கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 18 ஏப்ரல், 2020

காணாமல் போன கவிதைகள்!

 கறுப்புநிறத்து
இதயவடிவ பலூன் ஒன்றை
மணிக்கட்டில் கட்டியபடி
சென்று கொண்டிருந்தவனுக்கு  அதிகபட்சம் பதினாறு வயதிருக்கும்

திங்கள், 30 மார்ச், 2020

முகமற்ற குரல்கள்

காலத்தின் சன்னல் இருக்கையில்
அமர்ந்திருக்கிறது தேவதை

அதன் முகத்தருகே நீட்டப்பட்ட கைக்குட்டையால்
இடம்பிடித்து வைக்க

முண்டியடித்து
இருக்கைநாடி
மூச்சு சீரான பின்
பேசத்தொடங்கியது
சாத்தான்

வியாழன், 26 மார்ச், 2020

கை கழுவுங்க

கொஞ்சம் தண்ணீர்
இருபத்தியிரண்டு நொடிகள்
சிறு சோப்புக்கட்டி போதும்
அவர் கைகழுவி விட்டார்
நீங்களும் கைகழுவுங்கள்

செவ்வாய், 24 மார்ச், 2020

வெள்ளி, 17 மே, 2019

செல்லமே!!

சுழற்றி விழிக்கும் அதன் அழகில் மயங்கி
செல்லம் கொஞ்சுகிறாய் நீ
அதுவோ உன் செம்மைபூசிய கன்னங்களையே பருகிக் கொண்டிருக்கிறது!!

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

என் 64 மெய்நிகர் விழுப்புண்கள்!!




விருப்பக்குறிகள் என் வெற்றிப்புள்ளிகள்
வெறுப்புக்குறிகள் என் விழுப்புண்கள்
பகிர்தல்  நிலைதகவல்களோடு
முடிந்து போகின்றன- என்னளவில்

புதன், 5 ஆகஸ்ட், 2015

கமலும், கலாமும் பின்னே நானும்.

                          திரும்பிய பக்கம் எல்லாம் கலாம்!!! இத்தனை அபிமானிகள் எத்தனை நாளாய் எங்கிருந்தார்களோ!!!!! டாக்டர் அப்துல் கலாமுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக பிரபலங்கள் அனைவரும் ட்விட் முதல் கவிதை வரை  பலவிதமாக தங்கள் கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

ஞாயிறு, 10 மே, 2015

அமுதுக்கு செம்மொழி என்று பேர்!







குத்தகைக்கு எடுத்தாளா-இல்லை

கொள்முதல் விலைக்கே
வாங்கினாளா தெரியவில்லை
பால்குளத்தில் நீந்த விட்டிருக்கிறாள்
விழிமீன்கள் இரண்டையும்!

வியாழன், 5 மார்ச், 2015

பெண்மையை நான் மதிக்கிறேன்.

       





           இந்தியாவின் மகள் என்கிற டாக்குமெண்டரி, பெண்கள் தெய்வம், நதிகள்,பூமி எல்லாமே பெண் தெய்வம் தான் என இதுவரை நம் நாட்டில் பலர் அணிந்தது வரும் மூகமூடியை கிழித்தெறிந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்தியால எல்லா ஆண்களும்  அப்படித்தானா என்கிற எண்ணம் உலக அளவில் தோன்றத்தானே செய்யும். இப்படியான ஒரு சூழலில் எனது அன்பு அண்ணன் நிலவன் அவர்கள் தொடங்கி வைத்திருக்கும் இந்த தொடர்பதிவு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிகிறது. இந்த மகளிர் தின ஜோதியை ஏந்தி இந்த பதிவை அவருக்கே சமர்ப்பிக்கிறேன்.


வெள்ளி, 19 டிசம்பர், 2014

அப்பிக்கிடக்கும் வர்க்க வாசனை


டகரப்பாதையில் சிப்பாய் தாண்டி
ராணியின் தலைவாங்கி
கனைப்பொலிஅடங்குகையில்
காணநேர்கிறது வெள்ளை ராஜா
சிறைபட்டு விட்டதை

திங்கள், 8 டிசம்பர், 2014

முருங்கை பூத்திருக்கு:)






கரும்பச்சைக் கூடாக  கண்பறித்த தும்பி  
கவனிக்கச் செய்தபின் தான்பார்த்தேன்-கொத்தாய் 
மலர்ந்திருக்கும் இம்முருங்கை காய்காய்க்க   சுற்றம் 
மகரந்தச் சூழ்த்தரிக்கும் நட்பு!!

திங்கள், 24 நவம்பர், 2014

தோழியின் விடைபெறல்!

கையசைத்து நீ விடைபெறுகையில்
கடந்து சென்ற பட்டாம்பூச்சியால்
கவிதையாகிறது அந்த நொடி!!

திங்கள், 20 அக்டோபர், 2014

நிறையத்துடிக்கும் தேநீர் கோப்பை!




விரலிடுக்கில் வழிந்துவிடப்போகும்
கடைசித்துளியை பத்திரப்படுத்தும்
எத்தெனங்களோடு சொன்னாய்
கீப்-இன்-டச்!!

செவ்வாய், 14 அக்டோபர், 2014

வெற்றுத்தாள் புன்னகை








உனக்கான கவிதைகளில்
ஒரு பந்தயக்குதிரையாகவும்
உன்னோடான தருணங்களில்
நொண்டிக்குதிரையாகவும் என் சொற்கள்

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

சிதைக்கப்ப(ட்)ட முடியாதவளின் சின்ன அறிவுரை!!





 *எனது வலி உனது வலி அல்ல என்பதை
உனது செய்கையால் காட்டியபின்
உன்னை நிராகரித்த என் முடிவு சரிதான் என
அழுத்தமாய் நிறுவியதற்கு நன்றி!

ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

குறும்பா _3








யாரோ போல தான் நீயும் -என
நான் கருதும் நாளில்- புத்தனுக்கு
புதிய போட்டியாக  இருப்பேன் நான்

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

பிள்ளைக்கதைகளும், பெருவணிகமும்!!

                                                                                                                                                                                                  





சின்ட்ரெல்லாவை நினைவுபடுத்தும்
இளம்சிவப்பு சோயாக்கள்
நார்ச்சத்து மிகுந்ததென நம்பவைப்பேன் என்னையே !!

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

உனக்கும் மழை என்று பேர்!







உன் மச்சமாக முடியாததால்
தன் எச்ச நொடிகளை புனிதமாக்க
உன் இதழோரம் சிந்திமடிகிறது - மழைத்துளி!!