உங்களில் எத்தனை பேர் selfie எடுப்பீங்க? நம்ம ஆட்களில் பலர் பாஸ்போர்ட் போட்டோ மாதிரி தான் selfie எடுக்கிறோம். பொண்ணுங்க உதட்டை குவித்தோ, ஆண்கள் முறைத்தபடியோ இந்த சமுதாயத்துக்கு ஏதோ சொல்ல நினைத்த செல்பி க்களை கடந்த ஆண்டில் ஒருமுறை கூட பார்த்ததில்லைனா நீங்க போன வருடம் முழுக்க பக்திமலரோ, பங்குச்சந்தையோ மட்டுமே படித்திருக்கிறீர்கள். ஓகே ஓகே. மேட்டர் இது தான் இந்த கொஞ்சம் English முழுக்க selfie terms அப்புறம் கொஞ்சம் selfie tips.
ஞாயிறு, 31 ஜனவரி, 2016
ஞாயிறு, 24 ஜனவரி, 2016
வீதியில் சந்தித்த பயணச்சித்தர் !!
சில நாட்களுக்கு முன் தொடர்பதிவு ஒன்றை தொடங்கி இருந்தேன். பயணம் பற்றிய அந்த பதிவுச் சங்கிலியில் கோர்க்கப்பட்ட வெங்கட் நாகராஜ் அண்ணா, தான் நீண்ட விடுப்பில் செல்லபோவதால் வெளியிடுகிறேன் என உடனே பயணங்கள் முடிவதில்லை பதிவை வெளியிட்டார். பயணம் நன்கு அமைய வாழ்த்துக்கள் என வாழ்த்துச் சொன்ன போது நான் துளியும் நினைத்துப் பார்க்கவில்லை இந்த பயணத்தில் அவரை சந்திப்பேன் என்று!! புதுகை கணினித் தமிழ் சங்கத்தில் தான் முதன் முதலில் வலைசித்தரை சந்தித்தேன். நிலவன் அண்ணா புத்தக வெளியீட்டு விழாவில் புகைபடச்சித்தரின் தரிசனம் கிடைத்தது. இன்று இருபத்திமூன்றாம் வீதி கூட்டத்தில் நம் பயணச்சித்தர் வெங்கட் நாகராஜ் அண்ணாவை பார்க்க முடிந்தது அத்தனை சந்தோசம்.
திங்கள், 18 ஜனவரி, 2016
நமக்கு அணு உலை அவசியமா காம்ரேட்ஸ்?
எரிமலை எப்படி பொறுக்கும்........... அந்த நெருப்புக்கு இன்னுமா உறக்கம் ......என அந்த பாடல்வரிகளை கேட்ட நொடி ஒரு சிலிர்ப்பு ஓடி அடங்கும். இது என்ன பாட்டு அப்பத்தா? என்பேன். மில்லுல ஏதோ கம்யுனிஸ்ட் கட்சி கூட்டம் போல என்பார் அப்பத்தா. எங்கள் தெரு ஆண்கள் கொஞ்சம் கேலியாய் கடந்துவிடும் அந்த பாடல் என்னுள் சில தேடல்களை விதைத்தது.
வியாழன், 7 ஜனவரி, 2016
பயணங்கள் முடிவதில்லை.
பயணம் ஒரு வாசிப்பு. அல்லது பயணம் ஒரு வாழ்க்கை. பயணம் ஒரு தோழன். அல்லது ஒரு குரு. இப்படி என்ன வேணா சொல்லலாம். ஆனால் பயணம் பிடிக்காது என சொல்பவர்கள் ரொம்ப, ரொம்ப குறைவு. வயதானாலோ, உடல் நிலை சரியில்லாமல் போனாலோ பயணிக்க முடியவில்லையே என்றும் தான் பலருக்கும் இருக்குமே தவிர பயணம் பிடிக்கவில்லை என கருதுவது குறைவு தானே. இவ்வளவு ரசிக்கும் பயணத்தைப் பற்றி ஒரு பேட்டி (என்னைய மதிச்சு யாரு கேட்கப் போறா? so நானே கேட்டுகிட்டேன்:)
வெள்ளி, 1 ஜனவரி, 2016
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)