனாலே என் பிரியத்திற்குரிய மாணவச்செல்வங்கள் கொஞ்சம் டரியல் ஆகிவிடுவார்கள். ஆங்கில வாசித்தல், எழுதுதல் திறன் சோதனை மாதத்திற்கொருமுறை நடத்தப்படும் அந்நாட்களில் சின்ன பதட்டமும், பரபரப்புமாகவே இருப்பார்கள்.

திங்கள், 15 டிசம்பர், 2014

அப்பாட்டக்கருக்கு ஆங்கிலத்தில் என்ன ? கொஞ்சம் English - PART 10

       வழக்கம் போல பாட ஓய்வு வேளையில் சோறுபோடும் மொழி அறிவை வளர்த்துக்கொள்ளவும், அறிவுக்கு கொஞ்சம் சோறுபோடவும் dictionary யை புரட்டிக்கொண்டிருந்தேன். crow's feet என்றொரு சொல் இருந்தது. காக்கா காலுக்கெல்லாம் வெளக்கமா ?? என சிரித்தபடி இந்த phrase என்ன விளையாட்டு காட்டபோகிறது என்ற ஆவலுடன் படித்தால், இதே போல சில எல்லோருக்கும் தெரிந்த, எனக்கு தெரியாத  bird name phrase களை தொகுக்கலாமே என தோன்றியது!! நீங்களும் பாருங்க

வெள்ளி, 10 அக்டோபர், 2014

கொஞ்சம் ENGLISH-PART IX




                                                கொஞ்சம் English எழுதி ரொம்ப நாள் ஆச்சுப்போலவே!
இந்த முறை கொஞ்சம் ஜாலியா ஒரு புதிர் விளையாட்டு. இன்னொரு tab ல விடைதட்டி என் கிட்ட மட்டும் தான் மார்க் வாங்க முடியும், நீங்க எவ்ளோ வாங்கி இருக்கிங்க னு உங்களுக்கு தெரியும் இல்லையா:)(எக்ஸாம் ஹால் ல question பேப்பர் கொடுக்கிறதுக்கு முன்னால இப்படி லெக்சர் கொடுத்து பழகிடுச்சு)

வியாழன், 9 அக்டோபர், 2014

பெற்றோர் தவற விடக்கூடாத ஒரு நூல்!

               ஒரு படத்தை ரிலீஸ்க்கு முன்னமே ப்ரிவியு ஷோ ல பார்க்கும் பரபரப்புக்கும், சுவரஸ்யத்துக்கும் சற்றும் குறைவில்லாது இருந்தது நிலவன் அண்ணாவின் நூல்கள் வெளியிடப்படும் முன்னரே வாசிக்கக் கிடைத்த வாய்ப்பு. அதை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புக்காகக் காத்திருந்தேன். நூல்களை விமர்சிக்கும், அதுவும் நிலவன் அண்ணாவின் நூல்களை விமர்சிக்கும் அளவு நம்ம பெரிய ஆள் எல்லாம் இல்லைங்க. எனவே இது நூல் அறிமுகம் தான். 

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

அந்த நாலு பேருக்கு நன்றி!!

என்னை நானாக்கி இருக்கும்
அந்த நாலு பேருக்கு நன்றி!!!



1. அண்ணா ரவி சார் (என் தமிழாசிரியர்)
2. சிவா(குமார்) சார் (என் இங்கிலீஷ் டீச்சர்)
3. முனியப்பன் சார் (என் சைன்ஸ் சார்)
4. சாந்தி மிஸ் (என் u.k.g மிஸ்)

புதன், 3 செப்டம்பர், 2014

தங்கமீன்களில் அப்படியென்ன சிறப்பு?

    நோட்டுல நான் நோட் பண்ணிய சில விசயங்கள் :)



    
            பாடக்குறிப்பேடு என சொல்லபடுகிற நோட்டுகள் என்றவுடன் ரெண்டுவரி, நாலு வரி தான் முன்பு நினைவுவரும். பரிணாம வளர்ச்சி அடைந்து ரூல்டு மேலும் வளர்ச்சி பெற்று அன்ரூல்டு என கடந்து கிராப், காமெண்டரி எப்போவரும் என ஆசையை இருக்கும். ஏன்னா அப்போல்லாம் அந்த ரெண்டு நோட்டுகள் மட்டும் தான் மெல்லிய அட்டையோடும், அழகிய படங்களோடும் வரும். 

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

கொஞ்சம் ENGLISH-PART Vlll


 இந்த முறை கொஞ்சம் Englishல  numbers பயன்படுத்தி சொல்லப்பட்டு வரும் phrasesஅதாவது மரபு தொடர்களை பார்க்கலாமா? ( வாங்க நம்பர் சொல்லி அடிப்போம்)

 a bunch of fives  

முதல் முறை படித்தபோது ஏதோ கொத்துக்கொத்த பூக்களோ என்று நினைத்தேன். அப்புறம் தான் தெரிஞ்சது இது தான் அதுன்னு!

He gave that thief a bunch of fives

செவ்வாய், 29 ஜூலை, 2014

ஆறாவது படிக்கிற பையன் லவ் பண்ணினா தப்பா?

          




        அவன் அந்த சின்ன வயதில் எப்படி இவ்வளவு பெரிய மனுசத்தனத்தோடு இருக்கிறான் என வியப்பாய் இருக்கும். சத்துணவு உணமாட்டான். சீருடை தரமாட்டோம் என ஆசிரியர்கள் கோபம் கொண்டால் அமைதியாய் தலையை குனிந்து கொள்வான். மற்றவர்கள் போல நீயும் வாங்கி முடிந்த அளவு சாப்பிட்டுவிட்டு கொட்டவேண்டியது தானே? ஏன் திட்டு வாங்குற? என கேட்டால், சாப்பாட்டை வீணாக்குவது பெரிய பாவம். உணவை மதிக்காத வேலையை நான் செய்யமாட்டேன் என்று சொல்லாலே எனக்கும் ஒரு அறைகொடுத்தான். ஆனால் அவனது தோரணையே அவனுக்கு சில பிரச்சனைகளை தேடித்தந்தது. அவன் மீது சில டீச்சர்கள் மட்டும் எரிச்சலில் இருந்தார்கள்.
       

வெள்ளி, 4 ஜூலை, 2014

வரலாறு முக்கியம் பாஸ்! II








                                          மொகலாயர் வருகை. இது தான் எட்டாம் வகுப்பின் முதல் பாடம். எனக்கு ரொம்ப பிடிக்கும். மதனின் வந்தார்கள் வேன்றார்களின் தாக்கமாக இருக்கலாம். அதே நேரம் ஐரோப்பியர் வருகை பாடம் நடத்தவே

வெள்ளி, 13 ஜூன், 2014

வரலாறு முக்கியம் பாஸ்- நண்பன் விஜய்யும், friends வடிவேலுவும்

                    ஆங்கிலப்பாடத்தோடு எட்டாம் வகுப்பிற்கான சமூக அறிவியலும் எனக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது நான் ஏற்கனவே சொல்லிருக்கேன் இல்லையா? எனக்கு history நடத்துறதுல ரொம்ப பிடிச்ச விஷயம் என்னன்னா நாம படிச்ச கல்கி, ரா.கி.ரங்கராஜன், பிரபஞ்சன் என்னும் பல விஷயத்தை கேட்க நமக்குன்னு சில அடிமைகள் சிக்குவது தான்.

புதன், 23 ஏப்ரல், 2014

விளம்பரத்துக்கு விளம்பரம்-கொஞ்சம் ENGLISH VI

இது CLICKBAITங்கோ .புரியலைன முந்தின பதிவை பாருங்க.
     ஒரு சிறுநகரத்தில், கிராமத்தில் அரசுப்பள்ளியில் பணி செய்யும் ஒரு ஆங்கில ஆசிரியராக எனக்கு சில பொறுப்புகள் இருப்பதாகவே உணர்கிறேன். முதல் விஷயம் என் மாணவர்கள் ஆங்கிலத்தை பார்த்து பதட்டம் அடையக்கூடாது. ஆங்கிலத்தில் பத்து வாக்கியம் சேர்ந்தார்போல் பேசுபவர்களை எதிர்க்கொள்ளும் துணிவு அவர்களுக்கு வேண்டும். மொழி ஒரு கருவிதான் திறமைஅல்ல, ஆனாலும் ஆங்கிலக்கத்தியை கண்டு அஞ்சாமல் அதை பயன்படுத்தும் லாவகம் அவர்களுக்கு கைவர வேண்டும்.
 என்றால் நான் அவர்களுக்கு அதை எளிமையாய் அறிமுகம் செய்யவேண்டும்  இல்லையா? எங்குமே ஆங்கிலம் கேட்காமல் வளரும் மாணவன் முதல் முறையாய் கல்லூரியில் அதை எதிர்க்கொள்ளும் போது எத்தனை தடுமாற்றமாய் இருக்கும் என்பதை உணரமுடிந்தவர்கள் தொடர்ந்து படியுங்கள். (உணரமுடியாதவர்கள் மன்னியுங்கள் நாம் அடுத்த பதிவில் சந்திக்கலாம்)

so அங்கிலத்திற்கான தேடலை அவர்களிடம் விதைக்க நான் அவர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான ஆக்டிவிடி ஒன்றை கொடுத்திருந்தேன். அது விளம்பரங்களில் வரும் ஆங்கில ஸ்லோகன்களை  பட்டியல் இட்டு வருவது. பின் அவற்றை வைத்து ஒரு புதிர் விளையாட்டாய் உருவாக்கினோம். நீங்களும் ட்ரை பண்ணிப்பாருங்கள். ஸ்லோகன் கொடுத்துவிடுவேன். புது tab திறந்து google ளில் தேடாமல் அது என்ன பொருளுக்கானது என கண்டிபிடியுங்கள் .

enjoy the royal treatment.

joins anything except broken heart.

because you worth it.

utterly butterly delious.

I feel up.

neibour's envy, owner's pride.

behave yourself India, the youth are watching.

connecting people.

you just can't stop eating it.

why should boys have all the fun.

என்ன படிச்சுடீன்களா? விடை கிழே

Magnum icecream

Quickfix

L'oreal

Amul

7up

Onida

The Hindu

Nokia

Lactoking

Herohonda pleasure

இப்படி அவங்க படிக்கிறது இங்கிலீஷ்னே தெரியாமல் கற்று கொடுக்கவேண்டியது இருக்கு.
ஓகே ஸ்டார்ட் the மியூசிக் !!

konjam english partv

செவ்வாய், 18 மார்ச், 2014

கொஞ்சம் English- part v(trendy English )

  இந்த கிளாஸ் ல கொஞ்சம் trendy இங்கிலீஷ் அதுவும் பிளாக்கர்களுக்கு பயன்படும் சில வார்த்தைகள். நான் பிளஸ் டூ படிக்கும்போது அமெரிக்கன் இங்கிலீஷ் என்றொரு வகை பாடத்தில் சேர்க்கப்பட்டது. அது B.P.O இந்தியாவில் கொடிகட்டத்தொடங்கிய புதுசு. ஆன இப்போ இணைய யுகம் இல்லையா. பரவலா பசங்களே தேவைகேற்ப நிறைய சொற்களை உருவாக்கி பயன்படுத்திகிட்டு இருக்காங்க ! நாமளும் அப்டேட் பண்ணிக்குவோம்.

சனி, 15 மார்ச், 2014

மாறவேண்டியது யாரு?

ஒரு முன் குறிப்பு:      அரசு வேலையில் அமர்ந்துவிட்ட பலரும், ஏன் ஆசிரியர்களும் கூட அத்துடன் தன் படிப்பு முடிஞ்சுபோச்சுனே நினைக்குறாங்க! அதைவிடுங்க செல்லுல பேசிக்கிட்டு இருக்கும்போதே ஒரு நம்பரை பார்த்துசொல்லவோ, ப்ளூடூத் ஆப்ஷன் பற்றிய அடிப்படை அறிவோ, நோக்கியா பேசிக் போனை கூட "எனக்கு இதெல்லாம் தெரியாது டீச்சர், என் பையன்/பொண்ணு தான் இதை பிரிச்சு சேர்த்துருவாங்க " என்றும், டச் அண்ட் டைப் போன் வைத்திருந்த ஒரு தோழி அதில் டைப் மட்டுமே பண்ணிகொண்டும் இருக்கிறவர்களே அதிகம்.

ஞாயிறு, 2 மார்ச், 2014

உங்கள் உடையின் மூலம் என்ன சொல்லவிரும்புகிறீர்கள் ?

                                 திங்கள்கிழமை எனக்கு ரொம்ப பிடிக்கும். மனசுக்கு  பிடிச்ச வேலையே தொடங்க போறோம்னு ஒரு உற்சாகம். போன வாரம் கிளாசில் ரொம்ப லேட்டா வகுப்புக்கு வந்த விக்கி தயங்கி தயங்கி "மே ஐ கம் இன் மிஸ்"என்றான். ஒண்ணுமே சொல்லாமல் அவனை தலையில் இருந்து கால் வரை ஒரு லுக் கொடுத்தேன். குனித்து பார்த்து வேகவேகமாக தன் சட்டையின் முதல் பட்டனை போட்டுகொண்டு, சாரி மிஸ் என்றான். அவனை அனுமதித்து அட்டன்டன்ஸ் முடித்தவுடன் "மிஸ் மண்டே முதல் கிளாஸ் கதை சொல்லுங்க" என அகிலா ஆரம்பிக்க "ஆமா மிஸ் " என ஒரு கோரஸ் .

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

கொஞ்சம் ENGLISH !!-Part iv

இதோ மீண்டும் English class.
கம்யுனிசம் ,மார்க்ஸ்சிசம் தெரியும். இன்னும் கொஞ்சம்  இசம் தெரிஞ்சுக்கலாமா?