காலை பரபரப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காலை பரபரப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 ஏப்ரல், 2014

சைக்கிள் (cycle)



         
  வீட்டில் இருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது என் பள்ளி. பள்ளி மாணவர்களோ பள்ளியில் சுற்றுவட்டாரத்தில் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள் இருந்து வருபவர்கள். பெரும்பாலான நாட்களில் காலையில் பள்ளியின் சுற்றுவட்டாரத்தில் மாணவிகளை பார்த்தால் என் ஸ்கூட்டியில் அவர்களையும் பள்ளிக்கு அழைத்துச் செல்வேன். திவ்யா தான் அடிக்கடி அப்படி என்னோடு வருவாள். சில நாட்களாக திவ்யாவை காலைவேளைகளில் நான் சந்திக்கவில்லை. அவள் புது சைக்கிள் வாங்கியிருந்தாள்.
              சிலநாட்களுக்குப்பின் நேற்று காலை திவ்யாவை வழக்கமான இடத்தில் பார்த்தேன். சைக்கிளை நிறத்தி ஸ்டாண்ட் போட்டுக்கொண்டிருந்தாள். நான் ஸ்கூட்டியை மெதுவாக்கி என்ன திவ்யா என் நிற்கிறாய் என்றேன். நீங்க போங்க மிஸ் நான் இதோ வந்துடுவேன் என்றாள். செயின் ஏதும் கழண்டு விட்டதா? பஞ்சரா என்றவாறே வண்டியை நிறத்தி விசாரிக்கத்தொடங்கும்போது தான் கவனித்தேன், அவள் அருகே ஒன்றாம் வகுப்பு படிக்கும் ரிபானா. வெட்கச்சிரிப்போடு திவ்யா சொன்னாள் இதுக்கு சைக்கிள ஏறத்தெரியாதில்ல, அதான் மிஸ் சைக்கிள நிறுத்திட்டு ஏத்திகிட்டு வரேன், நீங்க போங்க என்றாள். நான் கிளம்பிவிட்டேன், என் ரெவ்யூ கண்ணாடியில் தெரிந்த திவ்யாவிற்கு என் சாயல் தெரிந்ததை போல் உணர்ந்தேன்.

திங்கள், 16 டிசம்பர், 2013

கோலங்கள்! கோலங்கள் !


              இதோ மார்கழியும் வந்துவிட்டது. கோலங்கள் பற்றி எழுதாமல் இருக்கமுடியுமா? மனம் பின்னோக்கி பறக்கத்தொடங்கிவிட்டது. ஹல்லோ
என்ன மேல பாக்குறிங்க. பிளாஷ்பேக்னா மேலதான் பார்க்கணுமா? இது மார்கழி சோ, கீழ.