பெரியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெரியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 20 ஏப்ரல், 2021

அறிவை விரிவு செய்

 



உலகெல்லாம் ஒற்றை வானம்

உயிருக்கெல்லாம் ஒன்றே மாமழை

பசித்து பருகி வேர்விடும் விதைகள்

பரந்து விரிந்த பெருவனமாகும்

கைக்கெட்டும் தூரத்தில் அறிவுச்சுரங்கம்

கண்டடைய முயன்றால் வானாய் விரியும்


கொட்டிக்கிடக்கும் பலநூறு

விண்மீன்கூட்டம்

அதில் சுட்டுகிறேன் சில 

துருவ நட்சத்திரம்


தீநுண்மியை விடவும் கொடிது

தீண்டாமை என்றே உணர

அம்பேத்கரை படி


விளக்கேற்றி மணியடித்து

விரட்ட முடியுமா கொரோனாவை

பகுத்தறிவு பகலவனைப்படி


அரிச்சுவடியில் படித்த ஔவையை

மறந்திருப்பாய்

ஆண்டிராய்டு காலத்தில்

அடாவை மறந்திருப்பாய் 

பெண்கல்வி  சிறப்புணர

பாவேந்தனைப் படி


வலதுக்கு இசைவாக வங்கிகள் வளைய

வறுமைக்கு ஏன் வரி மேல் வரி

மார்க்ஸை படி


சரித்திரத்திற்கும் சாஸ்திரத்திற்கும் 

நூல் அளவே வேறுபாடு இருப்பதை 

நுணுக்கமாய் உணர அரசியல் படி


பருகிட தணியாத தாகம் அறிவு

பகிர்ந்திடக் குறையாத செல்வம் அறிவு

நீட்டு நீட்டு என்று

நீட்டியும் மடக்கியும்

பூட்ட முடியாத புதையல் அறிவு


அறிவை விரிவு செய்

ஒப்பனைகள் களையும்


ஒப்பிலா அறிவின் சிறகால்

வானம் வசப்படும்

வரலாறு சீர்பெறும்

 அறிவே பார்வை நல்கும்

அறிவே அறத்தைப்பேணும்

அறிவே மனிதம் காக்கும்

அறிவே மனத்தடைகள் போக்கும்


நாடுக எட்டுத்திக்கும்

சூடுக அறிவின் பேரொளி


நாடுகள் நடுவே ஓடும் 

கோடுகள் அழிந்து போகும்


நாளும் பொழுதும் பூசிய 

செருக்கின் பிடறியை உலுக்கும்


மதத்தின் பேரால் வெடிக்கும்

மரணத்தின் ஓலம் அடங்கும்


கண் எட்டும் தூரத்தில்

மருத்துவத்தின் மகத்துவம் புரியும்


விண்முட்டும் சின்னங்கள்

வீண் விரயமென அறியும்




கால் செருப்பு தேசம் ஆண்ட

காலங்கள் மறைந்து போகும்


தார் பூசி மறைத்த போதும்

தமிழ் என்றும் தரணி ஆளும்


நாளை கிழக்கில் மட்டுமல்ல

எட்டுத்திசையிலும் வெளுக்கும்


அறிவற்றங் காக்கும் கருவி

அகிலம் மேவும் புரவி

அறிவை விரிவு செய்

ஆற்றலால் உலகை வெல்



வெள்ளி, 25 டிசம்பர், 2015

கைப்பை - 7

சாக்லேட்
       என் பள்ளி இறுதி காலத்தில் என் தோழிகள் தல,தளபதி புகைப்படங்களுக்காக காத்துக்கொண்டிருக்க, செய்தித்தாள் வந்ததும் நான் தேடியது வேற்றொரு புகைப்படத்தை.

சனி, 9 மே, 2015

பார்ப்பனர்கள் ஏன் பகுத்தறிவுவாதிகளின் எதிரியாகிறார்கள்???

          ஊரெல்லாம் சாதி சங்கங்கள் இருக்க, குடிசைகள் பற்றி எரிய, தீண்டாமைச்சுவர்கள் வளர்ந்தோங்க, இளவரசன்கள் சாக, அத்தனையையும் விட்டுவிட்டு ஏன் பார்ப்பனர்களை மட்டும் பகுத்தறிவுவாதிகள் குறி வைக்கிறார்கள்.



சனி, 25 ஏப்ரல், 2015

பகுத்தறிவு என்றால் எங்க பாஸ்!!

எல்லா சாதியையும் தானே சொல்லிருக்கார்!!!
          

            இந்தமுறை தொடர்பதிவு  என அறிவிக்காமலே ஒரு தொடர்பதிவை தொடங்கிவைத்திருக்கிறார்  தமிழன் சகா:) ஒரு மாதம் கழித்து  வலைப்பக்கம் எட்டிப்பார்க்கிறேன். வகுப்புக்கு தாமதமாக வந்த மாணவனை வெளியே நிறுத்தி கடினமான கேள்வி கேட்பதை போல பகுத்தறிவாளர்கள் பதில் சொல்லுங்க சொல்லிப்புட்டார். பெரியார், ஏங்கல்ஸ், மார்க்ஸ் அளவு நமக்கு சொல்லத் தெரியாட்டியும், நம்ம மணிவண்ணன் அய்யா ஸ்டைல சொல்லலாம்னு பார்க்கிறேன். தமிழனின் இந்த பதிவை படித்துவிட்டால் கீழ் உள்ள பதிவு கொஞ்சம் தெளிவா புரியும்னு நினைக்கிறேன்.

ஞாயிறு, 16 நவம்பர், 2014

கனவில் வந்த காந்தி 4

           

           அதென்ன காந்தி நாலு?? ஒன்னுமில்லங்க கில்லர்ஜி அண்ணா ஒரு பதிவு போட்டிருந்தார் கனவில் வந்த காந்தி 1. படிச்சுக்கிட்டு வரும்போதே ஒருவேளை காந்தி என்னையும் கேள்வி கேட்டுவிடுவாரோ என சிறுமூளை எச்சரிக்க, ஓடி போய் பார்த்தேன். தொடர் பதிவு தான் என்ற போதும் பெரிய மனசு பண்ணி, அண்ணா என்னை அந்த பதிவில் சேர்க்கவில்லை. அவர்க்கு அங்கேயே நன்றி சொல்லிவிட்டு, ஒரு fake லீவ் லெட்டரை சமர்ப்பித்துவிட்டு வந்தேன். அந்த லெட்டரை  தில்லையகம் சகாஸ் நம்பிய போதும் ........விதி வலியது பாருங்க. கரந்தை அண்ணா நம்பல.  இதுல லிங்கி ருக்கார்.
   

சனி, 20 செப்டம்பர், 2014

உங்க நம்பர் ப்ளேட் என்ன சொல்லுது!!

                        




aha!!


       காலை நேர பரபரப்புகளுக்கு இடையே கவனம் கோரவே செய்கின்றன சில நம்பர் ப்ளேட்கள். பொதுவாக போலீசும், பிரஸ் பெருமக்களும் தங்கள் துறையை நம்பர் ப்ளேட்டில் குறித்து வைத்துக்கொள்வது வழக்கம் இல்லையா? என் தோழி ஒருவரது மகன் இப்போ மெடிசின் மூன்றாம் ஆண்டு படிக்கிறார். அந்த தோழியின் வண்டியில் டாக்டர்களின் அடையாளமான சிலுவை மீது சுற்றிக்கொண்டிருக்கும் பாம்பு போல ஒரு லோகோ இருக்கிறது. வருங்கால டாக்டரின் அம்மாவாம்!! என் தம்பியின் பல்சருக்கு 5014 எனும் எண்கிடைத்ததில் பெருமகிழ்ச்சி. பின்ன SOLA என அதை எழுதமுடியும் சாத்தியத்தில் என் அப்பாவின் பேரான சோலைராஜ் என்பதில் பாதி வந்து விடுகிறதே. 6055என்பதை  bossஎன்றும், 8055என்பதை  BOSS என்றும், 8045 என்பதை BOYS எழுதியிருக்கும் நம்பர் ப்லேட்களை பார்த்திருக்கிறேன். PRAISE THE LORD களும் அதிகம். 

தமிழ்ப்பற்று!!

                     பத்துவருடத்தில் மிக பெரிய சமூக மாற்றம் ஒன்று நிகழ்ந்திருப்பதை இந்த வண்டி ஓவியங்களில் கண்கூட காணமுடிகிறது. முன்பெல்லாம் வண்டிகளில் தங்கள் ஆண் வாரிசுகள் பெயரை மட்டுமே எழுதிவைத்திருப்பார்கள். ஆனால் இப்போ ரெண்டு பெண்ணாய் இருந்தாலும் சரி, ஆணும் பெண்ணுமாய் இருந்தாலும் சரி அந்த பெயர்களை எழுதிவைத்திருக்கிறார்கள். குழலி, யாழி என எழுதி இரண்டு பெயருக்கும் பொதுவாய் னி போட்டு எழுதியிருக்கும் மருது சங்கர் அண்ணாவின் வண்டி இன்னும் மனக்கண்ணில் ஸ்டாண்ட் போட்டு நிற்கிறது.





                  நாங்க bad பாய்ஸ், அடங்க மாட்டோம்டா மாதிரியான அட்ராசிட்டி பசங்க எல்லாம் அதிக பட்சம் இருபத்திநான்கு வயதுக்குள் தான் இருக்கிறார்கள். (அப்பறம் என்ன? வீட்ல இருக்கிறவங்க ஒரு  கல்யாணம் பண்ணி வச்சாங்கன்னா அந்த இடத்தில் லவ் birds படம் தான்). இந்த நம்பர் ப்ளேட் கலாட்டாவில் தமிழக அளவில் திருவள்ளுவர், ஜீசுஸ், பிள்ளையார், மெக்கா, பெரியாரை விட பாதிக்கப்பட்ட ஒரு தலைவர் இருக்கிறார்.  அவர் தன் சொத்தையெல்லாம் தேச  விடுதலைக்காக செலவு செய்தவர், மக்கள் பணிக்காக போற்றுதலுக்கு உரிய பல தியாகத்தை செய்திருக்கிறார் என்றும் படித்திருக்கிறேன்.  அவர் எதற்காக போராடினார் என நன்கு உணர்ந்த, புரிந்துகொண்ட இளைஞர்கள் அவரை நெஞ்சில் நிறுத்தி பணி செய்வதை பார்த்தும் இருக்கிறேன். ஆனால் அந்த பேருக்காக மட்டும் அவரை தன் ப்ளேட்டில் வைத்திருப்பவர்கள், அவரும் தானும் ஒன்று என கருதுகிறார்கள் என்பதே எனக்கு கவலை அளிக்கிறது. ஒரு நாள் முதல்வர் போல் ஒரு நாள் ட்ராபிக் போலிஸ் வேலை கிடைத்தால் அதில் ஒரு சிலரையாவது நிறுத்தி அந்த படத்தில் இருப்பவரை பற்றி ஒரு நாலு விஷயம் சொல்லுப்பா என கேட்க ஆசை. f.b, டீ-ஷர்ட் என அவர் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார். "பலபேர் கமெண்ட் போட்டாலும் அதில் உள்ள ஒரு பொண்ணு கமெண்டுக்கு மட்டும் ரிப்ளை பண்ணி லைக் தட்டினால் நீயும் என் தோழனே" என்பது மாதிரியான பல படுகொலைகளை சந்தித்திருக்கும் இவர் மேற்கோள்கள் திருக்குறளுக்கு ஈடாக ரீமேக் ஆகி தவிக்கின்றன. சே என்றால் நண்பன்(தோழர்) என்று பொருளாம். இந்த பாழாய்ப்போன முகபுத்தகத்தால் வீணாய் போன மற்றொரு சொல் "தோழர் " எனும் தோழர் வெங்கியின் ட்விட் / ஸ்டேட்டஸ் சரிதானே:))

புதன், 17 செப்டம்பர், 2014

தந்தை போற்றுதும்!!

             அம்மா அன்பாக இருப்பார்கள். சரி அப்போ அப்பா அன்பாகவே இருக்கமாட்டாரா? அப்பா என்றால் கண்டிப்பாக இருப்பார். அதனால் பெரும்பாலான பாடல்கள், வாசகங்கள் தாய்ப்பாசம் பற்றியே இருக்கும். அதற்காக தந்தை பாசம் என்பது தாய் பாசத்திற்கு சற்றும் குறைந்ததல்ல. தாய் கருணையின் வடிவம் என்றால் தந்தை ஆசிரியரின் வடிவம் இல்லையா? சான்றோனாக்குதல் தந்தை கடனே எனும் பழந்தமிழ் பாடல் பொய்யா? ஆம் தந்தை என்று நான் இத்தனை நேரம் குறிப்பிட்டது எந்தை பெரியாரை(வழக்கமான எழுத்துப்பிழை என கருதிவிடாதீர்கள்) தான். அவர் நம் சமுதாயத்திற்கு கண்டிப்பான தந்தையாய் தான் இருந்தார். பின் ஏன் அன்னை தெரசாவை போல் தந்தை பெரியாரின் படங்கள் மற்றும் மேற்கோள்கள் பரவலாக பயன்படுத்தப்படுவதில்லை.  குஷ்பு என்றால் கற்பு பற்றிய கருத்து என எளிதாக நினைவு வைத்துக்கொள்ளும் தமிழ் மனங்கள் பெரியார் என்றால் கடவுள் இல்லை என்ற நாத்திகராக பார்க்கும் பிற்போக்கான மனங்கள் இன்னும் இருப்பதேன்?


செவ்வாய், 29 ஏப்ரல், 2014

நிலைத்தகவல்ii



உப்பு இருக்கான்னு பார்க்கிறேன், வெந்துடுச்சான்னு பார்க்கிறேன் என அடுப்படியையே சுற்றிவர ஆளில்லா வீடுகளில் அசைவம் சமைக்க விரும்புவதில்லை பெண்கள்.

குழந்தைக்கு பிசையப்படும் சோற்றில் நாசி நிறைப்பதை தாய் மணம்(மனம்) என்று சொல்லலாம் #நெய்மணம் என்றும் சொல்லலாம்.

அம்மா, காதலி, மனைவி, மகள், பேத்தி என பெறப்படும் முத்தங்களை கொண்டும் கணக்கிடலாம் ஆணின் பருவங்களை.

குழந்தைத்தனம் என்பதை இப்பல்லாம் குழந்தைங்ககிட்ட கூட பார்க்க முடியிறதில்லை # டெர்ரர் குட்டீஸ் சுட்டீஸ்

ஏழாம்அறிவுல டாங்லி போட்டு தள்ளுன கெட்ட ப்ரபசர் தான் ஏற்வமாட்டின் விக்கிறாரு. யாரும்  கவனிச்சிங்களா?

என் சொந்த ஊரில் மாடர்ன்னாகவும், பணியிடத்தில் மண் மணம் மாறாத நேட்டிவிட்டியோடும் இயல்பாய் நடிக்கக்கற்றுதந்திருக்கிறது வாழ்க்கை.

முன்னெல்லாம் வேட்பாளர் சரியில்லேன்னா நம்ம ஊருப்பக்கம் துடைப்பத்தை காட்டுவாங்க, இந்த முறை வேட்பாளரே துடைப்பத்தோடு வந்ததை சொல்லிச்சொல்லி அப்பத்தா ஆத்துபோராக.


கல்யாண வீடுகளில் பம்பரமாய் சுற்றி வேலை பார்ப்பவர் மணப்பெண்ணினால் அண்ணன் ஆக்கபட்டவராகவும் இருக்கலாம்.

சேகுவேரா டீ.ஷர்ட் எடுத்துத்தரட்டுமா என்றேன். பெரியார் படம் போட்டு வரட்டும் என்கிறான் என் சகோதரன்.

பரபரப்பான காட்சிக்கிடையே வரும் விளம்பரம் போல் சட்டென தூங்கிவிடுகிறார்கள் குழந்தைகள் # பயணப்பொழுதுகள்



பி.கு;
மே மாதம் முழுக்க net fasting. so blogக்கு லீவ். நாளை மட்டும் தான் வருவேன். நாம் சொந்தபந்தங்களோடு மனதை ரீசார்ஜ் செய்துவிட்டு ஊர்த்திருவிழா கதையோடு திரும்ப வருகிறேன். அதுவரை have a nice time மக்களே(நோ, நீ கிளம்பிட்டா nice டைம் தானேன்னுலாம் சொல்லக்கூடாது :)))