சென்ற வருடம் மே மாதம் புதுகையில் தமிழாசிரியர் வலைபதிவர் பயிற்சி பட்டறை ஒன்று எங்கள் மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் தலைமையில், நிலவன் அண்ணாவின் ஆலோசனையின் பேரில் நடந்தென்று ஏற்கனவே நான் ஒரு முறை குறிப்பிட்டிருக்கிறேன் அல்லவா? அதில் நிறைய தமிழாசியர்கள் எனக்கும் கஸ்தூரிக்கும் நல்ல நண்பர்கள் என்பதால் நாங்கள் ஆங்கில ஆசிரியர்களாக இருந்த போதும் எங்களுக்கு அதில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதில் பலரும் பதிவுலகில் அப்போதே கலக்கிக் கொண்டிருக்க, சும்மா டைரி எழுதுவது போல் எழுதிவந்த எனக்கு அது சிறந்த அனுபவமாக இருந்தது. அப்போ வலையில் என்ன எழுத வேண்டும் எப்படி எழுதவேண்டும் என எங்களுக்கு வகுப்பெடுத்த கரந்தை ஜெயக்குமார் அண்ணா இன்று அவர் versatile blogger award எனும் விருதை என்னோடு பகிர்ந்து கொண்டுள்ளார். முதல் முறையா கற்றுக்கொடுத்த ஆசிரியரிடம் நல்ல ரேங்க் வாங்கியதை போல ஒரு பீல். நன்றி அண்ணா!(படித்த காலத்தில் அப்படியெல்லாம் ரேங்க் வாங்கியதிலேயே) அவரை பற்றி நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை என்றாலும் ஒரு சொல். அவரது எல்லா பதிவுகளும் தகவல் களஞ்சியங்களாக இருக்கும். அவரை போல பயனுள்ள ஒரு பதிவு நான் எழுதிவிட்டாலும் போதும்:) என்னைஉற்சாகப்படுத்தி வழிநடத்தும் கஸ்தூரி, நிறை முதலான எல்லா நட்புநெஞ்சங்களுக்கும் நன்றி! நன்றி! நன்றி!!!