சனி, 29 மார்ச், 2014

மின்னொளி அணைத்து மண்ணொளி காப்போம்!!(earth hour)

வணக்கம் நண்பர்களே!
இன்று உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 7000நாடுகளில் Earth Hour கொண்டாடப்படுகிறது. sunday ,monday என்பதே மறந்து போக்கும் அளவுக்கு விதவிதமான டே கள் கொண்டாடப்படும் இன்றைய சூழலில் அர்த்தமுள்ள சில கொண்டாட்டங்களில் இதுவும் ஒன்று .

புதன், 26 மார்ச், 2014

முதல் முயற்சி (blog status)!!

அகிலஉலகமும்  fb , ட்விட் ஜுரத்தில் அகப்படும் முன்னே ஆட்டோவில் ஸ்டேடஸ் போட்ட தமிழ்நாட்டில் பிறந்துவிட்டு, நம் சகோக்களின் நிலைதகவல்களை (ஸ்டேடஸ்) பார்க்கும் போது எனக்கும் எழுதணும் னு தோணுச்சு. டிஸ்கி னு நம் சொந்தபந்தம் எழுதுறமாதிரி நானும் முயற்சி செய்தேன்.

வெள்ளி, 21 மார்ச், 2014

காட்டுப்பூ (dedicated to all confident and wild girls)

தொடர்பு எல்லைக்கு வெளியே
தொலையநேரிட்ட காலையில்
ஒரு சுய உற்சாகமூட்டலாய்
நீங்கள் ரசிக்கத்தொடங்கிய நொடியில்
கவனம் பெற்றிருக்கும் அந்த காட்டுப்பூ

செவ்வாய், 18 மார்ச், 2014

கொஞ்சம் English- part v(trendy English )

  இந்த கிளாஸ் ல கொஞ்சம் trendy இங்கிலீஷ் அதுவும் பிளாக்கர்களுக்கு பயன்படும் சில வார்த்தைகள். நான் பிளஸ் டூ படிக்கும்போது அமெரிக்கன் இங்கிலீஷ் என்றொரு வகை பாடத்தில் சேர்க்கப்பட்டது. அது B.P.O இந்தியாவில் கொடிகட்டத்தொடங்கிய புதுசு. ஆன இப்போ இணைய யுகம் இல்லையா. பரவலா பசங்களே தேவைகேற்ப நிறைய சொற்களை உருவாக்கி பயன்படுத்திகிட்டு இருக்காங்க ! நாமளும் அப்டேட் பண்ணிக்குவோம்.

சனி, 15 மார்ச், 2014

மாறவேண்டியது யாரு?

ஒரு முன் குறிப்பு:      அரசு வேலையில் அமர்ந்துவிட்ட பலரும், ஏன் ஆசிரியர்களும் கூட அத்துடன் தன் படிப்பு முடிஞ்சுபோச்சுனே நினைக்குறாங்க! அதைவிடுங்க செல்லுல பேசிக்கிட்டு இருக்கும்போதே ஒரு நம்பரை பார்த்துசொல்லவோ, ப்ளூடூத் ஆப்ஷன் பற்றிய அடிப்படை அறிவோ, நோக்கியா பேசிக் போனை கூட "எனக்கு இதெல்லாம் தெரியாது டீச்சர், என் பையன்/பொண்ணு தான் இதை பிரிச்சு சேர்த்துருவாங்க " என்றும், டச் அண்ட் டைப் போன் வைத்திருந்த ஒரு தோழி அதில் டைப் மட்டுமே பண்ணிகொண்டும் இருக்கிறவர்களே அதிகம்.

வியாழன், 13 மார்ச், 2014

வாழ்வின் வாசனைகள் !!


அன்றைய மல்லிகைகளை
அன்றே விற்றுவிடவேண்டிய அவசரம்
அடுத்தடுத்த நாளில் எல்லாம்
புதுமலர்கள், புது வாசம் 
பூத்தொடுத்தல் போல்
அத்தனை நயத்தோடு நகர்வதில்லை 
பூக்காரியின் வாழ்க்கை !!

ஞாயிறு, 9 மார்ச், 2014

பண்ணையாரும்,பாலுமகேந்திராவும்!!



படைப்பை படைப்பாளியோடு சேர்த்து பார்க்கக்கூடாது என நினைப்பவள் நான். அந்த கருத்தின் மூலம் நிலவன் அண்ணனோடு ஒருமுறை முரண்பட்டு விளக்கமெல்லாம் கொடுத்திருக்கிறேன். இப்போ என்ன வந்துச்சு அப்டின்னு கேட்குறீங்களா ? எனக்கு ஆங்கிலக்கவிஞர் ROBERT FROSTஇன் கவிதைகள் ரொம்ப பிடிக்கும். அதுவும் மென்டிங் வால்ஸ் (Mending walls) சான்ஸே இல்லை. கிட்டத்தட்ட நம் பாரதிதாசனின்

வியாழன், 6 மார்ச், 2014

காலம் விரைகிறது, காதலே வழிவிடு!

முடி கலைக்க நுழைந்த விரல்கள்
மூளை கலைத்து விட்டனவா ?
கொதிக்காத உலையும்
கொடும்பசியுமாய் வாடும் ஏழ்மை கண்டு
கொதித்துப்போய் எடுத்த பேனாவால்
கொட்டிய மழையை பாடுகிறேன் சிலிர்ப்பாய்!

ஞாயிறு, 2 மார்ச், 2014

உங்கள் உடையின் மூலம் என்ன சொல்லவிரும்புகிறீர்கள் ?

                                 திங்கள்கிழமை எனக்கு ரொம்ப பிடிக்கும். மனசுக்கு  பிடிச்ச வேலையே தொடங்க போறோம்னு ஒரு உற்சாகம். போன வாரம் கிளாசில் ரொம்ப லேட்டா வகுப்புக்கு வந்த விக்கி தயங்கி தயங்கி "மே ஐ கம் இன் மிஸ்"என்றான். ஒண்ணுமே சொல்லாமல் அவனை தலையில் இருந்து கால் வரை ஒரு லுக் கொடுத்தேன். குனித்து பார்த்து வேகவேகமாக தன் சட்டையின் முதல் பட்டனை போட்டுகொண்டு, சாரி மிஸ் என்றான். அவனை அனுமதித்து அட்டன்டன்ஸ் முடித்தவுடன் "மிஸ் மண்டே முதல் கிளாஸ் கதை சொல்லுங்க" என அகிலா ஆரம்பிக்க "ஆமா மிஸ் " என ஒரு கோரஸ் .